வான் புலிகளின் முதலாவது தாக்குதலும் எதிரியை குழப்ப புலிகள் விட்ட புகைக்குண்டும்.!!

மார்ச் 26 புலிகளின் முதலாவது வான் தாக்குதல்sky tigers 2 

வீரத்திற்கு பெயர் சொன்ன தமிழர்களின் வரலாற்றில் முன்னொரு பொழுதும் கண்டிராத வீரத்தின் உச்சத்தை விடுதலைப் புலிகள் கண்டிருந்தார்கள்.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் காலம் என்பது தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ் வீரத்திற்கும் பொற்காலமாகும்.

மார்ச் 26 இன்று வான் புலிகளின் தீரம் மிக்க வான் தாக்குதல் நடைபெற்ற நாளாகும். மார்ச் 26, 2007 அன்று முதலாவது வான் தாக்குதல் வெற்றி வரலாற்றை எழுச்சியோடு எழுதியது.

தமிழரின் விடுதலை வரலாற்றில் முன்னொரு போதுமே கண்டிராத எழுச்சியின் ஒரு வடிவமே .வான் படை தாக்குதல் வரலாறு.

இந்த வான் படையின் முதல் தாக்குதல் நிகழ்ந்த முதல் நாளான .இந்நாளின் அதிகாலை 1,45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான தாக்குதலை நிகழ்த்திய நாள் இன்று ஆகும்..!!!

தமிழினத்தை பூண்டோடு அழிக்க கங்கணம் கட்டி திரிந்த எதிரியை குலை நடுங்க செய்ததோடு தமிழர்களின் வீரத்தை எண்ணி உலகை வியக்க வைத்த வான் படை தந்த முதல் தலைவனையும் அவர் வழி வந்த இளம் தமிழர்களையும் இன்றைய நாளில் நினைவில் ஏந்திடுவோம்.

**

விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நடத்திய, முதலாவது விமானத்தாக்குதல், கொழும்பு, கட்டுநாயக விமானப்படை தளத்தின்மீது நடத்தப்பட்டது. அதுவரை புலிகளிடம் விமானங்கள் உள்ளது என, ஊகத்திலேயே இருந்த சம்பவம் அன்று உண்மையானது.!

முதல் குண்டு கட்டுநாயக்க விமானத்தளத்தில் விழுந்து வெடித்த குண்டின் அதிர்வு, கொழும்பில் மட்டுமல்லாது முழு உலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

புலிகளை சர்வதேசம் அழிப்பதற்கு, அவர்கள் கையில் எடுத்த முக்கய காரணங்களில், மிக முக்கியமானதில் முதலாவது வான்படைத்தாக்குதல். இரண்டாவது கரும்புலித்தாக்குதல்கள்.

நான் முன்னமே எனது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளது போல, ஒசாமா பின்லாடனின் இரட்டை கோபிர தாக்குதலின் பின், போராட்ட அமைப்புகள் அனைத்தையும் சர்வதேசம் பயங்கரவாத பட்டியலில் இணைத்தது.

சிங்கள, மற்றும் இந்திய அரசுகளின் பொய்யான, நயவஞ்சக பருப்புரைகளை நம்பி புலிகளின் தார்மீக போராட்டத்தை புறம்தள்ளி, புலிகளையும் அந்த பட்டியலில் இணைத்து மிகப்பெரும் வரலாற்று தவறை சர்வதேசம் அன்று செய்திருந்தது.

கபட நோக்கமுடைய சிங்கள அரசுடன் கைகோர்த்து, எமது போராட்டத்தை இல்லாமல் செய்தார்கள். அந்த தவறை என்றோ ஒரு நாள் இவர்கள் உணரும் காலம் வரும்.

வான்புலிகளின் தாக்குதல்கள் எதிர் பக்கத்திற்கு கலக்கத்தை கொடுத்தபோதும், தமிழர் தரப்போ அந்த வெற்றியை பெருமிதமாக கொண்டாடினர். எமக்கே, எமக்கான முதலாவது வான்படையை உருவாக்கி, அதன் கன்னித்தாக்குதலை செய்த புலிகளை தமிழர்கள் மனத்தார வாழ்த்தினர்.!

இந்த தாக்குதலையும் ஏனைய தாக்குதல்களையும் வான்புலிகள் எவ்வாறு மேற்கொண்டனர்?

sky tigers

அதற்கு எப்படியான தந்திரங்களை பிரயோகித்தார்கள்?

உண்மையில் புலிகளிடம் யுத்தத்தில் பாவிக்கும் விமானங்கள் இருக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியும். யுத்த விமானங்களை வாங்குவதற்கு புலிகளிடம் பணபலம் இருந்த போதும், எந்த நாடும் உத்தியோகபூர்வமாக அதை எமக்கு விற்பதற்கு முன் வரவில்லை.

