மலேசியாவில் கைது செய்யப்பட்டவர் வான்புலிகள் துணைத் தலைவர் குஷாந்தன் மாஸ்டரா ?

வான்புலிகள் பிரிவு துணைத் தலைவர் குஷாந்தன் மாஸ்டர் கைது: பின்னணியில் நடந்தது என்ன? இப்படி ஒரு இணையத்தில் பார்த்தது

kushanthan_02 kushanthan_03 kushanthan_01
புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் மூன்று பேர் கைது [ May 26, 2014 ]

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவின் சிலாங்கூர் பிரதேசத்தில் இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடந்த 15ஆம் திகதி மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேகநபர்கள் மூவரும் கைதாகியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்க இவர்கள் முயற்சித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கடந்த 2004ஆம் ஆண்டு மலேசியா சென்றுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்து நிதி சேகரிக்கும் முயற்சிகளில் சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளனர். சந்தேகநபர்கள் குடுவரவுச் சட்டத்தின் கீழ் மலேசியாவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்று தெரியவந்துள்ளதாகவும் மலேசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

malasiya ltte arrest 2 malasiya ltte arrest 3 malasiya ltte arrest

தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் மலேசியாவில் கைதான குசாந்தனே மேற்கொண்டுள்ளார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் அண்மையில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட குசாந்தன் என்ற புலி உறுப்பினரே மேற்கொண்டுள்ளார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு, கட்டுநாயக்க, கொலன்னாவ, கெரவலபிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை குசாந்தன் வழி நடத்தியுள்ளார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2007ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையின் இரண்டாம் நிலைத் தலைவராக தம்மை, பிரபாகரன் நியமித்தார் என விசாரணைகளின் போது குசாந்தன் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்காக விமானங்களைக் கொள்வனவு செய்து பங்களாதேஷ் ஊடாக இந்தோனேசியாவிற்கு எடுத்துச் சென்று அங்கிருந்து அவற்றை முல்லைத்தீவிற்கு எடுத்துச் சென்ற விபரங்களை குசாந்தன் வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் குசாந்தனே வழிநடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் குசாந்தன் உள்ளிட்ட மூன்று தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
malaysia boycott