தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை 2009 தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.நவம்பர் 27, 2009 எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். ‘நான்’, ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத்… Read More தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் கொள்கை விளக்க உரை

தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008

எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம் என்றும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை: தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.நவம்பர் 27, 2008.… Read More தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008

மாவீரர் நாள் உரை 2001

எனது அன்பிற்கும் மதிப்பிற்கு முரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். விடுதலை வேண்டிக்களமாடி வீழ்ந்த எமது வீரப்புதல்வர்களை நாம் எமது நினைவில் உயிர்ப்பித்துப் பூசிக்கும் நன்நாள். தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப்பதற்காகத் தமது சொந்த வாழ்வை ஈகம்செய்த சுதந்திர வீரர்களுக்கு நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்தும் புனித நாள். விடுதலைக்காக எமது இயக்கம் கொடுத்த விலை அளப்பரியது. உலகத்தில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் புரியாத அற்புத சாதனைகளை நாம் ஈட்டினோம்; ஒப்பற்ற ஈகங்களைப்… Read More மாவீரர் நாள் உரை 2001

மாவீரர் நாள் உரை 2002

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே, இன்றைய நாள் ஒரு புனித நாள்.எமது மாவீரர்களின் நினைவு நாள். எமது இனத்தின் இருப்பிற்காக, தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை, எமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் நாம் நினைவு கூரும் நன்நாள். விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக்… Read More மாவீரர் நாள் உரை 2002