திருமதி அடேல் பாலசிங்கம் பார்வையில் பிரபாகரன்

தமிழில் PDF  Prabakaran in my view tamil-adle balasingam **** அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன் எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார். அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு… Read More திருமதி அடேல் பாலசிங்கம் பார்வையில் பிரபாகரன்

பிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது

கீர்த்தி அந்த மனிதனிலும் பெரிதாய் அமைந்திருந்தது. அது 80களின் ஆரம்பத்தில், நான் முதன்முதலாக விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்த போது அப்படி இருந்தது. அந்த முதல் சந்திப்பை மிக உயிர்ப்புடன் நினைவு வைத்துள்ளேன். அது கடும் வெயிலடித்த ஒரு பகல் பொழுதில் சென்னையில் உள்ள ஒரு புலிகளின் இடத்தில் இடம் பெற்றது. அவ்வீடு வங்காளவிரிகுடாவைப் பார்த்தபடியே இருந்தது. பிரபாகரன் ஒரு பத்திரிகையாளரை முதல் தடவையாக தன் வாழ்நாளில் எதிர்கொள்ளப் போகின்றார். அது எனக்கு ஒரு மிகப்பெரிய விடயம். ஆனால்… Read More பிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது

ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்

ஈழமண்ணின் வரலாறு ஒரு கறைபடிந்த காவியமாகத்தான் இதுவரை வரையப்பட்டிருக்கிறது. தமக்கே உரித்தான தமது பாரம்பரிய பிரதேசத்தில் தமக்கென ஒர் அரசை அமைத்து, தமக்கே உரிய மொழி, மத, கலை, கலாச்சார பாரம்பரிய விழுமியங்களைப் பேணிப்பாதுகாத்து, பூரண இறைமையுடன் ஈழத்து தமிழ் மக்கள் 15ம் நூற்றாண்டின் இறுதிவரை அந்த மண்ணிலே மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும்வாழ்ந்து வந்தார்கள் என்பதை முழு உலகமும் அறியும். 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை மண்ணில் காலடி வைத்த போர்த்துக்கேயர்களும், தொடர்ந்து டெச்சுக்காரர்களும் இறுதியாகஆங்கிலேயர்களும் தொடர்ச்சியாக 400… Read More ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்

ஓங்கியெரியட்டும் அந்த விடுதலைச் சுடர்

கால இடவெளிகளுக்குள் கட்டற்றுப் பிரவகிக்கும் ஆகுதல்களாக வரலாற்றுப் பேராறு ஓடிக்கொண்டேயிருக்கிறது. துளித்துளியாய் உருவெடுக்கும் சம்பவங்கள் பேரலைகளாகவும் பரிணமித்துப் பாரினை அதிசயிக்கிறது. ஈழத் தமிழர் விடுதலைப்போராட்டம் இன்று கொண்டிருப்பது பேரலைப்பரிமாணம். புயலை எதிர்க்க ஆழத்திருந்து எழுந்த போர்க்கோலம். அடக்கு முறையை எதிர்க்கும் அரசியலாய் சொல் மழை பொழிந்த அரசியலார் காலத்தைக் கழித்த காலத்தில் மின்னல் தோன்றியது நம்வானத்தில். இன்று கேட்பதோ முழக்கம். உள்ளூரப் புகுந்து எதிரிகளின் உறக்கத்தை நிரந்தரமாய்க் கலைக்கும் முழக்கம். இம்மின்னல் ஒளி தோன்றிப் பின் ஒலி… Read More ஓங்கியெரியட்டும் அந்த விடுதலைச் சுடர்

வயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி

தமிழரின் மண்ணை மீட்கப் புலிக்கொடி ஏற்றிப் புதுவீரம் நிலைநாட்டி, தமிழ் வீரத்தை எமது சந்ததியினருக்கு மீளவும் காட்டி, தொடர் வெற்றிகள் பலவற்றிற்கு உரமூட்டி, தமிழரின் உரிமைப் போரிற்குத் தலைமை தாங்கி, ஒரு தேசிய இனத்தின் தன்னிகரற்ற தலைவனாக மதிக்கப்பட்டு, இன்று பொன்விழா கொண்டாடிடும், எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய தமிழ் தேசியத் தலைவன் தம்பி பிரபாகரன் பற்றி நான் வெளிநாடுகளில் இருந்து வியந்து அவதானித்தவற்றில் சிலவற்றை, அவரின் பொன்விழா சம்பந்தமாக வெளியிடப்படும் இந்த மலரில் பதிவு செய்வதற்கு… Read More வயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி

அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்

எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார். அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலகட்டத்தில், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கொண்டிருந்த உறவும், அதனால் அவருடன் சேர்ந்து… Read More அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்

வரலாற்று நாயகனுக்கு ஒரு வாழ்த்து

வெறும் தாள் கிழித்து, பேனை எடுத்து எழுதமுடியுமா இதனை? மேசை விரித்து அதன் முன் அமர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து அதன் பின் எழுத முடியுமா இதனை? வெறும் மையா இதனை எழுதுவது? வெள்ளைத் தாளில், அர்த்தமேயில்லாது கறுப்பு மை படர வரும் கட்டுரைதானா இது? நம் உணர்வு எடுத்து நம் உயிரினால் எழுத வேண்டிய ஒன்றல்லவா இது! தமிழ் மானம் என்னும் எழுதுகோல் எடுத்து, உண்மை, நேர்மை, கடமை என்னும் ‘மை’களில் தோய்த்து எழுதப்படவேண்டிய வரலாறு அல்லவா… Read More வரலாற்று நாயகனுக்கு ஒரு வாழ்த்து