மாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள்

மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராசா
10.11.1934 -11.06.1994

தேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர் பொது நலத்தையே இலட்சியமாகக் கொண்டும் வாழ்ந்தவர். எளிமை அவரது அழகான மாண்பு. இந்த மண் எமக்குத் தந்த அறிவுஜீவீகளில் அற்புதமானவர். இந்த மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தவர் அவர்.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் –

பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் 1934ம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பயின்றார்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியற் கற்கை நெறியை நிறைவு செய்தார். அன்றைய காலத்தில் கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்கலைக்கழகத்திலேயே பொறியியற்பீடம் இயங்கியது.

தன்னுடைய பட்ட மேற்படிப்பை கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்தில் 1962ம் ஆண்டு கலாநிதிப் பட்டத்துடன் நிறைவு செய்தார். ‘துரை விதி’ என்னும் மணல் துறை சார்ந்த விதி ஒன்றையும் நிறுவினார். இன்றும் கூட குடிசார் பொறியியலில் கற்பிக்கப்படும் Cam- clay locus ஆனது துரை விதியிலிருந்தே பெறப்பட்டது.

தொடர்ந்து இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்பட்டதும் அங்கும் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற்பீட பீடாதிபதியாகவும் கடமையாற்றினார்.

பின்னர் 1988ம் ஆண்டு புரட்டாதி மாதத்திலிருந்து 1994ம் ஆண்டு சித்திரை மாதம் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தராக கடமையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஒன்று நிறுவப்படும் என்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுதி மொழியையடுத்தே பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரானார். ஆனால் இன்று வரை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்படவேயில்லை.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் ‘அக்பர் பாலம்’ பேராசிரியரினால் நிர்மாணிக்கப்பட்டது. சிங்களப் பேராசிரியர் ஒருவரின் சவாலை ஏற்று மகாவலி ஆற்றில் ஒரேயொரு தூணை மட்டும் நிறுவி இப்பாலம் கட்டப்பட்டது. ‘துரைராசா பாலம்’ என அழைக்கப்பட வேண்டிய அந்தப் பாலம் இன்று ‘அக்பர் பாலம்’ என்றே அழைக்கப்படுகிறது. தமிழர்களாகிய எங்கள் பலருக்கே இந்த விடயம் தெரியாது.

நாங்களாவது அந்தப் பாலத்தின் பெயரை ‘துரைராசா பாலம்’ என அழைப்பதன் மூலம் பேராசிரியரின் திறமைகளை மறைக்காமல் நினைவு கூறப்பட வேண்டியவரை நினைவு கூர்ந்து உண்மைகளை அடுத்த சந்ததியினருக்கு கடத்துவோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிய போது உடுப்பிட்டியிலிருந்து ஏறக்குறைய முப்பது கிலோ மீற்றர்கள் தூரமுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு துவிச்சக்கர வண்டியிலேயே சென்று வந்தார்.

போர் மேகங்கள் வடமராட்சிப் பகுதியை அதிகமாகச் சூழ்ந்திருந்த அந்தக் காலப்பகுதியிலும் வல்லை வெளியினூடாகப் பயணம் செய்து தன்னுடைய பணியைத் தவறாது செய்தார். மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். எல்லோரிடமும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் ஒழுக்க சீலர். அதனால் எல்லோருக்குமே பேராசிரியர் துரைராசாவை மிகவும் பிடிக்கும்.

இவரைக் கெளரவிக்கும் முகமாக தேசியத் தலைவர் இவருக்கு ‘மாமனிதர்’ பட்டம் வழங்கிக் கெளரவித்தார். ஈழ வரலாற்றிலே முதன் முதலாய் மாமனிதர் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது பேராசிரியருக்கே.

தமிழரின் போராட்டத்துக்காக அளப்பரிய சேவைகள் செய்த மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் நோயின் கொடிய பிடியில் சிக்கி 1994ம் ஆண்டு ஆனிமாதம் 11ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.

இங்கு குறிப்பிட வேண்டிய முக்கியமான விடயம் யாதெனில் இந்தப் போட்டித் தொடரை எல்லோரும் ‘துரையப்பா கிண்ணம்’ என்றே அழைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ‘பேராசிரியர் துரைராசா கிண்ணம்’ என்றே அழைக்கப்பட வேண்டும். (துரையப்பா என்பவர் யாழ் நகர மேயராக இருந்தவர் – யாழ் துரையப்பா விளையாட்டு மைதானம் இவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.) தமிழர்களாகிய நாம் உண்மையை மறைக்காமல், பெயர்களை மருவ விடாது, சரியான வகையில் நினைவு கூருவதன் மூலமே இந்நாட்டில் தமிழ் நிலைக்கவும் தமிழர்கள் நினைவு கூறப்படவும் வழி வகைகள் செய்யலாம். இனி மேலாவது சரியான சொற்களைப் பழக்கத்திற்கு எடுத்துக் கொள்வோமா?

படத்தில் அழுத்திப் பெரிதாகப் பார்க்கவும்

http://www.facebook.com/group.php?gid=63172885247

ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்

சிவராமின் ஐந்தாவது நினைவுதினம் இன்று

படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் ஐந்தாவது ஆண்டு நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும், பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார்.

இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி “நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்…” என்று வீரகேசரி வார வெளியீட்டில் சிவராம் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணினி யுகத்திற்குள் கொண்டுவந்த பெருமையும் சிவராமையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாமனிதர் சிவராமின் இறுதிக் கட்டுரை

சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவராம் அவர்கள் 24.04.2005 அன்று வெளியான வீரகேசரி வாரஇதழில் ‘எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும் தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் முழுவடிவம். இக் கட்டுரையே அவர் எழுதிய இறுதிக் கட்டுரையாகும்.

எரிக் சொல்ஹெய்மின் வருகைகளும்
தமிழ்த் தேசியத்தின் நெருக்கடிகளும்

– தராக்கி டி.சிவராம் –

நோர்வேயின் சிறப்பு சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். போகிறார். அவர் வரும்போதும் போகும்போதும் தமிழ் ஊடக ஆரவாரம் ஒன்று கிளம்பும். அது மக்களிடையே ஏதோ நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை மீண்டும் ஏற்படுத்தும். அவர் வந்த வழியே திரும்பிப் போவார். ஊடக ஆரவாரங்கள் அடங்கும். பின்னர் வழமைபோல அதுää இது என்று எமது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும். சொல்ஹெய்ம் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு நல்ல மாற்றம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டாக்கக்கூடிய வகையில் அறிக்கை விடுகிறார். அல்லது செய்தியாளர்களுக்குக் கருத்துச் சொல்கிறார்.

இன்னும் சில கிழமைகளில் சுனாமிப் பொதுக்கட்டமைப்பு வந்துவிடும் என அவர் இம்முறை இங்கு வருவதற்கு முன்னர் ஒரு வெளிநாட்டுச் செய்தி நிறுவனத்திற்குச் செவ்வி கொடுத்திருந்தார். அது மட்டுமன்றி புலிகளின் மட்டு-அம்பாறை படைத் தளபதி பானுவைச் சந்தித்த பின்னர் பொதுக்கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென்று சிறிலங்கா அரசும்ää விடுதலைப் புலிகளும் மிக ஆர்வத்துடன் இருப்பதாக அவர் அழுத்திக் கூறினார்.

பொதுக்கட்டமைப்பு கிடைக்கப்போவதில்லை. ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் சிறிலங்காவின் அரசியல் நுனிப்புல் மேய்ந்தவர்களுக்குக்கூட மிகமிக அப்பட்டமாகப் புரிந்திடக்கூடிய உண்மையாகும். இதில் யாருக்கும் இம்மியளவும் சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக பொதுக்கட்டமைப்பு வழங்கப்பட்டால் தாம் சந்திரிகாவின் அரசிலிருந்து வெளியேறிவிடுவோம் என ஜே.வி.பி மிகத் தெளிவாக அமெரிக்கப் பிரதிநிதி கிறிஸ்ரினா ரொக்காவிடம் கூறிவிட்டது.

இங்கு நாம் சொல்ஹெய்ம்மைக் கடிந்து கொள்ளமுடியாது. எம்மை இலவு காத்த கிளிகளாக்கும் நோக்குடன்தான் அவர் இங்கு வருகிறார் என்றோää சந்திரிகா அரசு எமது காதில் வழமைபோல் பூச்சுற்றுவதற்கு அவர் மலர் கோத்துக் கொடுக்கிறார் என்றோ நாம் அவரைக் கண்டனம் பண்ண முடியாது. ஏனெனில் அவர் எமது உடன்பாட்டுடனேயே இலங்கையின் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான அனுசரணையாளராக அமர்த்தப்பட்டார். ஏதோ ஒரு தீர்வோ அல்லது அதைநோக்கிய முன்னேற்றமோ வருகிறது என்றுதான் அவர் சொல்வார். சொல்ல முடியும். அவருடைய கதையில் எடுபட்டு பேயராகுவதா இல்லையா என்பது எம்மைப் பொறுத்தது.

