வள்ளுவத்தின் வழி நின்று வரலாற்று நாயகர்களின் கனவை நனவாக்குவோம்!

இரண்டாயிரம் வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் குன்றா இளமையுடன் அள்ள அள்ள குறையாத அறிவுச் சுரங்கமாக விளங்கிவரும் உலகப் பொது மறையான திருக்குறள் தந்த வள்ளுவப் பெருந்தகை வகுத்த வள்ளுவத்தின் வழி நின்று எமது வரலாற்று நாயகர்களின் கனவை நனவாக்குவது உலகத் தமிழர்களின் கடமையாகும். முக்காலத்திற்கும் பொருந்தும் இயல்புடைய தமிழ்மறையான திருக்குறள் இன்றைய நிலையில் உலகத் தமிழர்களுக்கு அவர்களது கடமையை உணர்த்தி நிற்கின்றது. தமிழ் மறையில் பதினோராவது அதிகாரமாக இடம்பெற்றிருக்கும் ‘செய்ந்நன்றி அறிதல்’ பகுதியில் கூறப்பட்டிருக்கும் பத்து குறள்களுக்குள்ளும்… Read More வள்ளுவத்தின் வழி நின்று வரலாற்று நாயகர்களின் கனவை நனவாக்குவோம்!

கல்லறையிலும் நிம்மதியாய் உறங்கவிடாக் கயவர் கொண்ட நாடு !

இன்று மாவீரர் நாள். தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் அருமந்த உயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூருகின்ற நாள். மாவீரர் துயிலும் இல்லங்களில் விளக்கேற்றி அவர்களை நினைவுகூருகின்ற அந்த நாளுக்கும் தடை விதிக்கப்பட்டது. மாவீரர்கள் துயிலும் இல்லங்களைத் தகர்த்தெறிந்து அந்த நினைவுகளுக்கே இடமிருக்கக் கூடாது என்று நினைத்த கயவர்கள் வாழும் இந்த நாட்டில் கல்லறையில் கூட நிம்மதியாக இருக்க முடியாது என்றாயிற்று. துட்டகைமுனுவின் பரம்பரை என்று மார்தட்டுகின்றவர்கள் எல்லாளன் மன்னனை வணங்கிச் செல்ல வேண்டும் என்ற கட்டளை பிறப்பித்த… Read More கல்லறையிலும் நிம்மதியாய் உறங்கவிடாக் கயவர் கொண்ட நாடு !

தமிழர் தாயகமெங்கும் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன !

இறுதி யுத்தத்தின் பின் முழங்காவில் துயிலுமில்லத்தில் கண்ணீர் மல்க மாவீரர் நாள் அனுஸ்டிப்பு தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி – கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் மணி ஒலி எழுப்பி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். பொதுச்சுடரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை னோதிராஜா ஏற்றிவைத்தார். அதனைத்… Read More தமிழர் தாயகமெங்கும் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன !

தமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எங்கள் மாவீரர்கள்!

தமிழ்மக்களுக்காக, தமிழீழ நாட்டிற்காக, தங்களையே அர்ப்பணித்த தற்கொடையாளர்களை நினைவில் கொள்கின்றநாள்.தரணியில் தமிழனை தலைநிமிரவைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரர்களை நெஞ்சினில் நிறுத்தி, மலர்தூவி தலைதாழ்த்தி வீரவணக்கம் செலுத்தும் நாள். தரணியில் தமிழனை தலைநிமிரவைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரர்களை நெஞ்சினில் நிறுத்தி, மலர்தூவி தலைதாழ்த்தி வீரவணக்கம் செலுத்தும் நாள். இந்நாளில் நாம் எடுக்கின்ற உறுதிமொழி, களத்தில் காவியமான கதாநாயகர்களின் எண்ணங்களில் உறைந்திருந்த தமிழீழத் தாயக இலட்சியத்தை ஈடேற்றும்வகையில் ஒற்றுமையாய், ஒரணியில்திரண்டு தமிழனுக்கென்றோர் நாடு தரணியில் அமையப்பெற சத்தியம்… Read More தமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எங்கள் மாவீரர்கள்!

புலிகளிடம் ஈழம் இருந்தபோது…..

விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும் அரசியலையும் தனது கேமராவில் துல்லியமாக படம் பிடித்த உலகப்புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் Steve McCurry ஸ்டீவ் மெக்கர்ரே. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் அரசியலை இதைவிட ஆழமாக சொல்லிவிட முடியாது என நினைக்கிறேன். இரண்டுமுறை உலக பத்திரிக்கை புகைப்பட விருதினைப் பெற்ற ஸ்டீவின் இந்தப் படம், புலிகளை தட்டையாக விமர்சித்த அரசிய்லை உடைத்துப் போட்டிருக்கிறது என்று சொல்லலாம். விடுதலைப்போராட்டத்தில் அடிமைப்பட்டிருந்த பெண்களின் பங்கு, உழைக்கும் சமூகம் வைத்திருந்த நம்பிக்கை, நிலத்தினை மட்டுமே விடுவிக்க நடந்த போராட்டமாக… Read More புலிகளிடம் ஈழம் இருந்தபோது…..

உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள் !

“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” -தலைவர் வே.பிரபாகரன் 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம்… Read More உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள் !

தமிழ்த்தேசிய தலைவர் 62வது பிறந்தநாள் வாழ்த்துப்பா -காணொளிகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் 62 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 62 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நண்பகல் யாழ். பல்கலைக்கழகத்தில், சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கின் முன்பாக, அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பிரபாகரனின் உருவப்படம் வைக்கப்பட்டு, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக சமூகத்தினர் பலரும் கலந்து கொண்டனர். அதேவேளை, தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், தமிழ்நாட்டிலும், வே.பிரபாகரனின் பிறந்தநாளை… Read More தமிழ்த்தேசிய தலைவர் 62வது பிறந்தநாள் வாழ்த்துப்பா -காணொளிகள்

வெடி சுமந்த வேங்கையின் காதல்.! போராளி என்பவன் யார்.!

முகம் தெரியாத ஒருவருக்காக கண்ணீர் சிந்துபவர்களைத் தான், நாங்கள் இளகிய மனம் படைத்தவர்கள் என்று வகைப்படுத்துகின்றோம்.! இன்னொருவர் படும் துன்பம் கண்டு, எவனொருவன் மனம் கசிந்து, அவர்களைக் காக்க, அவர்களுக்காக போராடப் புறப்படுகின்றானோ அவனே போராளி.! களத்தில் களமாடும் போது, உறுதியில் “உருக்கை” போன்றவர்களாக இருந்த போதும், அன்பினால் இளகிய மனம் படைத்தவர்களே எங்கள் போராளிகள்.! இந்த உலக அமைப்பு இவர்களை பயங்கரவாதிகள் என்று வகைப்படுத்துவதை, அடிமைப்பட்ட ஒரு இனம் மறுதலித்தே வரும் என்பது நிதர்சனம்.! போராளி… Read More வெடி சுமந்த வேங்கையின் காதல்.! போராளி என்பவன் யார்.!

மாவீரர்கள் துயிலுமில்ல பாடல் உருவான வரலாறு !

1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அருச்சுனா – இவர் பின்பு கடலில் வீரச்சாவடைந்தார் இசைப்பாடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது வீரச்சாவால் அது தடைப்பட்டது. திலிபனின் உண்ணாநோன்பின் போது வசதிகள் ஏதுமற்ற நிலையில் காசிஆனந்தன் அவர்களின் இரு பாடல்களும், ஒரு பாடல் திலீபன் அழைப்பது சாவையா… புதுவை அண்ணரின் இரு பாடல்களும் ஒரு பாடல் வாச மலர் ஒன்று வாடிக்கிடக்கின்றது. யாழில்… Read More மாவீரர்கள் துயிலுமில்ல பாடல் உருவான வரலாறு !

எம்மினத்தைக் காத்த எங்களின் தேசியத் தலைவனை எண்ணி !

கார்த்திகைக் குமரனாய்ப் பிறந்து கீர்த்திமிகுவீரனாய்வளர்ந்து நேர்த்தி மிக எம்மினத்தைக் காத்தஎங்களின் தேசியத் தலைவனை எண்ணி… இனியதமிழ் விருத்தவரியில் இப்பா. :-ந.கிருஷ்ணசிங்கம். ஆயிரம்மாண்டுக்கு ஓர் முறை ஒர் தேசிய இனத்தின் மீட்சிக்காய் அந்தமில்லா அருந்தலைவர் ஒருவர் உதிப்பார் என்பார்.. அதுபோல்,வேயுயர்வீரமாநுட்பராய் எம்மிடைதோன்றிய எம் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களை. எம்தமிழ் இனத்தின் சிந்தைகளில் நிலைத்த அந்த வேந்தனை அவர்தம் பண்பினைப் போற்றி.. எழுதியவிருத்தப்பா! கடமையோடு கண்ணியம் கட்டுப்பாடு என்ன வென்றுகாட்டிய திடமனம் உடைய தலைவனாய்.. பகையஞ்சும் தகையில்லா… Read More எம்மினத்தைக் காத்த எங்களின் தேசியத் தலைவனை எண்ணி !