ஈழத்தமிழர்கள் நாடற்ற தேச இன வாழ்வில் 48 ஆண்டுகள் ! #இனப்படுகொலை #ஈழம் #தமிழர் #Tamil #Eelam #TamilGenocide

புலம்பெயர் ஈழத்தமிழர்கள்  இந்நிலையை மாற்றுவார்களா?-சூ.யோ. பற்றிமாகரன்

22.05.1972 உலக வரலாற்றில் அதன் மூத்த குடிகளில் ஒருவரான ஈழத்தமிழ் மக்கள் தங்களின் சொந்த நாட்டிலேயே நாடற்ற தேச இனமாக மாற்றப்பட்ட வரலாற்றைப் பதிவாக்கியது.

ஈழத்தமிழர்கள் இலங்கைத்தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட வாழ்வியலைக் கொண்ட உலகின் மக்கள் இனம். இன்று தங்கள் இறைமையும் தன்னாட்சியுமுடைய இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வரலாற்றுத் தாயக உரிமை கொண்ட தமிழ்த்தேசிய இனமாக வாழ்ந்து வருகின்றனர்.

போர்த்துக்கேயர் காலனித்துவ ஆட்சியை இலங்கையின் சிங்களக் ‘கோட்டை’ அரசில் 1505இல் நிறுவியதன் பின்னர் 116 ஆண்டுகள் தங்களால் வெல்லப்பட முடியாத நிலையில் எதிர்த்து வந்த தமிழர்களின் இறைமையுள்ள யாழ்ப்பாண அரசை 1621இல் கடைசி யாழ்ப்பாண மன்னரான 2ம்சங்கிலி மன்னரைக் கைப்பற்றியதன் மூலம் தமதாக்கிக் கொண்டது.

ஆயினும் போர்த்துக்கேயர் இந்துமாக்கடலின் உலக வணிகமொழியாக இருந்த தமிழ்மொழிக்கு தமிழ் – போர்த்துக்கேய அகராதிகளை உருவாக்கியும்,தமிழ் இலக்கணத்தைப் பிறமொழியினர் படிக்கத் தக்க வகையில் நூல்களை எழுதியும்,ஈழத்தமிழ் மக்களின் தமிழ்த் தேசியத்தை உலகறிய வைத்தனர்.

அவ்வாறே தமிழர் தாயகங்களை அங்கிருந்த உள்ளூர் ஆட்சி முறைமைகளின் வழியாகவே தாங்களும் ஆட்சி செய்து, தமிழர்களிடம் தங்கள் வர்த்தகத்திற்குத் தேவையான சந்தைப்பொருள்களையும் வரிப்பணத்தையும் பெற்றதுடன், தங்களின் கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தை மக்களிடை பரப்புவதில் ஆர்வம் காட்டினரேயன்றி,ஈழத்தமிழர்களின் இறைமையைப் பாதிக்கக் கூடிய ஆட்சிமுறைமைகளை உருவாக்கவில்லை.

தமிழர்களின் சிற்றரசாக இருந்த வன்னி அரசை இவர்களால் வெல்ல முடியவில்லை.
பின்னர் போர்த்துக்கேயர் இலங்கையில் தங்கள் ஆட்சியில் இருந்த பகுதிகளின் இறைமையை டச்சுக்காரரிடம் கையளித்த போது அவர்கள் தமிழர்களின் இறைமையின் தனித்துவத்தை ஏற்று, தமிழர்களுடைய தேசவழமைகளையும் சட்டமாக்கித் ‘தேசவழமைச்சட்டம்’ என்னும் பெயருடன் தங்கள் உரோமச்சட்டத்துடன் இணைத்து, புத்தளம் வரை ஆட்சிப்பரப்பைக் கொண்டிருந்த தமிழர்களின் தாயகத்தை உள்ளூர் ஆட்சி முறைமைகளுக்கு ஊடாக ஆண்டனர். இதனால் தமிழர்களின் இறைமை பாதிப்படையாமலே தொடர்ந்தது.

1796இல் கிழக்கிந்தியக் கம்பெனி தமிழர் தாயகங்களான தமிழகத்தையும் இலங்கையையும் ஒரே தேசமாகக் கருதி 1802வரை சென்னையில் இருந்து ஒரே நிதிப்புழக்கத்துடன் ஆங்கிலேய ஆட்சிக்கு உட்படுத்தித் தமிழர்களின் தாயகத் தேசிய தன்னாட்சி உரிமைகளை வெளிப்படுத்தினர்.

1802 இல் இலங்கை முடிக்குரிய நாடாக பிரித்தானிய அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட பொழுது ஈழத்தமிழர்களின் இறைமை பிரித்தானியப் பேரரசிடம் சென்றடைந்தது. 1832இல் தமிழர்களின் வன்னிச் சிற்றரசை பிரித்தானிய காலனித்துவ அரசு வெற்றி கொண்டதன் பின்னரே 1833இல் கோல்புறூக் கமரோன் அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் தமிழர்களின் இறைமையும் சிங்களவர்களின் இறைமையும் உள்ள தனித்தனியான அரசுக்களின் எல்லைகளை இணைத்தது.

இவ்விணைப்பில் இலங்கைத் தமிழ் மக்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக இயல்புநிலைகள் கவனத்தில் கொள்ளாப்படவில்லை. இலங்கைத்தீவைத் தங்களின் சந்தை நலனுக்காகவும் ஆட்சிப்பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும்,ஒரே நாடாக சிலோன் என்னும் ஒற்றையாட்சிக்குள் கொண்டுவந்தனர். இதனால் ஈழத்தமிழர்களின் இறைமையும் சிங்களவர்களின் இறைமையும் சிலோன் என்னும் நாட்டின் இறைமையுள் இணைக்கப்பட்டது. ஆயினும் தமிழர்களதும் சிங்களவர்களதும் இறைமையின் தனித்தன்மைகளை மதித்து 1833இல் சிலோனின் சட்டவாக்க சபைக்கு ஒரு தமிழரையும், ஒரு சிங்களவரையும் பிரதிநிதிகளாக நியமித்தமை முக்கியமான வரலாறாக உள்ளது.

தங்களால் பணப்பயிராக அறிமுகம் செய்யப்பட்ட கோப்பி, தேயிலை, இரப்பர், கொக்கோ பயிர்ச்செய்கையால் உருவாக்கப்பட்ட பெருந்தோட்டப் பொருளாதாரத்தில் வேலை செய்வதற்காகத் தங்களின் ஆட்சியில் இருந்த தமிழகத்தில் இருந்து இலட்சக்கணக்கில் தமிழ்த் தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலிகளாகக் கொண்டு வந்தனர். பிரித்தானிய காலனித்துவ அரசின் இம்முயற்சியால் சிங்களவர்கள் நிலமிழந்தமையும், தமிழ்த் தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்புகள் வழங்கப்படாமையும், இலங்கையில் இனத்துவ அரசியல்,மொழித்துவ வேறுபாடுகள் வழியான வெறுப்பு அரசியல் உருவாக வழிவகுத்தது. அத்துடன் இலங்கைத் தமிழர்களையும் குடிவரவு பெற்றவர்கள் என உலகம் கருதும் தவறான போக்கையும் தொடக்கி வைத்தது.

1910இல் பிரித்தானியக் காலனித்துவம் ஆங்கிலம் படித்தவர்களுக்கும் சொத்துடமையுள்ளவர்களுக்கும் மட்டும் வாக்குரிமை என மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையை வழங்கி அத்தகைய சட்டசபைப் பிரதிநிதிகள் மூலம் கற்றோர் குழாத்தின் சனநாயகத்தைச் சிலோனில் உருவாக்க விரும்பினர். இந்த கற்றோர் குழாத்தின் பிரதிநிதியாகவே சேர். பொன்னம்மபலம் இராமநாதன் என்னும் தமிழர் சட்டசபையின் உறுப்பினரானார்.

இந்த கற்றோர் குழாத்து சனநாயகம் இலங்கைத்தீவின் பெரும்பான்மை மக்களான சிங்கள தமிழ் சாதாரண மக்களின் அரசியல் பங்களிப்பைப் புறந்தள்ளியது. இதனை ஊக்கப்படுத்தக் கூடிய வகையில் ‘சிலோனிஸ் தேசியம்’ என்னும் ஆங்கிலமொழி பேசும் ஆங்கிலப்பண்பாட்டாக்கம் அடைந்த தேசியத்தை நிலைப்படுத்தப் பிரித்தானிய காலனித்துவம் தங்கள் ஆட்சிக்காலம் முழுவதும் முயற்சித்த போதிலும் அதில் வெற்றிபெறவில்லை.

1920 களில் மன்னிங் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் வழி இனவாரியான பிரதிநிதித்துவமான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அறிமுகம் செய்தனர். இதனால் இலங்கையின் கரையோரச் சிங்களவர், கண்டிச்சிங்களவர், இலங்கைத் தமிழர்கள், தமிழ்மொழி பேசும் முஸ்லீம்கள்,மலையகத்தமிழர்கள் என்னும் ஐவகை மக்கள் இடையிலும் தலைமை போட்டிகள் ஏற்பட்டுத் தேசிய முரண்பாடுகள் வேகம் பெற்றன.

1924இல் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் சட்டவாக்கசபையில் சிங்களவர்களின் பிரதிநிதித்துவத்தை மற்றைய இனங்களின் பிரதிநிதிகளை விட அதிகரிக்கச் செய்ததினால் சட்ட உருவாக்கத்தில் சிங்களப் பெரும்பான்மை பலம் வளரச் செய்தனர்.

1931இல் இலங்கைக்கு மட்டுப்படுத்தப்பட்ட பொறுப்பாட்சியை வழங்கிய டொனமூர் அரசியலமைப்புச் சீர்திருத்தம் எல்லா மக்களுக்கும் வாக்குரிமையை அறிமுகம் செய்தது. ஆனால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை மக்களாக வாழ்ந்த தமிழர்களின் இறைமைக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறியது.

இதனால் இலங்கையின் மற்றைய மகாணங்களில் வாழ்ந்த பெருந்தொகையான சிங்களவர்கள் வாக்குரிமை பெற்ற பொழுது,சிங்களவர்கள் உடைய பெரும்பான்மையினச் சட்டசபை ஆட்சி உருவாகியது. அத்துடன் ஒரு தமிழரே கூட இல்லாத சிங்களப் பெரும்பான்மை அமைச்சரவையும் உருவாகச் செய்தது.

இது சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள், ‘எங்கள் நாடு,எங்கள் இனம், எங்கள் ஆகமம் (பௌத்தம்)’ இவை மட்டுமே இலங்கையில் இருக்க வேண்டும் எனச் செயற்படும் அரசியலை தொடக்கின.

சிங்கள பௌத்த வெறி கொண்டெழுந்த சிங்கள பௌத்த பேரினவாதிகள் இலங்கைத் தமிழர்களை அரசின் எல்லாநிலைகளிலும் இனஒதுக்கல் செய்வதின் வழியாகவும், தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றி,தமிழர்களுக்கு மேல் வன்முறைகளுடன் கூடிய இனவெறித்தாக்குதல்களை நடாத்தியதால், இனங்காணக் கூடிய அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களின் தாயக எல்லைகளைச் சுருக்கிச் சிங்களவர்களின் குடியேற்ற பூமியாகத் தமிழர்களின் நிலவளப்பிரதேசங்களையும் கடல்வளப் பிரதேசங்களையும் ஆக்கிரமித்தது.

தமிழரின் சனத்தொகையினைக் குறைத்துச் சிங்களப் பிரதிநிதிகள் தமிழர் தாயகப் பகுதிகளில் உருவாகச் செய்தும், சிங்கள தமிழ் தேசங்களிடை இயல்பாகவே எல்லைகளாக இயற்கை அமைத்திருந்த காட்டெல்லைகளை விவசாயத்திற்காக காடழிப்பு என்ற பெயரில் அழித்து சிங்கள நாடாக மாற்றியும், தமிழர்களின் இறைமை மேலான ஆக்கிரமிப்புக்களைச் சிங்களவர்கள் வேகப்படுத்தினர்.

இலங்கைக்குச் சுதந்திரம் கொடுக்கவென நியமிக்கப்பட்ட சோல்பரி ஆணைக்குழு முன்பாகத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம்,தமிழ்த் தலைமை பிரித்தானிய காலனித்துவ அலுவலகச் செயலாளர்களைச் சந்திக்க அனுமதிக்காத வகையில்; இலண்டனில் இருந்த பெருந்தோட்ட உற்பத்தி விற்பனை வழியான ரிசேர்வ் நிதியினை சிங்களத் தலைமைகள் பிரித்தானியாவுக்குக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துத் தடைசெய்தனர்.

