எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான்

தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலை மண்ணில் மலராகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவனின் வழியில் நடந்தவர் தான் கபிலன் அல்லது கபிலம்மான் என அழைக்கப்படும் இந்த வீரம் செறிந்த வேங்கை. 1984 தமிழகத்தில் விடுதலைபுலிகளின் 4 வது பயிற்ச்சி முகாமில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பயிற்ச்சி பெற்றார். இவர்கட்கான பயிற்ச்சியை முன்னாள் திருமலை தளபதி புலேந்திஅம்மான் அவர்கள் வழங்கினார். அதன் பின்னர்……… திருமலை வந்து புலேந்தி அம்மான் அவர்களுடன் இணைந்து பல வெற்றிகர தாக்குதல்களை நடத்தினார் அங்குள்ள மக்களுடன்… Read More எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான்

வசந்த் வாத்தி தமிழீழத்தின் வீர ஆசான்

“அணீ சீராய் நில், இலகுவாய் நில் இயல்பாய் நில்,… ” இந்த அதிகாரக்குரல் இன்றும் ஒலித்துக் கொண்டே இருகிறது தாயக தேசம் எங்கும் வீசும் காற்றோடு எங்கள் காதுகளில். தமிழீழம் எங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அடிப்படை பயிற்சியை பெற்ற எந்த போராளியும் இந்த வார்த்தைகள் அடங்கிய குரலை கேட்காமல் விட்டதில்லை தமிழீழத்தின் மூலை முடுக்கெங்கும் விரிந்து கிடந்த பயிற்சி முகாம்களின் அணிநடை பயிற்சிக்கான இந்த கட்டளைகளை அந்த அதிகார குரல் குடுக்காமலும் இருந்ததில்லை. எமது அமைப்பில் அணிநடை… Read More வசந்த் வாத்தி தமிழீழத்தின் வீர ஆசான்

கப்டன் திவாகினி

கப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G) கனரக இயக்குநராய் வேவுப்புலியாய் வேண்டிய விதமாய் அடையாளப்பட்டுக் கொண்டவள். இயல்புச் சுபாவத்தில் தனித்த கலவை அவள். அதிகம் நெருங்கிக் கொள்ளாதவர்களுக்கு அவள் கடுமை அடிதடி அடாவடி. நெருங்கியவர்களுக்கு காரியவதி கண் பார்த்தால் கை செய்யும் நுட்பக்காரி அன்னியையும் பொன்னியாக்கும் கைவரிசைக்காரி. மனமுண்டானால்… Read More கப்டன் திவாகினி

கரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள்

கரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 29.05.1999 அன்று தேசத்துரோகி ‘ராசிக்’ மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் அரசப்பன் ஆகிய கரும்புலி மாவீரரின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கரும்புலி மேஜர் குமலவன்

நெருப்பு நினைவுகளுடன்…….. ”அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம்மாவையே கட்டிப்பிடித்துக் கொண்டு சிரிப்பான். அம்மாவிற்கு பிள்ளை தன்னைவிட்டுப் போய்விடான் என்ற நம்பிக்கை. சிரித்தாள். பாவம் – அன்று அவன் முகத்தில் சிரிப்பில்லாது இறுக்கம் இருந்தது. உண்மையாகவே பேசினான். “இயக்கத்திற்குப் போனால் திரும்பி வரமாட்டன்” … “ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன்” இதைக்கேட்டதும் பெற்றவள் உள்ளம் பதறிப்போனாள். என்னென்றுதான் தாங்குவாள்… Read More கரும்புலி மேஜர் குமலவன்

சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது!

நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து…..(உண்மைச் சம்பவம்) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும். அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும்,… Read More சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது!

முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர்… Read More முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்

மே 18 – இனவழிப்பு நாள்

திரும்பிய திசையெங்கும் சிங்களப்பேய்கள் தான் பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன. இனிமேல் தமிழருக்கு படைமுகாம்களைச் சுற்றி வரையறுக்கப்பட்ட வாழ்வு தான் என்றாகி விட்டது. சமூகக் கொடுமைகளும், குற்றங்களும் பெருகிப் போய் விட்டன. பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் என்றுமில்லாத வகையில் கோலோச்சத் தொடங்கியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் முன்னர் இருந்த பாதுகாப்புக் கவசம் உடைபட்டுப் போனது தான்.முன்னர் புலிகளின் ஆட்சியில் இருந்து வந்த கடுமையான தண்டனைகள் பலரையும் விமர்சனத்துக்குள்ளாக்கியிருந்த்து. ஆனால் அதுவே ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், கலாசார விழுமியங்களையும் காத்து நின்றதோடு மக்களுக்கு… Read More மே 18 – இனவழிப்பு நாள்