தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் நினைவு சுமர்ந்து

“தியாகி திலீபன்சொன்ன- செய்தி என்ன? “இந்த இனம்- இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும். புல்லையும் எடுத்து அது போராடும். அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது!. பேரம் பேசாது-விட்டுக் கொடுக்காது. ஆயுதம் இல்லாவிட்டாலும்-உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக-நியாயத்திற்காக- நீதிக்காக-அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்.” ” தியாகி திலீபன் ஒரு இலட்சிய நெருப்புதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத்… Read More தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் நினைவு சுமர்ந்து

வேரில் விழுந்த மழை தியாகதீபம் திலீபன்-காணொளி

வேரில் விழுந்த மழை என்ற காணொளியை தியாகதீபம் திலீபனின் 23ம் ஆண்டு நினைவாக வெளியீட்டுள்ளோம் ———வீரவரலாற்று பின்ணணியும் உரையும் காணொளியில் தியாக தீபம் திலீபன் பாடல்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 12 ம் நாள்(26-09-1987) நல்லூரில் தீபம் அணைந்தது

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு… Read More தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 12 ம் நாள்(26-09-1987) நல்லூரில் தீபம் அணைந்தது

Lt. Col. Thileepan – Rasaiah Parthipan and Vaithilingam Sornalingam B.Sc. – Colonel Shankar

“…Our Liberation struggle has achieved tremendous victories at great cost. All these achievements were victories which our movement earned in the course of our armed struggle. But my dear comrade Thileepan’s death is different from everything else ; it is something to be pondered over because it is something qualitatively different…. My dear people, for… Read More Lt. Col. Thileepan – Rasaiah Parthipan and Vaithilingam Sornalingam B.Sc. – Colonel Shankar

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பதினோராம் நாள் (25-09-1987)

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. ‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில்…. ஆகையால், தேவரிடம்… Read More தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பதினோராம் நாள் (25-09-1987)

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பத்தாம் நாள்(24-09-1987)

பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருபதைப் பார்க்கும்போது………. துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப்போய்விடும். கண்களில் அழுவதற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது. ஆனால், இவர்களில் ஒருவர் ஒருசொட்டு நீர் கூடஅருந்தாமல் 10 நாட்களாக எம் கண் முன்னால் அணு அணுவாகச் சாவின் விளிம்பில்… Read More தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பத்தாம் நாள்(24-09-1987)

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஒன்பதாம் நாள்(23-09-1987)

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை. ஆனால் இந்தக் குயில்…? எம்மை – எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..? திலீபனை நன்றாக உற்றுப்… Read More தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஒன்பதாம் நாள்(23-09-1987)

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் எட்டாம் நாள்(22-09-1987)

இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள். உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென் யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்கயில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில்… Read More தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் எட்டாம் நாள்(22-09-1987)

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஏழாம் நாள்(21-09-1987)

இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின…… நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது.காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை. ஆனால், திடீரென்று “இந்தியா ருடே” (India Tiday) பத்திரிகை நிருபரும் இந்திய துரதஷனின் (இந்தியத் தொலைக்காட்சி ஸ்தாகனம்) வீடியோப் படப்பிடிப்பாளரும், யோகியுடன் வந்து திலீபனைப் படம்பிடிக்கத் தொடங்கினர். “இந்தியா ருடே” நிருவர் என்னிடம் திலீபனின்… Read More தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஏழாம் நாள்(21-09-1987)

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஆறாம் நாள்(20-09-1987)

அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன். ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சுகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார்… Read More தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஆறாம் நாள்(20-09-1987)