கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதி வீரவணக்கம்

நிலை : கடற்கரும்புலி கப்டன்இயக்கப்பெயர் : அருள்ஜோதிபெயர் : சியாமளாதந்தை பெயர் : முத்துலிங்கம்பால் : பெண்நிலையான முகவரி : காரைநகர்-யாழ்ப்பாணம்பிறந்த திகதி : 02-09-1976 10.09.1995 அன்று யாழ்-காங்கேசன்துறை துறைமுகத்தினுள் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கும் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரசாவை தழுவிக்கொண்டார் ஈழவிம்பகம் கரும்புலிகள்/black tigers /warriors

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 16 வது ஆண்டு வீரவணக்கம்

10-05-1973 – 16-08-1994 கடலன்னையின் பெண் குழந்தை கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கன்னியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள். உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை… Read More முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 16 வது ஆண்டு வீரவணக்கம்

முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள்

முல்லைக் கடற்பரப்பில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் போது டோறாவை மூழ்கடித்து காவியமான கரும்புலிகள் தமிழீழத் தேசியத் தலைவருடன் நிற்கும் நிழற்படங்களை ஈழநாதம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தின்போது ஒரு டோறா முற்றாக மூழ்கடிக்கப்பட்டதுடன், இன்னொன்று கடும் சேதமாக்கப்பட்டது. இதன்போது 15 கடற்படையினர் பலியாகியிருந்தார்கள். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் இசையரசன் தமிழீழ… Read More முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள்

கடற்கரும்புலி மேஜர் நிலாவேந்தி

நேரம் நண்பகல் 12.00 மணியை கடந்திருந்தது. பக்கத்து தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்தது.”மகள் கதைக்கட்டாம்… “அப்பா தொலைபேசி எடுக்க ஓடோடிப் போனார். அப்பாவுக்காகவே காத்திருந்தவள் போல, அப்பா எடுத்ததும் அவள் கதைத்தாள். ”வழமையான நலஉசாவல்…” தம்பி, தங்கச்சியின் படிப்பு பற்றிய கேள்விகள்….” எல்லாம் முடிய, ”நான் வேற இடம் போறனப்பா….அதுதான் எடுத்தனான்….,இனி எடுத்தால் தான் தொடர்பு….நீங்கள் எடுக்காதீங்கோ….சரி வைக்கிறன் அப்பா….”மகளோடு பேசிய நிறைவோடு அப்பா வந்தார். அம்மா இல்லாமல் போனதிலிருந்து அவளுக்கு எல்லாமே அப்பாதான்.ஒரு முறை… Read More கடற்கரும்புலி மேஜர் நிலாவேந்தி

கடற் கரும்புலி கப்டன் கண்ணாளன்

2004ம் ஆண்டு 26 ஆம் நாள். ஆழிப்பேரலை அனர்த்தம் நம் மண்ணிலும் பல உயிர்களைக் காவு கொண்டதோடு, பெரும் அழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த அழிவுக்குள் மட்டக்களப்பு கதிரவெளியைச் சொந்த இடமாகக் கொண்டிருந்த கடற் கரும்புலி கண்ணாளனின் குடும்பமும் சிக்கிவிட்டது. நிலைமையை அறிந்து அவனை அவனது ஊரிற்கு விடுமுறையில் அனுப்பியாயிற்று. அங்கு அவனுக்காக பணிகள் நிறையவே இருந்தது. குடும்பத்தை நிமிர்த்தி, எஞ்சியவர்களுக்கான இருப்பிடம், உணவு, உடை, என அத்தியாவசியமான தேவைகளைக் கவனிப்பதில் இருந்து எல்லமே அவன்தான். வீட்டின் இல்லாமை… Read More கடற் கரும்புலி கப்டன் கண்ணாளன்