பொதுக்கட்டமைப்பு ஏற்படுத்துமாறு பல வெளிநாடுகள் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. புலிகளின் தடையை நீடித்து வரும் அமெரிக்காகூட இதையே வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி பொதுக்கட்டமைப்பு சரிவராவிடின் புலிகளுக்கு நேரடியாகவே உதவி வழங்குவதற்கான ஏற்பாடொன்று உண்டாக்கப்படல் வேண்டுமென சில நாடுகள் கருதத் தலைப்பட்டுள்ளன. இதைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசிற்கு நேரடியான எந்த வழியும் தற்போது இல்லை. எனவே இக்கட்டமைப்பு உண்டாக வேண்டும் என்பதில் தானும் அக்கறையாக இருக்கிறேன் என சிறிலங்கா அரசு அறிக்கை விடுகிறது. அக்கறையாக இருக்கிறோம் ஆனால் சில விடயங்களைப் பேசி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது எனக் கூறிக்கொண்டிருந்தால் காலம் எப்படியாவது உருண்டோடி விடும். அந்த ஓட்டத்தில் உதவி வழங்கும் நாடுகளும் புலிகளும் தமிழ் மக்களும் பொதுக்கட்டமைப்பு என்ற விடயத்தை வழமைபோல மறந்துவிடுவார்கள் என சிறிலங்கா அரசு கணக்குப் போடுகிறது. சொல்ஹெய்மினுடைய வருகைகளும் கூற்றுக்களும் இந்தக் கணக்கிற்கு மிகவும் வலுச்சேர்க்கின்றன. வடக்குக் கிழக்கின் உடனடி மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றுவதற்கென ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது ( Sihrn) உங்களுக்கு ஓரளவு ஞாபகம் இருக்கும் அதையும் அதன் பின்வந்த சில ஒழுங்குகளையும் சிறிலங்கா அரசு இப்படித்தான் பம்மாத்திற்று. அப்போதும் சொல்ஹெய்ம் வந்து போனார். இரு தரப்பும் ஏதோவொரு உடன்பாட்டை அண்மித்துக் கொண்டிருப்பதாக அறிக்கை விட்டார். அவருடைய ஒவ்வொரு வருகையையும் விழுந்தடித்துக்கொண்டு எமது ஊடகங்கள் ஆரவாரப்படுத்தின. (இதில் தமிழ்நெற்றும் விதிவிலக்கல்ல) நடந்ததோ ஒன்றுமில்லை. மாறாக தமிழ் பேசும் மக்களை பேய்க்காட்டிக்கொண்டு அவர்களை ஒற்றையாட்சி அமைப்பிற்குள் வாழப்பழக்குவதற்கு சொல்ஹெய்மின் வருகைகளும்ää அதையொட்டி எழும் எதிர்பார்ப்புக்களும் அரிய வாய்ப்பாக அமைந்தன அமைகின்றன.

ஏலவே கூறியதுபோல இதில் நாம் நேர்வேயையோ அதன் சிறப்பு தூதுவரையோ குற்றஞ்சாட்டவும் முடியாது. குறை கூறவும் முடியாது. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். இதில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற கேள்வி உடனே தோன்றும். முதலாவது சொல்ஹெய்மின் வருகையைச் சுற்றி உண்டாகும் ஊடக ஆரவாரத்தில் மக்கள் அறிந்திருக்க வேண்டிய சில அடிப்படை உண்மைகள் அடிபட்டுப் போகின்றன.

இந்த உண்மைகள் மறைந்துபோவது நுட்பமாகச் செயற்படும் சிங்கள மேலாண்மையாளர்களுக்கு மிக வாய்பாகிவிடுகிறது. ஏன்? பொதுக்கட்டமைப்பு விடயத்தை எடுத்துக்கொள்வோம். வாழ்விட அழிவுகள்ää இடப்பெயர்வு அகதிகள் என்பவற்றை பற்றியதே இந்தப் பொதுக்கட்டமைப்பாகும். இந்த மூன்றையும் எப்படி எதிர்கொள்வது எப்படி இவற்றிற்குத் தீர்வு காண்பது என்பது பற்றியதாகவே புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நடைபெற்ற ஆறுசுற்றுப் பேச்சுக்களும் அமைந்திருந்தன. நடந்ததென்ன? ஒன்றுமேயில்லை. வாழ்விட அழிவுகளைச் சரிசெய்வது என்றாலோ இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்துவது என்றாலோ தேவைப்படுவது முதலில் நிலம். பின்னர் பணம். இவையிரண்டுமே சிறிலங்கா அரசின் அசைக்கமுடியாத கட்டுப்பாட்டில் உள்ளன. நிலத்தையும் நிதியையும் இவையிரண்டையும் உரிய முறையில் பயன்படுத்துவதற்குத் தேவையான நிறைவேற்று அதிகாரத்தையும் (executive power) எந்தவொரு கட்டமைப்பிற்கும் பகிர்ந்தளிப்பதை சிறிலங்காவின் அரசியல் யாப்பு தடைசெய்கிறது. இதனாலேயே போரில் அழிந்துபோன எமது வாழ்விடங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும் எந்தவொரு வலுவானதொரு கட்டமைப்பை உருவாக்குவதில் புலிகளும் ரணில் அரசும் தோல்வி கண்டனர். இவ்வாறான ஒரு கட்டமைப்பு சிறிலங்கா சட்டத்திற்கு முரணானதாக இருக்கும் என அப்போது சிங்களச் சட்டவல்லுனர்கள் சுட்டிக்காட்டினர். அதுமட்டுமின்றி அப்படியொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டால் அதை சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்க வேண்டுமென சில சிங்கள மேலாண்மையாளர்கள் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் அச்சுறுத்தினர். இவையெல்லாம் ரணில் அரசுக்கு நல்ல சாட்டாகிவிட்டன. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பதும் வாழ்விட அழிவுகள் இடப்பெயர்வு அகதிகள் என்பவை பற்றியதே. எனவே அதை ஏற்படுத்துவதில் மேற்கூறிய அடிப்படை முட்டுக்கட்டைகள் உண்டாகுவதை எவ்வகையிலும் தடுக்க முடியாது. சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பது வெறுமனே வெளிநாட்டு உதவிப் பணத்தைப் பெறுவது மட்டுமல்ல. அது அடிப்படையில் நிலம் பற்றியதாகும். மக்கள் குடியமரும் இடங்களுக்கு மின்சாரம் நீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பது பற்றியதாகும். இவற்றைவிட மேலாக மேற்படி அலுவல்களைச் செய்வதற்கான அதிகாரம் பற்றியதாகும் இந்த சுனாமிப் பொதுக்கட்டமைப்பு விடயமாகும். சிறிலங்காவின் அரசியல் யாப்பு முற்றாகத் தூக்கியெறியப்படாமல் ஒரு வலுவுள்ள சுனாமிப் பொதுக்கட்டமைப்பு எப்படி சாத்தியம் என்பது கேள்விக்குறி. இதனாலேயே சிறிலங்கா அரசு சுனாமிப் பொதுக்கட்டமைப்பு விடயத்திலும் மிக நுட்பமாகப் பம்மாத்து விடத் தொடங்கிவிட்டது. இந்தப் பேய்க்காட்டலுக்கு சொல்ஹெய்மின் வருகைகளும் அறிக்கைகளும் வலுச்சேர்க்கின்றன என்பதுதான் இங்கு மீண்டும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இதில் இருக்கும் ஒரு பேராபத்தைப் பலரும் கவனிக்கத் தவறுகின்றனர். 1976 இலேயே நாம் தனித் தமிழ் ஈழமே எமது சிக்கலுக்கு ஒரே தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு அன்று எமக்கிருந்த காரணங்களைவிட இன்று 29 ஆண்டுகள் கழித்து மிக வலுவான காரணங்கள் காணப்படுகின்றன. ஆனால் அப்போதிருந்த அரசியல் ஒருமைப்பாடுää வெகுசன எழுச்சி முனைப்பு என்பன இன்று மழுங்கிக் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிக் காணப்படுகின்றன. அது மட்டுமன்றி அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் எமது மக்களிடையே இருந்த அரசியல் முனைப்பும் எழுச்சியும்கூட மழுங்கிப் போவதை நாம் காண்கிறோம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. காலத்திற்குக் காலம் ஏதோ ஒரு தீர்வு வரப்போகிறது என ஏற்படுத்தப்படும் எதிர்பார்ப்புகளும் இதில் ஒன்று என்பதுதான் உண்மை. நாங்கள் பேயராக்கப்படுகிறோம் என்ற தன்மான உணர்வு மமக்களிடையே கூர்மையடைந்தமையாலேயே எமது போராட்டம் எழுச்சியடைந்தது. அந்த அரசியல் எழுச்சியும் முனைப்புமே எமது போராட்டம் தடம்புரளாமல் இருக்க உதவின. இவை மழுங்கிப் போகுமாயின் நாம் சலுகைகளுக்காகச் சோரம் போகின்ற கேவலமானதொரு கூட்டாகி விடுவோம். எந்த ஒரு அரசும் அரசியல் ஒருமைப்பாடும் அறிவுமுள்ள ஒரு சமூகத்தை ஏமாற்றும்போது அந்த அரசுக்கும் அந்த மக்களுக்கும் முரண்பாடுகள் கூர்மையடைவது தவிர்க்க முடியாதது. இவ்வாறான முரண்பாடுகள் ஒருகட்டத்தை அடையும்போது அவை தமக்கெதிரான போராட்டங்களாக வெடிக்காமல் இருக்க அரசுகள் பலவழிகளைக் கையாள்கின்றன. அவற்றில் ஒன்று மாய எதிர்பார்ப்புகளை உண்டாக்குவதாகும்.

கருணா குழுவின் சாட்டில் சிறிலங்கா படைகள் கிழக்கில் கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றன. பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளுமின்றி வடக்கு-கிழக்கில் எமது மக்கள் இன்னமும் வாழ்கின்றனர். போர் அழிவுகள் இன்னமும் மாறாது உள்ளன. யாழ்ப்பாணத்தில் தமது காணிகளையும் வீடுகளையும் ஊர்களையும் சிறிலங்கா படைகளிடம் பறிகொடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் நாதியற்றுக் கிடக்கின்றனர். தமிழ்மொழி புறக்கணிப்பு இன்னமும் தொடர்கிறது. இப்படியே பல இன்னல்களைக் கூறிச் செல்லலாம்.

இவற்றையெல்லாம் விட சுனாமியும் பேரழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றுவரை எதற்கும் தீர்வில்லை. ஆனால் இவையெல்லாம் எமது மக்களிடையே எந்தவிதமான அரசியல் கோபத்தையும் உண்டாக்கவில்லை. இந்த இன்னல்கள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு எதிராக அவர்கள் அணிதிரளவில்லை. திரட்டப்படுவதிலும் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை. யாழ்ப்பாணத்திலோ மன்னாரிலோ வவுனியாவிலோ மட்டக்களப்பிலோ அரசியல் பேரணிகளுக்கு வருகின்ற மக்களின் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது என்பது மறைக்க முடியாத உண்மை. அவர்களிடம் விடுதலை உணர்வு இருக்கின்றது. ஆனால் அது அரசியல் ரீதியாக அணிதிரளும் அளவுக்கு எழுச்சியுள்ளதாக இல்லை.

எரிக் சொல்ஹெய்ம் வருகிறார். அவரைப் புலிகள் சந்திக்கிறார்கள். சிரித்துக்கொண்டே கைகுலுக்குகிறார்கள். எல்லாம் சுமூகமாகப் போகிறது என்பதுபோல் மகிழ்ச்சியாகப் பேசுகிறார்கள். இப்படியான செய்தி விம்பங்களை பொதுமக்கள் திரும்பத் திரும்பக் காணும்போது அவர்களை அறியாமல் உளவியல் தாக்கம் ஒன்று ஏற்படுவது இயல்பு.

