தங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர்… Read More தங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தமிழினத்தின் உலக முகவரி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்!

தமிழினத்தின் உலக முகவரி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் என தமிழக இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார். தமிழீழ தேசியத் தலைவரின் 61 வது பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், தலைவர் பற்றி மேலும் பல தகவல்களை வெளியிட்டிருந்தார். அவை முழுமையாக இங்கே இணைக்கப்பட்டுள்ளன. உலகத்தின் மூத்த இனம் தமிழினம். மூத்த மொழி தமிழ்மொழி. சில நூறு ஆண்டுகள் மட்டுமே வரலாறு கொண்ட பலநூறு மொழிகள் இருக்க, ஐம்பதினாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த பேரினத்திற்கு ஆறாயிரம்… Read More தமிழினத்தின் உலக முகவரி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்!

விடுதலைக்கு புதிய வரைவிலக்கணத்தை வரைந்த..தேசியத் தலைவர் பிரபாகரன்!

மாவோ சேதுங்…லெனின்.. மார்க்ஸ்.. என்றெல்லாம்…எண் நிறைந்தோர் .. ஆயிரம் ஆயிரம் வரைவிலக்கணங்களை.. விடுதலைக்கு வரைந்தார்கள்… எங்கள் தலைவன்…. என்ன சொன்னான்? ஒன்றே ஒன்றை மட்டும்தான்… சொன்னான்.. எங்கள் கைகளில் எதிரிதான் ஆயுதத்தை திணித்தான்..அதனால்தான் நாம் போராடுகிறோம் என்றுதான் சொன்னான்.. அதுவே..இன்று தமிழர்களின் உள்ளங்களில் விடுதலைக்கான வரைவிலக்கணம் ஆகிவிட்டது.. ஆம்..நாங்கள்.. ஆயுதப் பிரியர்கள் அல்ல.. இரத்த ஆற்றில் குளித்து..ஓர்.. இலட்சியச் சீனாவை.. அல்லது..உறஷ்யாவை. உருவாக்க வேண்டும்..என்று விரும்பியவர்களும் அல்ல.. நாங்கள் விரும்பியது.. எங்கள் மண்ணில் மாற்றானிடம் கைகட்டி..நின்று கனவிலும்..… Read More விடுதலைக்கு புதிய வரைவிலக்கணத்தை வரைந்த..தேசியத் தலைவர் பிரபாகரன்!

அடிமுடி அறியவெண்ணா அற்புதத்துக்கு அகவை அறுபத்திஒன்று

தலைவருக்கு வயது அறுபத்திஒன்றாகிறது. அவர் குரல் கேட்காமல்விட்ட இந்த ஆறுவருடங்களில் இந்த இனம் படும் அலைக்கழிப்புகள்,சிதைவுகள்,துரோகங்கள், அவமானப்படுத்தல்கள் என்பனவற்றை பார்க்கும்போதுதான் எவ்வளவுதூரம் அந்த ஒற்றை மனிதனே இத்தகைய சீரழிவுகளிலிருந்து முழுத்தமிழினத்தையும் காப்பாற்றும் கேடயமாக இருந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிகிறது. இன்றைக்கு யோசித்து பார்த்தால் வார்த்தைகளால் விபரிக்க முடியா பெரும் வியப்பு ஏற்படுகின்றது. ஒரு கல்லூரிமாணவனாக வீட்டின் கதவுகளுக்கு அப்பால் பெரிதாக போய் இருக்காத இந்த மனிதன் தனது சிறு பராயத்தில் இந்த விடுதலைக்கான பெரும் யாகத்தில் இறங்கி… Read More அடிமுடி அறியவெண்ணா அற்புதத்துக்கு அகவை அறுபத்திஒன்று

தலைவர் பிறந்த நாள் வாழ்த்துப்பா!

