விநியோக நடவடிக்கையின்போது காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்

தமிழீழக் கடற்பரப்பில் 02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட விநியோக நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் சல்மான் / இரும்பொறை, கடற்கரும்புலி லெப்.கேணல் கதிர்காமரூபன் / பெத்தா, கடற்கரும்புலி மேஜர் இலக்கியன், கடற்கரும்புலி கப்டன் குமாரவேல், கடற்கரும்புலி கப்டன் சதாசிவம், கடற்கரும்புலி கப்டன் வல்லவன் உட்பட லெப்.கேணல் சதீஸ்குமார் ஆகிய மாவீரர்களின்  ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடற்கரும்புலிகள் லெப்.கேணல் சல்மான்(இரும்பொறை),… Read More விநியோக நடவடிக்கையின்போது காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்

வரலாறாய் வாழும் தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு. சபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்குரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது? அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர எல்லாளன் நடவடிக்கையாளர்களுக்கான வீரப்… Read More வரலாறாய் வாழும் தமிழ்ச்செல்வன்

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் ராகவன்.

விடுதலைப் பாதையில் அழியாத தடம்…. 1999 நவம்பர் இரண்டாம் நாள். உலகின் செய்திக் கதவுகளெல்லாம் பொங்கிப் பிரவாகித்த “ஓயாத அலை” களின் வீச்சுக்கு வழிவிட்டன. உலக இராணுவச் சரித்திரத்தில் நிலைபெற்ற ஓயாத அலைகள் மூன்றின் முதலாம் நாள் தமிழீழத்தின் சிறந்த போர்த் தளபதிகளுள் ஒருவரான லெப். கேணல் ராகவனையும் தன்னுடன் அனைத்துக் கொண்டது. வெற்றிமுரசு கொட்டிச் சிங்களம் செய்த பெரும் போர் நடவடிக்கைகளின் போதெல்லாம் எதிர்த்து நின்று போரிட்ட புலிகளின் போர்த் தளபதி அவன். உலக வரலாற்று… Read More சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் ராகவன்.

நீங்கள் எம்மோடு உள்ளீர்கள் ….

வேகமாக நடந்துவரும் அந்தக்கைத்தடியின் சத்தம்… முற்கூட்டியே எம்மைத் தயார்ப்படுத்திவிடும் வாகனத்தின் உறுமல்… எவரிடமும் காணமுடியாத, தூர இருப்பவர்களையும் ஈர்த்தெடுத்து மகிழ்விக்கும் அந்த இனிய சிரிப்பொலி… தனது எத்தகைய துன்பங்களையும் கடந்து பிறருக்காக எப்போதும் மலர்ந்து கிடக்கும் அழகிய வதனம்… அவரைப் போலவே இனிமையான அருகிருக்கும் தோழர்கள்… எல்லாமே, எல்லோருமே இப்போதும் எங்கள் அருகிருப்பது போல…. உண்மையில் அப்படியொரு நாளாந்தம் அருகிலும், இல்லையென்றால் நினைவிலும் இல்லாமல் நாங்கள் ஒரு கணம்கூட இயங்கியதில்லை. அந்தக் குடும்பம் அத்தனை அழகானது, இனிமையானது,… Read More நீங்கள் எம்மோடு உள்ளீர்கள் ….

லெப்.கேணல் பாமா

லெப்.கேணல் பாமா(கோதை) விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் எங்கள் பாமா ! எல்லாவற்றிலுமே குறிப்பிடத்தக்க திறமையுள்ள, நிறைவான போராளியாக நாம் அவளைக் கண்டோம். நெஞ்சுக்குள் உறைந்து போன அவளது உருவமும் உறுதியான நடவடிக்கைகளும் எந்த ஒரு போராளியையும் அடிக்கடி நினைவு கூரச் செய்யும். எங்கட பாமாக்காவோ ? என்று அவளைப்பற்றிக்… Read More லெப்.கேணல் பாமா

லெப்.சுடரொளி (சிம்மான்)

கடல் அலைகளும் அதன் நுரைகளும் கால்தடவிச் சென்றோடும் மணற்கரைகளில் சிம்மானின் நினைவுகளை காலம் எழுதிச் செல்கிறது. ஆம் அவன் பிறந்த வடமராட்சி கிழக்கு சிம்மானின் வரலாற்றாலும் தனது வீரத்தை நிரப்பியிருக்கிறது. கடலோரக் கிராமத்தில் பிறந்தவன் அந்தக் கரைகளில் காலாற நடந்தவன் கடுமையான போராட்ட வாழ்வை நேசித்தானென்பது வியப்புக்குரியதே. ஓவ்வொரு வீரனின் இயல்பான வாழ்வினுள் ஒரு பெரிய வரலாறே புதைந்து கிடப்பதை அவர்களோடு வாழ்ந்தவர்களால் மட்டுமே அறியவும் ஆழமாய் உணரவும் முடியும். அத்தைகயவனாய் தான் சிம்மான் என்னோடு அறிமுகமானான்.… Read More லெப்.சுடரொளி (சிம்மான்)

மேஜர் கணேஸ்

மூதூர் பகுதித் தளபதி மேஜர் கணேஸ்   27 வருடங்களுக்கு முன்னர் கிழக்கின் வீரஞ்செறிந்த குளக்கோட்ட மாமன்னன் அரசுசெய்த கந்தளாய் பகுதியில் இருந்து வடக்கே தோன்றிய தீப்பிழம்பான பிரபாகரனை வந்தடைந்து தமிழீழம் முழுவதும் விடுதலைப்புலிகள் என்னும் வீரமறவரை,மரபை எடுத்து சென்றவன்… நெருப்பு பறக்கும் கண்கள்,தடித்து உதடுகளின் மேல் வீரத்தோடும் ஆண்மையோடும் துடிக்கும் அடர்ந்த மீசை,பரந்த மார்புகள்,விரிந்த தோள்கள்… அவன்தான்… தமிழ் மக்களின் சுதந்திரத்திற்க்கான ஆயுதப்போராட்டம் இன்று பலராலும் பலவகைகளில் விமர்சிக்கப்படுகின்றது. ஸ்ரீ லங்காவை ஆண்ட சிங்கள அரசுகளும் சிங்கள… Read More மேஜர் கணேஸ்

பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்

1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி இராணுவ கூட்டுப்படைத் தளத்தினுள் கரும்புலிகள் ஊடுருவி சிங்கள இராணுவத்தை பேரதிர்ச்சிக்குட்படுத்தினார்கள். பூநகரி நாயகர்களின் வீரவணக்க நாள் புதிய சரிதம் எழுதி… இக் கரும்புலித்தாக்குதல் சிங்கள் இராணுவக்கட்டமைப்பில் திடீரென சீர்குலைவை ஏற்ப்படுத்தி அவர்களை நிலைகுலைய செய்து , தடுமாற்றத்துக் குள்ளாக்கியது. பூநகரிச் சமரில் விடுதலைப்புலிகளின் பலத்திற்கும் இராணுவ வெற்றிக்கும் உறுதுணையாய் அமைந்தவர்கள் கரும்புலிகளே…..! ”… Read More பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்