விரைவில் எமக்கு தீர்வு கிடைக்கப்போகிறது என்ற உளப்பாங்கை இந்த விம்பங்கள் மக்களிடம் உண்டாக்குகின்றன. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் சொல்ஹெய்மின் கூற்றுக்களும் அமைந்துவிடுகின்றன. இவையெல்லாம் நமது மக்களிடையே எழக்கூடிய அரசியல் சு10ட்சுமங்களைத் தணிக்கின்றன. “ஏதோவொரு தீர்வு அண்மித்துவிட்டது. எனவே நாம் எமதுபாட்டில் இருப்போம்” என்ற அரசியல் மலட்டுத்தனம் அவர்களிடையே பரவுகிறது.

புதிய மக்கள் படை (New Peoples Army-NPA ) என்பது எண்பதுகளில் உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அது போராடி வந்தது. கடந்த பல ஆண்டுகளாக npa நோர்வேயின் அனுசரணையோடு பிலிப்பைன்ஸ் அரசுடன் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறது. (அமெரிக்காவின் பின்னணியிலேயே நோர்வே அங்கும் அனுசரணையாளராக அமர்த்தப்பட்டது) NPA ஐ ஒரு பயங்கரவாத இயக்கமாக ஏலவே அமெரிக்கா தடைசெய்திருந்தது. அமைதிப் பேச்சுக்களில் குறிப்பிட்ட காலம் ஈடுபட்டு வந்தால் தன்மீதான தடையை அமெரிக்கா நீக்கும் எனவும்ää தனக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமெனவும் npa எதிர்பார்த்திருந்தது. ஆனால் npய இன் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த பிலிப்பைன்சின் கிராமப்புற ஏழை மக்களிடம் காணப்பட்ட அரசியல் முனைப்பும் எழுச்சியும் பேச்சுக்கள் நடந்த காலத்தில் படிப்படியாக வீழ்ச்சியடையலாயின. இன்று npய வலுவிழந்த ஒரு அமைப்பாக காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது.

NPA ஐ புலிகளோடு ஒப்பிட முடியாதென சிலர் கூறலாம். படைபலத்தில் புலிகள் NPA ஐ விட பலநூறு மடங்கு வலுவுள்ளவர்களாக இருப்பது உண்மையாயினும் மக்களின் அரசியல் முனைப்பு வீழ்ச்சியடைவது பற்றிய யதார்த்தத்தை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும்.

எமது போராட்ட எழுச்சி மக்களிடையே மழுங்கடிக்கப்படாமல் இருக்கவேண்டுமாயின் நாம் சில வேலைகளை செய்தல் நல்லது. முதலாவது நமது கையில் திட்டவட்டமாக எதுவும் கிடைக்கும்வரை நாம் அதுபற்றிய ஊடக ஆரவாரத்தை சற்றேனும் குறைக்கவேண்டும். பிழையான எதிர்பார்ப்புக்களை மக்களிடம் ஏற்படுத்தும் செய்தி விம்பங்களை கூடியளவு தவிர்க்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சிறிலங்கா அரசு எமக்கு எதையுமே தரப்போவதில்லை என்ற உண்மையை மக்களிடம் மீண்டும் மீண்டும் சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக சொல்ஹெய்ம் வந்துசெல்லும் ஒவ்வொரு முறையும் அதை நாம் உரத்துக் கூறவேண்டும்.


——————————————–

இலங்கை அரசியலில் தமிழர் தலை விதியை எதிர்வு கூறிய சிவராமின் தீர்க்க தரிசனம்

உலகின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி எவ்வளவு தூரம் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றதோ அதேயளவு பங்கினை தனிமனித ஊடகவியலாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனித சமூகத்தின் அரசியல், பொருளியல், சமூகவியல் வளர்ச்சிக்கு ஊடகவியலாளர்களின் பங்கு அபரிமிதமானது.நம் சமூக மாற்றத்திற்கும், அரசியற்சிந்தனை மாற்றத்தினை சமூகத்திற்கு எடுத்துச் செல்லுகின்ற அல்லது சொல்லுகின்ற பேராசான்களாக ஊடகவியலாளர்கள் விளங்குகின்றனர்.

சமூகமாற்றத்தினை வேண்டி நிற்கின்ற சமுதாயங்களுக்கும் இனக்குழுமங்களுக்கும் புதிய அறிவியல், அரசியற் சிந்தனைகளை வழங்குகின்ற ஊடகவியலாளர்களை அரசியல் மாற்றத்தை விரும்பாத எதேச்ச அதிகார அரசுகள் அடக்குகின்றன, அடக்கி ஒடுக்க முனைகின்றன. அல்லது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடக்குகின்றன. உலகின் அரசியற், சமூக பொருளாதார மாற்றத்தினை வேண்டிநிற்கின்ற நாடுகளில், அல்லது சமூகங்களில் ஊடக அடக்குமுறையில் முன்னணியில் திகழும் பர்மா, கெயிற்றி, ஈரான், ரஷ்யா சீனா. நேபாளம். இந்தியா. வங்காளதேசம். சேமாலியா போன்ற 16 நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தை வகிக்கின்றது.

இலங்கையில் கடந்த ஐம்பது வருடகால வரலாற்றில் இன முரண்பாட்டையும், சமூகவியல் மாற்றத்தினையும் ஏற்படுத்த முனைந்த பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது கடத்தப்பட்டனர். அல்லது கொலைமிரட்டல் விடுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளுக்குள் 40 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதிலிருந்து ஊடக அடக்குமுறையின் குரூரம் புரியும். இவ்வாறான ஒரு நெருக்கடி மிகுந்த இனவிடுதலைக்கான சிவில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் உண்மையின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நீண்ட வரிசையில் டி.சிவராம் தனித்துவமானவர்.

தமிழரின் நோக்குநிலையில் இருந்து இலங்கையின் அரசியல். சமூக விவகாரங்களையும். அன்றாடச் செய்திகளையும். ஆங்கில மொழிமூலம் வழங்கும் ‘தமிழ்நெற்’ இணையத்தளம் உலகப்பிரசித்தமானது. இலங்கையுடன் தொடர்புடைய வெளிநாட்டு இராசதந்திரிகளின் அலுவலக மேசைகளில் அதன் நாளாந்த கணனிப் பிரதிகள் எப்போதும் இருக்குமளவிற்கு செய்திகளின் உண்மைத்தன்மையும் நேர்த்தியும் செய்தி ஆய்வுகளும் தரம்வாய்ந்தவை இத்தகைய சர்வதேச தரத்திற்கும் கீர்த்திக்கும் காரணம் அவ் இணையத்தளத்திரனை உருவாக்கி வழிநடத்தியது டி.சிவராம் தான்.

சிவராம் பத்திரிகைத்துறை ஜாம்பவான். இனப்பற்றும், நேர்மையும், துணிச்சலும் மிக்க ஊடகவாதி ஆங்கிலம் தமிழ் இரு மொழிகனிலும் அறிவுசார் புலமையுள்ள ஒரு அரசியல். இராணுவ ஆய்வாளன். புத்திஜீவிகள் வியக்கும் வண்ணம் இலாவகமான பொருட்செறிவுடைய சொல்லாடல்களை பயன்படுத்தி அலாதியாக அவருடைய பேனா ஆய்வுக்கட்டுரைகளை வரையும் தர்கரீதியானதும், வாசிப்போரின் அறிவியல் தேடலுக்கு நல்ல தீனியாகவும் அதேநேரம் மனதைக்கவர்ந்து பதியும் வண்ணம் மாக்சீயக் கருத்துக்கள் அவருடைய ஆய்வுக்கட்டுரைகளில் பலமாகவும், ஆழமாகவும் பொதிந்து கிடக்கும். தமிழர் தாயகத்தின் புவியியல் கேந்திரத்தன்மை பிராந்திய வல்லாதிக்க புவிசார் அரசியல் நிலைப்பாடு என்பவற்றை போரியல் இராணுவ நோக்கில் தர்க்கீகமாகவும் ஆழமாகவும் அலசி ஆராய்ந்து அவர் எழுதும் இராணுவ ஆய்வுக்கட்டுரைகளை பாமரமக்கள் முதல் சிங்கள புத்திஜீவிகள் வரை ஏன் இராணுவத்தளபதிகளும் ஆர்வமாகப் படித்தனர். அவரது நடுநிலமையானதும் ஜதார்த்த பூர்வமானதுமான இராணுவ ஆய்வுகளிலிருந்து படைத்தரப்பு தமது போரியல் வியூகங்களை வகுக்க முற்பட்டது.

டி.சிவராம் என்ற சொல்லின் பின்னால் உண்மை, நேர்மை, நட்பு, துல்லியம், தர்க்கீகம் மாக்சீசம் தீர்க்கதரிசனம் எனப்பல்வகைப் பண்பும் பல்துறை ஆற்றலும் விரிந்துகிடக்கின்றது. ஒப்பாரும் மிக்காருமில்லாத தனித்துவமான, உலகமே வியந்து அந்த ஊடகப் போராளியை, அரசியற் சிந்தனையாளனை, மானிட நேயவாதியை நாட்டுப்பற்றளனை விடுதலைவிரும்பியை எல்லாவற்றிற்கும் மேலாக எனது மானசீகக் குருவை காலனிடம் பறிகொடுத்து ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையிலும் அந்த மாமனிதனின் வெற்றிடத்தை நிறப்புவதற்கு ஈழத்தாய் இன்னொரு பிரசவம் செய்யவேண்டும். இந்த நூற்றாண்டிலாவது முடியுமா என்றால் இல்லவே இல்லை. சிவராமுக்கு நிகர் சிவராம் தான் வேறு யாராலும் முடியாது.

