யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்ட மாவீரர் தினம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர் தினம் புலனாய்வாளர்களின் கடுமையான அச்சுறுத்தலுக்கும், நடமாட்டத்திற்கும் மத்தியில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.

இன்று நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள ஆலயத்தில் மணி ஒலிக்க விடப்பட்டு, பின்னர் வளாகத்திற்குள்ளேயே உள்ள மாவீரர் நினைவிடத்தில் மாவீரர் புகைப்படம் வைக்கப்பட்டு, தாயக பாடலுடன் ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் வெளிப்படையாக அஞ்சலியில் கலந்துகொண்டனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் புலனாய்வாளர்கள் பெருமளவில் நுழைந்து அஞ்சலியில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், மாணவர்கள் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் அஞ்சலியை தாயக பாடலுடன் உணர்வுபூர்வமாகவும், எழுச்சியுடனும் நினைவுகூர்ந்தனர்.

maveerar_university_001 maveerar_university_002 maveerar_university_003 maveerar_university_004 maveerar_university_005 maveerar_university_006 maveerar_university_007 maveerar_university_008 maveerar_university_009

புலனாய்வாளர்கள் மத்தியில் தாயக விடுதலைக்காய் உயிர் நீத்தவர்களுக்கு நல்லூரில் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி

தாய விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர் தினமான நவம்பர் 27ம் திகதியான இன்று மாவீரர்களுக்கு புலனாய்வாளர்கள் சூழ்ந்திருக்க யாழ். நல்லூர் ஆலயம், பெரிய தேவாலயம் ஆகியவற்றில் ஈகை சுடர் ஏற்றபட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த அஞ்சலியை செலுத்தியுள்ளார். காலை 9 மணிக்கு நல்லூர் ஆலயத்தில் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் தொடர்ந்து யாழ்.பெரிய தேவாலயத்திலும் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைவுகூரும் உரித்தை யாரும் பறிக்க முடியாது.

எமக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை மனங்களில் கொண்டு அவர்களுக்காக நாங்கள் மனமுருகி ஈகை சுடர் ஏற்றி செய்கின்ற அஞ்சலியும் நாங்கள் அவர்களை மறக்கவில்லை அவர்களுடைய கனவுகள் ஒருநாள் நனவாகும் என்ற திடமுமே மாவீரர்களுக்கான உண்மையான அஞ்சலியாகும்.

அதனை நாங்கள் எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் தொடர்ந்து செய்வோம் தமிழர் தாகம் தமிழீழத் தாயகம் என்றார்.nallur_sivaji

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு

மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றத்தினால் மாவீரர் நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று உணர்வுபூர்வமாக சுடர் ஏற்றி நினைவு கூறப்பட்டது.bati_maveerara_005

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் அவரது தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா உட்பட்டோர் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மண்ணில் தமிழன் உள்ளவரை மாவீரர் நினைவு மறையாது கண்ணில் காணா தெய்வங்களை கார்த்திகை 27ல் வழிபடுவோம் என்னும் தொனிப் பொருளில் நடைபெற்றது.

இதன்போது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ரயில் முன் பாய்ந்து உயிரை தியாகம் செய்த மாணவன் இ.செந்தூரனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.