ஓயாத அலைகள் மூன்று – 12

வோக்கியை ஓடவிட்டு ஒட்டுக் கேட்டதில் வன்னியில் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பலவிடங்கள் மீட்கப்பட்டதாக அறிந்தோம். ஆனால் அதை உண்மையென்று நம்புமளவுக்கு நாம் இருக்கவில்லை. இவ்வளவு விரைவாக இந்த இடங்கள் அடுக்கடுக்காக வீழ்ந்ததை யாராலும் நம்ப முடியவில்லை. ஆனாலும் நாம் கேட்டுக் கொண்டிருந்த குரலுக்குரியவர்கள் களமுனையில் நிற்கும் தளபதிகள் என்பதையும் மறுக்க முடியவில்லை. அப்போது நாம் இருந்தது கற்சிலைமடு – ஒட்டுசுட்டான் வீதியிலிருந்து சற்று உள்ளே ஒரு மாந்தோப்பில். ஏறக்குறை 25 பேர் வரையில் இருந்தோம். அன்று பகல்… Read More ஓயாத அலைகள் மூன்று – 12

ஓயாத அலைகள் மூன்று-பகுதி-11

03/11/1999 இப்போது நாம் கரைச்சிக் குடியிருப்பில்தான் இருந்தோம். அன்று பகல் முல்லைத்தீவு நகர்ப்பகுதிக்குச் சென்று வந்திருந்தேன். மக்களெல்லோரும் உற்சாகமாக இருந்தார்கள். களமுனைப் போராளிகளுக்கு உணவுப்பொதிகள் திரட்டுவது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, எல்லைப்படையினராக, உதவியாளராக மக்கள் களமுனைப்பணிகளுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். எல்லாமே ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் நிகழ்ந்துகொண்டிருந்தன. அப்போது புலிகளின் குரல் வானொலி தனது ஒலிபரப்பு நேரத்தை அதிகரித்திருந்தது. களமுனைத் தகவல்களை இயன்றளவுக்கு உடனுக்குடன் தெரிவித்துக் கொண்டிருந்தது. இனிமேல் என்ன செய்வது, எல்லாமே முடிந்துவிடும் போலுள்ளதே என்று இரு நாட்களுக்கு முன்புவரை அங்கலாய்த்துக்… Read More ஓயாத அலைகள் மூன்று-பகுதி-11

ஓயாத அலைகள் மூன்று பகுதி 7.

பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 01/11/1999 ஏற்கனவே குறிப்பிட்டது போல் அன்றையநாள் அலுப்பாகவே இருந்தது. மதியச் சாப்பாட்டை முடித்துவிட்டு மாமர நிழலிலிருந்து நானும் செல்வனும் கதைத்துக் கொண்டிருந்தோம். கரும்புலிகளின் வரலாற்றை ஆவணமாக்கும் கடமை வழங்கப்பட்டு செல்வன் அங்கு வந்திருந்தான். அன்று செல்வனும் ஓய்வாக இருந்ததால் அதிகம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. போராட்டத்துக்கு வெளியேயும் பல்வேறு விடயங்கள் பற்றி நாம் பேசிக்கொள்வது வழமை. அன்று இருவருமே ஓய்வாக இருந்த காரணத்தால் புலிகளின் குரல் நிறுவனத்தின் செயலகத்துக்குச்… Read More ஓயாத அலைகள் மூன்று பகுதி 7.

மொழி காத்த தலைவன்

மாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான். ஆகவே, உறவைப்போல… Read More மொழி காத்த தலைவன்

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 20

விடுதலைப் புலிகளின் கடற்புலித் தளங்கள் வடமராட்சி கிழக்குப் பகுதியிலேயே அதிகளவில் செயற்பட்டுக்கொண்டிருந்தன. வடமராட்சி கிழக்கில் சுண்டிக்குளம், வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கோவில், தாளையடி போன்ற பகுதிகளில் கடற்புலிகளின் தளங்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. இந்தப் பகுதிகள் மீது வேவு விமானம் மூலம் கண்காணிப்பை மேற்கொண்ட சிறீலங்கா, காலித் துறைமுகத் தாக்குதலின் பின் இத் தளங்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. அத்துடன், முல்லைத்தீவில் இயங்கிக்கொண்டிருந்த சாலை கடற்புலிகளின் தளம் மீதும் தனது தாக்குதலை வான்படை கடுமையாக நடத்தியிருந்தது. மேலும் கீழே,,,,,,,,,மாவிலாற்றில்… Read More மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 20

ஓயாத அலைகள் -3. பகுதி -1.

இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமேஇப்பகுதிபயணிக்கும் எதிர்பாராத விதமாய் மழை தூறத் தொடங்கியது. தூக்கக் கூடியவற்றைத் தூக்கிக்கொண்டு ஏனையவற்றை பொலித்தீன் பைகளால் மூடிவிட்டு அருகிலிருந்த தட்டியொன்றின் கீழ் எல்லோரும் ஓடி ஒதுங்கினோம். மழை பலப்பதற்கான அறிகுறிகள் இல்லை. வானம்… Read More ஓயாத அலைகள் -3. பகுதி -1.

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 18

ரணில் அரசுடன் செய்துகொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின் ஏற்பட்ட அமைதிக் காலத்தில் லெப்.கேணல் தியாகராஜன் யாழ்ப்பாணத்தில் நின்று செயற்பட்டவர். அரசியல் வேலைத்திட்டங்களுடன் தன்னுடைய வேவுப் பணிகளையும் அங்கு திறம்படச் செய்து கொண்டிருந்தார். குறிப்பாக விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், சிறீலங்கா துணை இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகள் குறித்து இவர் தனது வேவு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். தனது நடவடிக்கைகளுக்காக இவர் அதிகமாக கரவெட்டி, நெல்லியடி பகுதிகளில்தான் நிலைகொண்டிருந்து செயற்பட்டுக்கொண்டிருந்தார். அதனால், இப்பிரதேசத்தின் பகுதிகள் இவருக்கு அத்துப்படியாகத் தெரிந்திருந்தன.… Read More மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 18

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 17

இவ்வாறான பயிற்சிகளுக்கு நடுவே, ஆழ ஊடுருவித் தாக்குதல் நடத்தும் நீண்டதூரத் தாக்குதல் அணிகள் உருவாகின்றன. இவர்களுக்கான பயிற்சிகள் பெரும் காடுகளில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இவர்கள் நீண்ட நாட்கள் காட்டுவழியாக, எதிரியின் முகாம்கள், ஆறுகள், அருவிகள் என்பவற்றை கடந்து சென்று எதிரியின் இலக்கு மீது தாக்குதல் நடத்தும் வகையில் உருப்பெற்றிருந்தார்கள். இவ்வாறு விடுதலைப் புலிகளின் படைக் கட்டுமானங்களில் ஏற்பட்ட பல வளர்ச்சிகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் போராளிகளின் பயிற்சித் தளங்கள் தொடர்பாக தொடர்ந்துவரும் தொடர்களில் தருகின்றேன். புதிய புதிய… Read More மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 17