ஆகவே இவ்வகைப்பட்ட கிடைத்தற்கரிய ஊடகவியலாளனின் வாழ்வும் வளமும் பற்றி என் சிறிய மனக்கண்ணில் விரிந்தவைகள். தர்மரட்ணம் சிவராம் 11.08.1959 இல் தமிழர் தாயகத்தில் கிழக்கில் உதித்த சூரியன். சென்.மிசேல் கல்லூரியில் கல்விகற்று பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தேர்வானவர். 1982 இல் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது அன்றைய நாளில் வடகிழக்கில் இளைஞர் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி, இன முரண்பாட்டின் தீவிரம், கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்கு முறையின் கொடூரம் என்பனவற்றினால் தமிழ் இளைஞர்கள் போராட்ட இயக்கங்களின் பால் சென்றபோது டி.சிவராமும் அந்த இளைஞர்களில் ஒருவராக இருந்தார். காந்தீயம் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் இணைந்திருந்த டி.சிவராம். பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர முடியாமல் தமிழர் சுய நிர்ணயத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் அமைப்புக்களில் தமிழீழ விடுதலைக்கழக அமைப்பில் (புளொட்) இணைந்து தனது தாயகத்திற்கான பணிகளைச் செய்ய ஆரம்பித்தார். வடக்குக் கிழக்கின் மூலை முடுக்குக் கிராமங்கள் முதல் காடுகள், மலைகள் ஈறாக கால்நடையாகவும், உந்துருளியிலும், ஈருருளியிலும் அலைந்து திரிந்து மக்களைச் சந்தித்தவர். அவர் சென்ற இடமெல்லாம் அப்பிரதேசத்தின் சமூகப் பண்பாட்டு விழுமியங்கள், பொருளாதார வளங்கள், புவியியல் நிலமைகள், இராணுவக் கேந்திரத்தன்மை என்பவற்றினை மிக ஆழமாக்க் கிரகித்துக் கொண்டவர். இதனால் தான் பின்நாளில் அவரால் பத்திரிகைத்துறையில் ஜாம்பவானாக விளங்கமுடிந்தது.

1980களின் நடுப்பகுதியில் விடுதலைக்காகப் போராடிய விடுதலை அமைப்புக்கள் வழி தவறிப்போக விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்த முனைந்த விடுதலைப்புலிகள் இயக்கம். அவ்வாறு வழிதவறிப் போனவர்களை தமிழர் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தடைசெய்தனர். எஞ்சியவர்களை தம்முள் உள்வாங்கிக் கொண்டனர். இவ்வாறு தடைசெய்யப்பட்ட புளொட் அமைப்பில் யாழ்ப்பாணத்தின் முக்கியமான பொறுப்பாளர்களில் ஒருவராகவிருந்த டி.சிவராம். அதிகார பூர்வமாக புளொட் இயக்கம் தனது அரசியற் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் நிறுத்துவதாக பிரகடணப்படுத்தும் அறிவித்தலை ஈழநாடு பத்திரிகைமூலம் வழங்கிவிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் தனது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நண்பர்களின் உதவியோடு கொழும்பில் வசித்துவந்தாலும் புளொட் இயக்கத்திலிருந்து விலகாமலும், அதே நேரம் இலங்கையின் முக்கிய சிங்கள அரசியல் வாதிகளுடனும், கல்வி மான்களுடனும் தொடர்புகளைப் பேணி வந்ததார்.

1987 இல் நடந்த இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் அப்போது புளொட்டின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் அவர்களால் புளொட் அமைப்பின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட போதும் புளொட் அமைப்பு மேற்கொண்ட மாலைதீவு ஆட்சிக்கவிட்பு, ஜே.வி.பி உடனான தொடர்பு, புளொட் அமைப்பின் கொள்கை விலகல், அமைப்பின் நிர்வாக ஒழுக்கச் சீர்கேடுகள் காரணமாக முற்றுமுழுதாக புளொட் அமைப்பிலிருந்து வெளியேறினார். உண்மையான ஒரு விடுதலை இயக்கம் அயல் நாடொன்றின் ஆட்சிக்கவிழ்பு சதி புரட்சிக்கு கூலிப்படையாகச் செல்லாது. அவ்வாறு செல்லின் அதை ஒரு விடுதலை இயக்கமாக்க் கொள்ளமுடியாது. என்பது அவருடைய கருத்து.

செப்டெம்பர் 8 1988 இல் ஜோகரஞ்சினி என்ற பெண்ணை திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதோடு மானிட விடுதலை பற்றிய சிந்தனையோட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். இதிலிருந்து அவருடைய ஊடகப்பயணம் ஆரம்பமாயிற்று. இவருடைய பல்துறை அறிவியல் ஆற்றலைக்கண்டு வியந்த. இலங்கையின் மூத்த ஊடகவியலாளரான ரிச்சட். டி. சொய்சா. இவரை காமினி வீரக்கோனுடைய ஆங்கிலப்பத்திரிகையான ஐலண்ட பத்திரிகைக்கு கட்டுரைகளை எழுதும்படி வேண்ட தராக்கி என்ற பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். இவ்வாறு பத்திரிகைத் துறையுள் நுழைந்த சிவராம் குஞ்சி, சிவா, SR, தராக்கி, பொன்னம்பலம். ஞானசோதி எனப் பலபெயர்களில் ஊடகங்களில் வலம்வந்தார்.

இவருடைய அரசியல், இராணுவ ஆய்வுக்கட்டுரைகள் ஐலண்ட் பத்திரிகையிலும், வீரகேசரி வார இதழிலும், ஈழநாடு, ரைம்ஸ் போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்தன. இவருடைய தர்க்க ரீதியானதும். அறிவியல் சார்ந்த்தும், விஞ்ஞான பூர்வமுமான ஆய்வுக்கட்டுரைகள் இலங்கையில் புத்திஜீவிகளை மாத்திரமல்ல உலகின் ஊடகத்துறை சார்ந்தவர்களையும், கல்விமான்களையும் வெகுவாகக் கவர்ந்தது. இவ்வாறு பரிணமித்த சிவராம் என்ற பத்திரிகையாளன் 1990 களில் மனித உரிமை அமைப்புக்களினதும், அரசுசார்பற்ற நிறுவனங்களினதும் திட்டமிடல்களுக்கும், செயற்பாடுகளுக்கும் ஆலோசனை வழங்கும் அளவிற்று அறிவியல் ரீதியாக வளர்ச்சியடைந்திருந்தார். இவருடைய ஆங்கிலப்பத்திரிகை ஆய்வுக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து தேர்ந்த கட்டுரைகளின் தொகுப்பு என்ற பெயரில் நூலுருவில் வெளியிடப்பட்டு வடகிழக்கெங்கும் ஆர்வமாகப் படிக்கப்பட்டது. இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொள்ளும் போதெல்லாம் அந்நாடுகளின் இராஜதந்திரிகளையும், ஊடகவியலாளர்களையும் சந்தித்து தமிழர் தரப்பு நியாயங்களை அறிவுபூர்வமாகவும், யதார்த்தபூர்வமாகவும் நிறுவி புதிய கருத்துருவாக்கத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியவர். இதன்மூலம் அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் நம்பிக்கைக்குரியவரானார். இவருடைய கருத்துக்கள் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு வெறுமதி வாய்ந்தவை.

சிங்களத் தலைவர்கள் மத்தியிலும், சிங்களப் பத்திரிகைக் குழாம், சிங்களப் புத்தி ஜீவிகளுடனும் மிக நெருங்கிய தொடர்பைப் பேணியதோடு அவர்களுடன் அன்னியோன்னியமாகப் பழகி கருத்துப் போர்களில் ஈடுபட்டு அவர்கள் யாவர் மத்தியிலும் புரையோடிக்கிடந்த பேரினவாத உணர்வுகளை கண்டு அவர்களுடன் விவாதித்து புதிய கருத்துப் பரிமாறலை ஏற்படுத்தும் கருத்தியல்ப் போர் புரிந்தும் அவர்கள் கேளாச் செவியர்களாகவும், அறிவுக்குருடர்களாகவும் இருப்பதையும் மாறாத உளப்பாங்குடைய இன வெறியர்களாக வளர்க்கப்பட்ட பௌத்தமத பீடங்களின் போக்கினை கண்டு மனம் நொந்ததன் வெளிப்பாடுதான் போர்நிறுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழர் பிரச்சனையை சிங்கள மக்களுக்குப் புரிய வைக்க சிங்கள வானொலிச் சேவையை ஆரம்பித்தபோது 3.10 2004 இல் இதே வீரகேசரி வார வெளியீட்டில் “தமிழர் பிரச்சினையை சிங்கள தேசத்திற்கு விளக்க முனைவது பயன்ற்ற செயல்” என்ற தலைப்பில் தனது 15 வருடகால தென்னிலங்கை கல்விமான்களோடும், கருத்தியலாளர்களோடும் கொண்டிருந்த உறவின் மூலம் தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரை சிங்கள தேசம் தாம் விரும்பியதை மட்டுமே கேட்கத் தயாராக இருக்கின்றது என்பதை மிகச்சலிப்புடனேயே வெளிப்படுத்தியிருந்தார்.

சிவராமின் அரசியற் பார்வையில் ஏற்பட்ட இந்த மாற்றம் பேரினவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது அவருக்குத் தொல்லைகள் அதிகரித்தன. கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இருந்தும் அஞ்சா நெஞ்சுடன் அவருடைய ஆக்கங்களில் தமிழர் அரசியலின் அடிநாதமாக தமிழ்த்தேசியம் இருக்கவேண்டும் என உறுதிபட எழுதுவார். தமிழ்மக்கள் தேசிய விழிப்புணர்வுடன் இருந்து தென்னிலங்கை அரசியற் காய்நகர்த்தல்களை விளங்கிக் கொள்ள வேண்டும் என ஆலோசனை கூறுவார். தமிழர் மத்தியில் பிரதேசவாத்த்தினை தூசுதட்டி எடுத்த கிழக்கு பிரிவிணை வாதிகளுக்கு எதிராக வீரகேசரி இதழிலேயே “கருணாவுக்கு ஒரு பகிரங்க மடல்” என்ற சிறந்த கடித்த்தின்மூலம் வரலாற்று ரீதியாக பிரதேசவாதம் பேசியவர்களின் வீழ்ச்சியும், அன்றைய அரசியல், புவியியல், இராணுவச் சூழலுக்கு கிழக்குப் பிராந்ந்தியம் எவ்வகையில் ஈடுகொடுக்க முடியும் என்றவகையிலான அவருடைய ஆழமான கருத்தியல் பிரதேச வாதத்திற்கு ஆப்புவைத்து சில வாரங்களிலேயே பிரதேசவாதிகளை சிங்களத்தின் கால்களில் தஞ்சமடைய வைத்தது. இது தமிழர் தாயகத்தின் கருத்தியலில் அவருடைய மேலாண்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

டி.சிவராம் அவர்களின் ஆக்கங்களிலே என்றும் அழியாப்புகழைத் தேடித்தந்த ஆக்கங்களாக “இந்தியக் கடற்பாதுகாப்பு வலையத்தில் இலங்கை”, “இந்து சமுத்திர வல்லாதிக்கப்போட்டியில் தமிழீழம்”, “தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முயல்வது பயன்ற்ற செயல்” “கருணாவுக்கு ஓர் திறந்த மடல்” என்பவை அவருடைய பத்திரிகைத்துறை முதிர்ச்சியின் சிறந்த வெளிப்பாடுகள். சிங்களத்தின் அரசியல் நாடகங்களை அம்பலப்படுத்தி டி.சிவராம் பயன்படுத்தும் கடும் தொனி நிறைந்த சொல்லாடல்கள் இனவாத முகத்திரையை கிழித்தெறிவதுடன் தமிழ் மக்களிடம் விளிப்புணர்வை வேண்டிநிற்கும். தமிழரின் இனப்பிரச்சனைக்கு சிங்கள தேசம் ஒருபோதும் அரசியற்தீர்வை வழங்க முன்வர மாட்டாது என்பதை அவரது இறுதிக்காலத்தில் அழுத்திம் திருத்தமாக எழுதிவந்தார். அவருடைய தீர்க்கதரிசணக் கருத்துக்கள் தற்போதும் பொருந்தி நிற்கின்றன. முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் நடந்து ஒரு வருடமாகியும் தீர்வுத்திட்டமென்ற பொதி மாயமாக மறைந்திருக்க உலகிற்கு அரசியல் நாடக சித்துவிளையாட்டுத் தொடர்கிறது.

தற்போதைய அரசியற் சூழலில் விடுதலைப்புலிகளின் இராணுவப் பின்னடைவுக்குப் பின்பும் உருப்படியான அரசியற்தீர்வு யோசனைகள் கூட முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு தமிழர் தரப்பு அரசியற் தீர்வுத்திட்டம் கேட்பினும் அதனைச் செவிமடுக்க சிங்களதேசம் தயாரில்லை. இதனை ஆறு வருடங்களுக்கு முன்பே டி.சிவராமால் அனுமானிக்க முடிந்ததென்றால் அது அவருடைய ஆளுமை வீச்சின் கனதியை உலகுக்குப் புரியவைக்கும்.

இவ்வாறு பத்திரிகைத்துறையில் பல்வகைத்தன்மை கொண்டவராக விளங்கிய சிவராம் இலங்கையில் இனப்படுகொலை நிகழ்கின்றது என்பதனை வரலாற்று, அறிவியல், புள்ளிவிபரவியல்த் தரவுகளோடு வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த வேளை அவருக்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்களையும் பொருட்கடுத்தாது அசாத்தியத் துணிவுடன் “இந்த மண்ணை விட்டு நான் எங்கே போவது. சாவு வருவதெனில் இந்த மண்ணிலேயே எனக்கு நிகழட்டும்” என்று உறுதிபடக்கூறி சாவின் விளிம்பில் நின்றுகொண்டும் தனது பேனாவினால் புதிய சரித்திரமொன்றை படைத்துக் கொண்டிந்த அந்த மானிட நேயவாதியை பேரினவாத்த்தின் கொலைக்கரங்களும், தமிழினத்தின் கோடாரிக்காம்புகளும் சேர்ந்து கோழைத்தனமாக கடத்திச் சென்று கொடூரமாகக் கொன்று அவரது உடலை தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க ஆணையிடும் அந்த அதிகாரச்சின்னமான பாராளுமன்றத்தின் அருகே போட்டுவிட்டுச் சென்றனர்.

தமிழரின் விடுதலைப்போராட்ட கருத்தியல் வரலாற்றில் சிவராமுக்கு தனியிடமுண்டு. அவரின் மகத்தான ஊடகப்பணியைக் கௌரவித்து தமிழர் தேசம் மாமனிதராக போற்றுகின்றது. இவ்வாறே அமெரிக்காவின் கிளாக் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி யூட் பெர்ணாண்டோ அவர்கள் “சிவராமின் இழப்பு மனித நேய அமைப்புக்களுக்கும், கல்விசார் துறையினருக்கும், ஊடகத்துறையினருக்கும், பதிலீடு செய்யமுடியாத இழப்பு” எனக்குறிப்பிட்டதிலிருந்து அந்த மாமனிதனின் கருத்தியல் பரிமானத்தை உலகமே வியந்து நின்றது எனலாம்.

சிவராம் எனப்படுகின்ற அந்த ஊடகப் போராளி கொல்லப்பட்டு ஐந்து வருடங்கள் கழிந்தும் அவருடைய ஆளுமை உலகின் பல்வேறு தரப்பினரது மனப்பதிவிலும் அழியாத தாக்கத்தை ஏற்படுத்திற்று இதன் வெளிப்பாடுதான் லண்டனில் எதிர்வரும் 29.04.2010 வியாழக்கிழமை லண்டன் கொல்பேணில் அமைந்துள்ள கொன்வே மண்டபத்தில் (Conway Hall, 25 Red Lion Square, Holborn London WC1R 4RL)),மாலை 6.30 மணியளவில் சிவராம் ஞாபகார்த்த நினைவுக் கூட்டமும் அவருடைய ஊடகத்துறை பணிசார்ந்த புத்தவெளியீடும் இடம் பெறவிருக்கின்றது. இதில் தெற்குக் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் விக்டேகர் Professor. Mark Whitaker, அவர்கள் கலந்துகொண்டு பிரதம உரையை நிகழ்தவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மனித உரிமைகள் அமைப்பின் சட்டத்தரணி, லீ கரூ கியூசி, மற்றும் பிபிசி தமிழின் முன்னாள் அறிவிப்பாளர் ஆனந்தி, தமிழ் காடியன் பத்திரிகையின் ஆசிரியர் வினோ கணபதிப்பிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

தி.திபாகரன்

———————————————–

ஊடக முன்னோடிப் போராளி மாமனிதர் ‘தராகி’ சிவராம்

மாமனிதர் ‘தராகி’ சிவராம் அவர்கள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களாலும், துணைப்படைக் குழுக்களாலும் கொல்லப்பட்டு, தமிழீழ மண்ணிற்கும், மக்களிற்கும் அவரது சேவை இழக்கப்பட்ட 5வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் இரவு கடத்திச் செல்லப்பட்ட இவர், மறுநாள் கொல்லப்பட்ட நிலையில், கொழும்பு ஜயவர்தனபுர நாடாளுமன்ற உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து இவரது உடலம் மீட்கப்பட்டிருந்தது.


‘தராகி’ சிவராம் அவர்களுக்கு ‘மாமனிதர்’ என்ற தமிழீழத்தின் உயரிய விருதினை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வழங்கியதில் இருந்து, தமிழீழத்திற்கும் தமிழீழ மக்களிற்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பணியினை எடைபோட முடியும்.

தமிழீழத்தின் தலைசிறந்த படைத்துறை ஆய்வாளரான இவர், அரசியல் ஆய்வாளராகவும், ஊடக அசிரியராகவும், ஊடகவியலாளராகவும், இலக்கியப் படைப்பாளியாகவும், சிறந்த பேச்சாளராகவும் பல்வேறு பரிமானங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1959ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் நாள் பிறந்த இவரைப்பற்றியும் இவரது ஊடகப் பணிகள் தொடர்பாகவும், இவரது நண்பரான அமெரிக்காவின் சவுத் கரோலினா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மார்க் விற்றகெர் (ஆயசம றூவையமநச), “டுநயசniபெ Pழடவைiஉள கசழஅ ளுiஎயசயஅ.” ஏன்ற தலைப்பில் எழுதியிருக்கின்றார்.

தமிழ்நெட் (வுயஅடைநெவ.உழஅ) இணையத்தளத்தின் ஆசிரியரான சிவராம், கொழும்பு மற்றும் புலம்பெயர் நாடுகளிலுள்ள பல ஆங்கில, தமிழ் பத்திரிகைகளிலும் பத்தி எழுத்தாளராகத் திகழ்ந்தார்.

1989ஆம் ஆண்டு ஊடகவியலாளர் றிச்சர்ட் டி சொய்சாவினால் ஊடகத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிவராம் அவர்கள், அடுத்த ஆண்டில் கடத்திச் சென்று கொல்லப்பட்ட சொய்சாவின் உடலை அடையாளம் காட்டியபோது, தனக்கும் இதேநிலை ஏற்படும் எனபதை அப்பொழுது உணர்ந்திருக்க மாட்டார். பின்னர் அதனை உணர்ந்தபோது அதற்கு அஞ்சா நெஞ்சனாக வாழ்ந்தவர் அவர்.

வெளிநாட்டு ஊடகத்துறையினருடன் மட்டுமன்றி, அரச பிரதிநிதிகள், அரசியல் அறிஞர்கள், மனித உரிமை அமைப்புக்கள் என்பவற்றுடன் நெருங்கிய உறவைப்பேணிவந்த சிவராமின் இழப்பு, தமிழ் மக்களிற்கும், தமிழ்த் தேசியத்திற்கும் மட்டுமன்றி அவர்களுக்கும் பேரிழப்பைக் கொடுத்தது.

‘மாமனிதர் சிவராமின் இழப்பு, மனித உரிமை அமைப்புக்களுக்கம், வெளிநாட்டு அரசறிவியலாளருக்கும், அறிஞர்களுக்கம் ஈடு செய்ய முடியாதது’ என கிளார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஜூட் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

புளொட் இயக்கத்தின் தலைமையுடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக அதிலிருந்து பிரிந்த பின்னர், தமிழீழ மக்களின் விடுதலைக்காக ஏங்கிய இவருக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைமையும் ஆறுதலாக அமைந்தது.

தமிழீழத் தேசியத் தலைவரையும், தலைமையையும், தமிழீழ மக்களையும் ஆழமாக நேசித்த சிவராம் அவர்கள், தனது உயிர் பறிக்கப்படும் எனத் தெரிந்திருந்தும், அது தமிழீழ மண்ணில் பிரிய வேண்டும் என்ற அவரது எண்ணம், விடுதலைப் பற்றை உணர்த்தி நிற்கின்றது.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடக நண்பர்கள் போன்று இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அதிகம் கிடைக்காத போதிலும், அவருடன் பழகியதாலும், அவர் என்னை மாணவனாக ஏற்றுக்கொண்டதாலும், எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தையும், முன்னேற்றத்தையும், நன்றியையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றேன்.

