உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள் !

“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” -தலைவர் வே.பிரபாகரன் 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம்… Read More உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள் !

மாவீரர்கள் துயிலுமில்ல பாடல் உருவான வரலாறு !

1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அருச்சுனா – இவர் பின்பு கடலில் வீரச்சாவடைந்தார் இசைப்பாடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது வீரச்சாவால் அது தடைப்பட்டது. திலிபனின் உண்ணாநோன்பின் போது வசதிகள் ஏதுமற்ற நிலையில் காசிஆனந்தன் அவர்களின் இரு பாடல்களும், ஒரு பாடல் திலீபன் அழைப்பது சாவையா… புதுவை அண்ணரின் இரு பாடல்களும் ஒரு பாடல் வாச மலர் ஒன்று வாடிக்கிடக்கின்றது. யாழில்… Read More மாவீரர்கள் துயிலுமில்ல பாடல் உருவான வரலாறு !

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவுகூரல் !

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர் நாள் இன்று(25) 12 மணியளவில் நினைவுகூரப்பட்டுள்ளது. குறித்த நினைவஞ்சலி யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றுள்ளதுடன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடும் அச்சுறுத்தல்கள், கண்காணிப்புக்கள் மத்தியிலும் மாணவர்கள் மேற்படி நினைவஞ்சலியை நடத்தியுள்ளனர் என கூறப்படுகின்றது. பல்கலைக்கழகத்திற்கு வெளியே சிவில் உடையில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் காணப்பட்ட போதும் மாணவர்கள் அதனை பொருட்படுத்தாமல் நினைவுகூரலை நடாத்தியுள்ளனர். இதேபோல் அரசாங்கம் மாவீரர் நாளை அனுட்டிக்க கூடாது என… Read More யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவுகூரல் !

மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள் கார்த்திகை 25 !

உண்மை மனிதனின் முன்னால் உண்மை மனிதனின் கதை பிறந்த நாள் எந்த சூழலிலும் பதட்டப்படாத ஒரு கெரில்லா வீரனுக்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்ட சங்கர் எனும் சத்திய நாதன் 19.08.1961 அன்று பிறந்தார் 27.11.1982 அன்று தமிழ் நாட்டில் வீரச்சாவு அடைந்தார். சங்கர் அவர்கள் வீரச்சாவு அடையும் போது தமிழீழ தேசிய தலைவர் மேதகு திரு வே பிரபாகரன் அவர்கள் உடன் இருந்தார். அவர் வீரச்சாவு அடையும் போது “ ஒரு உண்மை மனிதனின் கதை” என்ற… Read More மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள் கார்த்திகை 25 !

மாவீரர் வாரத்தின் நான்காம் நாள் கார்த்திகை 24 !

நவம்பர் மாதம் 23 மதியத்தில் இருந்து 24 காலைவரை யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள போராளிகள் மருத்துவ விடுதி நிரம்பி வழிந்தது. யாழ் போதனா வைத்திய சாலையும் வைத்தியர்கள், தாதிகள் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ துறை வைத்தியர்கள் மற்றும் மருத்துவ போராளிகளும் கடமையில் இரவு பகலாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். வைத்திய சாலைக்கு முன்பாக இருந்த பாலம் பணிமனையில் குருதிகொடை செய்வதற்காக மாணவர்கள் சிலரும் வந்து காத்திருந்தனர். அந்தளவு போராளிகள் காயப்பட்டு வந்து கொண்டிருந்தனர். ஆம் மாவீரர்… Read More மாவீரர் வாரத்தின் நான்காம் நாள் கார்த்திகை 24 !

மாவீரர் வாரத்தின் 3ம் நாள் கார்த்திகை 23 !

புதை குழியில் இருந்து புதிய விதைகுழிகளுக்கு சென்ற மாவீரர்கள் இன்று மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாள். ஆம் 1989ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர் நாள் 1990 ம் ஆண்டு தமிழீழ மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டது. மாவீரர் நாள் ஒரு சோக நிகழ்வு அல்ல அது ஒரு தேசத்தின் மலரும் நினைவுகள் எங்கள் விரர்களை போற்றும் நிகழ்வு, எம் தேசத்தை காக்க புறப்படுவதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகளால் உறுதி எடுக்கப்படும் நிகழ்வு என… Read More மாவீரர் வாரத்தின் 3ம் நாள் கார்த்திகை 23 !

மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள் கார்த்திகை 22 !

இன்று மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள் இந்த நாளில் பெண் போராளி ஒருவரின் நினைவினை பகிர்வது பொருத்தமாக இருக்கும் ஏனென்றால் 1990 ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி மாங்குளம் தாக்குதல் னடைபெற்று கொண்டிருந்தது. இரண்டு மாதமாக வட தமிழீழத்தின் மையப்பகுதியினை ஆக்கிரமித்து இருந்த சிங்களப்படை முகாமினை தாக்கி அழிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆகவே மாவீரர் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய நாளில் மாங்குளத்தின் காட்டுப்பகுதியில் இரண்டு மாதமாக சிங்கள முகாமை தாக்குவதற்கான பயிற்சியினை… Read More மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள் கார்த்திகை 22 !

மாவீரர் வாரம் ஆரம்ப நாள் கார்த்திகை 21 ம் திகதி !

1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாவீரர் வாரத்தின் தொடக்க நாளான இன்று… Read More மாவீரர் வாரம் ஆரம்ப நாள் கார்த்திகை 21 ம் திகதி !

விதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்!

வீரர்களுக்கு மா என்ற அடைமொழி கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மா என்ற தழுவுசொல் ஒரு அர்த்தமுள்ள உயிர்மெய் எழுத்து. உயிரும் உடலும் கலந்த அர்த்தம் அதில் வெளிப்படுகின்றது. அழகு, வலிமை, பெருமை, பெரிய, குற்றமற்றவர் என்பன மா அடையின் பிற அர்த்தங்கள். பழந்தமிழர் வரலாற்றில் மாவீரர் என்ற சொற் பிரயோகம் கிடையாது. விசேட அர்த்தங்களோடு மாவீரர் என்ற சொல்லை முதன் முதலாகப் பயன் பாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளாவர் மாவீரர் என்பது ஆண்… Read More விதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்!

மாவீரர் நாள் பாடல் வரிகள்

மாவீரர் நாள் அன்றும் விடுதலைப் புலிகளின் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். புதுவை இரத்தினதுரை இந்தப் பாடலை இயற்றியிருந்தார். வர்ண ராமேஸ்வரன் இப்பாடலைப் பாடியிருந்தார். முழுப் பாடல் மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி! தாயகக்கனவுடன் சாவினை… Read More மாவீரர் நாள் பாடல் வரிகள்