முன்னைத்தமிழ் மண்ணை மீட்க- அன்னைத் தமிழை- அத்தமிழின் பெண்ணைக் காக்க- தன்னைக் கொடையாய்த் தந்திடும் படையைப் படைத்தான்- பகை உடைத்தான்- பைந்தமிழினத்திற்கு கிடைத்தான் இக்கரிகாலன்! ஆண்டாண்டு காலமாய் அடிபட்ட அடிமைப்பட்ட இனத்தின் வலி பொறுக்காது பகை ஒறுக்காது இனம் இருக்காது என்றுணர்ந்து குகைவிட்டு வெளிவந்த புலியாய் வலி கொடுத்தான்- பகையைப் பலி கொடுத்தான்- பாருக்கே கிலி கொடுத்தான் இப்புலித்தலைவன்! தரைப்படை தண்ணீர்ப்படை தாவும் வான்படை என முப்படை படைத்து மூடக்காடையர் முகம் உடைத்து எம் மண்ணை எம்மிடம்… Read More தலைவர் பிறந்த நாள் வாழ்த்துப்பா!

சத்தியப்புதல்வா!…. சரித்திரம் திரும்பும்!….

தலைவா!…தவப்புதல்வா!… இடையிடையே குமுறிஎழுந்த எரிமலை உண்டுதான் இன உணர்வால் குமுறிஎழுந்த எரிமலை நீங்கள் தான் வரும்பகையை முடித்து நீங்கள் வழிகள் காட்டிநீர் தமிழன் வளமாக வாழ்வதற்காய் தனிஈழம் நோக்கிநீர்!… ஈழம் நோக்கும் உங்கள் முடிவில் இன்னல் உண்டுதான் இனிமையான தமிழ்ஈழம்கண்டால் இன்பம் உண்டுதான் மாலை நேரச் சூரியனும் சிவந்தே போகின்றான் பின் காலை வந்தே புதுக்கதிர்களாய் அள்ளித்தருகின்றான்!… அள்ளித்தரும் சூரியனும் நீங்களும் ஒன்றுதான் என அன்னைத்தமிழ் எங்களுக்கு சொல்லித்தருகிறாள் சிவந்துபோன ஈழமண்ணில் நாளை விடியல்தான்-உங்கள் தெளிந்த கண்ணில்… Read More சத்தியப்புதல்வா!…. சரித்திரம் திரும்பும்!….

மாவீரர்நாளினை முன்னிட்டு முகநூல் அடையாளம்

முகநூல் உறவுகளுக்கு வணக்கம், மாவீரர்வாரம் மற்றும் மாவீரர்நாளினை முன்னிட்டு எமது மண்ணுக்காக தமது இன்னுயிர்களை அர்பணித்த அந்த வீர மறவர்களை நினைவுகொள்ளும் முகமாக தமிழர்களாகிய நாம் இந்த வாரம் முழுவதும் எமது Profile-Photo வில் எமது ஈழத்தின் தேசிய மலராகிய கார்த்திகை பூவினையும், தமிழர்களது தேசிய வர்ணங்களையும் அடையளப்படுத்தி ஏனைய நாட்டவர்க்கும் இந்த நாளை அடையளப்படுத்துவோம். இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட Profile Overlay Tools இதனை நீங்கள் பயன்படுத்தலாம். https://app.profileoverlays.com/tamils?q=tamils&by=1336306 (Click on Start-Connect Facebook) உங்களது… Read More மாவீரர்நாளினை முன்னிட்டு முகநூல் அடையாளம்

தமிழீழ காவல் துறை

1991 கார்த்திகை 19ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கபட்ட ‘தமிழீழ காவல்துறை’ யினது செயற்பாடுகள் அதிகார பூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கபட்டது.    தமிழீழ தேசியத் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட இக் காவல்துறை, அவரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படுகிறது. இக் காவல்துறையின் செயற்பாடுகள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது “தமிழீழக் காவல்துறையினர் நல்லொழுக்கம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற… Read More தமிழீழ காவல் துறை