பிரித்தானியா மாவீரர் துயிலும் இல்ல வளாகம் இருக்கும் போது ஏன் வேறு இடத்தில் ?

worldtamils-maaveerar-illam-2ndஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை நினைவுப்படுத்திய பிரித்தானியா!

புலம்பெயர் தேசத்தில் முதன் முறையாக  மாவீரர் துயிலும் இல்ல வளாகம் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினால்  கொள்வனவு செய்யப்பட்டு பிரத்தியேகமாக பராமரிக்கப்பட்டுவருகின்றது, இன்றும் கொள்வனவுக் கடனில் சிக்கித்தவிக்கும் நிலையில் அதற்கு தமிழ் மக்களிடம் வரவேற்புக் கிடைக்கவில்லை அதற்கு மாறாக எதிர் விமர்சனங்களையே சந்தித்து வருகின்றது

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஸ்ரட்பேர்ட் ஒலிம்பிக் திடலில் பெரும் செலவில் செய்ததை இந்த இடத்தில் ஒற்றுமையோடு செய்திருந்தால் அந்த நிதி இந்த மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தின் கடன் சுமையைக் குறைத்திருக்கும் !

இதை தமிழ்மக்கள் எப்போது உணர்வார்கள் ???

**

உலகத் தமிழர் வரலாற்று மையம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் MILL LANE, BANBURY, OXFORD OX173NX UNITED KINGDOM என்ற இடத்தில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகத் தமிழர் வரலாற்று மையம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் குறித்த மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது வரலாற்று பெயர் எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.

குறித்த தலைமை செயலக நெறிப்படுத்தலில் பிரித்தானியா வாழ் தமிழர்களால் நினைவுகூரப்பட்டுள்ளது.

மேலும், தாயகத்தின் முல்லைத்தீவு பூங்கா மாவீரர் துயிலுமில்லத்தை நினைவுப்படுத்தும் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள மாவீரர் கல்லறைகள் சான்றாக உள்ளது.

இதேவேளை, பிரான்ஸ், டென்மார்க்,சுவிட்ஸ்ர்லாந்தின் பல மாநிலங்கள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் மாவீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.worldtamils-maaveerar-illam worldtamils-maaveerar-illam-2 worldtamils-maaveerar-illam-3 worldtamils-maaveerar-illam-4 worldtamils-maaveerar-illam-5  worldtamils-maaveerar-illam-6 worldtamils-maaveerar-illam-7 worldtamils-maaveerar-illam-8 worldtamils-maaveerar-illam-9 worldtamils-maaveerar-illam-10 worldtamils-maaveerar-illam-11