சரணடைந்த விடுதலைப்புலிகளின் பெயர் விபரங்களை வழங்க இராணுவம் மறுப்பு!

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பாக இராணுவம் முரண்பட்ட தகவல்களை வழங்கிவருவதாக பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினரான எழிலன் என்று அழைக்கப்படும் சின்னத்துரை சசிதரன் உட்பட 5பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட மேல்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையானது முல்லைத்தீவு… Read More சரணடைந்த விடுதலைப்புலிகளின் பெயர் விபரங்களை வழங்க இராணுவம் மறுப்பு!

பத்தாண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாக நடந்த தியாகதீபம் திலீபன் நினைவு நிகழ்வுகள்

இந்திய-சிறிலங்கா அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றன. யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில், நேற்றுக்காலை அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் இங்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்திலும், தியாகதீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வமாக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த… Read More பத்தாண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாக நடந்த தியாகதீபம் திலீபன் நினைவு நிகழ்வுகள்

எதிரியும் புகழும் தலைவர் பிரபாகரன்!

விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையிலான போர் முடிவுற்ற பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் இலங்கையின் மூவின அரசியல் தலைவர்கள் மத்தியில் அன்றும் இன்றும் என்றும் தனித்துவமானவராகவே காணப்படுகிறார். வன்னியில் இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இரானுவத்தினரால் வீடியோ ஆதாரம் வெளியிடப்பட்டது. ஆயினும் யுத்த வெற்றி பற்றி உரையாற்றிய போதும் அரசு தரப்பிலோ இராணுவ தரப்பிலோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எக்கருத்தையும் வெளியிடவில்லை. அத்தோடு தமிழ் மக்கள் இன்றும் அவர்… Read More எதிரியும் புகழும் தலைவர் பிரபாகரன்!

வலிமை மிகு தியாகத்தை யாராலும் தோற்கடிக்க முடியாது!

தியாகி திலீபனின் 29-வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். தமிழினத்தின் வாழ்வுக்காக ஊண் உறக்கம் மறந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய ஒரு தியாகியின் எண்ணங்கள், சிந்தனைகள், நோக்கங்கள் ஒருபோதும் வீண்போகாது என்பது சர்வநிச்சயம். ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காக மகாத்மா காந்தி உண்ணா நோன்பு இருந்தார். அந்தத் தியாகம் பாரத தேசத்துக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது. பிரித்தானியக் காலனித்துவத்துக்கு எதிராக சத்தியவழியில் போராடிய காந்தியின் சிலை இன்று பிரித்தானிய மண்ணில் நிறுவப்பட்டுள்ளது. எந்த நாட்டுக்கு எதிராக மகாத்மா… Read More வலிமை மிகு தியாகத்தை யாராலும் தோற்கடிக்க முடியாது!

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் ,தியாகி லெப்.கேணல் திலீபன் சொல்ல வந்தது என்ன???

தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்தியொன்பது வருடங்களுக்கு முன்பு … அன்று நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது. “இனவிடுதலைப் போராட்டம்” என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த… Read More மக்கள் புரட்சி வெடிக்கட்டும் ,தியாகி லெப்.கேணல் திலீபன் சொல்ல வந்தது என்ன???