இதனால் தமிழர்களின் இறைமை குறித்து அக்கறையற்ற முறையில் சோல்பரி அரசியலமைப்பு எழுதப்பட்டாலும், 29(2) விதியின் படி சிறுபான்மை இனத்துக்கோ அல்லது மதத்திற்கோ எதிரான சட்டங்கள் சிலோன் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டால் பிரித்தானிய உயர் நீதியமைப்பான பிரிவிக் கவுன்சிலுக்கு நீதி கோரி விண்ணப்பிக்கலாம் என்னும் அரசியலமைப்புப் பாதுகாப்பு ஒன்றினை பிரித்தானியா வழங்கியது. இந்தப் பாதுகாப்பு உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே இலங்கைத் தமிழர்களின் இறைமை சிங்கள இறைமையுடன் பகிரப்படுகின்ற ஒற்றறையாட்சிப் பாராளுமன்ற முறைமை மூலம் சிலோனுக்குச் சுதந்திரம் 04.02.1948இல் வழங்கப்பட்டது.

சோவியத் இரஸ்யா, சிலோன், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாவதற்கு விண்ணப்பித்த பொழுது, சோல்பரி அரசியலமைப்பால் சிலோனின் இறைமை தொடர்ந்தும் பிரித்தானியாவின் மேலாண்மையில் இருப்பதால் அதனைத் தனி உறுப்பு நாடாக அங்கீகரிக்க முடியாது என 1948 முதல் 1956 க்கு இடை இரண்டு தடவைகள் தனது இரத்து உரிமை அதிகாரத்தை – வீட்டோ அதிகாரத்தைப் – பயன்படுத்தி தடை செய்தது. எனவே தமிழர்களின் இறைமை முற்று முழுதாக ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்துக்குப் பாரப்படுத்தபடவில்லை என்பதற்கு இது ஒரு உலகச் சான்றாக அமைந்தது.

சோல்பரி அரசியலமைப்பின் அடிப்படையில் 1956 ஆம் ஆண்டின் சிங்கள மட்டும் சட்டத்தால் வேலையிழந்த கோடிஸ்வரன் அவர்கள் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலில் மேன்முறையீடு செய்த பொழுது அதனை விசாரித்த உயர் நீதியமைப்பு அவரை வேலை நீக்கம் செய்தது தவறு எனவும்,அவருக்கு நட்டஈடு கொடுத்து மீளவும் வேலைக்குச் சேர்க்கும் படியும்,அத்துடன் ‘சிங்களம் மட்டும் சட்ட’த்தைப் பாராளுமன்றம் மீளப்பெற்று சோல்பரி அரசியலமைப்புக்கு ஏற்பத் திருத்தங்களுடன் மீளச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கியது.

இதனைச் செயல்படுத்த மறுத்த சிங்கள பௌத்த பேரினவாதத் தலைமைகள் 1970ம் ஆண்டுத் தேர்தலில் தமக்குக் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆட்சி அமைத்தல் வழி, தமிழ்க்கட்சிகளைச் சேர்ந்த தமிழ்ப்பிரதிநிதிகள் பங்குபற்றாத பாராளுமன்றத்துக்கு வெளியே நிறுவப்பட்ட அரசிலமைப்பு நிர்ணய சபை மூலம் சிங்கள பௌத்த சிறிலங்காக் குடியரசை நிறுவி, மாட்சிமைக்குரிய பிரித்தானிய மகாராணியின் தலைமையில் இருந்து விலகி சோல்பரி அரசியலமைப்பை வன்முறைப்படுத்தினர்.

இதனால் தமிழர்களின் இறைமை மீளவும் தமிழர்களிடமே மீண்ட இயல்பான நிலையில் இலங்கைத் தமிழர்கள் நாடற்ற தேச இனமாக மாற்றப்பட்டனர்.
எனவே தமிழர்களின் நாடற்ற தேச இனம் என்கிற நிலை உள்நாட்டுப்பிரச்சனையல்ல. காலனித்துவப் பிரச்சினையாக ஐக்கியநாடுகள் சபையால் பார்க்கப்பட வேண்டிய ஒரு சர்வதேசப் பிரச்சினை. சர்வதேசத் தலையீட்டால் தீர்க்கப்பட வேண்டிய உலகப்பிரச்சினை.

இந்த உண்மையை உலகுக்கு அறிவிக்க அன்றையத் தமிழ்த்தலைவராக இருந்த தந்தை செல்வநாயகம் அவர்கள் தனது காங்கேசன்துறை பாராளுமன்றத் தொகுதியை இராஜினாமாச் செய்து,தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிக்கும் தன்னாட்சி அதிகாரத்தினைப் பிரயோகிப்பதற்கான அடையாளக் குடியொப்பமாக மாற்றி, ஒன்பதினாயிரத்துக்கு மேற்பட்ட மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று,தமிழர்களின் தன்னாட்சிக்கான மக்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினார்.

1975இல் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் 25 ஆண்டுகளாக ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிடம் நாமிழந்த எங்கள் அரசியல் உரிமைகளை மீளவும் நாங்கள் பெறவென எடுத்த முயற்சிகள் எல்லாம் பயனற்றுப்போனதால், இனி நாங்கள் எங்களுடைய பிரிக்கப்பட முடியாத அடிப்படை மனித உரிமையான தன்னாட்சி உரிமையின் அடிப்படையில், எங்களுடைய அரசியல் எதிர்காலத்தை நாங்களே நிர்ணயம் செய்வோம் எனப் பிரகடனப்படுத்தி சிறிலங்காப் பாராளுமன்றத்தை நிராகரித்து அதிலிருந்து விலகினார்.

1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் ஈழத்தமிழர்கள் தனியான பாதுகாப்பான அரசினை நிறுவுதற்கு தீர்மானித்து 1977 தேர்தலை இதற்கான குடியொப்பமாக அறிவித்து,அத்தேர்தலில் அத்தீர்மானத்திற்குப் போதிய மேலதிக வாக்குகளைப் பெற்றனர். இந்த முடிவை சிறிலங்கா சனநாயக முறைகளில் அடைவதைத் தடைசெய்தால் எந்த வழிகளிலும் அடைவோம் எனவும் அத்தேர்தல் கொள்கைப் பிரகடனத்தில் தெளிவாக அறிவித்திருந்தனர்.

இதுவே ஈழத்தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான சட்டபூர்வமான அங்கீகாரத்தை அளித்தது. தேசியத்தலைவர் ஒருவரின் உருவாக்கத்தை இயல்புபடுத்தி, மக்களே தங்களுக்கான பாதுகாப்புப்படையாகி, அவர் தலைமையில் தம்மாலியன்ற வழிகளில் எல்லாம் போராட வைத்தது.

ஆனால் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அவர்களின் சனத்தொகையில் பத்திலொரு பகுதிக்கு மேற்பட்ட மக்களை இனஅழிப்பால் கொன்றொழித்து, இன்று வாழுகின்ற ஈழத்தமிழர்களையும், இனங்காணக் கூடிய அச்சத்துக்கு உள்ளாக்கி, மீளவும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் பண்pவை அவர்களின் விருப்புக்கு மாறாக ஆயுதபடைபலத்தால் பெற்று வருகின்றனர். இதுவே இன்றைய அரசியல் எதார்த்தமாக உள்ளது.

இந்நிலையில் நாடற்ற தேசஇனமாக, தங்களை ஆளும் சட்டத்தகுதியை இழந்த அடக்குமுறை ஆட்சியான சிறிலங்கா ஆட்சியுள்,49 ம் ஆண்டில் கால்வைத்துள்ள ஈழத்தமிழ் மக்களுக்கான, குடியொப்பம் ஒன்றை நடாத்தி,அவர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைச் சிறிலங்காவுடன் தொடரவிரும்புகின்றார்களா இல்லையா என்பதை உலகம் உறுதி செய்தால் மட்டுமே,அவர்களின் நாடற்ற தேசஇன நிலை மாறும்.
இதற்கு உலகெங்கும் தேசங்கடந்துறை மக்களாகவும்,உலக நாடுகள் பலவற்றின் குடிகளாகவும் உலகத் தமிழினமாக உள்ள தமிழர்கள் ஒன்றுபட்டு உழைத்தாலே ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீளும்.

வாதரவத்தையின் மைந்தன் எங்கள் விக்ரம் மாஸ்டர் ! #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide

 

பனைவளங்களும்,நான்கு பக்கமும் நீரினால் சூழப்பட்டு பார்ப்போர் மனங்களை கவரும் அழகிய சிறிய ஒரு நிலப்பரப்பு தான் வாதரவத்தை எனும் அழகிய கிராமம்.

இக்கிராமத்தில் முத்தையா பூபதி இணையரின் 4 வது மகனாக கப்டன் விக்ரம் எனும் சிறிகணேஸ் அவதரித்தான்.சிறிகணேஸ் வீட்டில் செல்ல பிள்ளையாக இருந்தாலும் சிறு வயதிலேயே படிப்பில் கவனம் செலுத்த தவறவில்லை.

தனது ஆரம்ப கல்வியை தனது சொந்த கிராமத்தில் வாதரவத்தை விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் பயின்றார்.

உயர்தர மேல்படிப்பினை புத்தூர் சிறி சோமஸ்கந்தா கல்லூரியில் கற்கும் பொழுது போராளிகளோடு சேர்ந்து பகுதி நேர செயற்பாடுகளை மேற்கொண்டிருந்த வேளை இந்திய இராணுவத்தினரால் கைதாகி புத்தூர் முகாமில் சித்திரவதைகளை அனுபவித்தார் சித்திரவதைகளினாலும் இந்திய இராணுவம் ஈழத்தில் காலடி எடுத்து வைத்து எம் ஈழ மக்களுக்கு இழைத்த அநீதிகளின் உந்துதலாலும் 1989 நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிறிகணேஸ், விக்ரம்/வண்ணனாக தன்னையும் ஓர் போராளியாக இணைத்துக்கொண்டார்.

எங்கள் இதய பூமி மணலாற்றில் 7 வது பயிற்சி பாசறையில் பயிற்சி ஆசிரியர் செங்கோல் மாஸ்டரிடம் தன் பயிற்சியினை முடித்து வெளியேறினார்.

பயிற்சியை முடித்த பின்னர் இவரின் பயிற்சி திறமையினையும் அறிவாற்றலையும் கண்டு வியந்த மணலாறு மாவட்ட சிறப்புதளபதி அன்பு(தாடி) அண்ணன் அவர்களால் பயிற்சி ஆசிரியராக நியமிக்கப்பட்டு, சுகந்தன்,ஈசன்,ஜீவன்-2 போன்ற பயிற்சி முகாம்களில் பல திறமைமிக்க போராளிகளை உருவாக்குவதற்கு காரணமாகவும் இருந்தார் .

1991ல் மணலாற்றில் இடம்பெற்ற மின்னல் சண்டையில் காயமுற்று காயம் ஓரளவு ஆறியபின் மணலாறு மாவட்ட அறிக்கை தொகுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்

பின்பு யாழ் மாவட்டத்திற்கு தேசியத்தலைவர் அவர்களினால் அழைக்கப்பட்டு அங்கே தலைவர் அவர்களுடன் நின்று அறிக்கை தொகுப்பாளராகவும், நியமிக்கப்பட்டிருந்தார்

பின்னர் சிறிலங்கா இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட முன்னேறிப் பாய்தலுக்கெதிராக புலிகளால் முன்னெடுக்கப்பட்ட புலிப்பாய்ச்சல் சண்டையில் பங்குபற்றினார்

அதன் பின்னர் 1995 மீண்டும் தேசிய தலைவரின் பணிப்பின்பேரில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தில் (பொருளாதார துறை) தமிழீழ புள்ளிவிபர பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1996 யாழ் குடாநாடு இராணுவ முற்றுகைக்குள் முற்று முழுதாக சிக்குண்ட காலப்பகுதியில் வன்னி பெருநிலப்பரப்புக்குள் வரும் மக்களை பாதுகாப்பாக வன்னிக்கு நகர்த்தும் தனது பணிகளை மேற்கொண்டிருந்த வேளை சுகயீனம் காரணமாக 28.05.1996 அன்று கப்டன் விக்ரம் மாஸ்டர் /வண்ணன் ஆக விழிமூடிக்கொண்டார்.

எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாக கலந்துவிட்ட இறுதி இலட்சியம் தமிழீழ தாயகத்தை மீட்டெடுக்கும் புனித போரிலே வீரச்சாவை தழுவிக்கொண்ட ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் வரிசையில் இங்கே மீளாத் துயில்கொள்ளும் விக்ரமும் சேர்ந்து கொண்டார்

சாவு என்பது இவரின் பேச்சையும் மூச்சையும் நிறுத்திக்கொண்டதே தவிர இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கி உள்ளது

இவன் ஆணிவேர் அறுபடாத ஆலமரம்
மீண்டும் வேர்விடுவான் விழுதெறிவான்
புதிதாய் பிறக்கும் புலிகளுக்குள்ளே புகுந்து கொள்வான்
நெஞ்சு கனக்கும் தாயக விடுதலைக்கனவோடு எம்மை பிரிந்து சென்ற இவரின் கனவை நாங்கள் நனவாக்குவோம் என்று இவரின் வித்துடல் மீதும் விதைகுழி மீதும் உறுதி எடுத்துக்கொள்கின்றோம்

ஜெகதீஸ்வரன் டிஷாந்த்
வாதரவத்தை

களத்தில் ஒரு காட்டாறு லெப். கேணல் பரிபாலினி ! #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide

லெப்.கேணல் பரிபாலினி

சந்திரசேகரன் சுரனுலதா

நல்லூர், யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 06.07.1973

வீரச்சாவு: 01.04.2000

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு

அன்றைய நாள், நாம் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறான களநிலைமை அது. எதிரி விழிப்படைந்து எமது நகர்வுகளையே கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். நாலா புறமும் கவச ஊர்திகளையும், கனரக ஆயுதங்களையும் நிலைப்படுத்திக் காத்துக் கிடந்தவனின் குகைக்குள் புகுந்த எமதணிகளை நோக்கி வாய் பிளந்தன இரும்புக் குழல்கள். எங்கும் நெருப்பு மழை, அந்த அக்கினிக் குழம்புகளுக்கு மத்தியில் இருந்து ஒலித்த அந்தக் குரல் தொலைத் தொடர்புக் கருவியூடாக எல்லோர் செவிகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. நீண்ட நெடுநேரம், அந்தத் தன்னம்பிக்கையான, உறுதியான, தெளிவான குரலை ஒலிபரப்பிக் கொண்டிருந்த தொலைத் தொடர்புச் சாதனம் அமைதியானது.

“பரி… பரி… பரி…”

“பரி… பரி…”

என அனைத்துக் கருவிகளும் அலற அந்தப் பெயருக்குரியவள், அந்தக் குரலுக்குரியவள் அடங்கிப் போனாள்.

1990 காலப்பகுதியில் பயிற்சிப் பாசறைகள் நோக்கி படையெடுத்த பெண்களில் இவளும் ஒருத்தி. எப்போதுமே அமைதியாகக் காணப்படும் இவள் எல்லோராலும் ‘நல்லூர் நோனா’ என அழைக்கப்பட்டவள். மணியடித்தால் சாப்பாட்டிற்கு முன்னின்று, வகுப்புக்குப் பின்நின்று, பயிற்சிக்கு முன்னின்று லெப். கேணல் மாதவியால் புடம் போடப்பட்டு, பரிபாலினியாக வெளிவந்த இவள்; 1992 முற்பகுதி வரை பலாலி, பத்தமேனி, தட்டுவன்கொட்டி என பல முன்னணிக் காவலரண்களிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆகாய கடல்வெளிச் சமர், மின்னல் எனவும் பல சிறு சிறு சண்டைகளிலும் ஒரு போராளியாகவே தடம் பதித்தவள்.

1992 ஆண்டின் தொடக்க காலம், எமது இதயபூமியான மணலாற்றை எதிரியின் வல்வளைப்புக்களிலிருந்து பாதுகாக்கும் பணியில் பெண் போராளிகளையும் ஈடுபடுத்துவதற்கென புதிய அணியொன்று உருவாக்கப்படுகின்றது. பத்தே பத்துப் போராளிகளுடனும், இருநூற்றைம்பது பயிற்சி எடுக்காத புதிய போராளிகளுடனும் மணலாறு சென்றது அந்த அணி, அவர்களைப் பயிற்றுவித்தே தமது பணியைத் தொடங்க வேண்டும். பொறுப்பாகச் சென்றவருக்கு தன்னுடன் வந்த பத்துப் போராளிகளும் என்ன நிலையில் இருக்கின்றனர் என்பதே தெரியாது. அவர்களில் பரிபாலினியும் ஒருவர்.

இவள் அங்கே பயிற்சிக்கான துணை ஆசிரியராக நியமிக்கப்படுகின்றாள். பயிற்சிக்கான ஒழுங்குகள் செய்து, பயிற்சியும் தொடங்கி ஆறே ஆறு நாட்கள்.

கொக்குத்தொடுவாய் படை முகாமிலிருந்து நாயாறு வரை மும்முனைகளில் முன்னேறி கரையோரப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம், தமிழர் தாயகத்தை துண்டாடுவதுடன், வடக்கிலிருந்து கிழக்கிற்கான எமது வழங்கற் பாதையைத் துண்டிப்பதற்காகவும், மூவாயிரம் சிங்களப் படைகள் ‘கஜபார’ கட்டம் ஆறு (ஒப்பரேசன் சிக்கர் கஜபார) என்ற பெயருடன் பெரும் எடுப்பிலான நகர்வை மேற்கொண்ட போது, வழிமறித்து நடந்த சண்டைக்குக்காவும் குழுவாகச் செல்லத் தயாராகின்றனர். எல்லோருக்குமே காடு புதிது, புதிய போராளிகள் வேறு. எவருக்குமே ”கொம்பாஸ் (திசையறி கருவி)” தெரியாது. மூன்று நாட்களில் ‘கொம்பாஸ்’ பயின்று, பரிபாலினியுடன், இன்னுமொரு போராளியுடனும் புதிய போராளிகள் களம் இறங்கினர்.

ஆறு நாட்களே பயிற்சி எடுத்த போராளிகள், காடு பற்றிய அறிவோ சண்டைக்குரிய பட்டறிவோ இல்லாதவர்கள். சீனத்தயாரிப்பு டாங்கிகளும், கவச ஊர்திகளும், பீரங்கிகளும், குண்டு வீச்சு வானூர்திகளும், உலங்கவானூர்திகளும், பீரங்கிப்படகுகளும் குண்டு மழை பொழிய, அந்த அடர்ந்த காடுகளுக் கூடாகவும், திறமையாகத் தனது பணிகளைச் செய்து, ஆண்டாள் என்ற ஒரு புதிய போராளியை இழந்து, அவர்களின் பணிக்கு பரிசாகக் கிடைத்த ஐந்து ஏ.கே.யுடன் ஒரு ஏ.கே.எல்.எம்.ஜீ உடனும் முகாம் திரும்பியது அந்த அணி.

‘பாத்தீங்களா, நாங்கள் சண்டைக்குப் போகாமல் சப்பிளைக்குப் போயே அஞ்சு ஏ.கே.யும், ஒரு எல்.எம்.ஜீ.யும் எடுத்திட்டம்’ என்று சொல்லிச் சொல்லி துள்ளித் திரிந்தாள். அன்று ஆறு நாட்களே பயிற்சி எடுத்த அந்தப் போராளிகளின் முதுகெலும்பாக நின்று செயற்பட்டவளே இவள்தான்.

எந்தவொரு இக்கட்டான நிலையிலும் சற்றேனும் பதட்டம் இருக்காது இவளிடம். அன்றிலிருந்து இன்றுவரை இது அவளிடம் ஒன்றிவிட்ட ஒன்று. இந்தப் பழக்கம்தான் பொறுப்பாளர்களிடம் பரிபாலினியை இனங்காட்டியது.

இரண்டரை மாதப் பயிற்சிக் காலங்களில் துணைப் பயிற்சியாசிரியராக இருந்தது மட்டுமல்லாமல், முதல் பயிற்சியிலேயே எதிரியை எப்படிக் குறிபார்த்துச் சுடுவது என்பதைப் பயிற்றுவித்து, இடையிடையே நடக்கும் பதுங்கித் தாக்குதல்களுக்கு அவர்களுடன் சென்று மீண்டு, மீண்டும் பயிற்சியைத் தொடர்ந்து… ஐந்து படையினரைத் தாக்குவது என்றாலும் அதற்கும் இவர்கள் சென்று… எண்ணிக்கையில் அடங்காத பதுங்கித்தாக்குதல்கள்.

“தலைவர் அடிக்கடி சொல்லுவார், ‘ஆயிரம் முயல்களை ஒரு சிங்கம் வழி நடத்தலாம். ஆயிரம் சிங்கத்தை ஒரு முயல் வழிநடந்த ஏலாது’ என்று. அதேமாதிரி புதிய போராளிகளைக் கொண்டு செய்யிறது என்பது, அதுவும் காட்டுச் சண்டை, சண்டைச் சூழலே பிள்ளைகளுக்குத் தெரியாது. பரிபாலினியில் இருந்த நம்பிக்கையில்தான் முழுப் பிள்ளையளையும் விடுறம்” என்றார்; மணலாற்றின் தொடக்ககால மகளிர் பொறுப்பாளர் சீத்தா அவர்கள்.

பயிற்சிகள் முடித்து இரு அணிகளாகப் பிரிக்கப்பட்ட படையணியில் ஒரு அணி பரிபாலினியின் தலைமையில் களம் இறங்குகின்றது. நூறு பேர் கொண்ட ஒரு அணிக்குப் பொறுப்பாளராகவும், அதே நேரம் இருநூறு பேரைக் கொண்ட முழு அணிக்கும் துணைப்பொறுப்பாளராகவும், நியமிக்கப்பட்ட பரியின் நிலை தர்மசங்கடமாகிப் போனது. தான் சண்டைக்கு முதலில் போகமுடியாதே என யோசித்தவள், ஐம்பது பேர் கொண்ட அணியைப் பொறுப்பெடுத்து முதலில் நகர்ந்து விட்டாள்.

‘ஒப்பரேசன் செவன்பவர்’ (ஏழு சக்திகள்) முல்லைத்தீவு படை முகாமிலிருந்து முல்லைத்தீவு கொக்கிளாய் முதன்மைச் சாலையூடாகச் செம்மலை, குமுழமுனை ஆகிய பகுதிகளை நோக்கி முன்னேறிய படையினருக்கு உதவியாக செம்மலை, அளம்பில் கடலினூடாக தரையிறக்க முனைந்த படையினரை, கரையோரம் நின்ற பரிபாலினியின் அணி எதிர்கொண்டது. ஒரே நேரத்தில் மூன்று கடற்கலங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியவாறு கரையை நோக்கி வருவதும், இவர்களின் துப்பாக்கிகள் சடசடக்க பின்வாங்குவதும் பின் வருவதும் போவதும், வருவதும் போவதுமாகத் திணறிய கலங்கள் இறுதியில் ஓடியேவிட்டன.

மணலாற்றின் வரலாற்றுச் சமர்களில் பெரும் எதிர்ச்சமரான இந்தச் சமரில், எதிரியின் கடல்வழி வழங்கலைத் தடுத்து நிறுத்திய பெரும் பணியில் எமது இன்றைய தளபதியான இவளின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவே இருந்தது.

அன்றொருநாள் சண்டை முடிந்து அனைத்து அணிகளும் திரும்பிக்கொண்டிருந்தன. பரியைக் காணவில்லை. ‘எமது எதிர்காலத் தளபதியை இழந்து விட்டோமா’ என எல்லோர் மனங்களும் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது. ‘பரிபாலினி வீரச்சாவாம்’ என்ற செய்தியும் வந்துவிட்டது. ஆனால் மனங்கள் மட்டும் ஏற்க மறுத்தது. காயமடைந்தும், வீரச்சாவடைந்தும் வரும் ஒவ்வொருவரையும் ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம். மனமும் சோர்ந்து போய்க் கொண்டிருந்த அந்தக் கணத்தில் நான்கு பேர்களின் தோள்களில் ஒரு‘ஸ்ரெச்சர்’ ஒரு நப்பாசையுடன் ஓடிப்போய்ப் பார்த்தால் பரிபாலினி. சீராக மூச்சு வந்து கொண்டிருந்தது, உயிர் பிரியவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம். கால்கள், வயிறு, ஒருபக்கத் தாடை எனப்பிய்ந்து தொங்கக் கட்டுப்போட்டபடி…… பல மைல்களுக்கப்பால் உள்ள கொக்குத்தொடுவாய் படை முகாமை நோக்கி நடையாய் நடந்து, பல படை அரண்களை தாக்கியழித்த அந்தச் சமரில் இவள் படுகாயமடைய, சிலர், ‘வீரச்சாவு’ எனக்கூற, சிலர் ‘இல்லை’யென, ‘இவ்வளவு தூரம் கொண்டு போகிறதுக்கிடையில் ஆள் முடிஞ்சிடும்’ என்று இன்னொருவர் சொல்ல, அவள் வளர்ந்த குஞ்சுகளின் தோள்களில் மூச்சுப்பேச்சற்ற நிலையில் எதுவுமே அறியாதவளாய் வந்து சேர்ந்தாள்.

