முன்னாள் போராளிகளின் அவலநிலை -5 !

தமிழ இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்.. அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்… வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!! நன்றி IBC Tamil * நாட்டுக்காகப் போராடி சற்கர நாற்காலியே வாழ்க்கையாகிப்போன எங்களுடன் ஒரு நிமிடம் பேசமுடியாதவர்களா எங்கள் மக்கள் பிரதிநிதிகள்? கடந்த 24ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உயிரிழை என்ற அமைப்பினர் சென்றிருந்தனர். யுத்தத்தில் ஈடுபட்டு, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் இயங்காதவர்களை உள்ளடக்கிய… Read More முன்னாள் போராளிகளின் அவலநிலை -5 !

பிரபாகரனின் உயரிய பண்புகள் !

தலைவர் பிரபாகரனின் தோற்றம் வரை, தமிழர்களின் வீரவரலாறாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறே எமக்கு ஊட்டப்பட்டது. பரம்பரை பரம்பரையாக தமிழர் மரபில் கடத்தப்பட்டு, தமிழர்களை நெஞ்சுநிமிர வைத்தவர்கள் இந்த மன்னர்கள். ஆனால், தமிழரை மட்டுமல்லாது இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் எமது தலைவர் பிரபாகரனே. செல்லும் இடமெல்லாம் தமிழருக்குக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தவர்கள் புலிகளென்றால் அது மிகையாகாது. முகம் தெரியாத ஒரு வெள்ளையனிடமோ அல்லது கருப்பனிடமோ நீ யார் என்று அவர்கள் கேட்கும்… Read More பிரபாகரனின் உயரிய பண்புகள் !

விடுதலைப் புலிகள், சிறுவர் போராளிகளை உருவாக்கியது உண்மையா?

விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர் போராளிகள் இருந்தார்கள் என பல ஆண்டுகளாக சர்வதேசமும், சர்வதேச அமைப்புக்களும் இலங்கையுடன் சேர்ந்து குற்றம் சுமத்திய வண்ணமே உள்ளனர். இன்று வரையும் புலிகளை முற்றிலுமாக ஒழித்து விட்டோம் என்று சொல்லிய பிறகும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றுப் பெற்றதாகத் தெரியவில்லை! சர்வதேசம் சிலவேளைகளில் மறந்து போய் அமைதியாக இருந்தாலும் தமிழர் விரோத சக்திகள் மீண்டும் “சிறுவர் போராளிகள்” விடயத்தினை இலங்கை அரசுடன் சேர்ந்து ஊதிப் பெருப்பித்து விடுகின்றனர். இவ்வாறான சில நஞ்சுத் தமிழர்களினால்தான்… Read More விடுதலைப் புலிகள், சிறுவர் போராளிகளை உருவாக்கியது உண்மையா?

பாலசிங்கத்தின் வாழ்க்கையின் அறியப்படாத சில பகுதிகள்…

உடல்நிலை நான் விரும்பும் வேகத்தில் என்னை எழுத அனுமதிக்காவிட்டாலும், நீங்கள் -உறவுகள் தரும் உற்சாகம் தொடர்ந்தும் எழுத வைக்கிறது. வாருங்கள் தொடர்ந்தும் பயணிப்போம். நிகழ்வு 1: 1979இல் தமிழ் ஈழவிடுதலையுடன் தன்னை இணைத்துக் கொண்டதன்பின் இந்தியாவில் அதிகம் வதிய ஆரம்பித்தார் பாலா அண்ணா. இவ்வாறு சென்னையில் பல இடங்களில் வாழ்ந்து 1984 பிற்பகுதியில் கடற்கரை பகுதியாக பேசன்ட் நகரில் ஒரு மாடிக்குடியிருப்பில் குடியமர்ந்தார். பாலா அண்ணாவிற்கு இயற்கை நிறைய பிடிக்கும். கடற்கரையோர அந்தவாழ்க்கை அவருக்கு நிறைவே பிடித்திருந்தது.… Read More பாலசிங்கத்தின் வாழ்க்கையின் அறியப்படாத சில பகுதிகள்…

உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புனித அஸ்தி!

“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான கடந்த 14ஆம் திகதி உலகத் தமிழர் வரலாற்று மையத்திற்கு அவரது புனித அஸ்தி கொண்டுவரப்பட்டுள்ளது. தாயகத்திற்கு கொண்டு செல்வதற்கு என 2006ஆம் ஆண்டில் எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புனித அஸ்தியின் ஒரு பகுதியே தற்போது தமிழீழ மாவீரர் பணிமனையிடம் (ஐக்கிய இராச்சியம்) கையளிக்கப்பட்டுள்ளது. மாவீரர்களுக்கான நிலம் பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பங்களிப்புடன் சொந்தமாக வாங்கப்பட்டுள்ள நிலையில்,… Read More உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புனித அஸ்தி!

தலைவரின் ஜொனி மிதிவெடியும் இந்திய இராணுவத்தின் ஒப்ரேசன் பவானும்.!

ஜொனி மிதிவெடி இந்திய, சிங்கள இராணுவத்தைக் கதிகலங்கவைத்த சொல்.! ஜொனி மிதிவெடியை தவிர்த்து, தமிழரின் போரியல் வரலாறு முழுமை பெறாது.! இந்த மிதிவெடி உருவாக்கிய போது புலிகளமைப்பில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். ஆன போதும் இந்த மாவீரர்களின் இருந்து “ஜொனி” என்ற பெயரை ஏன் தலைவர் தெரிவு செய்தார்? இதை அறிவதற்கு ஜொனி அண்ணையின் வரலாற்றையும், மிதிவெடி உருவான வரலாற்றையும் அறிய வேண்டும்.! லெப். கேணல்.ஜொனி அண்ணை 1980களின் ஆரம்பத்தில் தனது பல்கலைக்கழக படிப்பை பாதியில்… Read More தலைவரின் ஜொனி மிதிவெடியும் இந்திய இராணுவத்தின் ஒப்ரேசன் பவானும்.!

அங்கவீனமான முன்னாள் போராளிகளை அவமதித்து அந்நியப்படுத்தும் தமிழ் சமூகம் !

யுத்தத்தால் அங்கவீனமான இராணுவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் வடக்கில் இல்லை யுத்தத்தால் அங்கவீனமான இராணுவத்திற்கு அரசாங்கம் வழங்கும் விசேட சலுகைகள் வடக்கில் யுத்தம் காரணமாக அங்கவீனமானவா்களுக்கு வழங்கப்படுவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினா் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளாா். அத்துடன் மண்ணின் விடிவுக்காக தமிழ் இனத்தின் விடுதலைக்காக தம்மை அா்ப்பணித்த பலா் இன்று கையை இழந்து காலை இழந்து இடுப்பை இழந்து பல்வேறு பட்டப் பெயா்களுடன் மறைந்து வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோா் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள… Read More அங்கவீனமான முன்னாள் போராளிகளை அவமதித்து அந்நியப்படுத்தும் தமிழ் சமூகம் !

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில் !

தேசத்தின் குரல் தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு – தேசியத் தலைவரின் அறிக்கை தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது.… Read More தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில் !