மாவீரர் நாள் உரை – 2007

சர்வதேச சமூகம் எமது சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழீழ விடுதலைக்காக உலகத் தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழ வேண்டும் சாவைச் சந்தித்துச் சரித்திரமாவதற்கு ஆயிரமாயிரம் வீரர்கள் அணிவகுத்து நிற்பதால் தொடர்ந்து போராடுவோம் என்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரையில் சூளுரைத்துள்ளார். தமிழீழ தேசியத் தலைவர் இன்று செவ்வாய்க்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை: தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.நவம்பர் 27, 2007. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய… Read More மாவீரர் நாள் உரை – 2007

மாவீரர் நாள் உரை 2006

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். இந்நாளை எமது மாவீரர்களின் பெருநாளாக, எமது தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின் தேசிய நாளாக, எமது இனம் சுதந்திரம் வேண்டி உறுதிபூணும் புரட்சிநாளாக நாம் கொண்டாடுகிறோம். இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து, எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.… Read More மாவீரர் நாள் உரை 2006

மாவீரர் நாள் உரை 2005

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! இன்று வணக்கதிக்கு உரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள். இன்றைய நன்னாளில், அந்த மகத்தான மனிதப் பிறவிகளின் நினைவாக நாம் ஏற்றும் தீபங்களில், அந்த அக்கினி நாக்குகளின் அபூர்வ நடனத்தில், எமது மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக ஒளிவிட்டு எரிவதை நாம் எமது நெஞ்சில் நினைவு கொள்வோமாக.… Read More மாவீரர் நாள் உரை 2005

மாவீரர் நாள் உரை 2004

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! இன்று ஒரு புனிதமான நாள். தமது உன்னதமான உயிருக்கும் மேலாக, தமது தேசத்தின் விடுதலையை அதியுன்னதமானதாக நேசித்து, அந்த உயரிய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிக்கொண்ட எமது மாவீரர்களை நாம் போற்றி வணங்கும் நன்னாள். எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத் திருநாளில் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்திற் கொள்ளுமாறு நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன். மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த… Read More மாவீரர் நாள் உரை 2004