லெப். கேணல் லக்ஸ்மன்

‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே அல்லாமல், இருவேறு துண்டுகளின் கூட்டல்ல. வல்லிபுரக்கோயில் மணற்காட்டில் – அலைகளாய் விழுந்து உவகையோடு எழுகின்ற இந்துமா ஆழி, ‘எங்கள் கடல்!’ என்றால் ‘குமணக்’ கரையின் மணலில் உருண்டு, கண்களை எரித்துச் சுகம் விசாரிப்பதும் ‘எங்களோடது!’ தான்; ‘கருவேலன் காட்டு’ ஓரத்தில் மோதி பாரையோடு சுறாவும் திருக்கையும் தருவதும்… Read More லெப். கேணல் லக்ஸ்மன்

மண்ணையும் மக்களையும் நேசித்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்

மட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி பூசையில் வைத்து சிறிலங்கா அரசாங்க கைக்கூளிகளினால் சூட்டுக் கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க நாள் தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது. பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும்… Read More மண்ணையும் மக்களையும் நேசித்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்

கரும்புலி கப்டன் நாகராணி

பாதுகாப்பு…. அந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை அது. புளியங்குளமென்பது சாதாரண ஒரு குளத்தின் பெயராகவோ அன்றி, ஒரு ஊரின் பெயராகவோ இல்லாமல் சிங்களப்படைகளின் அடி நரம்புகளையே அதிரவைக்கும் களமாக மாறியிருந்தது. முன்னேறுவதற்காக புறப்படும் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் பயப்பீதியால் நடுங்கிய களமுனை அது. புளியங்குளமென்பது புலிகளின் புரட்சிக் குளமென்பதை… Read More கரும்புலி கப்டன் நாகராணி

ஓய்வறியாத ஒரு போராளி அப்பையா அண்ணை

மீண்டும் ஒருமுறை அப்பையா அண்ணையின் நினைவுநாள் வந்துள்ளது. அப்பையா அண்ணை என்றவுடன் நினைவுக்கு வருவது அந்த ஓய்வு ஒழிச்சல் இல்லாத போராளித்தனமே. அதிலும் அப்பையா அண்ணையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீலன், சங்கர் போன்றோர் திணறி ஓடி ஒழியும் காட்சிகள் இன்னமும் நினைவுக்குள் நிற்கிறது. சீலன், சங்கர், கிட்டு போன்றோர் அதிகூடிய வேகத்துடனும் பயமில்லாத வீரத்துடனும் தினமும் ஏதாவது செயற்பாட்டில் செறிவாக ஈடுபடுபவர்கள். அவர்களின் வேகமே மிக அதிகம் என்று அண்ணை அடிக்கடி சொல்வார். அப்படியான சீலன்,சங்கர்… Read More ஓய்வறியாத ஒரு போராளி அப்பையா அண்ணை

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் வீரவரலாறு -காணொளிகள்

“தேசத்தின் குரல்” கலாநிதி.அன்ரன் பாலசிங்கம் 27.11.2005 உரை இறுதி நிகழ்வில் வன்னியிலிருந்து தளபதிகளின் உரைகள் பாடல்கள்  

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில்

தேசத்தின் குரல் தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு –  தேசியத் தலைவரின் அறிக்கை தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது.… Read More தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில்

விடுதலைப்புலிகள பத்திரிகையும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கமும்…

பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து 1990 யூனில் மீண்டும் போர் வெடித்த போது “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து சிறிநீரக மாற்றுச் சிகிச்சைக்காகக் கடல்வழி மூலம் பாலா அண்ணை வெளிநாடு செல்லும் வரை அவர் தமிழீழத்திலேயே வசித்தார். பாலா அண்ணை தாயகத்தில் வசித்த சுமார் 10 ஆண்டு காலம் முழுவதும் தனது பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் எமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான “விடுதலைப்புலிகள்” பத்திரிகையின் வழிகாட்டியாக இருந்து பல்வேறு வழிகளில்… Read More விடுதலைப்புலிகள பத்திரிகையும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கமும்…

லெப். கேணல் மறவன் ,மனோஜ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

லெப். கேணல் மறவன் மற்றும் லெப். கேணல் மனோஜ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் நகர்ப் பகுதியில் 11.12.1998 அன்று எதிர்பாராத விதமாக சிறிலங்கா சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் வில்வம் / ஜோன் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலையின் விழுதெறிந்தவன் மேஜர் வில்வம்….. வவுனியா மாவட்டம் மரகாரன்பிலவு பகுதியில் 11.12.2000 அன்று சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத்… Read More லெப். கேணல் மறவன் ,மனோஜ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

மேஜர் வில்வம்

விடுதலையின் விழுதெறிந்தவன் நேற்றுத்தான் அவனது வீடுக்குச் சென்றிருந்தேன். ‘முதுமை’ அவரை அந்தப் பனையோலைப் பாயில் கிடத்தியிருந்தது. தன் வாழ்நாட்களின் இன்ப, துன்பங்களை பௌர்ணமி முழுநிலவுப் பொழுதில் மீட்டி அசைபோடும் ஆறுமுகம் ஐயாவுக்கு மனைவி பாக்கியம்கூட அவருக்கெனக் கிடைத்த பாக்கியம்தான். “அப்பா” இனிமையான தாழ்வான என் அழைப்பு. என் முகத்துக்கருகாக ‘கரிக்கன்’ விளக்கினை நீட்டியவர் “மங்கிய பொழுதுகளின் படலையைத் திறந்து ‘அப்பா’ என என் மகன் அழைப்பதாய் ஞாபகம்” என்றவாறே கதைக்கத் தொடங்கினார். “எப்பையாவது ஒரு பொழுதில் வருவான்.… Read More மேஜர் வில்வம்