மேஜர் வேணுதாஸ்

உலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு தமிழ்மானம் காத்த மாவீரர்களின் வரலாறு எமக்கு என்றும் வழிகாட்டியாகும். தமிழீழம் உயரிய இலட்சியக்கனவோடு சாவினை அணைத்திட்ட சரித்திரநாயகர்களின் வரலாறுகளை எமதுசந்ததியினர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் அவர்களின் இலட்சியக்கனவுகள் அடுத்த தலைமுறைக்கு நகர்த்தப்பட்டு எமது தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்பது தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பாகும். இந்த இலக்குநொக்கிய இலட்சியப்பயணத்தில் பல்வேறுதளங்களில் தங்களின் வரலாறுகளை பதிவுசெய்தநாயகர்களின் வரலாறுகளைப்பதிவுசெய்யும் முயற்சியே புனிதச்சுவடுகள் தொடர்…. இலக்குத்தவறாத… Read More மேஜர் வேணுதாஸ்

லெப். கேணல் மறவன் மாஸ்ரர்

தமிழீழத் தேசத்தின் விடுதலை வேள்வியில் விதையாகிப்போன ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரலாற்றுத்தடங்களில்கடற்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப் கேணல் மறவன்மாஸ்ரர் அவர்களின் வரலாற்றுப்பதிவும் தனித்துவமான அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியில் கடற்புலிகள் படையணி எத்தகைய முக்கியத்துவம் வகித்ததோ அதே போல் கடற்புலிகளின் வளர்ச்சியிலும் கடற்புலிகளின் அரசியல்த்துறையின் விரிவாக்கத்திலும் லெப். கேணல் மறவன் மாஸ்ரர் முதன்மையான பாத்திரம் வகித்தவர். அத்துடன் கடற்புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவுப் பாலத்தைக் கட்டி வளர்ப்பதிலும் தமிழீழ விடுதலைப்போராட்டம் மக்கள் மயப்படுவதிலும் தனது… Read More லெப். கேணல் மறவன் மாஸ்ரர்

கடற்கரும்புலி கப்டன் மாலிகா

கடற்கரும்புலி கப்டன் விக்கியும் கடற்கரும்புலி கப்டன் மாலிகாவும் இணைபியாத தோழிகள். இருவரும் ஒன்றாகவே இயக்கத்தில் இணைந்து ஒன்றாகப் பயிற்சி எடுத்து, எப்போதும் இணைபிரியாமல் பாசறையில் உலா வந்தார்கள். இருவரும் தோழிகள் என்றாலும், பயிற்சிப்பாசறையில் இருவருக்கும் போட்டி. நீந்துவது, படகு ஓட்டுவது, ஏனைய பயிற்சிகள் எல்லாவற்றிலும் ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் இல்லை என்ற ரீதியில் வேகம் இருக்கும். கடற்கரும்புலி கப்டன் விக்கி கொழும்புத் துறைமுகத்தினுள் கரும்புலியாய் சென்று அவளைவிட்டுப் பிரிந்ததில், மாலிகாவுக்கு மிகுந்த கவலை. ‘நீ முன்னால் போ.… Read More கடற்கரும்புலி கப்டன் மாலிகா

கப்டன் றோய்

“ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே….இசைநெஞ்சே” …… இதுவொரு சினிமாப்பாடல். இந்தப்பாடல் போல பலரது நினைவுகளை பல பாடல்களும் அவர்கள் விரும்பிக் கேட்ட அல்லது விரும்பிப் பாடியவையும் நினைவுகளாய் தந்த ஞாபகங்கள் எல்லோருக்குமே இருக்கும்.  அந்த நினைவுகள் பலரது இழப்புகளை அவர்களது தியாகங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற கதைகள் ஆயிரம். அத்தகையதொரு நினைவைத் தந்து சென்ற ஒரு மாவீரனை நினைவு தருகிற பாடல் :- “வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் வயல்… Read More கப்டன் றோய்

