கேணல் அமுதாப்:சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார். கடந்த 31.03.2009 அன்று இவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார். சாள்ஸ் அன்ரனி சிறப்பு படைப்பிரிவின் தளபதி லெப் கேணல் அமுதாப் பல களங்கள் கண்ட பெரும் வீரன் காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை கல்லறை அல்ல உயிர் உள்ளவர் பாசறை (காலத்தால்) தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை (தீபங்கள்) (காலத்தால்) குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும் நின்று… Read More கேணல் அமுதாப்:சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி

சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்

சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் கேணல் கோபித் அடங்காப்பற்றின் வன்னி மண்ணில் மல்லாவியில் பெருமையாக சொல்ல ஓர் வீரத்தளபதி எங்கள் “கேணல் கோபித் அண்ணா ! இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில் கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த காடுகளுக்கு கூட இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வரும் ! பாசம் எனும் கூட்டில் விழாமல் தேசம் எனும் நேசம் கொண்டு சாள்ஸ்… Read More சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ்

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ் அண்ணாவின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் . கடற்லிகளின் துணைத் தளபதியாகவும் பின்பு தரைத்தாக்குதல் பிரிவில் படையணித் தளபதியாகவும் சிறந்த ஒரு தளபதியாக பணியாற்றிவர். கடற்புலிகள் அணியினில் இணைந்ததிலிருந்து தனது கடமைகளின் ஊடாக படிப்படியாக உயர்ந்து போராளிகளின் மனதினில் இடம்பிடித்ததோடு… தளபதிகளின் மனங்களிலும் பதிவாகிப் போனதால் அவருக்குரிய தகுதிகளும் அவரைத் தேடியே வந்தது. 2000 ஆம் ஆண்டளவில் ஆணையிறவுப் பெருந்தளத்தை கைப்பற்ற குடாரப்புத் தரையிறக்கமே… வழி சமைதுதது. அந்த குடாரப்புத்… Read More கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ்

கரும்புலி கப்டன் சத்தியா

சத்தியா வீரச்சாவு என்று அறிந்தபோது அதை ஏற்றுக்கொள்ளும் திடம் யாருக்கும் இருக்கவில்லை. சத்தியா… அவளை எப்படித்தான் பிரிந்திருப்பது. அன்பாய் சண்டைபோடும் அவளின் குழந்தைத் தனமான பேச்சு, சின்ன விடயங்களையே தாங்கமாட்டாமல் கசிகின்ற கண்களும் மீண்டும் மீண்டும் அவளை நினைவூட்டுவனவாகவே இருந்தன. சின்னப்பிள்ளை அல்ல கட்டையென்றுதான் அவளைச் சொல்வார்கள். அவ்வளவு உயரம் குறைவு. ஆனால் அவள் சின்னப்பிள்ளையில்லை. 06.02.1978ல் பிறந்தவள். 11ஆம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது போராட்டத்தில் இணைந்துகொண்டவள். நடக்கின்றபோது அவளின் துடியாட்டமான நடை ஒரு உற்சாகமான கறுப்புத்… Read More கரும்புலி கப்டன் சத்தியா

கரும்புலி மேஜர் மலர்விழி

தாய்மை அது கரும்புலிகளின் பாசறை, பயிற்சிகளும் பம்பல்களுமாக கலகலப்பாக இருக்கும் அந்தப் பாசறையில் மலர்விழியுமிருந்தாள். சண்டைக்களங்களில் உறுதிமிக்க வீராங்கனையாகத் தோன்றும் அவள் முகாமிற்கு வந்துவிட்டால் ஒரு தாயைப்போல மாறிவிடுவாள். அவளின் அந்த இயல்பிற்கு ஒரு காரணமிருந்தது. குடும்பத்தின் மூத்த பிள்ளையாக அவள் பிறந்திருந்தாள். அவளுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உறவாக இருந்தார்கள். சடுதியாக அன்னையவள் இடையில் பிரிந்துபோக குடும்பத்தில் அன்னையின் பொறுப்பை அவளே சுமந்து நின்றாள். தம்பியையும் தங்கையையும் தாயைப்போல அரவணைத்து அவர்களுக்கு எல்லாமுமாக இருந்து,… Read More கரும்புலி மேஜர் மலர்விழி

கடற்கரும்புலி கப்டன் இளையவள்

கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம் கொடுத்துச் சென்றிருந்தாள். இறுதிவரை அந்தக் குப்பியை இளையவள் வைத்திருந்தாள். அவளுக்குக் குப்பி தேவையில்லைத்தான், ஆனாலும் செவ்வானத்தினுடையது என்று வைத்திருப்பதில் தோழமை………………. நட்பு……………… அந்தக் கடல்மடியில் விட்டுச்சென்ற நீங்காத நினைவுகள்…………. அவை ஓயப்போவதில்லை, ஆர்ப்பரித்துச் செல்லும் கடலைகளைப்போல. அப்போது அவள் ஓரளவுதான் நீந்துவாள். ஆழமான கடற்சுழிகள், கொந்தளிப்பு எதற்கும் எதிர்நீச்சல்போடும் திறணற்ற கற்றுக்குட்டி. நீச்சல்காரி, அன்றைய கடற்பயணம் கலகலப்பானதாக இருந்தது. ஆனாலும் கடல்நிலமை… Read More கடற்கரும்புலி கப்டன் இளையவள்

லெப். கேணல் தேவன்

இரவின் இருள் சூழ்ந்த நேரம். படைக் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை அகவை நிரம்பிய குழந்தை, அவனது மனைவியென அவனது குடும்பமே நகர்ந்துகொண்டிருந்தது. வவுனியா படை வல்வளைப்புப் பகுதியிலிருந்து படைக் காவலரணை ஊடறுத்து வன்னி நோக்கி இரகசியமாக அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். படையினரின் காப்பரண் வரிசையைக் கடக்கும்போது சத்தமில்லாமல் கடக்கவேண்டும் அப்போது ஏதும் அறியாக் குழந்தை சத்தமிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். அதனால் ஏற்கனவே குழந்தையை ஆழ்ந்து உறங்கச் செய்திருந்தார்கள்.… Read More லெப். கேணல் தேவன்