திருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் !

தென் தமிழீழத்தின் சரித்திர நாயகன் தளபதி அன்ரனி !  வசிட்டர் வாயால் பிரமரிஷி என்பது போல கிட்டு வாயால் சிறந்த தளபதி அன்ரனி !
அவரது 26ம் ஆண்டு நினைவு.ltte leaders kuyilan

உலகெங்கிலும் கிடைக்காத மலிவான கூலி – எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் என அடையாளப் படுத்தப்பட்டவர்கள் தமிழர்கள்.

ஆனால் திருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் இவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள்.

இந்த ஆரம்பம் கல்முனை – துறைநீலாவணைப் பகுதியில் இடம்பெற்றது. என்பதுபெரும்பாலானோருக்குத் தெரியாது. தம்மைத் தாக்க வந்த ஆயுத தாரிகளான சிங்களவர்களை ஓட ஓட விரட்டியவர்கள் கனகசூரியம் உள்ளடங்கிய குழுவினர்.

அம்பாறை பட்டிப்பளையில் அரசமரக் கிளையொன்றை நாட்டிய இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ் .சேனநாயக்கா ” இந்த மரக்கன்று பெரிய விருட்சமாகும் போது உங்களைத் தவிர வெளியார் யாரும் இருக்கக் கூடாது” என்று சிங்களவர் மத்தியில் உரையாற்றினார்.

அந்த வெறியூட்டும் பேச்சுத்தான் அம்பாறை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற நினைப்புக்குத் தள்ளியது. கல்லோயா திட்டத்தின் கீழ் கரும்புத் தோட்டத்தில் பணிபுரிந்த சுமார் 150 தமிழர்களை வெட்டியும் தீயிட்டும் கொல்ல வைத்தது.

தொடர்ந்து தமது ஆதிக்க எல்லையை விரிவுபடுத்த கல்முனை – துறை நீலாவணைப் பகுதிக்கு ஆயுத தாரிகளாக வந்து சேர்ந்தனர் சிங்களவர்கள். அச்சமயமே தமிழனின் ஆயுதப் போராட்ட வரலாறு ஆரம்பித்தது.

அன்றைய தினம் ஆயுதம் தூக்கிய கனக சூரியத்தின் மகன்தான் பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதியாக விளங்கிய மேஜர் அன்ரனி . (சிறிதரன்) இன்று அவரது 26 வது ஆண்டு நினைவு தினமாகும்.

கனகசூரியம் சௌந்தரி தம்பதியினர் இருவரும் கல்முனை பட்டின சபை 1 ஆம், 2ஆம் வார்டுகளின் உறுப்பினர்களாக விளங்கியவர்கள் இவர்களுக்கு ஐந்து ஆண்பிள்ளைகள் ஆறு பெண் பிள்ளைகள் மொத்தம் 11 பிள்ளைகள் இவர்களில் ஆறாவது பிள்ளையாக 24/04/1964 அன்று பிறந்தார் அன்ரனி.

“வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி” என்பார்கள் அது போலவே தமிழர் விடுதலைப் போராட்ட காலத்தில் களத்தில் நின்று வழிநடத்தியவர்களில் முதன்மையாளராக விளங்கிய கேணல் கிட்டுவின் வாயால் “சிறந்த கொமாண்டர் ” என்று வியந்து பாராட்டப்பட்டவர் அன்ரனி.

இந்திய இராணுவ காலத்தில் முற்றுகைக்குத் துணை புரிய முகாமில் இருந்து புறப்பட்ட படையினரை முன்னேறவிடாமல் மோட்டார் படையணியை நெறிப்படுத்திய விதம் – கட்டளையிடும் பாங்கு என்பவற்றைப் பார்த்த பின்பே கிட்டு இவ்வாறு பாராட்டினார்.

அடுத்த தொகுதியில் சிறந்த தலைமைத்துவம் உருவாகி வருவது குறித்து மகிழ்ச்சியுற்றார். கௌரவிப்பவரின் தகுதியை வைத்தே கௌரவம் பெறுவோர் குறித்து வெளியில் உள்ளோர் தீர்மானிப்பார். இதனை உறுதிப் படுத்துமாற்போல் அன்ரனிக்கு 203 ரக துப்பாக்கியைப் பரிசளித்தார் தலைவர்.

பொதுவாக தளபதிகளுக்கே இக் கௌரவம் வழங்கப் படுவது வழக்கம். அந்த வகையில் அன்ரனி இக் கௌரவத்தைப் பெறத்தகுதியானவர்தான்.

இந்திய ராணுவத்தின் போரிடும் வலுமிக்க சக்தியாகக் கருதப்பட்டது கூர்க்காப் படையணி. கூர்க்காக்கள் குறித்து இயல்பாகவே பெருமிதமாகவே குறிப்பிடுவார்கள் ஒரு கூர்க்கா கத்தியை வெளியே எடுத்தால் இரத்தம் காணாமல் உறைக்குள் அதனை வைக்கமாட்டான் என்று புகழ்வார்கள்.

