மேஜர் பண்டிதர்(ரமணசர்மா)

மேஜர் பண்டிதர் இராமலிங்கசர்மா ரமணசர்மா புன்னாலைக்கட்டுவான் வடக்கு, யாழ்ப்பாணம் நிலை: மேஜர் இயக்கப் பெயர்: பண்டிதர் இயற்பெயர்: இராமலிங்கசர்மா ரமணசர்மா பால்: ஆண் ஊர்: புன்னாலைக்கட்டுவான் வடக்கு, யாழ்ப்பாணம் மாவட்டம்: யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 02.07.1971 வீரச்சாவு: 04.04.1997 நிகழ்வு: யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவு துயிலுமில்லம்: விசுவமடு மேலதிக விபரம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேஜர்.பண்டிதர், லெப்.கேணல். அம்மாண்ணையின் கீழ் பணியாற்றிய ஒரு “வழங்கள் துறையை”சேர்ந்த… Read More மேஜர் பண்டிதர்(ரமணசர்மா)

லெப் கேணல் மதன்

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி. வவுனியா மாவட்டம் கூழாங்குளத்தில் 07-06-1972 ல் பிறந்த துரைசாமி சுந்தரலிங்கம் , 1990 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான் . மதன் என்ற இளம் போராளியாக விளைபூமி – 06 ல் அடிப்படைப் பயிற்சிகளை பெற்று வவுனியா மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான் . வேவுப் போராளியாக தன் களச் செயற்பாடுகளை துவங்கிய மதன் , தாக்குதல் அணிகளுக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டான் . மேலும் கனரக ஆயுதங்களில்… Read More லெப் கேணல் மதன்

லெப் கேணல் இளவாணன் 7ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

தரும்புரத்தில் ஓர் இந்திரன் அவன் தான் எங்கள் இளவாணன் அண்ணா !-7ஆம் ஆண்டு நினைவு நாள் சோழன் வாணிபத்தில் வலம் வந்து மருதம் வாணிபத்தை ஆண்ட இளவரசனும் இவனே தான் ஒரு பணிப்பாளர் என்ற அந்தஷ்த்தை கொஞ்சமும் காட்டி கொடுக்காமல் ஒரு சாதாரண பணியாளன் போல் எம்மை அன்பாக ஆளுமையாக வழிநடத்தும் பாங்கு மிகப்பெரும் சாதனையாக இருந்தது இந்த வீரனிடம். மல்லாவியில் இருந்து பணி நிமிர்த்தம் கிளிநொச்சிக்கு போய் விட்டால் உடனும் என்னை தனது அலுவலகத்திற்கு வரும்… Read More லெப் கேணல் இளவாணன் 7ஆம் ஆண்டு வீரவணக்க நாள்

வீரவணக்கங்கள்

07ம் ஆண்டு நினைவு நாள் 02.04.2016 லெப்.கேணல் அசோக் அழகையா புலேந்திரன் அம்பாறை வீரச்சாவு – 02.04.2009 04.04.2004 அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த நிதர்சன நிறுவனத்தின் இலத்திரனியல் தொழிநுட்பவியலாளர் மேஜர் செல்வமதி நினைவாக. 12ம் ஆண்டு நினைவு நாள் 04.04.2016 மேஜர் செல்வமதி குமாரவேலு சாந்தினி திக்கம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.2004 16ம் ஆண்டு நினைவு நாள் 04.04.2016 2ம் லெப்டினன்ட் நேயச்சுடர் அரியம் செந்தூரன் வசந்தபுரம், இளவாலை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 04.04.2000 16ம்… Read More வீரவணக்கங்கள்

மேஜர் றோய் / கௌதமன்

( கந்தசாமி நிர்மலராஜ் ) சிவபுரி , திருக்கோணமலை. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மூத்த அணித் தலைவனாகிய றோய் 1991 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான் . திருமலை மாவட்ட படையணியின் தாக்குதல் அணியில் ஒரு போராளியாக தன் களச் செயற்பாடுகளை துவங்கிய றோய் திருமலை, மட்டு அம்பாறை காடுகளில் சிங்கள இராணுவ முகாம்கள் மீதான பல தாக்குதல்களில் திறமுடன் களமாடி இளம் அணித் தலைவனாக வளர்ந்தான் . 1995 ம்… Read More மேஜர் றோய் / கௌதமன்

குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.

அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. இனம் புரியாத மகிழ்சியோடும், ஒரு விதமான படபடப்போடும் அனைத்துத் தளபதிகளும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். “ஊஊ” என்ற ஓசையை கிளப்பியபடி விரைந்து வந்த வாகனத்தில் இருந்து இறங்கிய தலைவரை உற்சாகத்தோடு வரவேற்கின்றார்கள் தளபதிகளும், போராளிகளும். எப்போதும் தலைவரோடு கூடவே கடாபி அண்ணையையும் வரவேற்றவர்கள், தமக்குள் பேசிக்கொள்கிறார்கள்… Read More குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.

தமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்.

ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் அவர் எமைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளது. ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம் தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்தின்பால் வாஞ்ஞை கொண்ட… Read More தமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்.

கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்

மண்பற்றும் மனிதப்பற்றும் உருவாக்கிய மகத்தான வீரன் ” தம்பி நீ சைக்கில்லை போய் கோயிலில் நில் நாங்கள் நடந்துவாறம் ” அம்மா அன்பாய் கேட்டுக்கொண்டாள். ” இல்லையம்மா நானும் உங்களோட நடந்துவாறன். அப்பத்தான் நிறைய ஊராக்களைக்கண்டு கதைக்கலாம். ” அம்மா பாவம். அவளிற்கு அப்போது எதுவும் புரியவில்லை. பிள்ளை வழமையா விடுமுறையில் வந்து நிக்கிறதைப் போலதான் இந்த முறையும் வந்து நிக்கிறான் என நினைத்தாள். ஆனால் தன் மகனின் நெஞ்சுக்குள்ளேயே குமுறிக்கொண்டிருக்கும் இலட்சிய நெருப்பை அவளால் அறிந்து… Read More கடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன்

கடற்கரும்புலி கப்டன் வீரமணி

மன்னார் கடற்பரப்பில் 12.04.2000 அன்று சிறிலங்கா கடற்படையின் நீருந்து விசைப்படகு மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலி கப்டன் வீரமணியின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். உயிராயுதத்தின் நினைவில்………. இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!