காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு புதிய இணையத்தளம் உருவாக்கம் !

25,000 மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட் டோரு க்கான ஒரு இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதன் பெயர்: www.youarenotforgotten.org

இந்த முயற்சி நாடுகடந்த அரசாங்கத்தின்புதிய சிந்தனைஆகும். பல புலம்பெயர் அமைப்புக்களின் ஈடுபாட்டுடன் இந்த இணையத்தளம் ஐ.நா அமர்வு 2018 -தொடங்கும் நேரம் வெளியாகியுள்ளது.

இந்த இணையத்தளத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் முழுமையான விபரங்கள் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயரைப் இந்த இணையத்தில் தேடி (Search) அந்த நபரின் முழுமையான விபரங்களை கண்டுபிடிக்கலாம்.

இந்த இணையம் ஆரம்பகட்டத்தில் உள்ளது. இது படிப்படியாக பல காணாமல் ஆக்கப்பட்பட்டோரின்பெயரும் அவர்களது முழு விபரங்களின் தரவுகள் இணைக்கப்படும்.

“Contact” இற்கு சென்று காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படம், மற்றும் முழுவிபரங்களை அனுப்பலாம்.

ஆகவே தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை இந்த இணைத்தளத்திற்கு தந்துதவலாம்

இந்த இணையத்தளம் நாடுகடந்த அரசாங்கத்தின் மேற்பார்வையில் நிர்வகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.. இது பலராலும் எதிர்பார்க்கப்பட்டஇணையத்தளம்.

இந்த இணையத்தளத்திற்கு தரவுகளை தந்து உதவுபவர்களை சரித்திரம் மறக்காது !