தமிழீழ பிரச்சனையை சிக்கலாக்கியவர்; மோடியின் வெளியுறவுத்துறை அமைச்சரானார்!

தெற்காசிய பிராந்தியத்தில் நிகழும் புவிசார் அரசியலின் அனைத்து நிகழ்ச்சிநிரல்களிலும் தமிழர்களாகிய நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபடுத்தப்பட்டுள்ளோம். அதன்பொருட்டு, தமிழீழத்தில் ஒரு இனப்படுகொலையை சந்தித்துள்ளோம். நாம் வாழும் இந்த பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த தமிழர் கடல் பகுதி தான் இன்றைய அமெரிக்க-சீனா போட்டியிடும் களம். அப்படியென்றால் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை பாகிஸ்தானை மையமாக கொண்ட காலம் இனி இருக்கப்போவதில்லை. அமெரிக்கா-அமெரிக்க ஆதரவு நாடுகள், சீனா-சீன ஆதரவு நாடுகள் என்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் என முடிவுசெய்யப்படும். இப்படிப்பட்ட வெறியுறவுக்… Read More தமிழீழ பிரச்சனையை சிக்கலாக்கியவர்; மோடியின் வெளியுறவுத்துறை அமைச்சரானார்!

ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் !

  ‘இதன் எழுபது ஆண்டுகள் வரலாற்றில் ஐநா அமைப்பு மனித குலத்தின் நம்பிக்கை விளக்காக போற்றப்பட்டிருக்கலாம் – ஆனால் அதே நேரத்தில் அது ஒரு வெட்கக்கேடான சர்வாதிகாரமாகவும் திட்டப்பட்டிருக்கிறது. அதனுடைய அளவுக்குமீறிய நிர்வாக கட்டுப்பாடு, ஊழல்களை மறைக்கும் செயற்பாடுகள், அதன் பாதுகாப்புச் சபையின் சனநாயகமற்ற செயற்பாடுகள் யாவும் பலரையும் ஆத்திரமடையச் செய்கின்றன. சமாதானம் என்ற பெயரில் அது போருக்கு போகிறது. அதே நேரத்தில் கொடூரமான இனவழிப்பை கைகட்டி நின்று பார்க்கிறது. இக்காலத்தில் ஐநா ஒரு ரிலியன்கள் (மில்லியன்… Read More ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் !

சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

சிறிலங்கா துடுப்பாட்ட அணியைத் தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதனை விவரிக்கிறது இந்த செய்தி ஆய்வு. அரசியலும் விளையாட்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசியத்தை நூறு வீதம் ஆதரிக்கும் தமிழர் சிலர் சிறிலங்கா அணிக்கும் ஆதரவு வழங்குகிறார்கள். ஆனால் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதனை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும். இதனை உணர்ந்தால் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர் ஆதரிப்பதன் ஆபத்தையும் அவர்கள் உணருவார்கள். தாரகம் இணையத்திலிருந்து… Read More சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்தவர்கள் யார்?

விடுதலைப் புலிகளின் பிளவு மட்டக்களப்பில் வசித்த இரண்டு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக அமைந்திருந்தது. அதில் ஒருவர் கொழும்பில் இருந்து செயற்பட்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்கள் அடுத்தது மட்டக்களப்பில் இருந்து பணியாற்றிய ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன். இருவரும் எந்த மக்களின் விடுதலைக்காக தங்களது ஊடகப் பணியை அர்ப்பணித்தார்களோ தமிழ் மக்களின் விடுதலைக்காக யாருடன் கூடுதலான உறவு வைத்திருந்தார்களோ அவர்களாளேயே இவர் கொல்லப்பட்டார்கள் என்பதே கசப்பான உண்மைகள். விடுதலைக்கான பயணத்தில் இருந்து விலகியவர்கள் முதலில் பயந்தது துப்பாக்கிகளுக்கு அல்ல… Read More ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்தவர்கள் யார்?

இளைய தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்க வேண்டிய காலம் !

அவர்கள் நந்திக்கடலை ஒரு கோட்பாடாக/ போராட்டத்தின் தொடர்ச்சியாக/ வெற்றியின் உள்ளடக்கமாகப் பார்ப்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது. இளைய தலைமுறையினர் தந்த பெரும் நம்பிக்கைகளுடன் தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவு நாட்கள் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தோல்வியையும்/ அவலத்தையும் முன்னிறுத்தும் அரசியல் எம்மை எப்போதும் நீதியை நோக்கி நகர்த்தாது. அத்தோடு அது ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவமாகவும் உருத் திரளாது. நாம் பத்து வருடங்களாகத் தேங்கியிருப்பதற்கான முதன்மைக் காரணம் இதுதான். இந்தப் பத்தாவது ஆண்டு நினைவையொட்டி எழுதப்பட்ட… Read More இளைய தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்க வேண்டிய காலம் !

முதல் தசாப்த நினைவுகூரல் !