காயங்கள் ஆறி, மீண்டும் கானகம் வந்தவளை எல்லோருமே கிண்டலடிப்பார்கள்; அவளின் ஆறு பற்களையும் இழந்த வாயைப்பார்த்து. இவளுக்கும் சிரிப்பு வரும். ஆனால் சிரிக்க முடியாதவளாக கைகளால் மூடி சிரமப்பட்டுச் சிரிப்பாள்.

தொடர்ந்தும் கானகம் அவளைக் களம் நோக்கி அழைத்தது. கடும் பயிற்சி, கோட்டைக்கேணிக்கும் கொக்குத்தொடுவாய்க்கும் இடையில் சுற்றுக் காவல் வரும் படையினரை மறைந்திருந்து தாக்க வேண்டும். அந்த முகாமிலிருந்து இந்த முகாமுக்குக் கையசைத்தால் தெரியும். இரண்டு முகாம்களுக்கிடையில் உள்ள வெட்டை வெளியில் புல்லோடு புல்லாக இவர்கள். 8.30 மணிக்கு அவ்வழியால் வரும் படையினர் வரவில்லை. இவர்கள் திரும்பவும் வழியில்லை. இருட்டிய பின்னர்தான் அசையலாம். அதிகாலை 4.00 மணிக்கு நிலையெடுத்தவர்கள் ‘குளுக்கோஸ்’ பக்கற்றும், தண்ணீர் பக்கற்றும்தான் ஆளுக்கொன்று கொண்டு சென்றார்கள். அதுதான் அன்றைய சாப்பாடு. மாலை 5.00 மணி அவர்கள் காத்துக்கிடந்த இரைகள் கிடைத்தன. நல்ல சண்டை, கைப்பற்றிய ஆயுதங்களுடன் திரும்பினர்.

“மணலாற்றிலிருந்து வந்த இவ்வளவு ஆண்டுகளாகியும், இன்றும் சகபோராளிகளிடம் பரிபாலினியின் செயற்பாடுகளை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றால், அதற்குக் காரணம் அவரின் திறமையான செயற்பாடுகள்தான்” என்றார் முன்னாள் மணலாறு மாவட்டத் துணைத் தளபதி பாண்டியன் அவர்கள்.

அடிக்கடி பதுங்கித் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என விரிந்த களம் “இதயபூமி – 01” உடன் அவளுக்கு முற்றுப்பெற்றது.

‘பரி அக்கா உங்களை பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கட்டாம்’ என்றால் அந்த ஏரியாவுக்குள்ளேயே பரிபாலினியைக் காணமுடியாது. படிப்பதென்றால் பச்சைக்கள்ளி. அப்படிப்பட்டவள் கல்விப்பிரிவுக்கென அனுப்பப்படுகிறாள். அந்தக் காலப்பகுதியில்தான் மணலாறு மாவட்டச் சிறப்புத் தளபதி லெப். கேணல் அன்பு வீரச்சாவடைய பரிபாலினி அழுத அழுகை. அன்றுதான் அவள் அழுததை எல்லோரும் பார்த்திருக்கின்றோம். அவரின் வித்துடலுக்குக்கூட இறுதி வணக்கம் செலுத்த அவளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றுவரை அவளுக்கு அது அழியாத கவலை.

இவளுக்கு ஒரு அறை, ஒரு மேசை, கதிரை, அறை எப்பொழுதுமே பளிச்சென்று இருக்கும். மேசையில் ஒழுங்காக உறைகள் இட்டு அடுக்கப்பட்ட கொப்பிகள், நேரே சுவரில் நாளிதழில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட அன்பண்ணையின் படம் ஒவ்வொரு நாளும் முற்றத்தில் இருந்த மல்லிகையில் பூக்கொய்து படத்துக்கு வைத்து வணக்கம் செய்து, அவளை போரியலில் வளர்த்த ஆசான் அல்லவா லெப். கேணல் அன்பு.

இந்தக் காலங்களில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று இவர்களுக்குக் கட்டளை. முகாமில் ஒரே ‘கஸ்புஸ்’தான். அரைவாசித்தமிழ் அரைவாசி ஆங்கிலம்.

‘சிஸ்ரர் நவணி…… வோட்டர் டாங்…..’ நிரப்பும்படி சைகையில் முடிப்பாள் பரி.

பூச்செடிகளுக்கு தண்ணீர் உற்றும் போது யாரும் வந்து ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டால் பரி ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்து முழுசிவிட்டு, ‘பிளவர் றீ வோட்டர்’ மிகுதி சைகையில்.

கலை நிகழ்ச்சி என்றால் பரிக்கு சரியான விருப்பம். ஆனால் மேடையில் ஏறி எல்லோர் முன்னாலும் செய்வதென்றால் பயம், கூச்சம் இங்கேயோ செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம். என்ன செய்வது? அன்று மேடை ஏறிய பரி எல்லோரையுமே வாய்பிளக்க வைத்தாள். “அதிசயத்தின்மேல் அதிசயம். பரிபாலினியா இப்படி நடித்தாள்” என்று அனைவருமே ஆச்சரியப்பட்டனர். ஏனென்றால் இந்தப் பரிக்குள் இப்படியொரு கலைத்திறன் இருக்குமென்று எவருமே நம்பவில்லை.

ஒருநாள் இவர்களின் தமிழ் ஆசிரியர் எல்லோரையும் தூய தமிழில் ஆக்கம் ஒன்று எழுதும்படி கூறினார். பரியின் பெரும் முயற்சியில் சிறுகதை ஒன்று உருப்பெற்றது.

அதை இன்னொருத்தியிடம் வாசிக்கும்படி கொடுத்தாள், அவளும் இலேசுப்பட்டவள் அல்ல நடிப்பதென்றால் அவளுக்குக் கைவந்த கலை. பரியின் சிறுகதையை ஏற்ற இறக்கங்களுடன் பெரிதாக வாசிக்கத் தொடங்கினாள்.

“அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து சிறுநீர் வழிந்தது”

எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர். பரிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ‘ஏனப்பா, ஏனப்பா என்ன எல்லோரும் சிரிக்கிறீங்கள்’ என்றவளிடம் ‘சிறுநீர் என்றால் என்னப்பா?’ ‘சிறிய நீர், சொட்டு நீர்’ என விளக்கியவள் தன் பிழை விளங்கவும் எல்லோருடனும் சேர்ந்து தானும் சிரித்து…… சேர்ந்து படித்து…… போராளிகளுக்கு வகுப்பெடுத்து…… புதிய போராளிகளை இணைத்து……

வெளியில் சிறுபிள்ளைத் தனத்துடன் காணப்படும் இவளிடம் முழுமையான ஒரு ஆளுமைத்தன்மையும், தன்னம்பிக்கையும் இன்னும் இன்னும் நிறையவே செய்ய வேண்டுமென்ற வெறித்தனமும் நிறையவே இருந்தது.

இவளின் உருவத்திற்கும், செயல்பாடுகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லை என்பது மாதிரியான ஒரு தோற்றம். இவளின் செயல்பாடுகளின் வெற்றிகளே இதற்கான சான்றுகள்.

மீண்டும் பரிபாலினியின் சண்டைக் களங்கள் விரியத்தொடங்கியது.

1996ல் புதிதாகப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளிவந்த ஒரு அணிக்குப் பொறுப்பாளராக, அரசியல்துறை மகளிரணியாக…… அந்த அணி களம் இறங்குகின்றது. அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்களோ எண்ணிலடங்காதவை. நீண்ட காலமாகச் சண்டைகளில் பங்குபற்றாது வெளி வேலைகளில் ஈடுபட்டிருந்த போராளிகள். இவர்களுடன் புதிய போராளிகள், இவர்கள் நல்லமுறையில் சண்டை பிடிப்பார்களா? என்ற கேள்வி ஏனைய தாக்குதல் அணிகளுக்கு எனினும் ‘சத்ஜெய’ படை நடவடிக்கைக்கு எதிராக நின்று போரிட்டது இவர்களின் அணியும்.

பரந்தன் – ஆனையிறவு மீதான தாக்குதல் ஒன்றுக்கு பல அணிகள் பயிற்சி எடுத்தன. யார் யார் எந்தப் பகுதிகளுக்கென அவ்வணிகள் பிரிக்கப்பட்டபோது, ஒரு அணிக்கு உதவி அணியாக இவர்கள் பிரிக்கப்பட்டனர். ஆனால் இவர்களின் அணியை அவர்கள் “தமக்கு வேண்டாம்” எனக்கூறிவிட்டனர். பரிபாலினி, மேஜர் நித்தியா, கப்டன் ஜெயஜோதி உட்பட அனைத்துப் போராளிகளும் இறுகிப் போயினர். “இவங்களுக்குச் செய்து காட்டுறம்” என்ற சாவாலோடு களமிறங்கியவர்கள் சண்டையிட்டனர். காலையிலேயே விழுப்புண்ணடைந்த பரிபாலினி மாலை வரை களத்திலிருந்து வெளியேற மறுத்துவிட்டாள். பின்னரும் கட்டாயப்படுத்தியே வெளியேற்றப்பட்டாள்.

தொடர்ந்து ‘ஜெயசிக்குறுய்’ களம், முன்னர் இவர்களை மறுத்தவர்கள், சளைக்காது போரிட்ட இவர்களைக் கேட்டுப் பெறும் அளவுக்கு வளர்ச்சிகண்டு…… ஓயாத உழைப்பும், கடுமையான பயிற்சியும்…… எல்லாவற்றிற்கும் அடிநாதமாய் பரிபாலினி……

ஓமந்தை படை முகாம் மீதான தாக்குதலுக்கு தாமே தடையுடைத்து, ஏனைய அணிகளுடன் தமது அணி ஒன்றுடன் பரிபாலினியும் உள்நுழைந்து, பல படை காவலரண்களைத் தாக்கியழித்து மீண்டபோது, கப்டன் ஜெயஜோதியுடன் இன்னும் சில போராளிகள் திரும்பவில்லை. ஆனால் இவர்களைப் பாராட்டாத தளபதிகளே இல்லை. புளியங்குளத்தில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக நின்று புளியங்குளத்தை ‘புலிகள் புரட்சிக் குளமாக’ மாற்றியதில் இவளின் பெரும் உழைப்பும் உள்ளது என்றால் மிகையானது.

அந்தச் சமருக்குப் பொறுப்பாக நின்ற கட்டளைத் தீபன் அவர்கள் கூறும்போது, “பரிபாலினியைப் பொறுத்த வரையில் குறிப்பாக நல்ல விசயங்களைப் பார்த்தனான், நல்ல ஒரு நிர்வாகி, துணிச்சலான சண்டைக்காரி மற்றது எல்லாத்திலேயும் ஒரு ஆர்வம் உள்ளவர் இந்த மூன்றையும் நான் அவளிடம் நேரடியாகப் பார்த்தனான்” என்றார்.

“ஜெயசிக்குறுய்” களமுனையில் இருந்து எடுக்கப்பட்ட அரசியல்துறை மகளிர் அணியின் போராளிகள் ஒவ்வொருவரும் அவரவரின் முன்னைய பணிகளைத் தொடரும்படி கூறிய தலைவர், பரிபாலினியை சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவுக்குத் தெரிவு செய்கின்றார்.

சண்டையில் நிற்கும் ஒவ்வொரு போராளிகளினதும் திறமைகளையும், செயல்பாடுகளையும், நிலமைகளுக்கேற்ப முடிவெடுக்கும் தன்மைகளையும், சண்டையின் வெற்றி தோல்விகளுக்கான காரணிகளையும், பகுப்பாய்வு செய்வதுமே இதன் நோக்கமாகும். தொடக்காலத்தில் பரிபாலினியின் பொறுப்பில் பெண்போராளிகளே செயல்பட்டு வந்தனர். இந்தப் பணிகளில், எள் எனும் முன் எண்ணெய்யாக நிற்பாள் பரிபாலினி. கனவிலும் நினைவிலும் “அண்ணை எங்கள நம்பி விட்டிருக்கிறார். நாங்கள் திறமையாகச் செயற்பட வேண்டும்” என்பதே அவளின் தாரக மந்திரமாக இருந்தது.

01.02.1998 இல் ஆனையிறவு பரந்தன் சண்டையில் தொடங்கி 1999 இல் ஆண் போராளிகளையும் இணைத்து கட்டளைத் தளபதி சொர்ணம் தலைமையில், எந்த மூலை முடுக்குகளில் நடைபெறும் சிறு சிறு தாக்குதல்கள் என்றாலும் அங்கெல்லாம் பரியும் சென்று வந்தாள். போகும் போது பாதை மாறி எதிரியின் பிரதேசங்களுக்கு முன்னால் சென்று மீண்ட சம்பவங்கள் பல.

