எம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகள்…

ஆழக்கடலில் கரைந்த மாவீரங்கள் சமாதான காலத்தில் சிறீலங்கா கடற்படையினரின் யுத்த நிறுத்த மீறலால் சர்வதேசக் கடற்பரப்பில் 14.06.2003ம் ஆண்டு அன்று விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டபோது ஆழக்கடலில் கரைந்த உறவுகள்…. எம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகள்… கப்பல் கப்டன் நிர்மலன் சீவ் ஒவிசர் கதிர் 2ம் ஒவிசர் வீரமணி 3ம் ஒவிசர் கன்னியநாடன் றேடியோ ஒவிசர் கஜேந்திரன் சீவ் எஞ்சினியர் அன்புக்குமரன் 2ம் எஞ்சினியர் கடற்கரும்புலி வள்ளுவன் 3ம் எஞ்சினியர் கடற்கரும்புலி… Read More எம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகள்…

மாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள்

இறந்தும் இறவா மாமனிதர் – பேராசிரியர் அ. துரைராஜா இறந்தும் இறவா மாமனிதர் பேராசிரியர் அ. துரைராஜா ஆம் நீங்கள் வாசிப்பது நிஜம்தான் இறந்தும் இறவா மாமனிதர் என்ற அடைமொழி கற்பனையாக இருந்தாலும் அவ் அடைமொழி பேராசிரியர் அ.துரைராஜாவின் பெயரின் முன்னால் இருக்கும்போது அது உயிரோட்டமாகவே இருக்கின்றது. அவ்வாறான மாமனிதரை இன்றைய அவரது நினைவு தினத்தில் நினைவு கூறுவது சாலப்பொருத்தமாக இருக்கும். பேராசிரியர் துரைராஜா 1934 ஆம் ஆண்டு பெரும் தலைவர்களை உலகுக்கு வழங்கி பெருமைபட்டுக் கொள்ளும்… Read More மாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள்

லெப்.கேணல் அம்மா (அன்பு)

முல்லை மாவட்டம் சுதந்திரபுரம் – வள்ளிபுனம் கிராமங்களில் 10.06.1998 அன்று சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் லெப். கேணல் அம்மா / அன்பு உட்பட ஏனைய போராளிகளின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். லெப். கேணல் அன்பு / அம்மா அவர்களின் வீரப்பிறப்பும் வீரவரலாறும்….. வீரம் விளையும் தமிழீழ மண்ணில் திருநெல்வேலி நகரிலே வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின்… Read More லெப்.கேணல் அம்மா (அன்பு)

லெப். கேணல் டேவிட்

கடலில் கலந்த….. டேவிட்…… தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல். விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன்காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன். தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம், எல்லாக் காலங்களிலும், கடல் பிரயாணங்களை முதன்மைப் படுத்துவதாக அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம்தாயகத்தின், தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது விடுதலைப் போராட்டத்தில், கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின், அதே அளவு இடத்தை, எமது கடல் சரித்திரத்தில் டேவிட் பிடித்திருந்தான். அவனது… Read More லெப். கேணல் டேவிட்

லெப். கேணல் சரிதா

மாவீரர்கள் காலத்தால் அழியாத சிரச்சீவிகள் சுதந்திர சிற்பிகள் தங்களது அழிவின் மூலம் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள். மன்னார் பாலம்பிட்டிக் களமுனை மிகக் கடுமையாகவும் ஆக்ரோசமகவும் இருந்தது. ஸ்ரீலங்கா படைகளின் எறிகணைகள் மழைபோல் பொழிந்த வண்ணம் இருந்தன கொத்துக்குண்டுகளுக்கும் குறைவில்லை. எங்கும் புற்றீசல்கள் போல படையினர் சளைத்திடாத தமிழீழத்தின் மகளிர் படையணியான . மேஜர் சோதிய படையணி பொருத்திக்கொண்டு இருந்தது.… Read More லெப். கேணல் சரிதா

முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்

பொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும்… Read More முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்

லெப்.கேணல் அம்மா (அன்பு)

முல்லைத்திவு சுதந்திரபுரம் – வள்ளிபுனம் கிராமங்களின் மீது சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவடைந்த வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் அம்மா (அன்பு) அவர்களின் வீரத்தின் தாகத்துடன் தளபதிகள், போராளிகள், பொதுமக்கள் மனங்களில் இருந்து விரியும் வீரத்தின் நினைவுகளாய் விரியும் நூலினை சமர்பிக்கின்றோம். PDF-லெப்.கேணல் அம்மா (அன்பு)  

முதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி

நெஞ்சைவிட்டு அகலாத நினைவுகளில் என்றும் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி. அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற மென்மையைப் பற்றியோ நாங்கள் உணர்ந்ததில்லை. எல்லாவற்றையும் தனக்குள் பூட்டிவைத்தது போன்ற அமைதி. தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கின்ற பண்பு. தான் நெருங்கிப் பழகுகின்ற ஒரு சில போராளிகளுக்கும் மட்டுமே தன்னைப்பற்றி வெளிப்படுத்திய சில தருணங்கள். அவற்றுக்குள்ளே அவளது உறுதியையும் வேகத்தையும் மிகுந்த துணிச்சலையும் மட்டும் அறிந்துகொண்டோம்.… Read More முதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி