ஐக்கிய இராட்சியத்தில் உலகத் தமிழர் வரலாற்று மையம்

தமிழ் உறவுகளோடு வரலாற்று மையத்தில் இனிதே இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வு! world-tamils-historical
உலகின் மூத்த குடிகளாகவும், மிகவும் முதன்மையான மொழியைக் கொண்டவர்களாகவும், தனித்துவ அடையாளங்களையும், பாரம்பரியங்களையும் கொண்ட இனமாகவும் வாழும் தமிழ் இனத்தின் வரலாற்றை பாதுகாக்கும் நோக்கோடு பிரித்தானியாவில் உருவாக்கம் பெற்றுள்ள உலகத் தமிழர் வரலாற்று மையம் ஐக்கிய இராட்சியத்தில் பரந்துவாழும் தமிழ் மக்களை வரலாற்று மைய வழாகத்தில் வரவேற்று அவர்களோடு கடந்தகால மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்திரையாடும் மாபெரும் நிகழ்வு நேற்றைய தினம் (04-09-2016) நடைபெற்றது.

இந்த நிகழ்வு கலந்துரையாடலோடு மட்டும் நின்றுவிடாது, உணவு பரிமாற்றத்தோடு சிறுவர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

குறிப்பாக தாயகத்தை நினைவூட்டும் முகமாக மரத்திலே கயிற்றில் கட்டப்பட்ட ஊஞ்சல், மற்றும் படகுச் சவாரி, அத்தோடு பறவைகள் மற்றும் சில விலங்குகள் காட்சியகம் என்பன அனைவரது கவனத்தையும் ஈற்றதோடு, வரவேற்பையும் பெற்றிருந்தது.

இந்த நிகழ்விற்காக வரலாற்று மைய வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

நேறைய இந்த முக்கிய நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரேற்றப்பட்டு தமிழீழ மற்றும் பிரித்தானிய தேசியக் கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டது.

பொதுச்சுடரினை ஈகைப்பேரொளி முருகதாசனின் தாயார் திருமதி. வர்ணகுலசிங்கம் அவர்கள் ஏற்றிவித்தார்.

தமிழீழத் தேசியக் கொடியை முன்னாள் திருமலை மாவட்டத் தளபதியும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுபினருமான மாவேரர் லெப். கேணல் புலேந்திரன் (புலேந்தி அம்மான்) அவர்களின் சகோதரர் திரு. வினோத் அவர்கள் ஏற்றிவைக்க, பிரித்தானியத் தேசியக் கொடியை Doris John ( The chief executive officer of Nations Without States) அவர்கள் ஏற்றிவைத்தார்.

பின்னர் மாவீரர் கடாபி அவர்களின் மனைவி மாவீரர் பொதுத்தூபிக்கான ஈகச்சுடரேற்றி மலர்மாலையினை அணிவித்ததைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இந் நிகழ்வில் தமிழீழ வைப்பகத்தின் மேளாலரும் பொறுளாதார ஆலோசகருமான திரு. பாலா மாஸ்ரர், மூத்த போராளி திரு புரட்சி , உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சங்கீதன் மற்றும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் இயக்குனர் சபை உறுப்பினர் திரு. சத்தியரூபன் ஆகியோர் உலக்த்தமிழர் வரலாற்று மையத்தின் நோக்கம், உருவாக்கம், அதன் எதிர்காலப் பணி, மற்றும் மக்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் உதவிகள் மற்றும் ஆலோசனை போன்ற விடையங்கள் தொடர்பாக கருத்துரைகளை நிகழ்த்தினர்.

கருத்துரைகளைத் தொடர்ந்து மக்கள் நன்கொடைகளும் மாதாந்த நன்கொடைக்கான படிவங்களையும் அங்கு கூடியிருந்த மக்கள் உலகத் தமிழர் வரலாற்று மையத்திடம் வழங்கினர்.

பிரித்தானியாவில் நடைபெற்ற “புரட்டாதி மாதத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு”

world-tamils-historical-2

தியாகதீபம் திலீபன் உட்பட புரட்டாதி மாதத்தில் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெற்றது.

பிரித்தானியாவின் வரலாற்று புகழ் பெற்ற ஒக்ஸ்பேட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நேற்று (25-09-2016) ஞாயிற்றுக் கிழமை மாலை 4:30 மணி முதல் 7:30 மணிவரை இந்த நிகழ்வு நடைபெற்றது.

நேற்றைய இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை சவுத்ஹோல் தமிழ் கல்விக்கூடத்தின் அதிபர் திரு. செல்லத்துரை அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை திரு.பாஸ்கரன் (உ.த.வ.மை) அவர்கள் ஏற்றிவைத்தார்.

மாவீரர்கள் நினைவுத் தூபிக்கு மாவீரர் லெப்.கரன் (03-09-2000 அன்று யாழ் அரியாலை நோக்கி முன்னேறிய ரிவிகரண இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவியவர்) அவர்களின் சகோதரி திருமதி. லதா சதா அவர்கள் ஏற்றிவைக்க, மலர்மாலையினை மாவீரர் லெப். கேணல் சுபன் (25-09-1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் இராணுவ மினி முகாம் மற்றும் 62 காவலரண்கள் மீதான தாக்குதலில் வீரச்சாவை தழுவியவர்) அவர்களின் சகோதரி திருமதி. புஸ்பராணி கந்தசாமி அவர்கள் அணிவித்தார்.

தொடர்ந்து போரில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கான நினைவு தூபிக்கு மாவீரர் கரும்புலி மேஜர் செழியன் அவர்களின் தந்தை திரு.மோகன் அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றிவைக்க, மாவீரர் கேணல் சங்கர் அவர்களின் உறவினர் மலர்மாலை அணிவித்தார்.

அதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர்வணக்கம் இடம்பெற்றது.

அரங்க நிகழ்வுகளாக கவிதைகள் திருமதி.ஜெயலக்சுமி சிவானந்தராஜா (மில்ரன்கீன்ஸ் தமிழ் ஆசிரியர் ), ஆர்த்தி ரவீந்திரநாதன், மிதுரன் ரவீந்திரநாதன்.

நினைவுரை – போராளி புரட்சி, நினைவுரை – திரு.மயில்வாகனம் (உ.த.வ.மை), நினைவுரை – திரு.ராஜன் (முன்னாள் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளரும் மூத்த போராளியும்) என்பன இடம்பெற்றது.

இறுதியாக உறுதியேற்புடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

http://www.worldtamilshistoricalsociety.com/

world-tamil-shistorical-society