அப்பா … கத்திக் கத்தி அழைக்கும் என் குரல் கேட்கவில்லையா…?

என் தந்தையின் வலி சுமந்த நினைவுகள் என் வாழ்க்கையில் புதைந்து கிடக்கும் பொக்கிசமாகின்றது இன்று. வரிப்புலியுடையில் சீறுகின்ற புலியாகி, சிங்களப்படையோடு பொருதிய பெரும் வீரன். அப்பா! என் தாய் உங்களைப் பற்றியும், உங்களின் உணர்வுகள் பற்றியும் எனக்கூட்டிய விடயங்களின் மூலம் உங்களின் ஈழப்பற்றை நான் உணர்ந்து கொண்டேன் அப்பா. கொட்டிடும் வெடி மழைக்குள்ளே அச்சம் இன்றி பணி புரிவீர்களாம். எப் பணியிருப்பினும் அப்பணி முடித்து என்னை பார்க்கவென்று ஓடி வருவீர்களாம். “ அண்ண செல்லடிக்கிறான் காலைல போங்கோவன்… Read More அப்பா … கத்திக் கத்தி அழைக்கும் என் குரல் கேட்கவில்லையா…?

காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலையும் உயிரிகள் ! காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன?

     சிறிலங்கா அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பொறுப்புக்கூறலைத் தவிர்த்து வருகின்றது. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை இன்று நேற்று ஆரம்பமாகிய விடயம் இல்லை. 1980ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் நிகழ்ந்து வரும் ஒரு வகை இனவழிப்பின் செயற்பாடு. குடும்பத்தலைவரைத் தொலைத்த குடும்பங்கள், பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோர், பெற்றோரைத் தொலைத்த பிள்ளைகள், வாழ்க்கைத்துணையைத் தொலைத்தவர்கள் எனப் பல வகைப்பட்டவர்கள் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். 2009ம் ஆண்டிற்கு முன்னர் சிறிலங்கா… Read More காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலையும் உயிரிகள் ! காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன?

உங்களின் நிய உருவத்தை உணர சந்தர்ப்பமற்ற குழந்தை அப்பா…

அப்பா உங்களுக்கு நினைவிருக்கா நீங்களும் நாங்களும் எவ்வாறு வாழ்ந்தோம் என்பதை. எனக்கு கொஞ்சம் நினைவிருக்கு அப்பா. நாங்கள் அப்போது சிறியவர்கள் முன்பள்ளி செல்லும் வயது எனக்கு. தம்பி ஐங்கரன் இன்னும் சிறியவன். அவன் உங்களின் முகத்தை கூட நினைவு வைத்திருக்க முடியாத ஒரு வயது நிரம்பியவன். இப்போது உங்களின் உருவப் படத்தை பார்த்து உங்களை அறிந்து கொண்டவன். உங்களின் நிய உருவத்தை உணர சந்தர்ப்பமற்ற குழந்தை அவன். அப்போதெல்லாம் உங்களின் உந்துருளியில் (Motor Bike ) லில்… Read More உங்களின் நிய உருவத்தை உணர சந்தர்ப்பமற்ற குழந்தை அப்பா…

இறுதிக்கட்ட போரின் போது மஹிந்த அரசை காப்பாற்ற முனைந்த ஐ.நா பிரதிநிதி !

சாட்சியில்லா யுத்தத்தின் போது அரசாங்கம் செய்த அட்டூழியங்கள் வெளிவந்து விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கும் இருந்தது என வட மாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் எனும் தொனிப்பொருளில் 2019ஆம் ஆண்டிற்கான சுய மதிப்பீட்டு மாநாடு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வட மாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், ‘போரின் பின்னர்… Read More இறுதிக்கட்ட போரின் போது மஹிந்த அரசை காப்பாற்ற முனைந்த ஐ.நா பிரதிநிதி !

கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி!

நினைவுகளாய் வாழும் கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி. விடுதலைப்புலிகளின் கடற்புலரிகள் படையணியில் அங்கம்வகித்த உவ்வொரு உறுப்பினர்களிடமும் கடற்புலிகளின் மகளீரணியின் சிறப்புத்தளபதியாகவிருந்த பூரணியக்காவைப்பற்றி ஏதொவொருநினைவுகள் அலைபாய்ந்துகொண்டேயிருக்குமென நம்புகின்றேன். விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியானது பல தாக்குதல் அணிகளையும் பல நிர்வாக அணிகளையும் தன்னகத்தேகொண்ட ஒருபெரும்படைக்கட்டமைப்பாகும். இங்கு அனைத்து அணிகளிலும் மகனார் மற்றும் மகளீர் ஆகிய இருபாலாரும் இணைந்தே களப்பணிகள் மற்றும் நிர்வாகப்பணிகள் ஆகியவற்றை முன்னெடுத்திருந்தனர். அந்தவகையில் பூரணியக்கா தான் வகிக்கின்ற பொறுப்புநிலைகளுக்கு அப்பால் ஒவ்வொரு போராளிகளிடமும் ஒரு… Read More கடற்புலிகளின் மகளீரணி சிறப்புத்தளபதி லெப் கேணல் பூரணி!

