போராளிகளின் பகிரப்படாத பக்கங்கள்- 22 களமுனைகளிலும் அரசியலை விதைத்த மேயர் மிகுதன் !

உத்தம குறிக்கோளாம் தமிழீழ விடிவுக்காக சொல்ல முடியாத துயரங்களை தம் தோழ்களில் சுமந்து நெருப்பாற்றை நீந்திக் கடந்தவர்கள் எங்கள் மாவீரர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சிந்திய குருதி இன்றும் பல ஆயிரம் நினைவுகளை எமக்குள்ளே விதைத்துச் சென்றதை மறுக்க முடியாது. அவ்வாறுதான் மாறன்-8 அடிப்படைப் பயிற்சி முகாமில் ஒரு புலி தயாராகிக் கொண்டிருந்தான். தேசக் கனவை தன் உள்ளத்தில் சுமந்தவனாக, நேரிய சிந்தனைகளும், தேசியத் தலைமை மீதான அடங்காத நேசமும், விடுதலைப் போராட்டத்தின் மீதான அடங்காத பற்றும் கொண்ட… Read More போராளிகளின் பகிரப்படாத பக்கங்கள்- 22 களமுனைகளிலும் அரசியலை விதைத்த மேயர் மிகுதன் !

போராளிகளின் பகிரப்படாத பக்கம் -21 வன்னியில் விழிப்புலனற்றவர்களுக்கும் கணனிக் கல்வி வழங்கிய அறிவியற்கழகம்.

அப்போதெல்லாம் அடிக்கடி “இளையோர் அறிவியற் கழகம் “ என்ற பெயர்பலகை நிமிர்ந்து நின்ற இடத்தை கடக்க வேண்டிய தேவை எனக்கு இருந்தது. அதைக் காணும் போதெல்லாம் எமது தேசியத் தலைவரின் எண்ணங்களைச் சுமந்து உருவாக்கப்பட்ட அத்தனை கட்டமைப்புக்களும், அதை எல்லாம் நிர்வகித்து வந்த தமிழீழ அரசும் தான் நினைவில் வந்து செல்லும். உண்மையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தனித்து ஆயுத வழிப் போராட்டமாகவோ அல்லது அகிம்சை வழிப் போராட்டமாகவோ மட்டும் நடக்கவில்லை. தாயகம் தழுவிய பிரதேசங்கள் எங்கும்… Read More போராளிகளின் பகிரப்படாத பக்கம் -21 வன்னியில் விழிப்புலனற்றவர்களுக்கும் கணனிக் கல்வி வழங்கிய அறிவியற்கழகம்.

போராளிகளின் பகிரப்படாத பக்கம் -20 மேஜர் அல்லியும் மயக்க மருந்தும்…

பகிரப்படாத பக்கம் -20 தமிழீழ மகளிர் எழுச்சி நாளில் …. மேஜர் அல்லியும் மயக்க மருந்தும்… கரை புரண்டோடும் வெள்ளக் காடாக காட்சி தருகிறது உடையார்கட்டுப் பகுதி. திரும்பும் இடமெங்கும் சன நெரிசலால் திணறிக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் முற்றிலும் நிறைந்து வழிந்தன. மறுபுறம் சாவடைந்த மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறு வரிசையில் இருந்தது. அவ்வாறான ஒரு நிலையில் தான் வன்னியின் முக்கிய அரச மருத்துவமனையாக இருந்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை இடம் பெயர்ந்து… Read More போராளிகளின் பகிரப்படாத பக்கம் -20 மேஜர் அல்லியும் மயக்க மருந்தும்…

போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 18 கண்முன்னே பிள்ளை சாக… செய்வதறியாது விழி கரைந்த தந்தை

“தம்பி இந்தியா என்ட பிள்ளையை காப்பாத்துமா?அல்லது என் கண்ணுக்கு முன்னாலையே பிள்ளையை சாகடிக்குமா தம்பி…? நல்லூரான் முன்றலில் அடிக்கடி புரட்சிக் கவிஞர் காசியானந்தனையும் அங்கே இருந்த தேவர், வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறி போன்ற போராளிகளையும் கேட்டுக் கொண்டிருக்கிறார் தியாகதீபம் திலீபனின் அன்புத் தந்தையான இராசையா ஆசிரியர். அவர் கண் முன்னே அவர் பெற்ற பிள்ளை பசிப் போர் புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக சாவடைந்து கொண்டிருந்த கொடூரத்தை எமது தேச வரலாறு பதிவு செய்து கொண்டது எவ்வளவு… Read More போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 18 கண்முன்னே பிள்ளை சாக… செய்வதறியாது விழி கரைந்த தந்தை

அப்பா … கத்திக் கத்தி அழைக்கும் என் குரல் கேட்கவில்லையா…?

என் தந்தையின் வலி சுமந்த நினைவுகள் என் வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் பொக்கிசமாகின்றது இன்று. வரிப்புலியுடையில் சீறுகின்ற புலியாகி, சிங்களப்படையோடு பொருதிய பெரும் வீரன். அப்பா! என் தாய் உங்களைப் பற்றியும், உங்களின் உணர்வுகள் பற்றியும் எனக்கூட்டிய விடயங்களின் மூலம் உங்களின் ஈழப்பற்றை நான் உணர்ந்து கொண்டேன் அப்பா. கொட்டிடும் வெடி மழைக்குள்ளே அச்சம் இன்றி பணி புரிவீர்களாம். எப் பணியிருப்பினும் அப்பணி முடித்து என்னை பார்க்கவென்று ஓடி வருவீர்களாம். “ அண்ண செல்லடிக்கிறான் காலைல போங்கோவன்… Read More அப்பா … கத்திக் கத்தி அழைக்கும் என் குரல் கேட்கவில்லையா…?