ஓயாத அலைகள் மூன்றின் தொடக்க நடவடிக்கையின் போது சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவினரைக் கொண்டு களமிறங்கி மீட்கப்பட்ட பகுதிகளைப் பாதுகாக்கும் பணியில் மணலாற்றில் ஈடுபட்டு, மீண்டும் பகுப்பாய்வு வேலைகள் செய்து…

தொடரும் ஓயாத அலைகளின் வீச்சால் எமது களமுனைகள் விரிவடைய, விரிவடைய தற்காலிகமாக சமராய்வு பகுப்பாய்வுப் பிரிவிலிருந்த ஒவ்வொருவரும் வெவ்வேறு படையணிகளுடன் இணையுமாறு பணிக்கப்பட, இவளின் பயணம் சோதியா படையணியை நோக்கித் தொடர்ந்தது.

“என்ர சண்டை பட்டறிவைக் கொண்டு துர்க்காவுக்கு உதவியா நின்று, படையணியை நன்றாக வளர்த்து, அண்ணை பிள்ளையள எப்படியெல்லாம் வளர்க்க வேணும் என்று நினைக்கிறாரோ அதற்கெல்லாம் நாங்கள் செயலுருவம் கொடுக்க வேணும்” என்று கூறிச் சென்றவளை முதல் சமரிலேயே நாம் இழந்துவிட்டோம்.

01.04.2000 நள்ளிரவு கடந்த விடிகாலை இயக்கச்சி படைத்தளம் புகுந்து திரும்பாத தோழிகளுள் பரிபாலினியும் ஒருத்தியாக…

பரிபாலினி மணலாற்றுக் காட்டின் மரவேர்களில் காவலிருந்து. காட்டுப் பறவைகளையும் விலங்குகளையும் நேசித்து, பொதிகள் பல சுமந்து, ஆழக்கிணறுகள் வெட்டி, பலம் மிக்க பாசறைகள் அமைத்து, உரமேறிய கைகளுடன் எதிரியுடன் பொருதி, பல துறைகளிலும் வளர்த்து தலைவனின் பெரும் கனவுகளுக்கேற்ப ஒளிரத் தொடங்கிய ஒரு இளம் தளபதி……

அடிக்கடி ரவைகளால் துளைக்கப்பட்டு, குண்டுச் சிதறல்களால் பிய்க்கப்பட்டு, இரத்தம் கொட்டி, வீரத் தழும்புகளால் நிறைந்த அவள் உடல்……

தனது சொத்தி வாயை நெளித்து, ‘இஞ்சேருமப்பா இஞ்சேருமப்பா…’ என்று எம்மைச் சுரண்டும் அந்த அழகான சின்ன உருவம்……

ஓ… அவள் ஓயவில்லை. இன்னும் எம்முன் நிழலுருவமாக உலாவிக் கொண்டிருக்கிறாள்.

ஆக்கம்: உலகமங்கை.
களத்தில் (31.08.2000).

மட்டக்களப்பில் முன்னாள் போராளி திடீரென உயிரிழப்பு ! #இனப்படுகொலை #வீரவணக்கம் #முள்ளிவாய்க்கால் #ஈழம் #தமிழர் #Mullivaikkal #ltte #Tamil #Eelam #TamilGenocide

மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் லெப்டினன்ட் கேணல் தரநிலையில் இருந்த இருந்த கோவிந்தன் சந்திரசேகர் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்

1987 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய ராமு என்று அழைக்கப்படும் கோவிந்தன் சந்திரசேகர் நேற்றைய தினம் தனது இல்லத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் விடுதலைப் பேராட்ட இயக்கத்தில் மருத்துவ பணியில் இருந்ததுடன் ஜெயந்தன் படையணியின் பிரிவு பொறுப்பாளராகவும் லெப்டினன்ட் கேணல் இரண்டாம் நிலை தளபதியாகவும் இருந்துள்ளார்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் 2011 ஆம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வீடு திரும்பியிருந்தார்.

அதன் பின்னர் அவர் ஸ்ரீ மஹா பெரிய தம்பிரான் ஆலய தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.

அவரது இறுதி கிரியைகள் வந்தாறுமூலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இறுதிக் கிரியைகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞானமுத்து ஸ்ரீநேசன், கோவிந்தம் கருணாகரன், சதாசிவம் வியாழேந்திரன், இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

லெப்.கேணல் சோ(சத்தியநாதன்) உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் ! #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide

லெப்.கேணல் சோ (சத்தியநாதன்)
செல்லத்துரை புவனேந்திரன்
உயிலங்குளம், மன்னார்
வீரச்சாவு: 26.05.2001

கிளிநொச்சி குஞ்சுக்குளம் மாதா கோவிலடிப்பகுதியில் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு

கப்டன் விஜி
பூபாலப்பிள்ளை யோகேஸ்வரி
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.05.2001

வீரவேங்கை சரவணன்
செல்வநாயகம் சிவச்செல்வன்
குருணாகல, சிறீலங்கா
வீரச்சாவு: 26.05.2000

வீரவேங்கை அமர்வானம்
தம்பிராசா றஞ்சிதமலர்
இலுப்பைக்கடவை, மன்னார்
வீரச்சாவு: 26.05.2000

வீரவேங்கை புரட்சிக்கனி
இராசேந்திரம் இராஜகுமாரி
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.05.2000

வீரவேங்கை இசைக்கலை
மாரிமுத்து புஸ்பவல்லி
ஆனந்தர்புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 26.05.1999

கப்டன் புவிராஜ்
சண்முகம் சந்திரறோகான்
வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.05.1998

லெப்டினன்ட் அன்பு (சுயம்பரன்)
கிருஸ்ணப்பிள்ளை நடேஸ்வரன்
தாமரைக்குளம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 26.05.1998

லெப்டினன்ட் பௌத்திரன்
கார்த்திகேசு புராந்தகராஜா
நடுக்குடியிருப்பு, பனிச்சங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.05.1998

2ம் லெப்டினன்ட் காகிதன்
கந்தசாமி மனோகரன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 26.05.1998

வீரவேங்கை சேதுராஜ்
விஜயன் நந்தரூபன்
கண்ணகிபுரம், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.05.1998

வீரவேங்கை முல்லைக்கீதன்
மதிபாலசிங்கம் காந்தரூபன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 26.05.1998

வீரவேங்கை சப்தனன்
யோகராசா சற்குணராசா
காக்காச்சிவெட்டை, வெல்லாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.05.1998

வீரவேங்கை சங்கரதீபன்
சின்னத்தம்பி குருகுலசிங்கம்
1ம் வட்டாரம் தாளங்குடா, மண்முனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.05.1998

வீரவேங்கை ரூபதன்
ஆறுமுகம் கமல்ராஜ்
தாளங்குடா, ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.05.1998

2ம் லெப்டினன்ட் எழில்மதி (எழிலரசி)
செல்லத்துரை கௌரி
பட்டிகுடியிருப்பு, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.05.1998

2ம் லெப்டினன்ட் ஆவுடையான்
சிவநாயகம் கமலபவான்
மணற்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 26.05.1997

2ம் லெப்டினன்ட் சாரங்கன்
தனபாலசிங்கம் திருச்செல்வம்
நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 26.05.1997

2ம் லெப்டினன்ட் தாமரா
ஜோன்பற்றிக் சுசிகலா
பள்ளிமுனை, மன்னார்
வீரச்சாவு: 26.05.1995

வீரவேங்கை வித்தகி
சின்னராசா விமலாதேவி
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.05.1995

துணைப்படை வீரர் வீரவேங்கை தெய்வேந்திரன்
இராமையா தெய்வேந்திரன்
சேனைபிளவு, நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.05.1995

துணைப்படை வீரர் வீரவேங்கை பகீரதன்
கணபதிப்பிள்ளை வீரகத்தி
கரணவாய் கிழக்கு, நெல்லியடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.05.1994

லெப்டினன்ட் இரும்பொறை (றொபேட்)
சோமசுந்தரம் பிறைசூடி
புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 26.05.1994

லெப்டினன்ட் தமிழ்வேந்தன் (சாஜகான்)
வீரையா பரமகுரு
கூழாங்குளம், வவுனியா,
வீரச்சாவு: 26.05.1994

2ம் லெப்டினன்ட் பழனி
அந்தோனிப்பிள்ளை வில்வராசா
சாஸ்திரிகூழாங்குளம், வவுனியா
வீரச்சாவு: 26.05.1993

லெப்டினன்ட் தமிழ்மன்னன் (மதனராசா)
இரத்தினம் சந்திரகுமார்
தோப்பு, திருகோணமலை
வீரச்சாவு: 26.05.1992

கப்டன் குட்டிரமேஸ்
தர்மலிங்கம் இரஞ்சன்
அச்சுவெலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.05.1991

வீரவேங்கை நிசாந்தன் (குடல்)
வில்வரட்ணம் ஜெயரட்ணம்
உவர்மலை, திருகோணமலை
வீரச்சாவு: 26.05.1990

கப்டன் வீமன்
நவீனநாயகம் நாகராசா
நாகர்கோவில், வடமராட்சி கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.05.1987

கப்டன் அலன்
நடனசிகாமணி பாக்கியலிங்கம்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.05.1987

2ம் லெப்டினன்ட் ரம்போ (சிவா)
தங்கவடிவேல் சிவகுமாரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.05.1987

2ம் லெப்டினன்ட் நாகேந்திரன்
மகேந்திரன்
மடுக்கோவில், மன்னார்
வீரச்சாவு: 26.05.1987

வீரவேங்கை செட்டி
சுந்தரம் செல்வராசா
இமையாணன் மேற்கு, நாவலடி, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.05.1987

வீரவேங்கை ராஜன்
சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.05.1987

வீரவேங்கை நரேஸ்
கணேசரத்தினம் கிருபாகரன்
தொண்டமானாறு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.05.1987

2ம் லெப்டினன்ட் சேது
நடராசா சிவசேது
கொட்டடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.05.1987

வீரவேங்கை செட்டி
கணபதிப்பிள்ளை நந்தகுமார்
சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 26.05.1987

ஈரோஸ் மாவீரர் கண்ணன்
பாலசிங்கம்
கரைச்சித்திடல், தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 26.05.1987

வீரவேங்கை ரகுமான்
அருளம்பலம் ரகுபதி
இரணைஇலுப்பைக்குளம், வவுனியா.
வீரச்சாவு: 26.05.1984

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…

சொன்னதைப் போலவே செய்துகாட்டி வீரச்சாவடைந்த லெப் கேணல் பிரசாந்தன் ! #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam #TamilGenocide

லெப்.கேணல் பிரசாந்தன்
வின்சன் ஜெயச்சந்திரன்
தருமபுரம், கிளிநொச்சி
07.07.1972 – 25.05.1999

1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து அதன் பின் கனரக ஆயுதப் பயிற்சியையும் பெற்று வெளியேறிய காலப்பகுதியில் கடற்புலிகளின் விசேட தரைத்தாக்குதலனி ஒன்று மாவீரான லெப் கேணல் டேவிட்/ முகுந்தன் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டபோது அவ்வணிக்குள் உள்வாங்கப்பட்ட பிரசாந் .

அங்கு தனது திறமையான செயற்பாட்டால் போராளிகள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றான். இப் படையணி ஒரு பெரும் தாக்குதல் ஒன்றிற்கான பயிற்சிக்காக மற்ற தரைத்தாக்குதலணிகளுடன் இணைந்து அப்பயிற்சிகளில் பங்குபற்றியது.பயிற்சிகள் முடிவடைந்தவுடன் .இவர்கள் எடுத்த பயிற்சிக்கான சமரான பூநகரிக் கூட்டுத்தளம் மீதான தாக்குதலில் பங்குபற்றி தனது முதலாவது தாக்குதலிலேயே தனக்கான ஒரிடத்தை பதித்தான்.

அதனைத் தொடர்ந்து .1994ம் ஆண்டு ஆரம்பத்தில் இப்படையணியில் இருந்த போராளிகளும் வேறு பலபோராளிகளும் உள்வாங்கப்பட்டு தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக கடற்புலிகளின் கடற்தாக்குதலனியாக (கிளாலிக் கடற்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சாள்ஸ் அவர்களின் நினைவாக) சாள்ஸ் படையணியாக உருவாக்கம் பெற்றது.
இப்படையணியில் உள்ளவர்களுக்கு அனைத்துப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு கடற்சமர் மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்கும் ஏற்றவாறு வளர்த்தெடுக்கப்பட்டனர்.இப்பயிற்சிகளில் சிறந்து விளங்கியவன் குறிப்பாக ஐம்பது கலிபர் துப்பாக்கியின் சிறந்த சூட்டாளனாக அங்கிருந்த போராளிகளுள் சிறந்து விளங்கிய பிரசாந் .அக்காலப் பகுதியில் நடைபெற்ற பெரும்பாலான கடற்சமரில் முன்னனி ஆயுதமாக தனது ஐம்பது கலிபர் துப்பாக்கியுடன் செனறு வந்தவன் .

ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் படகுச் சாரதியாகவும் சென்று வந்தான்.சிலகாலம் கப்பலிலும் கடமையாற்றிய பிரசாந் கடலனுபவங்களையும் எனைய பல அனுபவங்களையும்.பெற்றுத் திரும்பியவன் இங்கு வந்து முல்லைத்தீவுச் சமரில் கைப்பற்றப்பட்ட ஆடலறிப் பீரங்கிகளை சக போராளிகளுடன் இணைந்து பாதுகாப்பாக நகர்த்துவதில் முக்கிய பங்காற்றினான்.
அதன் பின் சாள்ஸ் படையணியின் துணைப் பொறுப்பாளராக சிறப்புத் தளபதி சூசை அவர்களால் நியமிக்கப்படுகிறான்.அப் பணிகளில் மிகவும் திறமையாகக் செயற்பட்ட பிரசாந் தொடர்ந்து சிறப்புத் தளபதி அவரகளின் பணிப்புரைக்கமைவாக விமானத்தாக்குதலால் விநியோகம் பாதிக்கப்படாமலிருக்க சாளையில் பிறிதொரு ஒடுபாதை (படகுகள் இறக்கி ஏற்றுவதற்க்கு )அமைக்கச் சொன்னதற்கமைவாக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அமைத்தான் .

என்ன வேலையாகிலும் சிறப்பாகச் செய்வதிலும் பிரசாந்திற்க்கு நிகர் பிரசாந்தே தொடர்ந்து புதிய கனரக ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவ் ஆயுதங்கள் வன்னிக்குக் கொண்டு வருவதிலும் பெரும் பங்காற்றியவன் .அக் கனரக ஆயதங்கள் கடற்புலிகளுக்கு வழங்கப்பட்டபோது அவ் ஆயுதங்களுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டபோது பிரசாந்தும் ஒருவனாகச் சென்று பயிற்சியில் சிறந்து விளங்கி அக் கனரக ஆயுதத்தின் சிறந்த சூட்டாளனாகவும் அவ் ஆயுதத்தின் பொறுப்பாளனாகவும் பயிற்சி முடித்து வெளியே வந்தான்.
அக்காலப் பகுதியில் கடற்புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாத கடற்படையினர் அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கடற்புலிகளின் படகுகள் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர்.இது சம்பந்தமாக சிறப்புத் தளபதி சூசை அவர்கள் போராளிகளுடன் கலந்தாலோசித்து கொண்டிருந்தபொழுது நான் எனது ஆயுதத்தால் அடித்து நிற்பாட்டுவேன் என்று போராளிகளுக்கு நம்பிக்கையூட்டினான்.

25.05.1999 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் விநியோகப் பாதுகாப்பு நடவடிக்கையின்போது கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது தனது நீண்ட கடற்சண்டை அனுபவத்தின் மூலமும் மதிநுட்பமாகவும் சக போராளிகளின் துணையுடனும் தனது கனரக ஆயுதத்தால் சிறிலங்காக் கடற்படையின் அதிதொழில் நுட்பம் கூடிய அதிவேக டோறாப் படகை அடித்து சொன்னதைப் போலவே நிற்பாட்டி வீரச்சாவடைகிறான்.

பல போராளிகளை ஆயுதத்துறையில் தன்னைப்போலவே வளர்த்த ஒருவீரன் பெரும் நெருக்கடிக்குள்ளும் போராளிகளை கட்டுப்பாட்டோடு வைத்திருந்த பொறுப்பாளன்.இப்படியாக பிரசாந்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.இவனது பெயரில் உற்பத்தி செய்யப்பட்ட படகு ஆழ்கடல் சண்டைப் படகுகளின் கட்டளைப் படகாக செயற்பட்டதுடன் இவனால் வளர்க்கப்பட்ட போராளிகள் அப்படகின் முன்னனி ஆயுதத்தின் சூடுனராகவும் கட்டளை அதிகாரிகளாகவும் செயற்பட்டனர்.

தமிழீழ கனவை சுமந்து பணியாற்றிய தேசப்பற்றாளன் சுரேஷ் ! #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #ltte #Tamil #Eelam


தம்பிராசா சுரேந்திரன் (சுரேஸ்) அவர்கள் கனடாவில் தமிழீழ தேசித்துக்காக உன்னதமாக உழைத்தவர்களில் ஒருவர்.

90களின் ஆரம்பத்திலிருந்தே கனடாவில் தமிழ்த்தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உலகத்தமிழர் அமைப்பில் தன்னை இணைத்து பணியாற்றினார்.

கனடியத் தலைநகர் ஒட்டாவா பிரதேசத்துக்கு பொறுப்பாளராக நீண்ட காலம் பணியாற்றி வந்த இவர், தமிழ்த் தேசியத்தின் நெருக்கடியான காலகட்டமான 2005 – 2009 காலப்பகுதியில் அரசியற் துறையில் இணைந்து மிகவும் கடுமையாக உழைத்தவர். தான் பிறந்த மண்ணையும், மொழியையும் மிகவும் ஆழமாக தமது உயிர் இருக்கும் வரை நேசித்த ஒரு தேசப்பற்றாளர் இவர்.

ஒட்டவாவில் தமிழ் கல்விப்போதனை, மகளிர் அமைப்பு ஆரம்பம் மற்றும் தாயக இளம் சிறார் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றை செயற்படுத்தும் முன்னோடியாக தம்மை அர்ப்பணித்த சுரேஸ் 2004ம் ஆண்டு ரொறன்ரோ குயின்ஸ்பார்க் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வின் பிரதான செயற்பாட்டாளராக இயங்கியவர்.

அக்காலப் பகுதியில் விசேட அழைப்பின் பேரில் வன்னிக்குப் பயணம் மேற்கொண்டு நவீன கணி னிமயப்பட்ட ஒளிப்படத்துறையை தேசியத் தலைமைத் தளத்தில் அறிமுகம் செய்த இவரது பணி இன்றும் மதிக்கப்படுகிறது.

கணினித்துறையில் தேர்ச்சி பெற்ற இவர் கணினி தொழில்நுட்ப உதவிகளையும் தேசியத்திற்கு வழங்கி வந்தார். தமிழ்த் தேசியம் என்றமையப் புள்ளியில் நின்றவாறு உலகளாவிய ரீதியில் அதனோடு இணைந்த அனைத்து தேசப்பற்றாளருடனும் நேசமாக இணைந்து இயங்கிய ஒரு முன்னோடி.

அவர் தான் பிறந்த நாட்டைப்போலவே புகுந்த மண்ணான கனடாவையும் இறுதிவரை நேசித்தவர். இயற்கையாகவே பிறரை நேசிக்கும் சுரேஸ் யார், எவர் என்று அறியாதவர்களை காப்பாற்றச் சென்று தமது இன்னுயிரை ஈந்த ஒரு வீரன்.

தமிழீழ கனவை சுமந்து பணியாற்றிய தேசப்பற்றாளன் சுரேஷ்!

கனடாவின் தலைநகரான ஒட்டாவில் தமிழீழ தாயகத்தை நேசித்த ஒரு தேசப்பற்றாளரான ஒட்டாவா சுரேஷ் என்று அழைக்கப்படும் சுரேந்திரன் தம்பிராஜா
தம்பிராஜா சாவடைந்துள்ளார். 15.05.2020 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் வீதியில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றுக்கு உதவுவதற்காக தனது வாகனத்திருந்து மனைவியுடன் இறங்கி உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சுரேஷ் யாழ்ப்பாணம் புத்தூரைப் பிற்பிடமாகக் கொண்டவர். கனடாவில் 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்தவர்.

ஒட்டாவா மாநிலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவு தளத்தை விதைக்கவும் தமிழ்த் தேசியத்தை கட்டியெழுப்பவும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராகச் 2009 ஆண்டு வரை தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியிருந்தவர் சுரேஷ்.

இவரின் விடுதலைச் செயற்பாடுகளை நன்கறிந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அவரின் விடுதலைப் பற்றை மதிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு வன்னிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வன்னிக்கு வந்த சுரேஷ் அவர்களை வெளிநாட்டிலிருந்து வருவோரை வரவேற்கும் கிளிநொச்சியில் அமைந்த நந்தவனம் வரவவேற்றது. அவர் தங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து விசுமடு புளியடியில் அமைந்துள்ள அனைத்துலகத் தொடர்பகத்தில் பொறுப்பாளர் வீ.மணிவண்ணனுடன் (கஸ்ரோ) சந்திப்பும் விருந்தோம்பலும் நடைபெற்றன. கனடாவில் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து பல மணி நேர உரையாடல்கள் நடைபெற்றன.

சுரேஷ் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்காக 2004 ஆண்டு காலகட்டத்தில் உலகத் தரத்தில் மிக விலையுயர்ந்த கனோன் புகைப்படக் கருவியை (Canon Camera) வாங்கி வந்திருந்தார்.

தேசியத் தலைவருடனான சிறப்பு சந்திப்பும் மறுநாளே ஒழுங்கு செய்யப்பட்டது. தேசியத் தலைவர் அனைத்துலகத் தொடர்பகத்திற்கு வருகை தந்து சுரேஷை சந்திக்கிறார். ஒரிரு மணி நேர உரையாடலும் விருந்தோம்பலும் தேசியத் தலைவரால் வழங்கப்பட்டது.

சந்திப்பின் முடிவில் தேசியத் தலைவருக்காக சுரேஷ் கமெரா எடுத்து வந்த விடயத்தைக் கஸ்ரோ அவர்கள் தேசியத் தலைவரிடம் குறிப்பிட்டார். தலைவரும் அக் கமெராவை எடுத்து வரும்படி கஸ்ரோவிடம் தெரிவித்துக்கொண்டு சந்திப்பை முடித்து கொட்டகையிலிருந்து தன்னுடைய இருப்பிடம் நோக்கிச் செல்வதற்கு கதைத்துக்கொண்டு வெளியேறினார்.

அப்போது போராளி ஒருவர் கமெராவை எடுத்து வருகிறார். வரும் வழியில் தேசிய தலைவரின் பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும் இம்பிரான் – பாண்டியன் படையணிக்குப் பொறுப்பாகவும் இருந்த ரட்ணம் மாஸ்டர் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட (பெயர் குறிப்பிட முடியாது) போராளி ஒருவராலும் குறித்த கமெரா பாதுகாப்பு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அக்கமெரா சுரேசின் கைகளில் போராளியால் வழங்கப்பட்டது. குறித்த கமெராவை தலைவர் அவர்களிடம் கையளித்த சுரேஷ், கமெராவின் சிறப்பு அம்சங்கள் குறித்து ஆர்வமாக சுரேசிம் தலைவர் கேட்கவே நின்றநிலையில் உரையாடல் மீண்டும் ஒரு மணி வரை தொடர்ந்தது. கமெராவோ மிகப் பொியது, எடையும் கூடியது, லென்சுகளும் பிரமாண்டமானவை.

இயக்கத்திடமே அத்தரத்தில் கமெரா இல்லை என்பதை தேசியத் தலைவர் தன்னைச் சுற்றி நின்றவர்களிடம் குறிப்பிடுகின்றார். அதன் பிறகு அக்கமெராவை இயக்குவது குறித்த விளக்ககும் சுரேசால் செய்முறையில் செய்து காண்பிக்கப்பட்டது. தலைவரும் அதை ஆர்வமாகக் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து தேசியத் தலைவர் ”என்னை எடுங்கள்” உங்கள் கமெராவின் தரத்தைப் பார்ப்போம் என்று கூறவே சுரேஷ் மிக உச்சாகத்துடன் தலைவரை மாமரத்தின் கீழ் நிறுத்தி படத்தினை எடுத்தார். ஒரு கிளிக் படபடபடபட என சந்தம் சுற்றியிருந்தவர்களை வியக்க வைத்தது. சுரேசும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மிக நேர்த்தியாக படங்களை எடுத்தார்.

பின்னர் எடுத்த படங்களை தலைவரிடம் கமெரா திரையில் சுரேஷ் காண்பிக்கிறார். படங்கள் மிகத்தெளிவாகவும் மிகத் துல்லியமாகவும் இருந்ததைப் பார்த்து தலைவரும் வியந்தார். வியந்தது மட்டுமல்லாமல் சுரேசையும் பாராட்டினார்.

தேசியத் தலைவரை சுரேஸ் எடுத்த படம் அன்றை ஆண்டே அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப் பிரிவால் புலம் பெயர் நாடுகளில் வெளிவரும் தமிழ் தாய் நாட்காட்டியில் பிரசுரிக்கப்பட்டது மட்டும் அல்லாம் இன்று வரை அப்படம் வெளியீடுகளிலும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தேசியத் தலைவரும் சுரேசும் இணைந்து நிற்க அக்கமெராவால் போராளி ஒருவர் படம் எடுத்தார்.

