ஓயாத அலைகள் மூன்று- 14

07/11/1999 அதிகாலை வேளையில் மல்லாவிக்கு நாம் விரைந்தோம். அங்குத்தான் கரும்புலி மேஜர் அருளனின் குடும்பத்தினர் இருந்தனர். ஓர் ஓலைக்குடிசையில் தங்கியிருந்த அக்குடும்பத்தில் அருளனின் தாயும் தங்கையும் மட்டுமே இருந்தனர். வழமைபோலன்றி இம்முறை கரும்புலிகளின் வித்துடல்களைக் கொண்டுவந்து வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மழைக்காலமாகையால் அந்த வளவு சேறாகியிருந்தது. முற்றத்தில் பந்தல்போட்டு அருளனின் வித்துடல் வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான போராளிகளும் பொதுமக்களும் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர். அருளன் பற்றி ஏற்கனவே இத்தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்டளவில் எனக்கு மிகமிக நெருங்கிய ஒருவராயிருந்தார்.… Read More ஓயாத அலைகள் மூன்று- 14

கரும்புலிகளின் வரலாறு

ஒப்பிரேசன் லிபரேசன்” எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது. இன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கிவிட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே… Read More கரும்புலிகளின் வரலாறு

ஓயாத அலைகள் மூன்று- 13.

06/11/1999 விடிந்துவிட்டது. எட்டுமணிக்குள் எல்லோரையும் புறப்படத் தயாராகும்படி அறிவித்தல் வந்தது. பக்கத்திலிருந்த இரண்டு வீடுகளைப் பயன்படுத்திக் கொண்டோம். ஏழுமணிக்கே காலையுணவுக்குரிய பொதிகள் வந்துவிட்டன. எல்லாம் முடித்துவிட்டு எட்டுமணிக்குள் எல்லோரும் தயாராகியிருந்தோம். நாமிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த ஒரு வீட்டுக்கு எல்லோரையும் வரும்படி அழைப்பு வந்தது. எல்லோரும் அங்குச் சென்றபோது தளபதிகள், கடாபி அண்ணையும் சொர்ணம் அண்ணையும் எமக்காகக் காத்திருந்தனர். கரும்புலி அணியினர் அமர்ந்திருக்க நாமெல்லாம் சுற்றி நின்றுகொண்டோம். சொர்ணம் அண்ணன்தான் முதலில் கதைத்தார். ஓயாத அலைகள் மூன்று… Read More ஓயாத அலைகள் மூன்று- 13.

ஓயாத அலைகள் மூன்று- 12.

வோக்கியை ஓடவிட்டு ஒட்டுக் கேட்டதில் வன்னியில் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பலவிடங்கள் மீட்கப்பட்டதாக அறிந்தோம். ஆனால் அதை உண்மையென்று நம்புமளவுக்கு நாம் இருக்கவில்லை. இவ்வளவு விரைவாக இந்த இடங்கள் அடுக்கடுக்காக வீழ்ந்ததை யாராலும் நம்ப முடியவில்லை. ஆனாலும் நாம் கேட்டுக் கொண்டிருந்த குரலுக்குரியவர்கள் களமுனையில் நிற்கும் தளபதிகள் என்பதையும் மறுக்க முடியவில்லை. அப்போது நாம் இருந்தது கற்சிலைமடு – ஒட்டுசுட்டான் வீதியிலிருந்து சற்று உள்ளே ஒரு மாந்தோப்பில். ஏறக்குறை 25 பேர் வரையில் இருந்தோம். அன்று பகல்… Read More ஓயாத அலைகள் மூன்று- 12.