ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்தவர்கள் யார்?

விடுதலைப் புலிகளின் பிளவு மட்டக்களப்பில் வசித்த இரண்டு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட காரணமாக அமைந்திருந்தது. அதில் ஒருவர் கொழும்பில் இருந்து செயற்பட்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்கள் அடுத்தது மட்டக்களப்பில் இருந்து பணியாற்றிய ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன். இருவரும் எந்த மக்களின் விடுதலைக்காக தங்களது ஊடகப் பணியை அர்ப்பணித்தார்களோ தமிழ் மக்களின் விடுதலைக்காக யாருடன் கூடுதலான உறவு வைத்திருந்தார்களோ அவர்களாளேயே இவர் கொல்லப்பட்டார்கள் என்பதே கசப்பான உண்மைகள். விடுதலைக்கான பயணத்தில் இருந்து விலகியவர்கள் முதலில் பயந்தது துப்பாக்கிகளுக்கு அல்ல… Read More ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்தவர்கள் யார்?

தமிழீழத் தேசத்தின் நாட்டுப் பற்றாளர் தினம் சித்திரை 19ம் நாள் !

தமிழீழத்தின் வீரத்தாய் தியாகச் சுடர் அன்னை பூபதி தமிழ் இனத்தின் ஒரு குறியீடு! ‘தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.’ -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாக தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப் படுத்தியிருந்தது. ** தீயாக எழுந்த தாயும் நாட்டின் விடுதலைக்கான பற்றாளர்களும் நாட்டுப்பற்றாளர் தினம் – அன்னை… Read More தமிழீழத் தேசத்தின் நாட்டுப் பற்றாளர் தினம் சித்திரை 19ம் நாள் !

தமிழீழக் கலைஞர் நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா

ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவார் கணேஸ் மாமா. காயப்பட்ட தமிழினத்தின் உள்ளங்களுக்கு நகைச்சுவை மருந்திட்ட கலைஞன். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் படுகொலை செய்யப்பட்டார். போராட்டத்துக்காக “கலை” வடிவில் போராடிய உண்மை கலைஞன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசு எம்மக்கள் மீது நாளும் விளைவிக்கும் இனவெறித்… Read More தமிழீழக் கலைஞர் நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா

நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு நாள்

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் நினைவு நாள் 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும். நாட்டுப்பற்றாளர் நடேசன் நினைவூட்டல்http://www.box.net/embed/37zkzlhvpcighvz.swf யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார். நீண்ட காலம் ஊடகப்… Read More நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு நாள்

நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி 2 ம் ஆண்டு வீரவணக்கம்

ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 22-02-2010 உடன் ஓராண்டு பூர்த்தி கொள்கின்றது. தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின்… Read More நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி 2 ம் ஆண்டு வீரவணக்கம்

தனிநாடு என்ற கோரிக்கையை முதல் முதல் வைத்த நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம்

தமிழீழம் என்ற கோரிக்கையை முதன்முதலில் முன்வைத்த வி. நவரட்ணம் ஐயா அவர்களின் நூறாவது பிறந்தநாள் 2010, ஒக்ரோபர் 18 ஆம் திகதியான இன்றாகும். இவரே 1960 ஆம் ஆண்டுகளின் இறுதியில் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் நிறுவுனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு 95 வயதாக இருந்தபோது 2005 ஆம் ஆண்டும் ஜூலை மாதத்தில் தமிழ்நெட் இணையத்தளம் இவரைப் பேட்டி கண்டிருந்தது. ஆனால் இவர் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காலமானார். மேற்படி 2005… Read More தனிநாடு என்ற கோரிக்கையை முதல் முதல் வைத்த நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம்

நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம்

வி.நவரத்தினம் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” விருது தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 22.11.2006அன்று இழந்துவிட்டது. அமரர் வி. நவரத்தினம் அவர்கள் அற்புதமான இலட்சியவாதியாகத் திகழ்ந்தார். தான் அணைத்துக்கொண்ட இலட்சியத்திற்காக நூற்றாண்டொன்று முழுவதும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாமல் உயர்ந்த வாழ்வு வாழ்ந்தார். தனது இனப்பற்றாலும் தேசப்பற்றாலும் தமிழ்ச் சமூக மேன்மைக்காக இறுதிவரை சேவையாற்றினார். தனது மக்கள்… Read More நாட்டுப்பற்றாளர் வி.நவரத்தினம்

நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி

ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு 22-02-2010 உடன் ஓராண்டு பூர்த்தி கொள்கின்றது. தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின்… Read More நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி

கந்தசாமி தருமகுலசிங்கம் நாட்டுப்பற்றாளராக தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு

மருத்துவமனை மீதான சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்ட கந்தசாமி தருமகுலசிங்கம், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர். இதன்போது மருத்துவமனையின் நிருவாக அலுவலர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார். நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக கடந்த 8ஆம் நாள் முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை பற்றி புலம்பெயர் மக்களுக்கு காணாளி வழியாக தகவல்களை… Read More கந்தசாமி தருமகுலசிங்கம் நாட்டுப்பற்றாளராக தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பு

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம் தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கையில் அது மேற்கொண்டு வரும் கருத்து ஆக்கிரமிப்பை உடைக்கும் தமிழ்த் தேசிய ஊடகப் பணியில் தாயகத்தில் இருந்து திறம்பட செயற்பட்டவர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி. தாயகத்தின் ஊடகங்களில் தனது தமிழ்த்… Read More ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பு