அவ்வாறன கூர்க்கா படையணி நொந்து நூடில்ஸ் ஆகிப்போன இடம் மணலாறு கூர்க்காக்கள் தமது கத்தியை மண்ணில் புதைத்துக் கொண்டார்கள். என்று கூறுமளவுக்கு அந்தப் படையணி புலிகளிடம் அடிவாங்கியது. இந்தச் சமரில் கணிசமானளவு மட்டக்களப்பு போராளிகள் பங்குபற்றினர்.

தொடர்ந்து பல சமர்களில் அவர்கள் தமது திறமையை வெளிப்படுத்தினார். பிறகொரு சந்தர்ப்பம் இவ்விடயங்களை அன்ரனியிடம் குறிப்பிட்டார் ஒரு போராளி தொடர்ந்து “இங்கே இவ்வளவு திறமையாக மட்டக்களப்பு போராளிகள் செயற்படுகின்றனர் ஆனால் இதே அளவு திறமையை மட்டக்களப்பில் வெளிப்படுத்தப் படவில்லையே ?” என வினாவினார்.

இதற்குச் சிரித்துக்கொண்டு பதிலளித்தார் அன்ரனி. “ஒரு முயலை வேட்டை நாயொன்று துரத்திச் சென்றது தனது உயிரைப் பாதுகாக்க மிக வேகமாகப் பாய்ந்து சென்றது முயல். ஒரு இடத்தில் அதன் கால்கள் பதிந்ததும் திரும்பி நாயை நோக்கிப் பாய்ந்தது அது. முயலின் வேகத்தைப் பார்த்த நாய் திரும்பி ஒடத் தொடங்கியது.

தனது உயிரைப் பற்றிய அச்சம் அதற்கு வந்துவிட்டது. இதற்குக் முயலின் கால்கள் பதிந்த இடம் பாஞ்சாலம் குறிச்சி. வீர பாண்டிய கட்டப்பொம்மன் பிறந்த மண் என்பதால் அது வீரம் விளைந்த பூமியாகத் திகழ்ந்தது.

அது போலத்தான் எங்கள் தலைவரோடு இருக்கின்றோம் என்ற நினைப்பே எமது போராளிகளுக்குத் தனிச் சக்தியை ஆற்றலைக் கொடுக்கிறது அதுதான் காரணம். தலைவர் மீதான அன்ரனியின் விசுவாசம் அன்று பலருக்கும் வெளிப்பட்டது.

ஒரு சமயத்தில் தலைவர் வாடாப்பா மட்டக்களப்புத் தளபதி என்று விநாயகமூர்த்தியின் மகனின் தோளிலும் வாடாப்பா அம்பாறைத் தளபதி அன்ரனியின் தோளிலும் கை போட்டபடி படம் எடுத்துக் கொண்டார்.

அச்சமயம் தலைவரின் மறுபக்கம் நின்றவரின் முகம் போன போக்கை அன்ரனி அறியவில்லை. வெளியில் நின்றவர்கள் அவதானித்துக்கொண்டார்கள் அம்பாறை திரும்பிய அன்ரனி 1989 செப்டம்பர் வளத்தாப்பிட்டியில்

இந்தியப் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டார் புலிகள் தரப்பில் இழப்பேதுமின்றி நடத்தப்பட்ட இத் துணிகரத் தாக்குதலில் பல படையினர் கொல்லப்பட்டனர் 4 ஆயுதங்கள் 20 ரவைக்கு கூடுகள் கைப்பேற்றப் பட்டன.

இந்தியப்படை அம்பாறையிலிருந்து வெளியேற முன்னர் அவர்களுடன் சேர்ந்தியங்கிய EPRLF. TELO.ENDLF ஆகிய குழுக்களுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி தமிழ் தேசிய இராணுவம் என்ற ஆயுதக் குழுவை உருவாக்கியது.

திருக்கோயில் பகுதியில் நிலைகொண்டிருந்த நுPசுடுகு. முகாம் மீது அன்ரனி தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தினார்.

மிக உக்கிரமான இத் தாக்குதலில் சொந்த பலத்தில் நம்பிக்கையில்லாத EPRLF யினர் சீக்கரமே தமது தோல்வியை உணர்ந்தனர். ஆயுதங்கள் வாகனம் வாகனமாக கைப்பெற்றப்பட்டன.

மறுபக்கம் வுநுடுழு. முகாம் றீகன் தலைமையிலான குழுவினரிடம் வீழ்ந்தது அம்பாறையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் மட்டக்களப்பு நோக்கி தனது படையணியை நகர்த்தினார் அன்ரனி.

மட்டக்களப்பு அரசியல் பொறுப்பாளராக விளங்கிய பிரான்சிஸ் (இராசையா சடாச்சரபவான்) யின் புதை குழிக்குச் சென்ற அவரும் அவரது படையினரும் அங்கு வீரவணக்கத்தைச் செலுத்தினர். EPRLF. இனருடன் கூடச் சென்ற இந்தியப் படையினராலேயே வீரச்சாவைத் தழுவினார் பிரான்சிஸ்.

