லெப். கேணல் சூட்

நிமிர்ந்த பனை சிலந்திவலைப்பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப்போயிருந்தது ஒரு காலம். மறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்றுபிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலபேர்தான். அந்தச் சிலபேருக்குள் நேற்றுவரையும் எஞ்சியிருந்தவந்தான் சூட். அவனை விளங்கிக்கொள்ள அந்த நேரத்து ‘இராணுவச் சூழ்நிலை’ யைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வலிகாமத்தின் தரையமைப்பைத் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழீழத்தில் வேறெங்கும் இல்லாதவிதமாக முற்றுமுழுதான நகரச் சூழலை பெரிய அளவில்கொண்ட புவியியல்… Read More லெப். கேணல் சூட்

2ம் லெப். மயூரி, வீரவேங்கை வஞ்சி

நீண்டகாலமாக, வளர்ச்சிகண்ட நாடுகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த உரிமைப் போராட்டங்களின் பலாபலனாக பெண்ணினம் குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை மட்டும் ஈட்டிக்கொள்ள முடிந்தது. அடிப்படையான மனித உரிமைகளையும் அரசியல் சுதந்திரங்களையும் பெண்கள் வென்றெடுக்க முடிந்தது. கல்வி வாய்ப்பும் தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனினும் இந்த நாடுகளில் பெண்ணின் பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். சுதந்திரத்தைத் தேடி……….. இரண்டும் சரியான துடியாட்டம். பரபரவென வண்டுகள் போல சுழலும் கருவிழிகளில் எப்போதுமே எதையும் ஆராய்ந்து… Read More 2ம் லெப். மயூரி, வீரவேங்கை வஞ்சி

கடற்கரும்புலி மேஜர் கணேஸ்

சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள்…. கிளாலிக் கடலின் அலைகள் நனைத்துச் செல்லும் கால்களின், குருதிக் கரை பிசுபிசுத்த ஒவ்வொரு காலையின் போதும்…. பிணவாடையைக் காவிவரும் கடற்காற்றின், ஒவ்வொரு வீச்சின் போதும்…. அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு ஆவேசம் கொதித்து எழும். கிளாலிக் களத்தில் தளபதி சாள்ஸ் விழ்ந்தபோது, அது அவர்களுக்குத் தாங்கமுடியாத பேரிழப்பாக ஆகிவிட்டது. எல்லாவற்றுக்குமாக சேர்த்துப் பதிலடி கொடுக்க அவர்கள் துடிதுக்கொண்டிருந்தார்கள். வரதனுக்கும், மதனுக்கும் முந்திய அந்த 60 நாட்கள்…. அவர்கள் சக்கை வண்டிகளோடு பகைவனை துரத்துவதும்,… Read More கடற்கரும்புலி மேஜர் கணேஸ்

கடற்கரும்புலி மேஜர் கோபி

சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள்… “ஒப்பரேஷன் தவளை”க்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருக்கின்றன. கோபி ஊருக்குப் போனான். தாயினதும்; சேயினதும் மகிழ்ச்சிகரமான ஒரு சங்கமம். பாசம் கரை புரண்ட அன்பு முத்தங்களின் பரிமாற்றம். எப்பவோ கேட்கவேணும் போல இருந்த தனது நீண்டகால மன உளைச்சலை அம்மா, மகனிடம் இப்போது வெளிப்படுத்தினாள். “உனக்குக் காலும் இல்லைத் தானே தம்பி…… இனியும் இயக்கத்தில இருந்து என்னப்பன் செய்யப்போறாய்…..?” அந்தத் தாயுள்ளம் ஏக்கங்களோடு ஆதங்கப்பட்டது. “காலில்லாட்டியும் பரவாயில்லையம்மா…… இயக்கம் என்னைப்… Read More கடற்கரும்புலி மேஜர் கோபி

கடற்கரும்புலி மேஜர் பாரதி

பெண்களதும் ஆண்களதும் கலகலவென்ற கதம்ப ஒலியால் அந்தச் சிறிய ஒன்றுகூடல் மண்டபம் அதிர்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்த அனைவரும் கரிய உடைகள் அணிந்தவர்களாக இருந்தாலும், முகங்களெல்லாம் ஆயிரம் வோல்ற் மின்விளக்குகளைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தன. மண்டபத்தில் இருந்த ஒலி-ஒளிப்பதிவுக் கருவிகள், புகைப்படக் கருவிகளெல்லாம் அவர்களை விழுங்கிக் கொண்டிருந்தன. கலகலப்பை மீறி, இடையிடையே வாசலைப் பார்ப்பதும் பின்னர் கதைப்பதும் சிரிப்பதுமாக இருந்தனர். அவர்கள் கரும்புலிகள்.தமக்கு எல்லாமுமாக இருந்து நெறிப்படுத்தி அன்பு காட்டி அரவணைத்த அந்தப் பெரும் தலைவனை இறுதியாகச் சந்திப்பதற்கு… Read More கடற்கரும்புலி மேஜர் பாரதி

