நீங்கள் எம்மோடு உள்ளீர்கள்

வேகமாக நடந்துவரும் அந்தக்கைத்தடியின் சத்தம்… முற்கூட்டியே எம்மைத் தயார்ப்படுத்திவிடும் வாகனத்தின் உறுமல் …எவரிடமும் காணமுடியாத, தூர இருப்பவர்களையும் ஈர்த்தெடுத்து மகிழ்விக்கும் அந்த இனிய சிரிப்பொலி… தனது எத்தகைய துன்பங்களையும் கடந்து பிறருக்காக எப்போதும் மலர்ந்து கிடக்கும் அழகிய வதனம்… அவரைப் போலவே இனிமையான அருகிருக்கும் தோழர்கள்….எல்லாமே, எல்லோருமே இப்போதும் எங்கள் அருகிருப்பது போல…. உண்மையில் அப்படியொரு நாளாந்தம் அருகிலும், இல்லையென்றால் நினைவிலும் இல்லாமல் நாங்கள் ஒரு கணம்கூட இயங்கியதில்லை. அந்தக் குடும்பம் அத்தனை அழகானது, இனிமையானது, அற்புதமானது…… Read More நீங்கள் எம்மோடு உள்ளீர்கள்

வீரவேங்கை இயல்வாணன்

மொத்தம் முப்பத்து நான்கு நாட்கள் தொடர்ந்த கடுஞ்சமரின் தோல்வியின் பின் இத்தாவிலில் மட்டுமின்றி ஆனையிறவிலுங்கூடவே சிங்களத்தின் போர் வலிமை புலிகளிடம் தோற்றுப் போனது. வரலாற்றுப் புகழ்மிக்க அந்த இத்தாவிற் சமர்க்களத்தின் மூன்றாவது நாள் 29.03.2003, காலைப்பொழுது. அங்கே நின்ற போராளிகளுக்கு சூடாகவே விடிந்தது. கண்டி வீதியை மையமாகக் கொண்டு, மூன்று முனைகளில் எதிரி ஆனையிறவுப் பிரதேசத்திலிருந்து முன்னேறினான். கொடுமையான அந்தப் போர்க்களத்தில், துன்பங்கள் நிறைந்த அனுபவங்கள் பலவற்றை ஏற்கனவே எதிரி அவர்களுக்கு ஏற்படுத்தி இருந்தான். கடந்த இரண்டு… Read More வீரவேங்கை இயல்வாணன்

வீரவேங்கை.ஆனந்

(இராமநாதன் அருள்நாதன்-மயிலிட்டி)வீரப்பிறப்பு 25-01-1964 வீரமரணம் 15-07-1983 தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந்த் என்னும் அருள்நாதன்இ உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள இராணுவக் கூலிப் படைகளுடன் சாகும்வரை துப்பாக்கி ஏந்திப் போராடிய வேங்கைதான் அருள்நாதன். நெஞ்சில் வழியும் இரத்தத்தோடுஇ ‘என்னைச் சுடடாஇ சுடு’ என்று சீலன் பிறப்பித்த கட்டளையை ஏற்றுப்இ பக்கத்திலே நின்ற மற்றுமொரு கெரில்லா வீரனின் துப்பாக்கிச் சன்னங்கள் சீலனின் தலையிலே பாய்வதைப்… Read More வீரவேங்கை.ஆனந்

வீரவேங்கை அன்பழகன்

அரசுஇ படைகளை எம் நிலைகள் நோக்கி ஏவி விடஇ எம்மிடம் அடி வேண்டிய படைகள் முன்னேறவும் முடியாமற் பின் வாங்கவும் முடியாமல் திண்டாடின. அரசியல் தேவைக்காக எப்படியாவது ஒரு வெற்றியைப் பெற்றுவிட மீண்டும் மீண்டும் முயன்றனர். 20இ சித்திரைஇ 1998 ஆம் நாட் காலைப்பொழுது எதிரி மிகவும் பலமாயிருந்தான். தன்னிடமிருந்த வளங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்திருந்தான். நாம் பழைய நிலையிலே இருந்தோம். எதிரி எப்படியும் மாங்குளத்தை அன்று பிடித்து விட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். அதற்காக… Read More வீரவேங்கை அன்பழகன்

வீரவேங்கை சுயந்தன்

09.01.1997 நடுநிசியைத் தாண்டிய அதிகாலை வேளை. ஆனையிரவுஇ பரந்தன் கூட்டுப்படைத் தளத்தினூடாக புலிகளின் அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்குதலுக்குச் சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள்இ உப்பு வெளிகள்இ சிறிய சிறிய உவர்நீர் நிலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது அந்தச் சூழல்இ எனினும்இ முகாமின் முக்கியத்துவத்தை உணர்ந்த போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு வெறியுடனும்இ எங்கள் மண்ணை ஆக்கிரமித்தவனை அழிக்கவேண்டுமென்ற மனவுறுதியுடனும் நீரற்ற அந்த உப்பு வெளிகளினூடக ஊர்ந்து கொண்டிருந்தனர்.அது ஒரு… Read More வீரவேங்கை சுயந்தன்

வீரவேங்கை நிதி

மன்னார் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த முதல் புலி. இராணுவச் சுற்றிவளைப்பின் போது இறுதி வரை போராடி எதிரியின் கையில் தான் பிடிபடக்கூடாது என நினைத்து தன் கைத் துப்பாக்கியாலே தன்னைத் தானே சுட்டு எமது இயக்க மரபுக்கு இணங்க வீர மரணத்தை அடைந்தவன் நிதி. அன்று நாங்கள் நிதியைப் பற்றி அறிந்திருந்தோமே தவிர விடுதலையைப் பற்றிப் புரியவில்லை. நிதியின் இறுதி நிகழ்வு பெரிதாக ஊர்வலமாக நடத்தப்படவில்லை. அன்றைய காலகட்டம் மிகப்பயஙகரமாக இருந்ததால்இ ஒவ்வொருவர் வாயிலும் மெதுவாகப் பேசப்படுகிறது.… Read More வீரவேங்கை நிதி