அத்தோடு அதற்கு சர்வதேச சட்டங்களும் குறுக்கிட்டன. அப்படியான நேரத்தில் தான் சில மூன்றாம் தர நாடுகளின் தரகர்கள் ஊடாக சாதாரண கிளைடர் ரக விமானங்களே கொள்முதல் செய்யப்பட்டது.(Czech-built Zlin Z-143 light aircraft.).

நான் அடிக்கடி கூறுவது போல எந்தவொரு சிறு பொருள் கிடைத்தாலும் அதன் உச்ச பயன்பாட்டை புலிகள் அதிலிருந்து பெற்றுவிடுவார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல கூடியது இந்த விமானத்தாக்குதல் ஆகும்.

உண்மையில் உங்களுக்கு தெரியும் இந்த விமானங்கள் வெளிநாடுகளில் பொதுமக்களின் பயிற்சிக்கும், தமது தோட்டங்களுக்கு மருந்து தெளிப்பதற்கும் பயன்படுத்துவதென்பது.

இந்த விமானங்களை புலிகளில் எப்படி தாக்குதல் விமானமாக மாற்றினார்கள்?

எப்படி சிங்கள அரசின் கதுவிகளின் (ராடர்) கண்ணில் மண்ணை தூவினார்கள்?

எப்படி சிங்கள அரசின் அதி நவீன விமானங்களின் தாக்குதல்களில் இருந்து தப்பி தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டார்கள்?

நிச்சியமாக இது எல்லோருக்கும் மிகப்பெரும் ஆச்சரியம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வான்புலிகள் இரணைமடு, புதுக்குடியிருப்பு, பூநகரி போன்ற இடங்களில் தமது விமான ஓடுபாதைகளை அமைத்திருந்தார்கள்.

தாக்குதலின் போது செல்வது ஒரு பாதையாகவும், திரும்பி வருவது ஒருபாதையாகவும் தமது பிளைட் பிளானை (flight plan)வடிவமைத்திருந்தார்கள். ஒரு விமானப் பறத்தளுக்கு இந்த பிளைட் பிளான் என்பது மிக மிக பிரதானமானது. இதை வான்புலிகள் மிக கச்சிதமாக போட்டிருந்தார்கள்.

புலிகளால் இந்த உலகத்துக்கே ஒரு பாடம் இருக்கின்றது. அதாவது உள்ளதை கொண்டு திருப்தி படுவது. அடுத்தது தரமற்ற பொருளாக இருப்பினும் தங்கள் திறமையை முழுவதும் நம்பி, களத்தில் இறங்கி, அதன் உச்ச பயனை பெறுவதென்பது, புலிகளுக்கு மட்டுமே உரித்தான திறமையாகும்.

புலிகள் சாதாரண விமானத்தை எப்படி குண்டுவீச்சு விமானமாக மாற்றினார்கள்? அதற்கு புலிகள், முதலில் தேவை இல்லாத பாரத்தை குறைக்கும் நோக்கில் விமானத்திலிருந்த தேவையில்லாத பொருட்களை அகற்றினர்.skytigers

குண்டு வீச்சுக்கு விமானங்களுக்கு தேவையான கதுவிகள், தூரம் அளக்கும் கருவிகள், போன்றவற்றை இதற்கென்றே விசேடமாக பிறநாடுகளில் இருந்து தருவித்தனர்.

தாக்குதலுக்கான குண்டுகளை விடுவிக்கும் பொறிமுறை என்பன புலிகளின் தொழில்நுட்ப போராளிகளால் பொருத்தப்பட்டு, சோதித்து ,திருப்பதி கண்டபின், முதலாவது தாக்குதலுக்கான நாளை தெரிவு செய்த தலைவர், அந்த தாக்குதலுக்கான அனுமதியை வழங்கினார்.

2007-ம் ஆண்டு, மார்ச் 26-ம் தேதி, திங்கட்கிழமை புலிகளின் இரணைமடு விமானத்தளத்தில் வைத்து இறுதிச் சோதனையின் பின் சாதாரண விமானத்தை குண்டுவீச்சு விமானமாக மாற்றிய பின் தமது முதலாவது தாக்குதலுக்காக புறப்பட்டு சென்றது தமிழரின் முதலாவது வான்படை.

இரணைமடுவில் இருந்து புறப்பட்ட விமானம் மல்லாவிக்கு மேலால் மடுவை நோக்கி பறந்தது.
எமது பகுதிக்குள் மிகவும் தாழப்பறந்து, வவுனியா, அனுராதபுர நகரங்கள் விமானியின் இடதுபக்கத்தில் இருக்கும் படி பார்க்கப்பட்டது.

இதில் பிரதானமாக நகரங்கள் மற்றும் இராணுவமுகாங்கள் பற்றிய முளுத்தரவுகளும், ஏற்கனவே திரட்டப்பட்டு அதை தவிர்த்தே “பிளைட் பிளான்” போடப்பட்டது.