கடற்கரும்புலி கப்டன் இன்னிசை

என்னினிய தமிழீழ மக்களுக்கு, நான் இறுதியாக எழுதும் உறுதிமொழி, தமிழீழ மக்களாகிய நீங்கள் எமது தலைவனின் காலத்தில் தமிழீழம் கிடைப்பது உறுதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தமிழீழத்தில் எமது தலைவன் ஒரு கொடை. மக்களாகிய நீங்கள் கிளர்ந்தெழுந்து எமது தலைவனுடன் தோளோடு தோள் நின்று போராடுங்கள். நிச்சயம் தமிழீழம் கிடைக்கும். எமக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வெகு விரைவாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள். இப்படிக்கு போராளி இன்னிசை 1996.05.16 ஆனையிறவு இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்களால் இன்னிசையின் குடும்பம்… Read More கடற்கரும்புலி கப்டன் இன்னிசை

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி லெப். கேணல் நவநீதன்.

ஒரு உண்மை வீரனின் கதை நவநீதனைப்பற்றிச் சொல்வதானால் சண்டையில்தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடரவேண்டும்; சண்டையொன்றில் முடிக்கவேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும். அந்தளவுக்கு சண்டைக்களங்களிலேயே அவனது வாழ்வு உருண்டோடியது; சண்டைக்களங்களிலேயே அவன் தூங்கி விழித்தான். பழம்பாசியில் ஒரு சண்டை. பால்ராஜ் அவர்கள் வன்னிக்குத் தளபதியாக இருந்த போது, அவரது பாதுகாப்பு அணிக்கு பொறுப்பாக இருந்தவன் நவநீதன். தவிர்க்க முடியாத ஒரு பயணம்; தளபதி போகவேண்டியிருந்தது. அரசியலுக்குப் பொறுப்பாக இருந்த லெப்டினன்ட்… Read More சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி லெப். கேணல் நவநீதன்.

தென்மராட்சி கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் குணா

இறப்ப்பினும் மறவோம்; இலக்கினில் தவறோம்! திரும்பிப் பார்க்கின்றோம். சுதந்திரத்தின் சிகரத்தை நோக்கிய எங்கள் நெடும் பயணம், கண்ணுக்குள் விரிகிறது அந்த நெடுவழிப்பாதை. எழ எழ விழுந்து, விழ விழ எழுந்து…… எத்தனை இன்னல்கள், எத்தனை சவால்கள், எத்தனை அழுத்தங்கள், எத்தனை எகிறிக் கடந்து எழ எழ விழுந்து…… விழ விழ எழுந்து……… திரும்பிப் பார்க்கின்றோம். இரத்தத்தையும், சாம்பல்மேடுகளையும், சவப்பெட்டிகளையும் தமிழனுக்குத் தந்தவர்களின் தலைவாடல்களுக்கு – கண்ணீரையும், கதறலையும், துன்படுவதென்றால் எப்படி இருக்குமென்பதையும் தமிழன் திரும்பவும் பரிசளித்து…………… திரும்பிப்… Read More தென்மராட்சி கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் குணா

கரும்புலி மேஜர் அருளன்

மௌனக் குமுறல் அமைதியான பொழுது… சூரியன் விழுந்துவிடக்கூடாது என்று வானம் போராடியதற்கு அடையாளமாய் முகில்கள் இரத்தமாய் சிவந்திருந்தது. அருளன் தனிமையில் நடந்து கொண்டிருந்தான். அவனிற்கும் பூமிக்குமான இடைவெளி நீண்ட தூரமாகிக்கொண்டு போனது. நினைவுகள்தான் இப்போது அவனுடன் ஒட்டியிருந்தன. அவன் மனசைத்தவிர எல்லா இடமுமே அமைதி நிலைகொண்டிருந்தது. அந்த வெளியில் முளைத்திருந்த பற்றைகளும் இடிந்து போன கட்டடங்களும் அமைதியாக இருந்தாலும் அவனிற்கு அவை பேசுபவையாகவேயிருந்தன. அவனது நடையில் தளர்வு இல்லை. துயர் தெரிந்தது. இதுதான்… இந்த இடம்தான்… தாண்டிக்குளச்… Read More கரும்புலி மேஜர் அருளன்