வீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

January 5th கேணல் சார்ள்ஸ் வீரவணக்கம் மாமனிதர் குமார் பொன்னம்பலம் வீரவணக்கம் January 6th மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை வீரவணக்கம் வீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

உயிரை அர்ப்பணித்த கடமை வீரன் .!

“குழந்தையொன்றை காப்பாற்றும் முயற்சியில் குணேஸ்வரன் உயிரிழந்தார்” 2005/01/23 ஆம் நாள், ஈழநாதம் பத்திரிகையில் வந்த பதிவு குணேசின் கதையை சொல்லிநின்றது. “சுனாமி அடித்தபோது, குணேஸ் அண்ணை மரத்தில் ஏறிவிட்டார். ஒரு தாயும் பிள்ளையும் தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு, அவர்களை காப்பாற்ற இறங்கிப் போனார்…திரும்பி வரவில்லை!!” அப்பேரிடரில் உயிர்தப்பிய உடன் பணியாளரின் கூற்று இது. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து, இறுதியில் மக்களுக்காகவே தனது உயிரையும் துறந்த குணேஸ்வரன், யாழ் மாவட்டம், வடமராட்சியின் தொண்டைமானாறு கெருடாவில் என்ற கிராமத்தில்… Read More உயிரை அர்ப்பணித்த கடமை வீரன் .!

சிங்கள இனவாத அரசியலை அம்பலப்படுத்திய சுனாமி #Tsunami ltte

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினதும் – சிறிலங்கா சனாதிபதி திருமதி சந்திரிகா அம்மையார் அவர்களினதும் தலைமைத்துவ ஆற்றல்களையும், குணவியல்புகளையும் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் ஒரு அளவுகோலாக சுனாமி அனர்த்தத்திற்குப் பின்னான அவர்களின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் எடைபோட்டுப் பார்க்கின்றது. அந்தப் பேரழிவில் சிக்கி உயிரிழந்த தமிழ் – முஸ்லிம் – சிங்கள மக்கள் அனைவர்க்கும் அனுதாபம் தெரிவித்து தலைவர் பிரபாகரன் அறிக்கை விட்டதிலிருந்து, நிவாரண உதவிகள் இன பேதமில்லாமல் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று பாதிக்கப்பட்ட எல்லோர்க்கும்… Read More சிங்கள இனவாத அரசியலை அம்பலப்படுத்திய சுனாமி #Tsunami ltte

யுத்த வடுக்களோடு வாழும் கண்பார்வையற்ற பெண்ணின் கண்ணீர்க் கதை !

#Uravuppalam #IBC Tamil #Puthukkudiyiruppu யுத்தத்தின் வலிகளை சுமந்து கொண்டு இன்றும் இலங்கையில் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றன. அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் உண்டு. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் யுத்த வடுக்களுடன் வாழும் குடும்பங்களை வெளியுலகத்திற்கு அறியப்படுத்தும் ஒரு முயற்சி ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறை யுத்தத்தின் வடுக்களை உடம்பில் கொண்டு… Read More யுத்த வடுக்களோடு வாழும் கண்பார்வையற்ற பெண்ணின் கண்ணீர்க் கதை !

செஞ்சோலை! சிறுவர் இல்லத்தின் வரலாறு !

செஞ்சோலை! சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம். நாசியில் அவற்றின் வாசனையை நுகர்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் சொல். ஒருவகையில் செஞ்சோலையும் மனங்கமழும் மலர்ச்சோலைதான். ஏனெனில் சின்னப்பூக்கள் பலவற்றின் பெரிய வீடு அது. கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளங்கள் வாழும் இல்லம். சிறகசைத்துப் பறந்து வானத்தை வலம் வரும் சிட்டுக்குருவிகளின் வளாகம். உறவுகளைத் தொலைத்த பிஞ்சு நெஞ்சங்களினை உள்ளன்போடு அரவணைக்கும் அன்னையகம். செஞ்சோலை எனும் வீடு எப்படித் தோற்றம் கண்டது… Read More செஞ்சோலை! சிறுவர் இல்லத்தின் வரலாறு !

