தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்நிலை வந்திருக்காது !

முன்னால் போராளிகளின் அவலநிலை -5 ! தமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்.. அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்… வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!!

புனர்வாழ்வளித்து விடுதலைசெய்யப்பட்ட மற்றொரு முன்னாள் போராளி மரணம்!

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட மற்றொரு முன்னாள் போராளி மரணமடைந்துள்ளார். சுகவீனம் காரணமாக திருகோணமலை குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு வற்றாப்பளையில் வசித்துவந்த திக்சன் எனப்படும் 26 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த இவர் வெலிக்கந்தை, திருகோணமடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டரை வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் திக்சன், சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில்… Read More புனர்வாழ்வளித்து விடுதலைசெய்யப்பட்ட மற்றொரு முன்னாள் போராளி மரணம்!

விடுதலைக்கான அந்த அற்புதத்தை பெற்றதாயே நன்றி உனக்கு!

( தலைவரின் பிறந்தநாள் எம்மை கடந்து போய் ஒருசில நாட்கள் ஆகிவிட்டன. இந்த பொழுதில் தலைவரை பெற்ற தாய் பற்றிய ஒரு பார்வை..) அந்த மனிதன் மௌனித்து ஏழு ஆண்டுகள் ஆகப்போகின்றன. அவன் போராடிய காலத்தில் காப்பாற்றி வைக்கப்பட்டிருந்த தமிழீழ நிலம், மண் இன்று கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. சிங்கள பேரினவாதம் தனது இனஅழிப்பை எந்தவொரு சலனமும் இன்றி அதே வேகத்துடன் தொடர்ந்தே வருகின்றது. இதனை காப்பாற்றவோ, இதற்கு எதிராக எதையேனும் செய்வதற்கோ வக்கற்றவர்களாக அனைத்து தமிழர்களும்… Read More விடுதலைக்கான அந்த அற்புதத்தை பெற்றதாயே நன்றி உனக்கு!