தொடர்ந்து உரையாடிய தேசியத் தலைவர்கள் அவர்கள் இக்கமெராவை நிசாமிடம் (அஞ்சுனா புகைப்படப் பிரிவுப் பொறுப்பாளர்) கொடுக்கும் படி கஸ்ரோவிடம் கூறி சிறிது நேரத்தின் பின் அங்கிருந்து வெளியேறினார்.

பின்னர் வெளிநாட்டிலிருந்து செல்வோர் தேசியத் தலைவருடனான சந்தித்திப்பில் புகைப்படம் எடுக்கும் டிஜிட்டல் மயமான புதிய கலாச்சாரமும் அவ்விடத்திலேயே ஆரம்பமாகியது.

தங்கியிருந்த ஒவ்வொருநாளும் தமிழீழ கட்டுமானங்களை பார்வையிட போராளிகளால் அழைத்துச் செல்லப்பட்டார் சுரேஷ். அவர் அங்கிருந்த நாட்களில் தமிழர் தாயகத்தின் இயற்கை அழகுகள், மக்கள், வாழ்வியல், புலிகளின் கட்டுமானங்களை புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தினார்.

தாயகத்திலிருந்து திரும்புப் போது தனது சொந்த தேவைக்காக எடுத்து வந்த அதே மாதிரியான மற்றொரு கமெராவையும் கஸ்ரோ அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தார். அக்கமெரா வெளிநாடுகளிலிருந்து சென்ற தழிழர் ஒருங்கிணைப்புக்குச் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், தேசியத் தலைவருடனும், கஸ்ரோ அவர்களுடன் புகைப்படங்கள் எடுப்பதற்கு நிலவன் என்ற போராளியால் இறுதி வரை பயன்படுத்தப்பட்டது சுட்டிக்காட்டத்தக்கது.

கனடா திரும்பியதும் தாயக நோக்கிய வேலைத் திட்டங்களை இறுதி வரை முன்னெடுத்தார். 2004 ஆம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக Queens park முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக ஒழுங்கமைத்தவரும் சுரேஷ் அவர்களே.

தாயகத்தில் எடுத்த புகைப்படங்களை சுரேன் என்ற இணையத்தில் மக்கள், வாழ்வியல், செஞ்சோலை, அறிவுச்சோலை, நவம் அறிவுக்கூடம், மயூரி இல்லம், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்கள் போன்ற பொதுவெளியில் பார்வையிடக்கூடிய படங்களை தரவேற்றம் செய்திருந்தார்.

தமிழீழ கனவை சுமந்து பணியாற்றிய தேசப்பற்றாளனான சுரேஷ் அவர்களின் இழப்பு என்பது பேரிழப்பாகும். அவர் ஆற்றிய விடுதலைப் பணிக்கு தலை வணங்கி வீர வணக்கம் செலுத்துவோம்.

மீளும் நினைவுகளுடன்
-அகராதி-

பிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் (நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide

பிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி

ஓவியர் புகழேந்தி உலகத்தமிழர்களால் நன்கறியப்பட்ட தமிழின உணர்வாளர். தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் தும்பத்திக்கோட்டையில் பிறந்த அவர் சென்னை ஓவியக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.தனது உயிரோட்டமான ஓவியங்களால் தமிழீழ விடுதலைப் போராட்ட பரிமாணங்களை பொதுவெளியில் கொண்டு சென்று நிலைநிறுத்தியவர். தொடர்ந்தும் ஈழத்தமிழருக்காக பணியாற்றிவருபவர்.

அவர் எமக்கு வழங்கியிருந்த சிறப்பு நேர்காணலை இங்கு தருகிறோம்.

தங்களின் ஈழ பயணத்தின் போது தாங்கள் மேற்கொண்ட ஓவியப் பயிற்சி மற்றும் ஓவியக் கண்காட்சி பற்றி அறியத் தருவீர்களா?

முதலில் ஓவியக் காட்சி திட்டமிடப்பட்டு கிளிநொச்சி,பளை,பூநகரி,மல்லாவி, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, ஆண்டான்குளம், பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய இடங்களிலும், போராளிகள் தளபதிகள் பார்வையிட வேண்டும் என்பதற்காக கிளிநொச்சி தூயவன் அரசறிவியல் கல்லூரியிலும், பளைப் பகுதியில் தளபதி தீபன் பொறுப்பிலிருந்த ஜி10 என்றழைக்கப்படும் போர் பயிற்சிக் கல்லூரியிலும் நடைபெற்றது.

யாழ். குடா நாட்டில் யாழ்ப்பாண பல்கலைக் கழகம், வடமராட்சி கரவெட்டி அரசடி, தென்மராட்சி சாவகச்சேரி நுணாவில் கிழக்கு ஆகிய இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று மக்களின் வரவேற்பை பெற்றது.

ஓவியக் காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இடையிடையே திட்டமிடப்பட்டு கிளிநொச்சியில் பள்ளி மாணவர்களுக்கும், ஓவிய ஆசிரியர்களுக்கும், யாழ்ப்பாணத்தில் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கும் ஓவியப் பயிலரங்குகள் நடத்தப்பட்டன. யாழ். பல்கலைக்கழக நுண்கலை மாணவர்களுக்கு சிறப்பு விரிவுரையும் நிகழ்த்தினேன்.

ஓவியக் காட்சி திட்டமிடும் போதே என்னை அழைத்து பேசிய தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள், போராளிகளுக்கும் நீண்ட கால ஓவியப் பயிற்சிக்கு திட்டமிட வேண்டும் என என்னைக் கேட்டுக் கொண்டார். அதாவது “உங்கள் கல்லூரியில் நான்கு ஆண்டுகால படிப்பை எப்படி நடத்துகிறீர்களோ அவ்வாறு எங்கள் போராளிகளுக்கு நீங்கள் நடத்த வேண்டும். அதற்கேற்றவாறு திட்டமிடுங்கள்” என்று அண்ணன் பிரபாகரன் கூறினார்.

அதன்படி நான்கு மாத நான்கு கட்ட செய்முறை பயிற்சிக்கு மட்டும் பாடத்திட்டம் தயாரித்தேன். தொடர்ச்சியாக ஒருமாதம் பயிற்சி மூன்று மாதம் இடைவெளி விட்டு மீண்டும் ஒருமாதம் பயிற்சி என நான்கு மாதங்களுக்கு நான்கு கட்ட பயிற்சியாக திட்டமிட்டிருந்தேன்.

அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் போராளிகள் உள்வாங்கப் பட்டு, தலைவரின் நேரடி கண்காணிப்பில், கிளிநொச்சி தூயவன் அரசறிவியல் கல்லூரியில் போராளிகளுக்கான ஓவியப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. போர் பதற்றம் அதிகரித்த நிலையில், திட்டமிட்டபடி  இறுதிகட்ட ஓவியப் பயிற்சி வகுப்பு  நடைபெறவில்லை.

ஈழப் பயணத்தின் போது, அங்கு உங்களுக்கு மறக்க முடியாத விடயமாக இருந்தது எது என்பதை குறிப்பிட முடியுமா? 

நிச்சயமாக, மறக்க முடியாத விடயம் நிறைய இருக்கிறது. அதில் முக்கியமானது என்றால் இரண்டைக் குறிப்பிடலாம். ஓன்று,  ஓவியக் காட்சி தொடங்குவதற்கு முன்பு என்னையும் என் மனைவி குழந்தைகளையும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் சேரலாதன் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று காண்பித்தார். வல்வெட்டித்துறையில் தலைவரின் இல்லத்தைப் பார்வையிட்டு, பின்னர் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட பன்னிரெண்டு மாவீரர்களின் நினைவுச் சதுக்கத்தை பார்வையிட அவ்விடத்திற்கு சென்றோம்.

அதற்கு அருகில் ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். “அவரிடம் சென்று பேசுங்கள் அண்ணா” என்றார் சேரலாதன்.  அவர் அருகில் சென்று வணக்கம் தெரிவித்து “நான் தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்பதைத் தெரிவித்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். முகம் மலர்ந்து எனக்கு வணக்கம் தெரிவித்தவர், இந்திய அமைதிப்படை இவ் வல்வெட்டித்துறையில் நடத்திய படுகொலைகளைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார். திடீரென்று தான் சட்டையைக் கழற்றி, தன் மார்பில் இருந்த தழும்பைக் காட்டி “இதோ பாருங்கள் இந்திய அமைதிப் படை சுட்டதில் ஏற்பட்ட தழும்பு. வலது புற மார்பில் பாய்ந்த குண்டு இடது புற மார்பு வரை கிழித்துக் கொண்டு வெளியேறியதால் உயிர் தப்பினேன். குண்டடிப்பட்டு தப்பியவன் நான் ஒருவன் தான்” என்றார்.

வாகனத்திலிருந்த சேரலாதன் என்னுடைய “உறங்கா நிறங்கள்” ஓவியத் தொகுப்பு நூலை என்னிடம் கொடுத்து, நான் செய்த ‘வல்வைப் படுகொலை’ ஓவியத்தைக் காட்டச் சொல்ல, அப் பெரியவரிடம் காட்டினேன். “இப்படித்தான் முழங்காலில் நிற்க வைத்து, கைகளை பின்னால் கட்டி, மார்பிலே சுட்டார்கள்.” என்றார் ஓவியத்தைப் பார்த்துக்கொண்டே.

“எங்களுக்கு நிகழ்ந்த கொடுமையை அப்படியே வரைந்திருக்கிறீர்கள்” என்றும் பாராட்டினார். 1999ஆம் ஆண்டு அவ் ஓவியத்தைச் செய்த போது யார் பாதிக்கப்பட்டரோ அவரிடமே அந்த ஓவியத்தைக் காண்பிக்க நேரிடும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.

அப்போது போராளி சேரலாதன்  “அண்ணே, வேறு எந்த ஓவியருக்கோ, படைப்பாளிக்கோ இல்லாத பெருமை உங்களுக்கு இருக்கிறது. பாதிக்கப்பட்ட ஒருவரே உங்கள் ஓவியப் படைப்பை பார்த்து பாராட்டுவது என்பது வேறு எந்த விருதையும் விட உயர்ந்தது” என்றார்.

மற்றொன்று, மன்னார் மாவட்டம் ஆண்டான்குளத்தில் நடைபெற்ற ஓவியக் காட்சியை பார்வையிட தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப்டினென்ட் மாலதியின் தந்தை வந்திருந்தார். அவர் இல்லத்திற்கும் என்னை அழைத்தார். நேர நெருக்கடியிலும் மாலதியின் இல்லத்திற்கு சென்றேன். வரலாற்று சிறப்புமிக்க போராளி மாலதியின் தந்தை, சகோதரிகள், சகோதரர் ஆகியோரை சந்தித்து உரையாடியதும், மாலதியின் நினைவைப் பகிர்ந்து கொண்டது முக்கியமானதும் மறக்க முடியாததும் ஆகும்.

தேசியத் தலைவரை நேரில் சந்தித்தவர் என்ற வகையில் அவரின் தேசியப் பற்று மற்றும் மக்கள் நலன் போன்ற உங்களை கவர்ந்த சில விடயங்களை கூற முடியுமா?

தமிழீழத்தில் ஓவியக் காட்சி திட்டமிடப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில்  தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்கள் என்னை அழைத்து பேசும் போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்த இருக்கும் ஓவியப் பயிலரங்கு குறித்து தமிழ்ச்செல்வன் தலைவரிடம் சொல்லும் போதே போராளிகளுக்கும் ஓவியப் பயிற்சி கொடுக்கலாம் என்று தலைவரிடம் சொல்ல நினைத்தேன். ஆனால் சற்று தயங்கினேன். ஆனால் தலைவர் அவர்கள் என்னிடம், “மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஓவியப் பயிற்சி கொடுக்க வேண்டியதுதான்.

அவர்கள் அதை தங்கள் சொந்தத் தேவைக்குத்தான் பயன்படுத்திக் கொள்வார்கள். அதுவும்  முக்கியம். அதைவிட முக்கியம் போராளிகளுக்கு ஓவியப் பயிற்சி வழங்கினால் அது நாட்டுக்குப் பயன்படும். அதனால் அதற்கும் திட்டமிடுங்கள்” என்று கூறிய போது, மிகவும் மகிழ்ந்து நான் முன்பே உங்களிடம் சொல்ல நினைத்தேன் போராளிகளுக்கு எதற்கு ஓவியப் பயிற்சி என்று நீங்கள் நினைத்துவிடக்கூடும் என்று தயங்கியதற்கான காரணத்தை சொன்னேன்.