பிரான்சிஸின் தந்தையை சந்தித்து உரையாடிய பின்னர் படையணி மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியூடாக நகர்ந்தது. அப்போது சீறிலங்காப் படையினருடன் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது.

களுவாஞ்சிகுடி போலீஸ் நிலையப் பகுதி ஊடாக அவர்கள் சென்றபோது இங்கேதான் லெப். ராஜா (இராமலிங்கம் பரமதேவா ) வீரச்சாவைத் தழுவினார். எனவும் அத் தாக்குதல் பற்றியும் விளக்கினார்.

மட்டக்களப்பில் மோதல் தொடர்ந்த வண்ணம் இருந்தது அன்ரனி மட்டக்களப்பு நோக்கி நகர்கிறார் என்ற செய்தியை அறிந்ததும் தமிழ்த் தேசத் துரோகிகளின் நம்பிக்கை போய்விட்டன மட்டக்களப்பு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும் அன்ரனியின் களமுனை யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டது யாழ் கோட்டை முகாம் மீதான முற்றுகையின் போது அன்ரனியின் பங்கு கணிசமானதாக இருந்தது வசாவிளான் நோக்கி வந்த படையினர் தொடர்ந்து முன்னேற முயன்றனர்.

வசாவிளான் வந்த ஆமி புன்னாலைக் கட்டுவனுக்கு வராமலிருக்க வேண்டுமாயின் கடுமையாக போராட வேண்டும் எனக் கூறிவிட்டு சென்றார் அன்ரனி.

அன்றைய சமரில் குறிப்பிட்ட பகுதியை நெருங்குவது கடுமையானதாக இருக்கிறது என சிங்கள தரப்பு தமது தலைமைக்கு விளக்கமளித்தது.

இந்த உரையாடல் தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு யார் இருக்கிறார் என அவர் விசாரித்தார். அன்ரனியின் படையணிதான் அங்கு நிற்கிறது என்ற தகவல் கிடைத்தது. அவருக்குத் திருப்தியாக இருந்தது எனினும் வரலாறுஅவரை எம்மிடமிருந்து பிரித்தது.

தமது பகுதியில் வீரச்சாவெய்திய அன்ரனிக்கு மரியாதையை செய்யும் முகமாக புன்னாலைக் கட்டுவன் மக்கள் அங்குள்ள ஆஸ்பத்திரி வீதிக்கு அன்ரனி வீதி என பெயரியிட்டனர்.

லெப் கேணல் .ராதா தலைமையிலான ஐந்தாவது பயிற்சிமுகாமில் பயிற்சி பெற்று மணலாறு, மட்டு- அம்பாறை, யாழ்ப்பாணம் என்று சகல இடங்களிலும் சமர்க்களமாடிய அன்ரனியை அவருடன் கூடப்பழகியவர்கள்

கண்கள் பனிக்க பெருமையுடன் இன்று நினைவு கூறுகின்றனர். அன்ரனியின் சகோதரர்கள் மோகன், விஜயராஜா இருவரையும் யுத்த காலத்தில் இழந்த குடும்பம் அவரது சகோதரி யொருவர் ஈ பி ஆர் எல் எப் வின் பிரமுகரும் வடகிழக்கு மாகாண சபை நிதி அமைச்சராக இருந்தவருமான கிருபாகரனைத் திருமணம் செய்திருந்தார்.

எனினும் எப்போதும் பிரபாகரனுக்கு மட்டுமே விசுவாசமாக இருந்தார். அன்ரனி தளம்பவில்லை ஆனால் விநாயகமூர்த்தியின் ஒருமகன் போராட்டத்திற்கு துரோகம் இழைத்து தனி அணி கண்டபோது இன்னொரு மகனான ரெஜியும் இணைந்து கொண்டார்.

முக்கிய தளபதியொருவர் ரெஜி யுடன் நீண்ட நேரம் தொலைத்தொடர்பில் உரையாடிய போதும் தனது தம்பியுடன் தான் நிற்கப் போகிறேன் என்று கூறி அவ்வாறே நடந்து கொண்டார். அச்சமயத்தில் பலரும் அன்ரனியை நினைவு கூர்ந்தனர்.

ஞானி

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: அன்ரனி
இயற்பெயர்: கனகசூரியம் சிறீதரன்
பால்: ஆண்
ஊர்: கல்முனை, அம்பாறை
மாவட்டம்: அம்பாறை
வீரப்பிறப்பு: 24.09.1964
வீரச்சாவு: 19.10.1990
நிகழ்வு: யாழ்ப்பாணம் வசாவிளானில் சிறிலங்கா படையினரின் ஜெயசக்தி நடவடிக்கைக்கு எதிரான 3ம் நாள் சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: கோப்பாய்
மேலதிக விபரம்: கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

maj-antony