கேணல் ரத்னப்பிரியவுக்காக மக்கள் ஏன் அழுதனர்? ஆதாரத்துடன் வெளிவந்த உண்மைகள்

“அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில், தேவையின் தளத்தில் நின்று கொண்டிருந்த கிளிநொச்சி மக்கள் சமூகத்தின் மீது அரச அதிகாரி காட்டிய கருணை, இரக்கம் இவ்வாறான ஒரு நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது.

நன்றி கடனுடன், உணர்ச்சி பூர்வமாக அவர்கள் தங்களின் ஏக்கங்களையும், தேவைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் இதற்கு பின்னால் ஒரு இராணுவ நோக்கமும், இராணுவ பார்வையும் இருக்கின்றமை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டி உள்ளதாக” சிரேஸ்ட ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கடமையாற்றிய கேர்ணல் ரத்னப்பிரிய பந்து இடமாற்றம் பெற்ற நிலையில் அந்த மாவட்ட மக்களால் அவருக்கு பிரியா விடை நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த நிகழ்வு தொடர்பில் லங்காசிறி செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.