தமிழ் சமூகத்தில் இறந்தவரை நினைவுகூரல் என்பது ஒரு பண்பாடு. இந்தப் பண்பாடு சங்ககாலத்திற்கு முந்தைய பெருங்கற்கால பண்பாட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. தம் சமூகத்திலிருந்து இறந்தவர்களுக்கு மறுவாழ்வு உண்டு. அவர்கள் இறந்தபின்னும் இன்னொரு உலகத்தில் வாழ்கிறார்கள் என்கிற நம்பிக்கையோடு அவர்தம் உடலை ஈமத்தாழிகளில் வைத்து, அதற்குள் பொன் பொருள் முதலானவற்றை இட்டுப் புதைத்துப்பாதுகாக்கும் மரபைத் தமிழர் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணம், வன்னி, பொன்பரிப்பு எனப் பல இடங்களிலும் இதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இந்தப் பண்பாடு காலமாற்றம் பெற்று, இன்று பல்வேறு… Read More முதல் தசாப்த நினைவுகூரல் !

முள்ளிவாய்க்காலிருந்து ஒரு பகிரங்க அறைகூவல் !

mதமிழ்த் தேசிய இனத்தின் விடிவிற்கான உரிமைக்குரல் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் ஒரு கட்டமைப்புசார் இனப்படுகொலையுடன் தமிழர்களின் நியாயமான ஆயுத போராட்டம் மே 18 இல் மௌனிக்கச் செய்யப்பட்டது. 27 சர்வதேச நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் சிறீலங்காவின் ஆட்சியாளர்களுடன் கை கோர்த்து இனப்படுகொலை அரங்கேற்றத்திற்கு அச்சாணியாக இருந்தன. இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டு பத்தாண்டுகளாகிவிட்டன. ஆனால் இன்றும் கட்டமைப்பு சார் இனவழிப்பு செவ்வனே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழனம் எழுபது ஆண்டுகளாக போராடுகின்றது. சனநாயக ரீதியில், ஆயுத ரீதியில் என்பதையெல்லாம்… Read More முள்ளிவாய்க்காலிருந்து ஒரு பகிரங்க அறைகூவல் !

முள்ளிவாய்க்காலும், தமிழர் ஆவணப்படுத்தலும் !

இன்று தமிழர் வாழ்வியலில், அரசியலில் அனைத்துமே முள்ளிவாய்க்காலுக்கு முன், முள்ளிவாய்க்காலுக்குப் பின் என்றே ஆகிவிட்டது. இவ்விடயப்பரப்பில் ஆய்விற்கு உள்ளாக வேண்டிய, பல விடயதானங்கள் தமிழர் வாழ்வியலிலும், தமிழர் அரசியலிலும், தாயகத்திலும், புலம்பெயர் வாழ்விலும் தமிழரிடையே நிறைந்து பரவிக் கிடக்கின்றன. இது குறித்த ஆய்வும் அதனூடான தீர்வுகளுமே அப்பரப்புகளை தொடர்ந்தும் ஆக்கபூர்வமான திசையில் இயக்கவல்ல இயங்கு சக்தியாகினும், இன்றைய நிலையில் அது குறித்த முனைப்புகள் அருகியேயுள்ளன. இந்நிலையில் அதில் ஒரு முக்கிய அங்கமான தரவுகளும், ஆவணப்படுத்தலும் குறித்து இங்கு… Read More முள்ளிவாய்க்காலும், தமிழர் ஆவணப்படுத்தலும் !

சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பகிரங்க மடல்!!

சாக்கு போக்கு சொல்லாமல் அரசியல் கைதிகளை விடுவிக்க மைத்திரிக்கு சம்மந்தன் அதிரடி என்ற தலைப்பில் அண்மையில் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருந்தது. இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியதன் பொறுப்பு எமக்கு உள்ளது என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர் இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது சம்பந்தன் ஜயா ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் அரசியல் கைதிகள் என்பவர்கள் தமிழர் விடுதலைக்கு தங்களது வாழ்வை தந்தவர்கள் மற்றவர்கள் அப்பாவிகள் சந்தேகத்தகன் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் இன்று அரசியல்… Read More சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பகிரங்க மடல்!!

முள்ளிவாய்க்கால் பத்து ஆண்டுகளாகியும் எட்டப்படாத நீதி !

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெற்றோர்கள், உறவுகளை இழந்த சிறுவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்றார்கள். அத்தனை முகங்களும் சோகம் அப்பிய முகங்கள். விழிகளில் அப்படியொரு தவிப்பு. அவர்கள் முள்ளிவாய்க்காலில் பிறந்தவர்களும், ஒன்றிரண்டு வயதுகளுடன் முள்ளிவாய்க்காலை கடந்தவர்களும்தான். பல்வேறு மறைமுக அச்சுறுத்தல்களின் மத்தியிலும் கண்ணீர் விடவும் தீபமேற்றவும் அதன் வழியே நீதிக்கானதொரு போராட்டத்தை முன்னெடுக்கவும் முள்ளிவாய்க்கால் மண்ணில் திரண்டிருந்தனர் ஈழ மக்கள். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஈழத்தமிழர்களால் என்றுமே மறக்க முடியாத வடு. நமது மக்கள் கொத்துக்கொத்தாக கொன்று அளிக்கப்பட்ட… Read More முள்ளிவாய்க்கால் பத்து ஆண்டுகளாகியும் எட்டப்படாத நீதி !