ஆழிப்பேரலை இயற்கையின் அழிவு இரங்கல் செய்தி -வே. பிரபாகரன்

ஆழிப்பேரலை இயற்கையின் அழிவில் இரத்த உறவுகளையும் அன்புக்குரியவர்களையும் பறிகொடுத்து ஆற்ற முடியாத துயரத்திலும் வேதனையிலும் துடிக்கின்ற எமது மக்களுக்கு எமது அன்பையும் ஆறுதலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன். —-வே. பிரபாகரன் Advertisements

மாவீரர் நாள் கையேடு

மாவீரர் நாள் (நவம்பர் 27) மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டுகொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய், ஓவியமாய் வெள்ளை மலரேந்திய வேதங்களாய் ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும் சோதியாய் நிற்பவரே மாவீரராவார். ஏன் இவர்கள் மாவீரர்கள்? தமிழ் இன விடிவுக்காய் மரணித்தவர்கள். தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள். உணர்வுத்… Read More மாவீரர் நாள் கையேடு

தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை

01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன. மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடு விப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில்… Read More தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை

தேசியக் கொடிப்பாடல் காணொளி

ஏறுது பார் கொடி ஏறுதுபார் செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே வீறிடும் கொடியிது – தமிழ் மக்களைக் காத்த நம்மான மாவீரரை வாழ்த்திடும் கொடியிது புலி வீரத்தின் கொடியிது மாவீரரின் கொடியிது எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில் ஏறிய கொடியிது – பெரும் சத்திய வேள்வியில் செத்தவர் மீதினில் சாத்திய கொடியிது தமிழ் ஈழத்தின் கொடியிது புலி ஏந்திய கொடியிது சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய சாதனைக் கொடியிது – சங்கு ஊதி முழங்கிட ஊர்மனையாவிலும் உலவிய… Read More தேசியக் கொடிப்பாடல் காணொளி

எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு

தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை தேசியம் என்பது மக்களின் சிறப்பான மன எழுச்சியாலும் செயற்திறனாலும் தோன்றி நிலைத்து நிற்கிறது தேசியம் என்பது உணர்வு மாத்தரமல்ல, உருவமும் கூட தேசியத்தின் உணர்வுக்கு உருவம் கொடுப்பவை தேசியச் சின்னங்கள் அவை காலத்தைக் கடந்து நிற்கின்றன. தேசிய மரம் வாகை தேசியம் என்பது ஒரு இனத்தையும்,அந்த இனம் வாழும் இடத்தையும் குறிப்பிடுகிறது தேசியம் வலுவான சக்தி, தேசியச் சின்னங்கள் தேசியத்திற்குரிய முக்கியத்துவம் தேசியச் சின்னத்திற்கும் உண்டு. தேசியப் பூ காந்தாள் தேசியம் என்ற… Read More எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு

தமிழ்த்தேசிய மரம் வாகை

தமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது. சங்க கால மரபின் மூலம் வாகை எந்தளவுக்கு தமிழருடன் இணைந்து வந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். வாகையில் பல வகைகள் உள்ளன. தமிழர் தாயகத்தில் பூர்விகத்தன்மையாக உள்ளது இயவாகை என்பதாகும். இதன் வேறு இனங்கள் பல நாடுகளிலும் உள்ளன. வாகை ஆங்கிலத்தில் சிரிஸ்ஸா என்று அழைக்கப்படுகிறது. லத்தினில் வாகை “மமோசா பிளெக்சூஸா”… Read More தமிழ்த்தேசிய மரம் வாகை

தேசிய விலங்கு சிறுத்தை

சிங்கள தேசத்தில் அம்பாந்தோட்டையின் யால, அநுராதபுரத்தின் வில்பத்து வனவிலங்குச் சரணாலயங்களில் தான் சிறுத்தைகள் உள்ளன. கனடியச் சிறுத்தை ஆய்வுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்து இலங்கையில் உள்ள சிறுத்தைகள் உலகின் சிறுத்தை இனங்களில் தனித்துவமானவை. இதுவே இலங்கையின் தேசிய விலங்காக இருக்க வேண்டும் எனக்கூறிச் சென்றார். தமிழர் தாயகப் பகுதியிலேயே சிறுத்தை அதிகம் உண்டு. இந்த சிறுத்தை மஞ்சள் உடலில் கறுப்புப் புள்ளிகளைக் கொண்டது. பூனை இன பெரிய விலங்குளான சிங்கம், புலி போல அல்லாமல் சிறுத்தை தங்க… Read More தேசிய விலங்கு சிறுத்தை

தேசியப் பறவை செண்பகம்

பறவைகளைப் பொறுத்தவரை அதிக பறப்புத்திறன் கொண்ட பறவைகளுக்கு பெரும்பாலும் ஒரு மண்ணுக்குரிய தனித்துவ பூர்வீர்கத் தன்மை கிடையாது. சில பறவைகள் நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும். பறப்புத்திறன் குறைந்த பறவைகள் இந்த புலப் பெயர்ச்சிக்குப்படுவதில்லை. இதனால் பறப்புத்திறன் குறைந்த பறவைகளே ஒரு மண்ணுக்குரிய மரபுரிமைச் சொத்துக்களாகின்றன. உலகின் அதிகமான நாடுகளின் தேசியப் பறவைகளாக பறப்புத் திறன் குறைந்த பறவைகளே இருக்கின்றன. நமது தாயகத்தில் காடை, கௌதாரி, செண்பகம், புளினி, காட்டுக்கோழி, மயில் என்பன உலகின் பலபகுதிகளிலும் உள்ளன.… Read More தேசியப் பறவை செண்பகம்

தேசியப் பூ காந்தாள்

தேசியத்தின் தேசத்தின் அடையாளச் சின்னமாக பூக்கள் இலங்குவது யாவரும் அறிந்ததே. அந்தந்த தேசியத்தினதும், தேசத்தினதும் வரலாற்று சமூக பண்பாட்டின் பால் பின்னிப்பிணைந்துள்ள தொடர்புபட்டுள்ள மலர்கள் தேசியப் பூக்களாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்தந்த தேசியங்களால் கௌரவிக்கப்படுவதும், தேசியக்கொடிக்கு சமமாக பேணப்படுவதும், தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு. இந்த வகையிலேயே தழிழர்களின் தேசியப்பூவாக, தமிழீழத்தின் தேசியப் பூவாக கார்காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற நாட்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ… Read More தேசியப் பூ காந்தாள்