முன்னாள் போராளிகளின் அவலநிலை -7 !

தமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்.. அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்… வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!! நன்றி IBC Tamil

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமன் ஒருவனின் ஆவணப்படம் !

வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் 8ம் ஆண்டு (29.01.2009) நினைவு நாள் இன்று! ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமன் ஒருவனின் ஆவணப்படம் ஜனவரி 29 இந்தக் காணொளி பார்க்கும் ஒவ்வொருவருடைய இதயத்தையும் உருக்கிப் பிழிவாதாக உள்ளது. முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாறு, அவருடைய உறவினரின் பேட்டி, கற்பித்த ஆசிரியர்கள், அவர் தொடர்பு கொண்டு பணியாற்றிய இயக்குநர்கள், அவர் நடித்த குறும்படங்கள், பணியாற்றிய சஞ்சிகைகள் போன்றன இடம் பெற்றுள்ளன. படிக்கும் காலத்தில் முத்துக்குமார் எத்துணை சிறப்பு மிக்க மாணவனாக திகழ்ந்தான்… Read More ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமன் ஒருவனின் ஆவணப்படம் !

எங்கு குற்றம் நடந்தாலும் முன்னாள் போராளிகளை கைது !

எங்கு குற்றச்செயல்கள் இடம்பெற்றாலும் உடனடியாக முன்னாள் போராளிகளை கைது செய்யும் வழக்கத்தை பொலிஸாரும் இராணுவத்தினரும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகரிடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகர் போல் மற்றும் அவரது பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் யாழ்பாணத்துக்கு வருகை தந்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின்… Read More எங்கு குற்றம் நடந்தாலும் முன்னாள் போராளிகளை கைது !

தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு ஆயுதக்களம் அமைத்த மாமனிதர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு ஆயுதக்களம் அமைத்த மாமனிதர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்: நிற்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். இன்று எம்ஜிஆர் பிறந்த தினம்.இதை முன்னிட்டு வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.  அறிக்கையில்,என் மடியில் விழுந்தது ஒரு கனி. அதனை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் போற்றப்பட்ட அன்றைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களைக் குறித்து, 1967 ஜனவரி 1 ஆம் நாள், சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற… Read More தமிழ் ஈழ விடுதலைப் போருக்கு ஆயுதக்களம் அமைத்த மாமனிதர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

போர் முனையில்,எதிரிக்கு நீரும் உணவும் கொடுத்தவர்கள் புலிகள் மட்டும்தான்!

போராட்ட‬ காலத்தில் நினைவில் இருந்து அழியாத சில நினைவுகள் ! நான் திருகோணமையில் இருந்து திடீரென்று யாழ்ப்பாணம் வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் வந்தது என்று முன்னர் இங்கே எழுதியுள்ளேன்.அப்படி வந்தபோது தளபதி கிட்டண்ணாவுடன் இருந்து நான் கடமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் கோட்டை ராணுவ முகாமை நாம் கிட்டண்ணா தலைமையில் நாம் முற்றுகை இட்டிருந்தோம்..எமது முற்றுகைக்கு வசதியாக இந்தியாவில் இருந்து பொன்னம்மானால் அனுப்பப்பட்டிருந்த ஐம்பது கலிபர் தானியங்கி பெரும் துணை புரிந்தது.கோட்டையில் இருந்து வெறும் ஐநூறு மீட்டருக்குள்தான்… Read More போர் முனையில்,எதிரிக்கு நீரும் உணவும் கொடுத்தவர்கள் புலிகள் மட்டும்தான்!

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

** ** தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும் ** தமிழர்தம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்! – சீமான் வாழ்த்து தமிழர்தம் வாழ்வில் புத்துலகம் பிறக்கிற இந்தப் புத்தாண்டு நாளில் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும் அநீதிக்கு எதிரானப் புரட்சிப்பொங்கல்! – சீமான் வாழ்த்து உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். -தமிழ் மறை உழவுசெய்து உலகிற்கே உணவளிக்கும்தெய்வங்களாக விளங்குகின்ற உழவர் பெருமக்களின் திருநாளாக வரலாற்றுப் பெருவெள்ளத்தில் புதைந்து தமிழ்த்தேசிய இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை… Read More இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மேஜர் அன்பரசன்/ இளந்திரையன்

  மேஜர் அன்பரசன்… மண் காத்த மாவீரன் !! இவர் 1980 ஆம் ஆண்டு யூலை மாதம் 6 ஆம் தேதி யாழ்மாவட்டம் வல்வெட்டிதுறையில் பிறந்தார். 1994 ஆம் ஆண்டு அதாவது சரியாக தனது பதினான்காம் அகவையில் தனது அன்னையின் கரங்களால் தமிழன்னையின் மண் காக்க தேசியத் தலைவரின் கைகளில் கையளிக்கப்பட்டு, இயக்கத்தால் இளந்திரையன் என்று பெயர் சூட்டப்பட்டு இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளபட்டார். பின்னாளில் இவரது உழைப்புக்கும் அன்புக்கும் நெகிழ்ந்த முக்கிய தளபதி ஒருவரால் அன்பரசன் என்றழைக்கப்பட்டார்.… Read More மேஜர் அன்பரசன்/ இளந்திரையன்