1999ஆம் ஆண்டு முதன் முதலாக அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தில் (ஐ.பி.சி தமிழ்) இவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஐ.பி.சி நிருவாகத்திற்கும், அந்த நேரத்தில் எமது ஊடகத்திற்குப் பொறுப்பாக இருந்தவர்களுக்கும் நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளேன்.

அரசியலை மேற்படிப்பாகப் படித்திருந்தாலும், அரசியலில் ஆர்வம் இருந்தாலும் வானொலியில் ஒலிபரப்பாளராக இருக்க விருப்பம் இருந்ததே தவிர, ஊடகவியலாளராக, செய்தி ஆசிரியராக வரவேண்டும் என்ற எண்ணம் அந்தக் காலத்தில் எனக்கு இருந்ததில்லை.

ஐ.பி.சி வானொலிக்கு ஒரு செய்தி ஆசிரியர் தேவைப்பட்ட காலம் அது. என்னை நியமிக்க நிருவாகம் விரும்பிய போதிலும் நான் அதற்குப் பின்னடித்தபோது, என்னை தனியாக அழைத்துச் சென்று விம்பிள்டனிலுள்ள கொபி றிபப்ளிக் என்ற தேனீர் கடைக்குள் இருத்தி, புலம்பெயர் நாடுகளில் இளம் ஊடகவியலாளர்களின் உருவாக்கத்தின் அவசியம், புலம்பெயர் மக்களிற்கும், தாயக மக்களிற்கும் உறவுப்பாலமாக இருந்த ஐ.பி.சி செய்தியின் முக்கியத்துவம் (அப்போதெல்லாம் தமிழ்நெட் தவிர தமிழ் இணையத்தளங்கள் இல்லை) என்பவற்றை எடுத்து விளக்கி, அந்தக் கடையில் இருந்து வெளியேறியபோது முழுமையான சம்மதத்துடன் என்னை வெளியேற வைத்தவர்.

என்னை மட்டுமன்றி, அப்போது ஐ.பி.சியின் மட்டக்களப்புச் செய்தியாளராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, யாழ் செய்தியாளர் தவச்செல்வன் போன்ற பல ஊடகவியலாளர்களின் உருவாகத்திற்கும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் அவர்.

ஐ.பி.சி தமிழ் உட்பட பல தமிழ் ஊடகங்களில் தூய தமிழ் பாவிக்கப்பட வேண்டும் என்பதில் பிடியாக இருந்த அவர், அதனை நடைமுறைப்படுத்துவதிலும் முன்னின்று உழைத்தார். இதற்கு உதாரணமாக படை (இராணுவம்), படைத்துறை, படைத்துறை அமைச்சர் (பாதுகாப்பு அமைச்சர்), நீதிமன்றில் முன்னிறுத்தல் (ஆஜர்) போன்ற பல சொற்களை உதாரணங்காட்டலாம்.

தமிழீழத் தேசியத் தலைவர், தளபதிகள், போராளிகள், மக்கள், மண் மீதான இவரது பற்றும் உறுதியும் என்னை மிகவும் கவர்ந்தது. இவர் போன்று நாளாந்தம் தொலைபேசியில் நான் உறவாடிய எமது செய்தியாளர்கள் நிமலராஜன், நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன், நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி போன்றோரின் இழப்பும், உயிர் பறிப்பும் தமிழ் ஊடகத்துறையில் இருந்து முற்றாக ஒதுங்க வேண்டும் என எண்ணும் எனது எண்ணவோட்டத்திற்குத் தடை போட்டு வருகின்றன.

இவர்கள் போன்று சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட 30இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், மாவீரர்களுக்கும் செய்யக்கூடிய ஒரே பணி, வளமான, ஆரோக்கியமான ஊடகத்துறையைக் கட்டியெழுப்புவதும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், அனைத்து இன மக்களின் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பதே.

– ஊடவியலாளர் பரா பிரபா

———————————————
மாமனிதர் சிவராம் (தராக்கி) – ஜெயானந்தமூர்த்தி

பல்திறன் கொண்ட ஊடக நண்பன் சிவராமின் இழப்பு ஐந்து ஆண்டுகள் சென்றாலும் என் மனதை இன்னும் வாட்டிக் கொண்டே இருக்கின்றது. அவரின் இழப்பு ஊடகத்துறைக்கு மட்டுமல்ல தமிழ் சமுகத்திற்கே ஏற்பட்ட பாரிய இழப்பாகும் என மாமனிதர் சிவராமின் நெருக்கிய நண்பரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தாபகர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” மாமனிதர் சிவராமை ஒரு போராளியாக ஊடகவியலாளராக நான் சந்தித்திருக்கின்றேன். அவர் போராளியாக இருந்து நாட்டுக்குச் செய்ததைவிட ஊடகவியலாளராக இருந்து செய்த சேவை என்பது மிக காத்திரமானது. அவர் ஒரு ஊடகவியலாளராக, அரசியல் ஆய்வாளராக, படைத்துறை ஆய்வாளராக, இலக்கியவாதியாக, பேச்சாற்றல் கொண்டவராக……. என்று பல் கலைகளிலும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார்.

அவரைப் பற்றிக் கூறுவதென்றால் அது நீண்டு கொண்டே செல்லும். ஆனால் அவருடன் இறுதிக் காலம் வரை நெருங்கிப் பழகியவன் என்ற வகையில் சிவராமைப் போன்ற ஒரு பல்துறை சார் ஆற்றல் கொண்ட ஒருவரை எமது சமுகம் இழந்திருக்கின்றது. இந்த இடைவெளியை இன்னும் எவராலும் ஈடு செய்ய முடியவில்லை என்பதே உண்மை.

நானும் சிவராமும் நீண்டகாலம் ஊடகத்துறையில் மாத்திரமின்றி கலை கலாசார சமுக, அரசியல் என பல விடயங்களில் ஈடுபட்டிருந்தோம். ஊடகத்துறையில் குறிப்பாக 1997 ஆம் ஆண்டு முதல் தமிழ்நெற் உட்பட சர்வதேச ஊடகங்களில் இணைந்து பணியாற்றிய வேளையில் பல அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது, அந்த வேளையிலும் நாங்கள் இருவரும் அசட்டுத்துணிவில் மோட்டார் சைக்கிளில் இரவு பகல் பாராது மட்டக்களப்பில் சுற்றிக் கொண்டிருந்ததையும் வாழைச்சேனையில் உள்ள எனது வீட்டில் இருவரும் தங்கியிருந்ததையும் இன்றும் என்னால் மறக்க முடியாது.

எங்களுடன் பல ஊடக நண்பர்கள் சேருவதற்கோ, கதைப்பதற்கோ பயந்திருந்த காலமது. எழுத்துத்துறையில் சர்வதேச ரீதியில் என்னை உயர்த்தி விட்டவர் சிவராம் என்பதை நான் மறக்க முடியாது. பேனா கொண்டு எழுதிக் கொண்டிருந்த என்னை கணணி யுகத்திற்குக் கொண்டு சென்றவர் சிவராம்தான். என்னை மாத்திரமல்ல வடகிழக்கு என்ற பேதமின்றி எழுத்துத்துறையில் ஆற்றல் உள்ளவர்களை மாத்திரமல்ல பல புதியவர்களையும் அவர் ஊடகத்துறையில் இணைத்து வளர்த்தெடுத்தார்.

ஊடகத்துறையில் இருக்கும் பலர் இவ்வாறு புதியவர்களை வளர்த்தெடுத்து அவர்களை ஊக்குவிப்பது என்பது மிகமிக அரிதான விடயம். மாறாக போட்டி பொறாமையுடன் ஒருவரை ஒருவர் எவ்வாறு கருவறுக்கலாம் என்றிருந்தோர்கள் மத்தியில் அற்புதமனிதராகத் திகழ்ந்தவர் சிவராம். ஏனைய ஊடகவியலாளர்களை மதிக்கும் பண்பு கொண்ட அவர் ஊடகப் பண்புகளை மதித்து தொழில் ரீதியாக எவரையும் புண்படுத்தாமல் அவதூறு பேசாமல் நாகரீகமாக வாழ்ந்தவர். அந்த பண்பு இன்று சிலரிடம் இல்லை என்பது உண்மை. நான் கொண்ட கொள்கையை ஆழமான தேசப்பற்றை அவர் மிகவும் நேசித்தார்.

இதனால் நாங்கள் இருவரும் தேசியம் தொடர்பான பல வேலைகளில் ஈடுபட முடிந்தது. அவருடன் ஊடகத்துறை மாத்திரமின்றி பல சமுக வேலைகளிலும் நான் ஈடுபட்டிருந்தேன். அது மாத்திரமின்றி கொள்கை தமிழ் தேசியம்விடுதலை என்ற சித்தாந்தத்திற்குள் எனக்கிருந்த அரசியல் என்ற பக்கத்தையும் அவர் இனங்கண்டதனால் நான் பாராளுமன்ற உறுப்பினராகவும் செல்ல முடிந்தது. அவர் தமிழ் தேசியத்திலும் தமிழீழ போராட்டத்திலும் உறுதியாக இருந்தார். எமது தேசியத் தலைவர் மீது ஆழமான பற்று வைத்திருந்தார். இதற்கு உதாரணமாக 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்து செய்யப்பட்டு ஏ9 பாதை திறக்கப்பட்ட ஒரு சில தினங்களில் நானும் சிவராமும் மட்டக்களப்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் வன்னிக்குச் சென்றோம். அது இலகுவான பயணமாக இருக்கவில்லை.

அதிகாலையில் புறப்பட்ட நாங்கள் நண்பகல் வவுனியாவை அடைந்தாலும் ஓமந்தைக்கு அப்பால் போரினால் பாதிக்கப்பட்டிருந்த கரடு முரடான பாதையைக் கடந்து கிளிசொச்சியை அடையும்போது நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவ்வாறு வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத சிரமமான பயணம் அது. முதல் முதலாக வன்னிக்கு இவ்வாறு பயணம் செய்தவர்களும் நாங்களாகத்தான் இருந்தோம். அங்கு பத்து நாட்கள் வரை தங்கியிருந்தாலும் தேசியத் தலைவரைத் சந்தித்தபோது அவர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்ததை என்னால் உணர முடிந்தது.

‘இனி நாம் செத்தாலும் பரவாயில்லை’ என ஒரு கட்டத்தில் என்னிடம் கூறினார். தேசியத்தில் பற்றுக் கொண்ட அவரை சிங்கள தேசம் திட்டமிட்டு அழித்து விட்டது. அவரின் படுகொலைச் செய்தி கேட்டு தாயகமே கலங்கி நின்றது. அவரின் தேசியப் பற்றை கௌரவிக்கும் வகையில் எமது தேசியத் தலைவர் ‘மாமனிதர்’ என்ற கௌரவத்தை வழங்கியதில் இருந்தே அவரின் தேசப்பற்றை புரிந்து கொள்ள முடியும்.

அவர் என்னிடம் அடிக்கடி கூறுவார். “நான் செத்தால் என்னை மட்டக்களப்பு ஆலையடிச்சோலை மயானத்தில் புதைக்க வேண்டும். இதை நீ செய்ய வேண்டும்” என்பார். அவரின் அந்த இறுதி ஆசையை குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் என்னால் நிறைவேற்ற முடிந்தது. அந்த பூரண திருப்தி எனக்கு உண்டு. அவர் இறந்தாலும் அவரின் சிந்தனைகளும் சேவைகளும் என்றும் மறையாது. அது மக்கள் மத்தியில் என்றும் நிலைத்திருக்கும். ஆன்னாரின் ஆத்மா சாத்தியடையப் பிரார்த்திக்கின்றேன். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tharaki Sivaram is on Facebook

கரும்புலி மேஜர் டாம்போ வீரவணக்கம்,


1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:
சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது.

“அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்” இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் எனத் தீர்மானிக்கப்பட்டது.

சண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. குறித்த நேரத்தில் கொண்டச்சி வீதி வழியாக வெடிமருந்து வண்டியை கொண்டு செல்வதற்கு வசதியாக போராளிகள் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாம்போ அந்த இறுதி நேரத்திற் கூட எந்தவித படபடப்புமின்றி காயமடைந்த போராளிகளுக்கு மருந்து கட்டுவதிலும், பிற உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். “எல்லாம் சரி. சக்கை வண்டியை அனுப்பலாம்” களத்தில் கட்டளை பிறக்கிறது. என்னால முடிஞ்ச அளவு முகாமின்ர உள்ளுக்க போய் மோதுறதுதான் என்ர நோக்கம்” சொல்லி விட்டு டாம்போ வாகனத்தில் ஏறத் தயாராகிறான். பக்கத்தில் நின்ற தோழனைக் கட்டியணைத்து முத்தமிடுகின்றான். “நானும் கொஞ்சதூரம் வாறன்” நண்பன் கூற, “வேண்டாம், ஏதும் தவறெண்டாலும் ஏன் வீணா எல்லாரும் சாவான்”

கூறிவிட்டு, வெடிமருந்து வண்டியை எடுத்துக் கொண்டு விரைகிறான் டாம்போ. எதிரியின் ஒருமித்த தாக்குதல் டாம்போவின் வாகனம் நோக்கி திரும்புகிறது. இலக்கை அடையுமுன்னரே அந்தக் கரும்புலி வண்டி வெடித்து சிதறுகிறது.

மன்னார் நாச்சிக்குடா மண்ணில் 17.08.1967 இல் காசிப்பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்த தயாபரன்தான், 1986 களின் நடுப்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். எதிரிகளுடனான மோதலொன்றில் காலில் காயமடைந்தபின் தமிழ்நாட்டிற்கு போக வேண்டியேற்பட்டது டாம்போவுக்கு. அங்கு ஏனைய தோழர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாம்போ காலப்போக்கில் வவுனியா சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அங்கு நடந்த சிறையுடைப்பில் டாம்போவும் வெளியேறினான். பின்னர் தன்னை கரும்புலிகள் அணியில் இணைத்து, இயக்க வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தான். பல வழிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்திய டாம்போவிடம் விஞ்சி நின்றது, வாகனத்தை இலாவகமாக ஓட்டும் சாரதித் திறமையே.

கரும்புலியாய் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு டாம்போ தன் கிராமத்திற்குச் சென்றான். தன் தாய், தந்தையுடன் மகிழ்ச்சியாய் இருந்தான். தாயைக் கட்டியணைத்துக் கொஞ்சினான். அவனது செயற்பாடுகள் தாய்க்கு விசித்திரமாக இருந்தது. சிரித்தாள். அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது, மகன் சாவுக்கு திகதி குறித்துவிட்டான் என்று. தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பாசறைக்குச் சென்றான் டாம்போ. புதிய போராளிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். தான் கரும்புலியாகப் போவதாக அவர்களுக்கு கூறினான். “டாம்போ அண்ணை பகிடி விடுகிறார்” என்று எல்லோரும் சிரித்தார்கள். இரவு ஏனைய போராளிகளுடன் தானும் வேட்டைக்குச் சென்றான். யார்தான் நம்புவார்கள் இவன் நாளைக்கே காற்றோடு கரைந்து விடுவானென்று…. மறுநாள் காலை, அதே முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தனது சொந்த தம்பியை அழைத்தான்.

“நான் போறன், வருவனோ தெரியாது” என்றான் டாம்போ. தம்பிக்கு எதுவுமே புரியவில்லை. அண்ணனை மரியாதையுடன் பார்த்தபடி அவ்விடத்திலிருந்து விலகுகிறான். டாம்போவும் தன் இறுதிப் பயணமாய் பாசறையை விட்டு வெளியேறுகிறான் பாசறையின் வாசலில் நின்று திரும்பி சில நிமிடங்கள் பாசறையையே பார்க்கிறான். சில தோழர்கள் கையசைக்கின்றனர். அவனும் கையசைத்துச் செல்கிறான். அவனது பாதத்தின் சுவடுகளைத் தாங்கிக் கொண்டிருந்த மண் நிச்சயம் மகிழ்வு கொண்டிருக்கும்.

டாம்போ, நீ சென்ற பாதையில் எத்தனை எத்தனை போராளிகள்… அவர்களில் மட்டுமல்ல, ஈழத்தின் காற்றில் கூட நீயும், நீ சொன்னவைகளும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன – அந்தப் பெருமரத்தின் அடியில் இருந்து கொண்டு, நீ சொன்ன உன் சோகம் ததும்பும் குடும்ப வாழ்வும், கரும்புலியாய் ஆனபின் கொண்ட மன நிறைவும்…. நினைத்துப்பார்க்கிறோம்….

“வீட்டில் நான்தான் மூத்த பிள்ளை, இரண்டு தம்பிகளுக்கு பிறகு கடைக்குட்டியா தங்கச்சி பிறந்தாள். என்ர சின்ன வயதிலேயே அப்பாவுக்கு ஏலாமல் போட்டுது. அம்மாதான் கூலி செய்து எங்களை வளத்தவா. நானும் வளந்தாப் பிறகு அம்மாவுக்கு கொஞ்சம் உதவி செய்தன். தம்பி தங்கச்சி நல்லாப் படிக்க வேணும்மெண்டு ஆசைப்பட்டேன். எங்கட வீட்ட எல்லாரும் தங்கச்சியிலதான் உயிர். அவளின்ர சாமத்திய வீட்டுக்கு சொந்தக்காரர் எல்லாருக்கும் சொல்லி, எங்கட வசதிக்கேற்ற மாதிரி பெரிசாச் செய்தம். ஆனா… சாமத்திய வீடு நடந்து பத்தாம் நாள் தம்பிக்கும், தங்கச்சிக்கும் சும்மா ஒரு சின்ன சண்டை. அதால அம்மா தம்பிக்கு அடிச்சுப் போட்டா. தன்னாலதான் அண்ணாவுக்கு அடி விழுந்ததெண்டு நினைச்சு, எங்கட ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து செத்துப்போயிட்டாள்.

இதுக்குப் பிறகு ஒரு நாள் பயணம் போன தம்பியை நேவிக்காரர் பிடிச்சவங்களாம். அதுக்குப் பிறகு அவன் எங்க எண்டே தெரியாது. உயிரோட இருக்கிறானோ, இல்லையோ எண்டே தெரியாது. தங்கச்சி செத்து ஒரு மாதத்துக்கு முதலே மற்ற தம்பி இயக்கத்துக்கு வந்திட்டான். எங்கட குடும்ப நிலவரத்தை அறிஞ்ச சுபன் அண்ணை தம்பியை வீட்டை போகச் சொல்லியும் அவன் போகேல்ல, பிறகு இஞ்ச இந்தக் காம்பிலதான் ஓடித்திரியிறான். நான் தான் ஏத்தியந்து இந்தக் காம்பில விட்டனான்.

நான் கரும்புலியாப் போகப்போறேன் எண்டு தம்பிக்குச் சொல்லிப்போட்டன். ஒருக்கா என்ர முகத்தைப் பார்த்திட்டு பிறகு எங்கயோ பார்த்தான்.

நான் உண்மையாச் சொல்லுறன்ரா, இப்படியொரு நிறைவான சாவு எல்லாருக்கும் வராது…

ஆம்! நீ சொன்னது இன்னும் தெளிவாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

– கதிரவன் –

லெப்.கேணல் ஜொனி வீரவணக்கம்


அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதனிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல். ஜொனி பேச்சுவார்த்தைக்கென இந்திய இராணுவத்தால் அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி முல்லைத்தீவு தேவிபுர பகுதியில் வைத்து சுடப்பட்டு வீரச்சாவடைந்தார்.

1980களில் யாழ்க் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிட்டண்ணாவால் கொண்டு வரப்பட்டது. அதற்கு கிட்டண்ணாவால் சிறீலங்காப் படைக ளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவமிக்க பல தாக்குதல்களில் ஜொனி முன்னின்று சமராடினார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் வந்த போது கிட்டண்ணாவுடன் தமிழகம் சென்றார். இந்திய இராணுவத்துடனான புலிகளின் போர் தொடங்கியது. கிட்டண்ணாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அது சம்பந்தமாக மேலதிக முடிவுகளை எடுப்பதற்கு கிட்டண்ணா லெப்.கேணல் ஜொனியை சமாதானத்து}துவராக தேசியத் தலைவரைச் சந்திப்பதற்கு அனுப்பினார். இவர் மூலம் தேசியத் தலைவரின் இருப்பிடத்தை மோப்பம் பிடிக்கும் முயற்சியில் இந்தியப் படைகளும், தேசவிரோத சக்திகளும் ஈடுபட்டன. அது சாத்தியப்படாத நிலையில் ஜொனியை நயவஞ்சகமாகக் கொன்றனர்.

