தேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…! மாவீரர்கள்

எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் *** இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என… Read More தேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…! மாவீரர்கள்

தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது… Read More தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

தியாக தீபம் திலீபன் நினைவாக-தேசியத் தலைவர்

ஈடு இணையற்ற ஒரு மகத்தான சாதனையை திலீபன் புரிந்தான் திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. தமிழீழ தேசியத் தலைவர்-மேதகு வே.பிரபாகரன்

வரலாறு தமிழர்களுக்கு தந்த ஒரு தலைவன் பிரபாகரன்

பிரபாகரன் தமிழீழத்திற்கும் தமிழினத்திற்கும் என்றும் கிடையாத தலைநிமிர்வு. ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்கு தந்த தலைவன் அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன் தமிழனைத் தோற்கடித்தோரையெல்லாம் தமிழன் வென்றெழுந்த தமிழனை அழவைத்தோரையெல்லாம் தமிழன் கதற வைத்த வீரயுகமொன்றின் திருஷ்டிகர்த்தா தமிழீழ மண்ணில் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டு யுத்தத்தின் மையமாக நின்று அதன் உந்து விசையாக இயங்கி வெற்றியின் சிகரத்தை நோக்கி அதனை வீறுநடை போடவைக்கும் பெருந்தலைவன்.… Read More வரலாறு தமிழர்களுக்கு தந்த ஒரு தலைவன் பிரபாகரன்

தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது

தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களது கஸ்டங்களைப் போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை. மக்கள் கண்ணீரை தன் இதயத்தில் இடியாக இறக்கி ஆறுதல் கொடுத்து அன்புகாட்டி அவர்கள் விடிவுக்காக தன்னையும் தன் குடும்பத்தையும் உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் கொடுத்து போராடிய உண்மை தலைவன் எங்கே… காலில் விழும் மக்களை கூட ஏளனமாக பார்த்து மக்கள் கண்ணீரை துடைக்க முயற்சிகள் எடுக்காமல் மக்கள் போராட்டங்களிற்கு செவி கொடுக்காமல் மக்கள் அவலங்களை பாராமுகமாக உதாசீனம்… Read More தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல். ** பெண் விடுதலை என்பது அரச அடக்குமுறைகளிலிருந்தும் சமூக ஒடுக்கமுறைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளிலிருந்து விடுதலை பெறுவாதாகும்.

தலைவர் பிரபாகரனின் சிந்தனையிலிருந்து

குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மாத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்.