கடற்கரும்புலி கப்டன் அறிவரசன்

தக்க நேரத்தில்… அறிவரசன் ! ஓயாத அலைகள் 03 சூடுபிடித்து நகர்ந்து கொண்டிருந்த நேரம். ஆனையிறவுப் பெருந்தளத்தை அழிப்பதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நாட்களில் ஒருநாள் 30-12-1999ம் அன்று கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி எதிரியின் 3 நீருந்து விசைப்படகுகள், 4 கூவக் கிறாப,; 7,8 புளுஸ்ரார் என்பன நகர்ந்து கொண்டிருந்தன. இந்த எதிரியின் நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய ரகப் படகுகள் இரண்டுடன் ஒரு கரும்புலி படகும் அணியமாகியது. இந்நிலையில் கடற்புலிகள் எதிரியின் கலன்களை வழிமறித்து… Read More கடற்கரும்புலி கப்டன் அறிவரசன்

கப்டன் லோலா

கப்டன் லோலா ஈரநினைவாய்…..! நெடிய தோற்றம். தேவையின்றிக் கதைக்காத சுபாவம். ஆனால் விழிகள் எப்போதும் ஆக்கிரமிப்பாளனின் நடமாட்டத்தை அவதானித்தபடியிருக்கும். கழுத்தில் சயனைட்டோடு ஒரு சிலுவை அவன் கழுத்தில் எப்போதுமே இருந்தது. குப்பிளான் கேணியடியிலிருக்கும் எங்கள் கடைக்கு அடிக்கடி வருவான். தன் தோழர்களுக்கு உணவுப்பொருட்கள் வாங்குவான். வசாவிளானில் சென்றியிருக்கும் போராளிகளுக்கு அம்மாவிடம் பாணும் சம்பலும் வாங்கிக் கொண்டு போவான். சிலசமயம் ஏதாவது கிறுக்கு வேலை செய்து அம்மாவிடம் பேச்சும் வாங்குவான். என்னுடன் ஏதாவது கொழுவுவான். வைரமுத்து வளவுப்பனங்கள்ளை அடித்தபடி… Read More கப்டன் லோலா

சுனாமி அனர்த்தத்தில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள் மேஜர் தர்மேந்திரன், எழிலரசன்

தமிழீழ மண் மீட்ப்புப் போரில் விழுப்புண்னடைந்து பின் இடுப்புக்கு கிழ் உணர்விழந்தும் தொடர்ந்த தாயகப் பனியின் போது 26.12.2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இயற்ககை கடல் அனர்த்தத்தின் வேளை வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகளான மேஜர் தர்மேந்திரன், மேஜர் எழிலரசன் ஆகியோரின் 09ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஜர் அல்பேட்

நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து தளர்ந்து, எம் உள்ளம் சூனியமாகியதை நாம் எப்படி வெளிபடுத்த முடியும். 6 அடி 2 அங்குலமான உன் உயரமான (நீளமான) உடல் அசையாது கிடந்த நிலைகண்டு மக்கள் பதறியதை, உன் கிராமமே கலங்கியதைக் கண்டு உன்மரணம் தமிழ் மக்களை எந்த அளவுக்குப்… Read More மேஜர் அல்பேட்

லெப். கேணல் டேவிட்,அருச்சுனா உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்

தமிழீழ விடியலுக்காக இதே நாள் இதே மாதத்தில் தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள். திருகோணமலை குமபுறுப்பிட்டி பகுதியில் 16.12.2001 அன்று படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய போராளியின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மேஜர் சுஜி (மாட்டீன்சாமுவேல் அன்ரனிராஜ் – 5ம் வட்டாரம், கும்புறுபிட்டி, திருகோணமலை) யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் 16.12.2000 அன்று படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய போராளியின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள்… Read More லெப். கேணல் டேவிட்,அருச்சுனா உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்

லெப். சைமன்

எமது மாவீரரின் வீரம்செறிந்த விடுதலைப் போர்பற்றியும் இலட்சியப்பற்றுடன் இணைந்த இனப்பற்று, நாட்டுப்பற்று என்பவைபற்றியும் எமது இளைய தலைமுறையினர் அறிந்து கொண்டு, எதிர்காலத்தில் செயல்பட வேண்டும். தம்மை இழந்து தமது இனத்தின் பெருமையையும் தாய்நாட்டின் விடுதலையையும் நேசித்த ஒவ்வொருவருக்கும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் அழியாத வரலாறு உண்டு என்பதையும் ஆணித்தரமாக இங்கு பதிவாக வைக்கின்றோம். பொத்துவில் மண்ணில் விடுதலை நெருப்பாய், விடியலுக்காய் எழுந்தவன் லெப். சைமன் (ரஞ்சன்). தென் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களுரின் தொடரூந்து நிலையத்தில்… Read More லெப். சைமன்