மேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள்

பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற… தலைக்கிரீடம் ஒருபுறம்.. நிச்சயமாக… நிச்சயமாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன. இந்திய இராணுவக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.நெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன்… Read More மேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள்

கடற்புலி மேஜர் தமிழ்வேந்தினி

கந்தையா விஜய கலா வீரஜனனம் : 20-05-1982 வீரமரணம் : 24-05-2007 நிரந்தர முகவரி : வண்ணான்கேணி பளை. தற்காலிக முகவரி : புன்னை நீராவி, விசுவமடு. பங்குபற்றிய இறுதித்தாக்குதல்: நெடுந்தீவு கடற்படைத்தளம் மீதான தாக்குதல் 24.05.2007 தமிழீழ விடுதலையை நோக்கி இயக்கத்தில் இணைந்தது 1996 இல், ஒரு இலட்சிய நெருப்பாய் சென்றவள், கடற்புலியாக உருவெடுத்து களம் பல கண்ட சிறந்த போராளி..!! நெடுந்தீவு கடற்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்பாகத்தான் தன் குடும்பத்தினரோடு விடுமுறையில் வந்து குதூகலமாக… Read More கடற்புலி மேஜர் தமிழ்வேந்தினி

மேஜர் பாவலன்

தவராஜா அஜந்தன் (மேஜர் பாவலன்)தாயின் மடியில் :-17.04.1980மண்ணின் மடியில் :- 01.02.2009 1992 ஆம் ஆண்டுக் காலப்பகுதி சூழ்நிலை காரணமாக யாழ் மண்ணிலிருந்து வன்னி மண்நோக்கிய எனது பயணமானது நிரந்தரமாகியது. முன்பும் கூட வன்னிமண் நோக்கிய பயணங்கள் பல இடம் பெற்றாலும் இப்பயணம் ஏனோ நிரந்தரமாகிவிட்டது. இந்தக்காலப்பகுதியில் தான் அஜந்தனுடைய (பாவலன்) நட்பு எனக்குக் கிடைத்தது. அந்தக்காலப்பகுதியில் நான் வவுனிக்குளம் பகுதியில் உள்ள பாலிநகர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கச் சென்றவேளை அவன் கொல்லவிளாங்குளம் பகுதியிலிருந்து அங்கு கல்விகற்க… Read More மேஜர் பாவலன்

மேஜர் சுவர்ணன்

ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கநாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் இப்போது யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு – வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத்தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த நேரம். இப்போது… Read More மேஜர் சுவர்ணன்

கடற்புலி மேஜர் வைகுந்தன்

1998 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஒருநாள். வட்டுவாகல் பாலத்தையொட்டிய பகுதியில் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். வட்டுவாகல் பாலம் என்பது வன்னியின் புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவுச் சாலையில் வரும், நந்திக்கடல் நீரேரியின் மேலாகச் செல்லும் பாலம். அப்பாலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் பக்கமாக, புதுக்குடியிருப்புச் சாலைக்கும் கடலுக்குமிடைப்பட்ட பற்றைக்குள்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். அது பொதுமக்களுக்கு மட்டுமன்றி போராளிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட பகுதி. கடற்புலிகளின் குறிப்பிட்ட அணியினருக்கு மட்டுமே அங்கே அனுமதியிருந்தது. எங்களுக்கு அங்கொரு பணியிருந்த காரணத்தால் அந்தப் பற்றைக்குள்ளும் அதைச் சூழவுள்ள… Read More கடற்புலி மேஜர் வைகுந்தன்

மேஜர்

மேஜர் பசிலன்மேஜர் கஜேந்திரன்மேஜர் மாறன்மேஜர் கேடில்ஸ்மேஜர் சோதியாமேஜர் தங்கேஸ்மேஜர் நாயகன்மேஜர் மாதவன்மேஜர் வெற்றியரசன்மேஜர் இளநிலவன்மேஜர் மில்ரன்மேஜர் சிட்டு