உரிமைகள் மறுக்கபடுவதற்கு பின்னணியை புரிந்து கொள்வதற்கு கோள அரசியல் பற்றிய தெளிவு அவசியம் கலாநிதி ந. மாலதி

அன்றய வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (North-East Secretariat on Human Rights – NESoHR ) முக்கிய உறுப்பினரும், தாயகத்தில் பெண்கள் முன்னேற்றச் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரும் தமிழர் உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான கலாநிதி. ந. மாலதி அவர்கள் இலக்கு இதழுக்காக வழங்கிய நேர்காணல்: கேள்வி – முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட இன்றைய நிலையில் நீதி வழங்கப்படுவது, தமிழர்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்படுவது தொடர்பில் எதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நீங்கள்… Read More உரிமைகள் மறுக்கபடுவதற்கு பின்னணியை புரிந்து கொள்வதற்கு கோள அரசியல் பற்றிய தெளிவு அவசியம் கலாநிதி ந. மாலதி

சிறிலங்காஆழஊடுருவும் அணியினரால் கொல்லப்பட்டவர்களின் 11 ம் ஆண்டு நினைவு நாள்….!

23.05.2008 அன்று முறிகண்டி- அக்கராயன் வீதியில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் லலித் ஜெயசிங்க என்பவரின் தலைமையிலான சிறிலங்கா படையின் ஆழஊடுருவும் தாக்குதல் அணியினரால் கொல்லப்பட்டவர்களின் 11 ம் ஆண்டு நினைவு நாள்….! சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் தாக்குதல் அணிகளின் ஆதிக்கம் 2008 ஆம் ஆண்டு வன்னிக்காடுகளை சூழ்ந்திருந்தது. 1998,1999 காலப்பகுதி போன்று நிலமை 2008 இல் இருந்திருக்கவில்லை. LRRP(Long Range Reconnaissance Patrol) or Deep Penetration Unit (DPU)இன் தாக்குதல்களில் பல… Read More சிறிலங்காஆழஊடுருவும் அணியினரால் கொல்லப்பட்டவர்களின் 11 ம் ஆண்டு நினைவு நாள்….!

கல்லறையின் காவலன் – சிங்கண்ண ( கோமகன்) வீரவணக்கம் !

“தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மருமகனுக்கு சொல்லி விட்டு தன் மூச்சை நிறுத்திவிட்டார் அந்த உயரமான பருமனான உடலமைப்புக் கொண்ட அந்த விடுதலை விரும்பி. அவரை கோமகன் என்று அறிந்தவர்களை விட சிங்கண்ண என்று அறிமுகம் கண்டவர்கள் தான் அதிகம். சாதாரண போராளிகள் முதல் மூத்த தளபதிகள் வரை சிங்கண்ண என்றால் அறிமுகம் அற்றவர்கள் இருக்க மாட்டார்கள்.… Read More கல்லறையின் காவலன் – சிங்கண்ண ( கோமகன்) வீரவணக்கம் !

ஓ மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்கு தா !

உண்மையான வீரனின் எச்சம் முள்ளிவாய்க்கால் போர் முடிந்து பத்து வருடங்களில் வரிப்புலிச்சீருடையுடன் ஒரு எலும்புக்கூடு மீண்டது பாம்பு செட்டை உதிர்ந்த இடங்களில் பாம்புகள் குடியிருப்பதாய் எமது ஊரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு காலம் உதிர்ந்ததாய் சீருடையுடன் எலும்புக்கூடு எங்கள் ஊரில் ஒரு புதிய பேச்சு வழக்கை தொடக்கிற்று புலியிருந்த நிலம் எனத்தொடங்கிப் பேசப்படும் அது எலும்புக்கூடு என்று சொல்ல பலரையும் போல எனக்கும் மனம் ஒப்பவில்லை ஒரு களத்தில் வீழ்ந்த போராளியின் வித்துடலுக்கு கொடுத்த மரியாதையை… Read More ஓ மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்கு தா !

அன்புள்ள அப்பாவுக்கு…

நான் உங்களை பத்து வருடங்களாக காணவில்லை. நீங்கள் எங்களைப் பிரிந்து சென்றதால் நாங்கள் மிக கவலையாக இருக்கின்றோம் அப்பா. என் அப்பப்பாவும் என்னை விட்டு சென்று விட்டார். அவரை நான் நேரே பார்த்ததில்லை ஆனால் தினமும் தொலைபேசியில் என்னோடு பேசி மகிழ்வு தந்தார். இடைநடுவில் அந்த மகிழ்வைப் பறித்தெடுத்துச் சென்றுவிட்டார். முள்ளிவாய்க்கால் மண்ணில் நான் கைக் குழந்தையாய் இருந்த போது, மரணத்தின் வாசலை அடிக்கடி தொட்டு வந்ததாய் அம்மா சொல்வா. விடியலுக்காய் நீங்கள் விடியல் பறவையாய் பறந்த… Read More அன்புள்ள அப்பாவுக்கு…