உடனே தலைவர் அவர்கள் சிரித்துக்கொண்டு, நிச்சயம் அப்படி இல்லை. ஓவியம் தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. எல்லாத் துறைக்கும் அந்த அடிப்படைத் தேவை இருக்கிறது. ஓவிய அடிப்படையை தெரிந்து கொண்டால் நாம் செய்கின்ற  செயலை சிறப்பாக செய்யலாம் என்று தலைவர் சொல்லிக்  கொண்டிருக்கும் போதே… நான் லியார்னாடோ டாவின்சி குறித்த செய்தி ஒன்றை சொல்ல முனைகின்றேன், அதற்குள் தலைவர் பிரபாகரன் லியார்னாடோ “டாவின்சியை எடுத்துக் கொள்ளுங்கள், அவருக்கு ஓவியம் வரைகின்ற ஆற்றல் இருந்ததால் தான் ஹெலியை கீறி வடிவமைத்து ஹெலிகாப்டர் உருவாகக் காரணமாக இருந்தது.

அவருடைய அறிவியல் திறன் சரியாக வெளிப்பட அவருடைய ஓவியத் திறன் துணை புரிந்திருக்கிறது” என்று அவர் கூறிய போது நான் வியப்பில் ஆழ்ந்து போய், அட என்ன மனிதர் இவர், ஓவியத் துறையை சேர்ந்தவர்கள் அல்லது அறிவியல் துறையை சேர்ந்தவர்கள் பெரும்பாலனோருக்கு தெரியாத செய்தியை மிக அழகாக குறிப்பிடுகிறாரே… நான் சொல்ல வந்ததை அவர் சொல்கிறாரே என்று அந்த வியப்பிலிருந்து மீள்வதற்கே நீண்ட நேரம் ஆனது.

அதேபோல் தமிழீழத்தில் ஓவியக்காட்சி நிறைவுற்ற பின்னர் என்னை அழைத்து “அனைத்து இடங்களுக்கும் செற்றிருக்கிறீர்கள், மக்களை சந்தித்திருக்கிறீர்கள் மக்கள் என்ன சொல்கிறார்கள்” என்று கேட்டார். தமிழீழத்தை ஒரு முன் மாதிரி நாடாக கட்டமைக்கவும் உருவாக்கவும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டார். அவருடைய பல்துறை அறிவும் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது. இதை ‘தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை’ என்ற நூலில் விரிவாகவே எழுதியுள்ளேன்.

முள்ளிவாய்க்காலில் போர் மௌனிக்கப்பட்ட காலகட்டத்திற்குப் பிற்பாடு ஈழத் தமிழர்களின் நிலை தொடர்பாக உங்கள் படைப்புகள் பற்றி அறியத் தர முடியுமா?

முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ விடுதலை ஓவியத் தொகுப்பில் 27 ஓவியங்கள் இருந்தன. அதற்கு ‘புயலின் நிறங்கள்’ என்று தலைப்பு வைத்திருந்தோம். முள்ளிவாய்க்காலில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 2009 மே மாதத்தில் ஓவியங்கள் வரையத் தொடங்கி ஜூன் மாதம் வரை 23 ஓவியங்களை முடித்து மொத்தம் 50 ஓவியங்களோடு “உயிர் உறைந்த நிறங்கள்” என்ற தலைப்பில் ஜூலையில் சென்னையில் ஏழு நாட்கள் காட்சிப்படுத்தினேன்.

இந்த 50 ஓவியங்களிலும் மக்களின் துன்பங்கள், துயரங்கள், வலிகள், வேதனைகள், இழப்புகளை  வெளிப்படுத்தியிருந்தேன். தாயக விடுதலைக்காக போராடிய போராளிகள் குறித்து வெளிப்படுத்த வேண்டும் என்று 2010ஆம் ஆண்டு மேலும் 30 ஓவியங்களை செய்து 80 ஓவியங்களோடு ‘போர் முகங்கள்’ என்ற தலைப்பில் மே 11 முதல் 16 வரை காட்சிப்படுத்தினேன். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்றன. நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளிலும்  நடைபெற்றன. போருக்குப் பிந்திய ஆண்டுகளில் மக்களின் மன ரீதியான சிக்கல்கள் குறித்து 2011லிருந்து 2017 வரை செய்யப்பட்ட 20 ஓவியங்களோடு மொத்தம் 100 ஓவியங்களை பிரித்தானியாவில் காட்சிப்படுத்தினேன்.

ஈழத் தமிழர் உரிமை போராட்டம் வலிமை பெற தமிழ் நாட்டின் உறவுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து பங்களித்து வந்துள்ளனர். அனால் இன்று அவ்வகை தன்முனைப்பு பெற்ற நடவடிக்கைகள் குறைவடைந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந் நிலையில் மாற்றம் வர தற்கால இளம் சந்ததியினர் என்ன செய்ய வேண்டும் என எண்ணுகிறீகள்?

தமிழீழத்தில் எப்பொழுதெல்லாம் போராட்டம் தீவிரம் அடைந்ததோ அப்பொழுதெல்லாம் அதற்கு ஆதரவாக தமிழகத்திலும் 1983 தொடக்கம்  போராட்டங்கள் நடைபெற்றன. களமுனை ஏற்படுத்தும் தாக்கம் அப்படிபட்ட போராட்டங்களை செய்ய வைத்தது. களமே அதைத் தீர்மானித்தது. பலர் உயிர்த் தியாகங்களையும் செய்திருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பிறகு கூட மாணவர்கள் மக்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பு இருந்தது. இனிமேலும் ஈழத் தமிழர்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு தமிழகம் நிச்சயம் துணை நிற்கும்.

இளம் தலைமுறை வரலாறுகளை படிக்க வேண்டும். பெற்ற வெற்றிகளை எப்படி கொண்டாடுகிறோமோ அப்படி அடைந்த தோல்விகளையும் படிக்க வேண்டும். அதுதான் படிப்பினைகளைத் தரும். அது நமது இலக்கை அடைய உரமாக இருக்கும்.வெறும் உணர்ச்சி மட்டும் போதாது அறிவுபூர்வ செயற்பாடும் முக்கியம் என்பதை உணர வேண்டும்.

தற்போதைய நிலையில் எமது விடுதலை தொடர்பாக ஈழத் தமிழர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என நீங்கள் கருதுகிரீகள்?

அன்று தமிழீழம் களமாக இருந்தது. இன்று உலகமே களமாக உள்ளது. அந்தக் களத்தை சரியாக கையாளுவதற்கு ஆட்கள் இல்லை. ஆளுமைகள் இல்லை. அது எதிரிக்கு பலமாகவும் தமிழினத்திற்கு பலவீனமாகவும் ஆகிவிட்டது. போராட்டக் களத்தில் சுடுகலன் மட்டுமே ஆயுதம் அல்ல.

இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ ஆயுதங்கள் இருக்கின்றன. யூதர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. நம் வரலாறுகளை பல்வேறு நிலைகளில் பதிவு செய்யவும்  படிக்கவும் வேண்டும். பிற இன மக்களின் வரலாறுகளையும் படிக்க வேண்டும். இன்னும் பல பல ஆண்டுகள் இப் போராட்டம் நீடிக்கலாம். ஈழத் தமிழர்கள் மட்டுமே விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதை முதலில் உணர வேண்டும்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீண்டும் அவலமனநிலை அடையும் வரை, எந்த பெரிய முன்னேற்றத்தையும் தமிழ்த்தேசியம் பெறப்போவதில்லை…! -PKR-

தமிழனத்தில் யாரும் உணராத எதிர்வரும் அவலத்தை முன்னரே அறிந்து உணர்த்திய ஒரே தலைவன் பிரபாகரன்தான். இந்தியா அமைதிப்படையை தமிழர்களைக் காக்க வந்ததாக வேடம் போட்டு வந்தது. மக்கள் நூற்றுக்கு நூறு சதம் நம்பினார்கள். மற்ற போராளி குழுக்களும் நம்பினர். ஆனால் பிரபாகரன் நம்பவில்லை.

இந்தியாவை எதிர்க்கவேண்டுமானால், முதலில் மக்களிடம் அவல மனநிலையை உருவாக்கவேண்டும். இதற்கு முதலில் திலீபனின் உண்ணாவிரதம் துணை புரிந்தது. மக்களுக்கு இது முதல் அதிர்ச்சி, அதன் பின்பு இந்தியா தனது கட்டுப்பாட்டில் இருந்த சில முக்கிய புலித்தளபதிகளை சிங்களத்திடம் கையளிக்க முற்பட, அவர்கள் அனைவரும் சயனைடு அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். இது இரண்டாவது அதிர்ச்சி. அதன் பின்பு புலிகளும் அமைதிப்படைகளும் மோத, அமைதிப்படைகளின் கோரப்பற்கள் அப்பாவிகளின் மேல் பாய, மக்களுக்கு முழு அவலமும் புரிந்தது. முடிவில் மக்களின் துணையுடன் அமைதிப்படை விரட்டியடிக்கப்பட்டது.

தமிழக வரலாற்று நிகழ்வுகள் எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது, இது தெரியாமல் நடந்த பிழைபோலத் தெரியவில்லை. பெரிய கூட்டுச்சதி போன்றே தெரிகிறது. இன்றும் திராவிடக்கட்சிகள் அவர்கள் ஆட்சியில் பாலும் தேனும் ஓடுகிற மாதிரிதான் பேசுகிறார்களே ஒழிய, அவல மனநிலை கொஞ்சமும் இல்லை.

திராவிடக்கட்சிகள் ஈழத்தில் நடந்த விடயங்களை மக்களிடம் ஆரம்பத்தில் இருந்து பரப்பி இருந்தால், ஒரு அவல மனநிலை ஏற்பட்டு, இனப்படுகொலையைத் தடுக்க வாய்ப்பிருந்திருக்கும், ஈழப்போராட்டத்தில் தமிழகம் பெரும்பங்களித்திருக்க முடியும். ஆனால் திராவிடக்கட்சிகள் அதனைச் செய்யாமல், அவல மனநிலையைப் பரப்ப முனைபவர்களை தடை செய்தது. இன்றும் ஈழம் சார்ந்த போராட்டங்களுக்கோ, திரைப்படங்களுக்கோ, ஊர்வலங்களுக்கோ பெரிய தடை விதிக்கப்படுகிறது. எந்த காரணம் கொண்டும் தமிழர்களிடம் அவல மனநிலை தோன்றிவிடக்கூடாது என்று மிகக்கவனமாக உள்ளனர். அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இராசீவ் காந்தி இறந்ததுதான் தமிழர்களுக்கு நடந்த மிகப்பெரிய அவலம்போல இன்றுவரை தமிழகத்து தலைவர்கள் பேசுகிறார்கள். அதை மக்களும் நம்புமளவுக்கு பரப்புரை செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீண்டும் அவலமனநிலை அடையும் வரை, எந்த பெரிய முன்னேற்றத்தையும் தமிழ்த்தேசியம் பெறப்போவதில்லை.

கலாநிதி மு. சேதுராமலிங்கம். ( தமிழ்த் தேசிய வியூகவியல் வல்லுநர்)

தமிழீழ வைப்பகம் -Bank of Tamil Eelam ! 1994 வைகாசி 23 உதயமானது. #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Mullivaikkal #ltte #Tamil #Eelam #TamilGenocide

தமிழீழ வைப்பகம். தமிழரின் சொத்து எனப் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழீழ வைப்பகம் இன்று தனது பத்தாவது ஆண்டில் கால் பதித்து நிற்கின்றது. தமிழ் மக்களின் பொருண்மிய வல்லமையை வலுப்படுத்த வேண்டும். அதற்காக வைப்பக அமைப்பொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்தை எமது தேசியத் தலைவர் அவர்கள் நீண்டகாலமாகக் கொண்டிருந்தார். இக்கருத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 23 ஆம் நாளில் தமிழீழ வைப்பகம் உதயமானது. தமிழ் மக்களின் அழிவுக்குள்ளான பொருளாதார இருப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதனூடாக தமிழ் மக்களின் காப்பகமாக இருக்க வேண்டும், என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் இது ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய உலக ஒழுங்கில் பொருள் வல்லமை எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதைக் காண்கின்றோம். உலக அரசியலைத் தீர்மானிக்கின்ற வலுவை பன்னாட்டு வைப்பகங்கள் கொண்டுள்ளன. தமிழ்த் தேசியத்தை உருவாக்கும் மூலவிசைகளில் ஒன்றாகத் தமிழர்களிற்கென வைப்பகம் ஒன்றை உருவாக்கும் எண்ணக்கரு தோற்றம் பெற்றது. இதன் விளைவே தமிழீழ வைப்பகம் ஆகும்.

Up ↑