பாகிஸ்தானிடம் வாங்கிக்கட்டிக் கொண்ட இந்தியா !

இலங்கை விடயத்தில் விதியை மீறிய இந்தியா: சர்வதேச விதிகளை பாகிஸ்தான் மட்டும் மதிக்க வேண்டும் என கோருவது ஏன்?

இந்த சிறுவனை அதே சர்வதேச சட்டப்படி நடத்த வேண்டும் எனக் கோராதது ஏன்?

தனது நாட்டிற்குள் எல்லைதாண்டி வந்த இந்திய வீரரை சர்வதேச சட்டப்படி நடத்த வேண்டும் என இந்திய அரசு கோரியுள்ளது. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய வீரரை கௌரவமாக நடத்த வேண்டும் என பாகிஸ்தான் மக்களும் கேட்டுள்ளனர்.

அதன்படி கைது செய்யப்பட்ட வீரரை பாகிஸ்தான் அரசு சர்வதேச சட்டப்படி கௌரவாக நடத்தி வருகிறது. அதனை சம்பந்தப்பட்ட அவ் வீரரும் காப்பி அருந்தும்படி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசியுள்ளார்.

ஆனால் இலங்கை அரசும், இந்திய அரசும் முள்ளிவாய்க்காலில் சரணடைந்த 40,000 தமிழ் மக்களை கொன்று குவித்தார்கள். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சர்வதேச சட்டத்திற்கு மாறாக சுட்டுக் கொன்றார்கள்.

குறிப்பாக பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுத்துவிட்டு சுட்டுக் கொன்றார்கள். சரணைடைந்த இசைப்பிரியா உட்பட பல பெண்களை சர்வதேச விதிகளுக்கு மாறாக பாலியல் வல்லறவு செய்து கொன்றார்கள்.

இதில் வேதனை என்னவெனில் இன்றும்கூட இப் படுகொலையாளிகளை ஜ.நா.வில் இந்தியாவே பாதுகாத்து வருகிறது. யுத்தம் முடிந்து 10 வருடமாகிவிட்டது. ஆனால் சர்வதேச விதிகளை மீறிய இவ் இனப்படுகொலையாளிகளை விசாரணை செய்யக்கூட இலங்கை அரசு மறுத்து வருகிறது.

ஒருபுறம் சர்வதேச விதிகளை மீறிய இலங்கை அரசை ஆதரிக்கும் இந்திய அரசு மறுபுறம் பாகிஸ்தான் சர்வதேச விதிகளை மதிக்க வேண்டும் எனக் கோருகிறது. எந்த முகத்துடன் இந்தியா இதனைக் கோருகிறது? அல்லது இதனைக் கோருவதற்கு இந்தியாவுக்கு தகுதி இருக்கிறதா?

https://platform.twitter.com/widgets.js

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திய அந்த நேரம்! பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் துள்ளிக் குதித்த வீடியோ

https://platform.twitter.com/widgets.js

இந்திய விமானங்களை பாகிஸ்தான் படை வீழ்த்திய போது, பாகிஸ்தான் வீரர்கள் கொண்டாடி வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்மாவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.

இதனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய இராணுவம் பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகளின் முகாம்களில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது.

சுமார் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகின. ஆனால் தீவிரவாதிகள் இறந்தது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இதுவரை வெளியாகவில்லை.

இது போன்ற பதற்றமான நிலையில் தான் பாகிஸ்தான் இராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அப்போது நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் விமானங்கள் சுட்டி வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து தொடர்ந்து வந்த தகவல்களில் இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது உறுதியானது. அதுமட்டுமின்றி இந்திய விமானி ஒருவரையும் பாகிஸ்தான் சிறை பிடித்து வைத்துள்ளது.

சிறை பிடித்த இந்திய விமானியை பாகிஸ்தானியர்கள் அடிப்பது போன்ற வீடியோக்கள் வெளியானதால், இந்தியா மக்கள் கடும் கோபத்தில் உள்ளன. இது போன்ற நிலையில் தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் இரண்டு விமானங்களை பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் துல்லியமாக தாக்கியதைக் கண்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் துள்ளிக் குதிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கைது செய்யப்பட்ட போதும் பாக். இராணுவத்திடம் துணிச்சலாக பேசிய தமிழனாம் ! இதில் வைரலாகும் காணொளியாம் வேறு !