மாவீரர் தினத்திலும் ஜனாதிபதிக்கு செய்தியொன்றை தெரிவித்துள்ள தமிழ்மக்கள்!

ஜனாதிபதித் தேர்தலின் போது செய்தியொன்றினைத் தெரிவித்தது போன்றே தமிழ் மக்கள் மாவீரர் தினத்திலும் ஜனாதிபதிக்குச் செய்தியொன்றைத் தெரிவித்துள்ளார்கள். வெறுமனே பொருளாதார அபிவிருத்தியினால் மாத்திரம் தமிழ் மக்களின் அபிலாசைகள் திருப்தி செய்யப்பட முடியாதவை, வடக்குகிழக்கு மக்களின் முதலாவது தெரிவு இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பதன் வெளிப்பாடே மாவீரர் தினத்தில் மக்களின் எழுச்சி ஜனாதிபதிக்கு சொல்லும் மற்றுமொரு செய்தி என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். மாவீரர் தின அனுஷ்டிப்பின் போது மக்களின் உணர்வுபூர்வமான பங்குபற்றுதல்… Read More மாவீரர் தினத்திலும் ஜனாதிபதிக்கு செய்தியொன்றை தெரிவித்துள்ள தமிழ்மக்கள்!

பதினொரு வருட சிறை வாழ்க்கையின் பின் மகிழ்ச்சியை தேடும் முன்னாள் போராளி !

#En Iname En Saname #Sri Lanka #Northern Province #Omanthay உள்நாட்டு போர் நிறைவுற்று பத்து வருடங்கள் கடந்திருந்தாலும் அது ஏற்படுத்திய வடு எத்தனை காலம் ஆனாலும் மாறாது. இதற்கு சாட்சியாய் இன்றும் அந்த கொடிய போரில் தங்கள் வாழ்க்கையை தொலைத்த பலர் நம் இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், பல ஆண்டு காலமாய் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு கை மற்றும் கால் செயலிழந்துள்ள நிலையில், தலையில் குண்டு துகள்களுடன் தன் ஒவ்வொரு நாளையும்… Read More பதினொரு வருட சிறை வாழ்க்கையின் பின் மகிழ்ச்சியை தேடும் முன்னாள் போராளி !

வரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை!

   மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு இடது முழங்கையின் கீழ் பகுதி இல்லை. இடது கால் முழுவதுமாக செயற்கைக் கால் பொருத்தியிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 6 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். வேயாத ஓலைகளை சுவராகவும் தகரத்தை கூரையாகவும் கொண்ட குடிலில்தான் வாழ்கிறார்கள். இவர்களுடைய உறவுக்கார பெண்ணொருவரும் கைக்குழந்தையுடன்… Read More வரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை!

அமெரிக்கா கோரிக்கையை தலைவர் நிராகரித்த பின் புலம் இன்று குர்து மண்ணில் நடக்கிறது.!

நந்திக்கடலிலிருந்து நாம் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. ! கீழே உள்ள பதிவு கடந்த வருடம் மகிந்த பிரதமராக நியமிக்கப்பட்டபோது எழுதியது. தற்போதைய ஜனாதிபதி தேர்தலிலும் சிங்களம் தெளிவாகவே சிந்திக்கிறது. இது புவிசார் அரசியலுக்கும்/ சிங்கள இறைமைக்கும் இடையிலான மறைமுகமான – உக்கிரமான யுத்தம். இதில் நாம் தமிழர் இறைமை சார்ந்து தெளிவான செய்தியைப் பதிவு செய்வதும் / புவிசார் நெருக்கடிக்குள் சிங்கள தேசத்தை தொடர்ந்து வைத்திருக்கக் கூடிய ஒரு ஆட்சியாளரை , நாம் ஆதரிக்காமலேயே ( அது… Read More அமெரிக்கா கோரிக்கையை தலைவர் நிராகரித்த பின் புலம் இன்று குர்து மண்ணில் நடக்கிறது.!