முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

**   முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள் 2nd Lt Malathi – Ltte First Woman Martyr முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி வீரவணக்கம் தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர்- 2ம் லெப்மாலதி  

குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவு நாள்

இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா கடற்படையால் பிடிக்கப்பட்டு பலாலி படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பா (பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை,… Read More குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவு நாள்

லெப். கேணல் சேகர் உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள்

லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும். வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்….. யாழ். நாகர்கோவில் பகுதியில் 18.10.2000 அன்று “ஓயாத அலைகள் – 04″ நடவடிக்கை சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 23.10.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் அவர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவுக்குள் உழைத்த… Read More லெப். கேணல் சேகர் உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள்

தாயகம் முழுதும் பாதம் பதித்த சந்தோசம் மாஸ்ரர்

ஒருரிரு தினங்களுக்கு முன்னர் லெப்.கேணல் சந்தோசத்தின் 27வது நினைவுநாள் எம்மை கடந்து போயிருக்கிறது. இருந்தாலென்ன..சந்தோசம் போன்றவர்கள் வருடம் முழுநாளும் நினைவில் வைத்திருக்க வேண்டியவர்கள். எப்போதும் ஒரு புன்முறுவல் சந்தோசத்தின் இதழ் ஓரத்தில் இருந்துகொண்டே இருக்கும். எந்த கடினமான சூழலிலும் நிதானம் இழக்காமல் அதே நேரம் முழுவேகத்துடன் செயற்படும் திறன் ஒருசிலருக்கே உரித்தான ஒன்று. அவர்களில் ஒருவர் சந்தோசம். ஒரு விடுதலை அமைப்பு தனது பிறப்பில் இருந்து அது வளர்ந்து வேகமெடுக்கும் வரைக்கும் அது சந்திக்கும் சோதனைகளும் கடக்க… Read More தாயகம் முழுதும் பாதம் பதித்த சந்தோசம் மாஸ்ரர்

எல்லாளன் நடவடிக்கையி​ல் காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்

விடுதலைப் போராட்ட வரலாற்றின் திருப்பு முனை எல்லாளன் நடவடிக்கை நினைவுகள் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டி 7 ஆண்டு நினைவுநாள் 22- ஒக்டோபர் -2014 இன்றாகும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்திய நாளாக 2007 ஆம் ஆண்டு காணப்படுகின்றது. தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும்… Read More எல்லாளன் நடவடிக்கையி​ல் காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்

நடவடிக்கை எல்லாளன்….

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன்… Read More நடவடிக்கை எல்லாளன்….

லெப்.கேணல் சாந்தகுமாரி

எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன. புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை வல்வளைக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி படை நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு வெள்ளமாக… Read More லெப்.கேணல் சாந்தகுமாரி

தீருவில் தீயில் தியாக தீபங்கள்

பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகளின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப் பட்டது. தமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது எதிரியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி விடுதலைப் போராட்டத்தில், கொல்லும் சயனைட் வில்லையை மகிழ்வுடன் உண்டு தம் உடல்களை தாயக மண்ணிற்காக உரமாக்கினார்கள். இரு தளபதிகளும் மணமாகி மணமாலை வாடுமுன்பு தாய், தாரம் இரண்டையும் விட உயிரிலும் மேலான தாயக விடுதலையையும்… Read More தீருவில் தீயில் தியாக தீபங்கள்

மாவீரன் பண்டாரவன்னியனின் 210வது வீரவணக்க நாள்

மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாள் 1803 ம் இவ் வருடம் ஐப்பசி மாதம் 31 ம் திகதி. ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன். மாவீரன் பண்டாரவன்னியனின்  நினைவுநாள் வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாழ்வீச்சில் 60 பேரை கான்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன். 1803-ம் ஆண்டு அக்டோபர் 31-ம்… Read More மாவீரன் பண்டாரவன்னியனின் 210வது வீரவணக்க நாள்

கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்

மணலாற்றுப் பகுதியில் 29.10.1999 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள் இன்றாகும். வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீருற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து முடித்தபடி விளக்கையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் ” குட்டான் மாமா வந்திட்டார்… Read More கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்