அதன்படி மன்னார் ஊடாகப்பறந்து, வங்காலை கடந்து வலதுபுறமாக திரும்பி கடலின் மேல் தாழப்பறந்து மீண்டும் உடப்பு தாண்டி மீண்டும் பங்கதெனியவுக்கு மேலால் பறந்து பிங்கிரிய, பொவட்ட ,போன்ற பிரதேசங்களுக்கு மேலால் பறந்து, மீண்டு திரும்பி கட்டுநாயக்க தளத்துக்கு நேரே வந்து தமது முதலாவது விமானத்தாக்குதலை அதிகாலை 12.45க்கு வான்புலிகள் துல்லியமாக மேற்கொண்டனர்.!

இந்த தாக்குதலில் 3விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 14பேர் படுகாயமடைந்ததாகவும் சிங்கள அரசு அறிவித்தது. தனியார் ஊடகங்களோ மூன்று விமானங்கள் சேதமடைந்ததாகவும் பலர் கொல்லப்பட்டதாகவும், செய்தி வெளியிட்டபோதும் சிங்கள அரசு அதை மறுத்திருந்தது.

தாக்குதலின் பின் கடலின் மேலாக தாழப்பறந்த விமானங்கள் மீண்டும் மான்னார் வான்பரப்பினுள் நுழைந்து வெற்றிகரமாக தளம் திரும்பினர். சிங்களம் இந்த தாக்குதலில் அதிர்ந்து போனது.

அதன் பின் பல தாக்குதலை வான்புலிகள் செய்தபோதும் அதை முறியடிப்பதற்கு இந்திய அரசிடமிருந்து கதுவிகளும், சீனாவிடம் இருந்து விசேட தாக்குதல் விமானங்களும், வேறு நாடுகளிலிருந்து ACK -ACK என்னும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் வாங்கி, சிங்களம் எதிர்த்தாக்குதளுக்கான ஆயத்தம் செய்தபோதும், புதிது புதிதாக பிளைட் பிளானை போட்ட புலிகள் துல்லியமான தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டனர்.

மூன்றாவது தாக்குதலின் போது வான்புலிகளை, துரத்திய போதும் சிங்கள வான்படையால் வான்புலிகளை சுட்டு விழுத்தமுடியவில்லை. காரணம் சிங்கள அரசு சீனாவிடம் வாங்கிய யுத்த விமானம் வேகம் கூடியவை, அதனால் வேகம் குறைந்த புலிகளின் விமானத்துக்கு ஈடாக தாழ்வாகவும் மெதுவாகவும் பறக்கமுடியாது தமது தாக்குதல் முயற்சியை கைவிட்டு திரும்பின.skytigers 2

இருட்டிலேயே விமானத்தை ஓடி, ஏற்றி, இறக்க பயிற்சியை பெற்றிருந்த புலிகள் பத்திரமாக தளம் திரும்பினர்.

இது போல பின்னைய தாக்குதல்களின் போது, இராணுவமுகாங்களில் பரவலாக நிறுவியிருந்த கதுவிகளையும், எதிரியையும் குழப்பும் நோக்கில், பரவலாக இராணுவ முகாம்களை நோக்கி இரவில் தகரபெரல்களை இணைத்த மிகப்பெரும் புகைக்குண்டுகளை புலிகள் ஏவினர்.

இது புலிகளால் மூட்டப்பட்ட நெருப்புடன் எதிரியின் முகாம் நோக்கி செல்லும் போது அவர்களின் கதுவிக்கும், அதை பார்த்துக்கொண்டிருக்கும், இராணுவத்துக்கும் குழப்பத்தை புலிகள் உருவாக்கினர்.

புலிகள் நினைத்தது போலவே பிழையான தகவல்கள் இராணுவத்தினர் தமக்குள் பரிமாறிக்கொண்டிருக்க, வான்புலிகள் தங்கள் தாக்குதல்களை கச்சிதமாக நிகழ்த்திவிட்டு தளம் திரும்பினர்.

இப்படி சிறு விடையங்களையும் கருத்திலெடுத்தே, வான்புலிகளின் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

இறுதியுத்தத்தின் போது பிரதான வீதியை ஓடுபாதையாக்கிய வான்புலிகள், வெடிமருந்து நிரப்பப்பட்ட விமானங்களுடன் புறப்பட்டு சென்று தாக்குதல் மேற்கொண்டு, எமக்காக தம்மையும் அழித்துக்கொண்டனர் வான்கரும்புளிகள்.!

அன்று இதே நாளில் தமிழர் தலைநிமிர்ந்தனர். அன்று வரலாற்றின் புதிய அத்தியாம் ஒன்று எழுதப்பட்டு தமிழரின் வரலாற்றில் அந்த தாக்குதல் இடம் பிடித்தது.!

பெருமைகளுடன் துரோணர்..!!