நம்மாலும் கைவிடப்பட்ட அரசியல் கைதிகள் !

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து, சர்வதேச ஊடகம் வெளியிட்ட விபரணம் ஒன்றில் செல்லப்பிள்ளை மகேந்திரன் குறித்து, தெரிவிக்கப்பட்ட விடயங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. மகேந்திரனுக்கு திருமணம் ஆகி ஒரு வாரம்கூட ஆகியிருக்கவில்லை. மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக் கழகத்தை அண்மித்த பகுதியில் நடந்த சுற்றி வளைப்பொன்றில், அவர் கைது செய்யப்பட்டார். 1993 ஆம் ஆண்டில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இன்றைக்கு 26 வருடங்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து சில காலம் இயங்கிய மகேந்திரன், இயக்கத்தை விட்டு, விலகி தனிப்பட்ட… Read More நம்மாலும் கைவிடப்பட்ட அரசியல் கைதிகள் !

போராளிகளின் பகிரப்படாத பக்கம் -17 லெப்டினன் கேணல் சிவம்.

பகிரப்படாத பக்கம் -17 பல வருடங்கள் கழித்து கொடுத்த மகிழ்வை பறித்து சென்ற தமிழீழ காவலன். லெப்டினன் கேணல் சிவம். தென்னை வளத்தால் மேன்மை கொண்டிருக்கும் தென்மராட்சியின் ஒரு கிராமம் அது. 2000 ஆம் ஆண்டின் பங்குனி மாதத்தின் 26 ஆம் நாள் குடாரப்புப் பிரதேசத்தில் நடந்த மாபெரும் தரையிறக்கத்தின் தொடர் வெற்றிகளால் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பின் மீண்டும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருந்தது அந்த கிராமம். அக் கிராமத்தில் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்ட மக்களின் ஒரு தொகுதியினர்… Read More போராளிகளின் பகிரப்படாத பக்கம் -17 லெப்டினன் கேணல் சிவம்.

போராளிகளின் பகிரப்படாத பக்கம் -16 சாவடைந்தும் சாகாத வீரம் கேணல் ராயூ.

பகிரப்படாத பக்கம் -16  சாவடைந்தும் சாகாத வீரம் கேணல் ராயூ. “அப்பா போட்டு வாறம் …” இந்த வார்த்தைகளை சிறுத்தைப் படையணிப் போராளிகள் சண்டைக்குச் செல்லும் போது தமது தளபதியான கேணல் ராயூவுக்கு சொல்லி செல்லும் வார்த்தைகள் இவை. உண்மையில் ஒரு மகளிர் சிறப்புப் படையணியை உருவாக்குதல் என்ற திடமான முடிவை தேசியத்தலைவர் எடுத்த போது அதற்கான பொறுப்பை முதலில் எடுக்க மறுத்த கேணல் ராயூ பின் நாட்களில் அப்படையணியின் அப்பாவாக அம்மாவாக அண்ணனாக என அனைத்துமாக… Read More போராளிகளின் பகிரப்படாத பக்கம் -16 சாவடைந்தும் சாகாத வீரம் கேணல் ராயூ.

போராளிகளின் பகிரப்படாத பக்கங்கள் -15 படைய ஆசான் கேணல் வசந்த் நினைவுகளோடு…

தமிழீழத்தின் வீர படைய ஆசான்களில் முக்கியமானவரான கேணல் வசந்த் நினைவுகளோடு… “பகிரப்படாத பக்கங்கள் “ PDF–col vasanth தட்டச்சு வடிவில்கேணல் வசந்தன் வாத்தி தமிழீழத்தின் வீர ஆசான் ! சுனாமி வீட்டுத்திட்டத்தடியில் இருந்து உண்டியல் சந்திக்கு…வசந்த் மாஸ்டரோட நாங்கள் நந்திக்களி என்ற இடத்துக்கு 2009 ஆண்டின் நேற்றைய நாள் இரவு நகர்ந்திருந்தோம். எல்லாப் பக்கமும் இராணுவம் சூழ்ந்து கொண்டு எமது இறுதிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை கைப்பற்றும் நோக்கில் வந்து கொண்டிருந்தது. இறுதியாக இருந்த முள்ளிவாய்க்கால் மாவீரர் நினைவு… Read More போராளிகளின் பகிரப்படாத பக்கங்கள் -15 படைய ஆசான் கேணல் வசந்த் நினைவுகளோடு…

போராளிகளின் பகிரப்படாத பக்கம் 14 -தமிழீழ மருத்துவரின் கதை.

மருத்துவம் என்றாலே ஒரு புனிதமான பணி அதிலும் கள மருத்துவம் என்பது போர் காலங்களில் போரணியை காக்கும் மிக முக்கிய பணி. சர்வதேச நாடுகளின் இராணுவங்களில் மருத்துவ அணி தனித்தனியாக செயற்பட்டு வரும் களமுனை மருந்துவர்கள் போரணியை மட்டும் காக்கும் பணியையும் மக்கள் பணியில் இருக்கும் அணியினர் மக்களை பாதுகாக்கும் பணியிலும் செயற்படுவர் ஆனால் எங்கள் மண்ணில் அவ்வாறல்ல. சண்டையணிகளையும், போராளிகளையும், மக்களையும் குறித்த சில அரச மருத்துவர்களுடன் இணைந்து சில நூறு மருத்துவப்பிரிவுப் போராளிகளே பாதுகாத்தார்கள்.… Read More போராளிகளின் பகிரப்படாத பக்கம் 14 -தமிழீழ மருத்துவரின் கதை.