மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம் !

மாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்று பார்க்கதானே போகிறோம் என்று நக்கலாகப் பதில் அளித்தார். அதற்குத்தான் நவம்பர் 27 அன்று அலையாக திரண்டு பதில் அளித்துள்ளனர் தமிழ் மக்கள். இதற்கான முதல் எழுச்சியை ஏற்படுத்தியது கிளிநொச்சி துயிலும் இல்லம். இந்த… Read More மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம் !

பிரித்தானியா மாவீரர் துயிலும் இல்ல வளாகம் இருக்கும் போது ஏன் வேறு இடத்தில் ?

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை நினைவுப்படுத்திய பிரித்தானியா! புலம்பெயர் தேசத்தில் முதன் முறையாக  மாவீரர் துயிலும் இல்ல வளாகம் உலகத் தமிழர் வரலாற்று மையத்தினால்  கொள்வனவு செய்யப்பட்டு பிரத்தியேகமாக பராமரிக்கப்பட்டுவருகின்றது, இன்றும் கொள்வனவுக் கடனில் சிக்கித்தவிக்கும் நிலையில் அதற்கு தமிழ் மக்களிடம் வரவேற்புக் கிடைக்கவில்லை அதற்கு மாறாக எதிர் விமர்சனங்களையே சந்தித்து வருகின்றது தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஸ்ரட்பேர்ட் ஒலிம்பிக் திடலில் பெரும் செலவில் செய்ததை இந்த இடத்தில் ஒற்றுமையோடு செய்திருந்தால் அந்த நிதி இந்த மாவீரர்… Read More பிரித்தானியா மாவீரர் துயிலும் இல்ல வளாகம் இருக்கும் போது ஏன் வேறு இடத்தில் ?

பல்லாயிரக் கணக்கானவர்களின் கண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லம் !

விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் பல்வேறு பட்ட எதிர்ப்புகளுக்கு பின்னர் முதல் தடவையாக கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.    அந்தவகையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் இலங்கை நேரம் 6 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீதரன் ஏற்றி ஆரம்பித்து வைக்க அவரைத் தொடர்ந்து அருட்தந்தையர்கள் தீபம் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பல்லாயிரங்கணக்கான பொதுமக்கள் அணிதிரண்டு மெழுகு வர்த்திகளை ஏற்றிவைத்து தமது அஞ்சலிகளை செலுத்தினார்கள். ஒன்று திரண்ட பொதுமக்கள் இறந்த… Read More பல்லாயிரக் கணக்கானவர்களின் கண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லம் !

மாவீரர்களை நினைவு கூருவதும் ஒரு போராட்ட வடிவமாகவே வரலாறு பதிவு செய்யப் போகிறது!

மாவீரர்களை நினைவு கூர முடியாது என்றார்கள் அவர்களை பயங்கரவாதிகள் என்றார்கள் வன்முறையாளர்களை ஆதரிக்க முடியாது என்றார்கள் எத்தனையோ தடைகளைப் போட்டுப்; பார்த்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் அத்தனை தடைகளையும் தாண்டினார்கள் ஏனெனில் மாண்டவர்கள் அவர்களது உறவுகள் அல்லவா! தமிழ் மக்கள், முதலில் உரிமைகளை இழந்தார்கள். பின்பு உடமைகளை இழந்தார்கள். இறுதியில் உயிர்களையும் இழந்தார்கள். ஆனால் அவர்கள் உணர்வுகளை இழக்கவில்லை. எனவேதான் எழுக தமிழாக திரண்டார்கள். ஆயிரமாக திரண்டு மாவீரர்களையும் நினைவு கூர்கிறார்கள். மாண்டவர்களை வெறுமனனே நினைவு கூர்வதாயின்… Read More மாவீரர்களை நினைவு கூருவதும் ஒரு போராட்ட வடிவமாகவே வரலாறு பதிவு செய்யப் போகிறது!

இனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம்

இனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம் : சீமான் மாவீரர் நாள் அறிக்கை உலகம் முழுவதும் பரவிவாழும் எம் தாய்த்தமிழ் உறவுகளே! வணக்கம்.   இன்று மாவீரர் நாள். தாயக விடுதலைக்காக உயிரை விலையாகக் கொடுத்து மண்ணில் விதையாக விழுந்த மகத்தானவர்களை மனதில் நிறுத்தி வணங்க வேண்டிய தியாகத் திருநாள். தமிழ்த்தேசிய இனத்தின் அடிமை இருள் அகற்ற தன்னைத்தானே அழித்துக்கொண்டவர்களை நம் ஆன்மாவில் பொருத்தி இந்தக் கார்த்திகை… Read More இனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம்

மாவீரர் நாளும் கார்த்திகைப்பூவும்!

கார்த்திகைப்பூவும் கார்த்திகைக் கனவுகளும் ஈழத்தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக கார்திகை 27 ம் திகதி காணப்படுகிறது. மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தம் உயிர்களை ஆயுதமாக்கி போராடி மடிந்த மாவீரர்களை நினைவேந்தும் நாள் மாவீரர் நாளுக்கென்றே பிறந்தாற்போல் இந்தமாதத்திலேயே கார்திகைப்பூக்களும் மலரும். புலிகளையும் தமிழீழத்தையும் அடையாளப்படுத்தும் சிகப்பு மஞ்சள் வர்ணங்களோடும் மாவீரர் நாளில் ஏற்றப்படும் சுடரைப் போன்ற தோற்றத்துடனும் போராளிகளின் கழுத்தில் இருந்த சயனட்டை ஒத்த நச்சுத்தன்மையோடும் கார்திகை மலர்கள் எவருக்கும் சொல்லாமலேயே மாவீரர்களை நினைவூட்டும். எத்தகைய… Read More மாவீரர் நாளும் கார்த்திகைப்பூவும்!

வள்ளுவத்தின் வழி நின்று வரலாற்று நாயகர்களின் கனவை நனவாக்குவோம்!

இரண்டாயிரம் வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் குன்றா இளமையுடன் அள்ள அள்ள குறையாத அறிவுச் சுரங்கமாக விளங்கிவரும் உலகப் பொது மறையான திருக்குறள் தந்த வள்ளுவப் பெருந்தகை வகுத்த வள்ளுவத்தின் வழி நின்று எமது வரலாற்று நாயகர்களின் கனவை நனவாக்குவது உலகத் தமிழர்களின் கடமையாகும். முக்காலத்திற்கும் பொருந்தும் இயல்புடைய தமிழ்மறையான திருக்குறள் இன்றைய நிலையில் உலகத் தமிழர்களுக்கு அவர்களது கடமையை உணர்த்தி நிற்கின்றது. தமிழ் மறையில் பதினோராவது அதிகாரமாக இடம்பெற்றிருக்கும் ‘செய்ந்நன்றி அறிதல்’ பகுதியில் கூறப்பட்டிருக்கும் பத்து குறள்களுக்குள்ளும்… Read More வள்ளுவத்தின் வழி நின்று வரலாற்று நாயகர்களின் கனவை நனவாக்குவோம்!

கல்லறையிலும் நிம்மதியாய் உறங்கவிடாக் கயவர் கொண்ட நாடு !

இன்று மாவீரர் நாள். தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் அருமந்த உயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூருகின்ற நாள். மாவீரர் துயிலும் இல்லங்களில் விளக்கேற்றி அவர்களை நினைவுகூருகின்ற அந்த நாளுக்கும் தடை விதிக்கப்பட்டது. மாவீரர்கள் துயிலும் இல்லங்களைத் தகர்த்தெறிந்து அந்த நினைவுகளுக்கே இடமிருக்கக் கூடாது என்று நினைத்த கயவர்கள் வாழும் இந்த நாட்டில் கல்லறையில் கூட நிம்மதியாக இருக்க முடியாது என்றாயிற்று. துட்டகைமுனுவின் பரம்பரை என்று மார்தட்டுகின்றவர்கள் எல்லாளன் மன்னனை வணங்கிச் செல்ல வேண்டும் என்ற கட்டளை பிறப்பித்த… Read More கல்லறையிலும் நிம்மதியாய் உறங்கவிடாக் கயவர் கொண்ட நாடு !

தமிழர் தாயகமெங்கும் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன !

இறுதி யுத்தத்தின் பின் முழங்காவில் துயிலுமில்லத்தில் கண்ணீர் மல்க மாவீரர் நாள் அனுஸ்டிப்பு தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி – கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் மணி ஒலி எழுப்பி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். பொதுச்சுடரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை னோதிராஜா ஏற்றிவைத்தார். அதனைத்… Read More தமிழர் தாயகமெங்கும் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன !

தமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எங்கள் மாவீரர்கள்!

தமிழ்மக்களுக்காக, தமிழீழ நாட்டிற்காக, தங்களையே அர்ப்பணித்த தற்கொடையாளர்களை நினைவில் கொள்கின்றநாள்.தரணியில் தமிழனை தலைநிமிரவைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரர்களை நெஞ்சினில் நிறுத்தி, மலர்தூவி தலைதாழ்த்தி வீரவணக்கம் செலுத்தும் நாள். தரணியில் தமிழனை தலைநிமிரவைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரர்களை நெஞ்சினில் நிறுத்தி, மலர்தூவி தலைதாழ்த்தி வீரவணக்கம் செலுத்தும் நாள். இந்நாளில் நாம் எடுக்கின்ற உறுதிமொழி, களத்தில் காவியமான கதாநாயகர்களின் எண்ணங்களில் உறைந்திருந்த தமிழீழத் தாயக இலட்சியத்தை ஈடேற்றும்வகையில் ஒற்றுமையாய், ஒரணியில்திரண்டு தமிழனுக்கென்றோர் நாடு தரணியில் அமையப்பெற சத்தியம்… Read More தமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எங்கள் மாவீரர்கள்!