தாயகத்தையும் தேசியத் தலைவரையும் ஆழமாக நேசித்து இன்னுயிரை நீத்த இவ்வீரவேங்கையின் பன்னிரண்டாம் ஆண்டு நிலைவலைகளை நெஞ்சிலிருத்தி தாயக விடுதலைக்கு விரைந்து செயலாற்றுவோம்.

ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி?
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்குகிறார்.

இந்தியாவிலிருந்து சமாதான தூதுவராக அழைத்து வரப்பட்டு திரும்பிச் செல்லுகையில் நயவஞ்சகமாக, மூத்த தளபதி லெப். கேணல் ஜொனியை இந்தியா சுட்டுக்கொன்றது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் வரலாற்றுத்துறை பொறுப்பாளருமான யோகரட்ணம் என்ற யோகி விளக்கியுள்ளார்.

16.03.2006 அன்று லெப்.கேணல் ஜொனி அவர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி “புலிகளின் குரல்” வானொலியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர் திரு. யோகரத்தினம் யோகி ஆற்றிய நினைவுரை:

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.

கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார்.

ஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன்சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.

மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.

ஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார்.

படைநிலைகளைப் போய்ப் பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகளின் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார்.

ஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தினார். அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டார்.

10.4.85 யாழ்ப்பாணம் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர்.

19.12.84 ஆம் ஆண்டு தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.

ஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி மைதானத்தையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது.

அதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை பலப்படுத்தப்பட்டிருந்தது. அகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது.

காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாம் மூடப்பட்டது. காவல்துறை கைப்பற்றப்பட்ட பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும் இந்தியப் படையுடன் சுதுமலையில் நடந்த தாக்குதலின் போது பாரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி.

கட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது.

இந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் தந்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சி தந்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார். முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம்.

இந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார்.

அதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார்.

ஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம்- தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம்- அருகாமையில் சென்றுவிட்டோம்- நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர்.

தேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார்.

தான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார். நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் ஆத்திரமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் கோபத்தோடு இருந்தார் தலைவர்.

அவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது சமாதானத்தை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார். இந்த வகையில் கேணல் கிட்டுவை ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார்.

நெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மணலாற்றுக் காட்டிலிருந்து என்னை ஜொனியை அழைத்துவர தலைவர் அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் நான் அவரை விசுவமடுவில் சந்தித்தேன்.

இரண்டு நாட்கள் நான் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தேன். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் சமாதானத்தைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, சாமதானம் ஏற்பட சாகுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார். பிறகு நான் ஒரு இழுபறியுடன்தான் மேஜர் தங்கேசுடன் புறப்பட்டோம். போகின்ற வழியில் இந்த இந்த இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு இந்திய பாசறைகள் அமைக்கும், அங்கு உங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும்- தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார். அவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான்.

நான் அவரைக் கூட்டிச் செல்லும்போது, “தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்- சொல்வீர்களா என்று தெரியவில்லை- இருந்தாலும் சொல்லுங்கள்” என்று சொன்னேன்.

நாங்கள் பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் ஜொனியைப் பற்றி சொன்னேன். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னேன். அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா? யோகி வந்துள்ளாரா? என்று.

அந்தக் காலகட்டத்தில் மெல்லிய சப்தத்திற்கு கூட விழித்து விழிப்பாக இருப்பார். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு. அந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார்.

தலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். கதிரை, மேசை எல்லாம் அப்போது இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு.

பின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்ல ஆயத்தமாக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று கேட்டேன், “என்ன நடந்தது? எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா?” என்று கேட்டேன். அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்..”எதுவுமே கதைக்காதீங்க.. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்” என்றார். “என்ன முடிவு?” என்று கேட்டேன்.

தலைவர் கூறினார், “இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. யாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்” என்றார். “நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்” என்றார் ஜொனி.

இடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார்.

ஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம்.

அவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது.

போராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார்.

இத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவு கூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே என்றார் யோகி.

உயிரைக் கொடுத்தவர்களின் உயிர்ப்பு நினைவுகளோடு…

சுவிசில்,பிரித்தானியாவில் முருகதாசனின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நெஞ்சினில் சுமந்து…

  • ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு சுவிசில் ஜெனிவா நகரில் அவர் தீக்குளித்த ஐ.நா.சபை முன்பாக நேற்று 13.02.2010 அன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெற்றது. இதேவேளை லண்டனிலும், தியாகி முருகதாசன் நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
  • இலங்கை அரசு ஈழத்தில் நடாத்திய போரினால் ஏற்பட்ட தமிழின அழிப்பைக் கண்டு கொதித்தெழுந்த வ.முருகதாஸ் லண்டனிலிருந்து சென்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா தலமையகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்தி மாபெரும் தியாகம் புரிந்த ஓராண்டு நினைவு நாளான நேற்று (12-02-2010) லண்டனில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது.

அத்தோடு தாயக விடுதலைக்காகவும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகவும் வீரத்தமிழன் முத்துக்குமார் தொடக்கம் ஈகைப்பேரொளி முருகதாசன் வரையிலான பத்தொன்பது தியாகிகளுக்கும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

முதல் ஈகைச்சுடரினை ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் தந்தையார் அவர்கள் ஏற்றிவைக்க மீதி பதினெட்டு தியாகிகளுக்கும் ஐரோப்பா வாழ் இளையோர்கள் சுடரினை ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும் நடைபெற்றது.

ஈகைப்பேரொளி முருகதாசன் இறுதியாக தீயிட்டு மடிந்த இடத்தில் அவருக்கான நினைவுதூபி வைக்கப்பட்டு வணக்கம்செலுத்தப்பட்டது.

கடும் குளிருக்கு மத்தியிலும் கலந்து கொண்ட மக்கள் கண்களில் கண்ணீர் மல்க அவர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகைதந்த இளையோர் யேர்மன், பிரெஞ், ஆங்கில மொழிகளில் தற்போதைய தமிழர் அடக்குமுறைகள் பற்றியும் ஈகைப்பேரொளிகளின் தியாகங்கள் பற்றியும் எடுத்துக்கூறியிருந்தனர்


லண்டனில், தியாகி முருகதாசன் கல்லறையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு

இலங்கை அரசு ஈழத்தில் நடாத்திய போரினால் ஏற்பட்ட தமிழின அழிப்பைக் கண்டு கொதித்தெழுந்த வ.முருகதாஸ் லண்டனிலிருந்து சென்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா தலமையகத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்தி மாபெரும் தியாகம் புரிந்த ஓராண்டு நினைவு நாளான நேற்று (12-02-2010) லண்டனில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது.

இலண்டனில், நேற்று முந்தினம் முருகதாசனின் கல்லறையில் கூடிய பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரும், ஈழத்தில் சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழினத்தின் இனப்படுகொலைக்கு, சர்வதேச நீதி விசாரணை கிடைக்கும்வரை போராட உறுதி பூண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

ஈழத்தில் நடைபெற்ற நான்காம் போரினில் 20க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகள் இலங்கையோடு இணைந்து கொண்டு நடத்திய தமிழின அழிப்பைக் கண்டு உலகமெல்லாம் பரவி வாழும் தமிழர்கள் கொதித்தெழுந்தனர். போர்நிறுத்தம் கோரி புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அபயக்குரல் எழுப்பினர். அகிம்சை முறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

தாய்த் தமிழகத்தில் மாணவர்கள் கல்லூரியை மூடிவிட்டு தெருவில் இறங்கி போராடினர். தமிழ் சமுதாயம் மனிதசங்கிலி கோர்த்து ஈழத்தில் தமிழ் மக்களுக்கெதிரானப் போரை நிறுத்தக்கோரி ஆர்ப்பரித்தனர்.

ஆனால், சிங்கள பேரினவாத அரசை தடுப்பதற்கு உலக நாடுகள் செவிசாய்க்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையும் அதன் அங்கத்தினர் நாடுகளும் அப்பாவித் தமிழ் மக்களின் படுகொலையை அலட்சியப்படுத்தின. வெகுண்டு எழுந்தனர் தமிழ் இளைஞர்கள்.

இந்திய அரசையும் சர்வதேச நாடுகளையும் ஈழத்தில் நடக்கும் தமிழினப் படுகொலையை நிறுத்தக்கோரி, தங்களது தேக்கு மர உடலை தாங்களே தீமூட்டி தீக்கிரயாகினார்கள்.

முத்துக்குமார் தொடங்கி முருகதாசன் வரை தமிழகம், மலேசியா மற்றும் பிரித்தானியா வரை வாழும் 19 வீரமிக்க தமிழ் இளைஞர்கள் தமிழின படுகொலையை நிறுத்தக்கோரி தங்களது உயிரைக் காணிக்கையாக்கினார்கள்.

அப்பாவித் தமிழ் மக்களின் இனஅழி;ப்பை தடுக்க இயலாத ஐ.நா.சபைக்கு முன்பாக உயிர்க்கொடை கொடுத்த, முருகதாசனின் தியாகம் உலகம் முழுவதையுமே உலுக்கிய ஒரு சக்தியாக மாறியதோடல்லாது, இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் தமிழீழத்தில் புரிந்த கொடுமைகளை, தமிழின அழிப்பை, இனப்படுகொலையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

முருகதாசன் உடல் எரிந்திருக்கலாம். ஆனால் அம்மாவீரனது உயிரும் உணர்வுகளும் உலகம் முழுதும் வாழும் ஒன்பது கோடித் தமிழர்களது ஒவ்வொரு நெஞ்சத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை செய்த உயிர்த்தியாகமானது இன்று உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தியிருக்கிறது.

தேசியத் தலைவன் மீதும் கொடியின் மீதும் ஆணையிட்டு உறுதி எடுக்கின்றோம், எந்த இடர் வரினும் ஈழம் வெல்லும் வரை புலத்தில் ஓயமாட்டோம்

மாபெரும் இயங்கு சக்தியாக நின்று இன்றும், நாளையும், என்றும் எம்மையும், எமது தேசிய விடுதலைப் போராட்டத்தையும் வழிநடத்திச் செல்லும் எங்கள் தேசியத்தின் ஆத்மா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதும், எமது தாய்மண்ணாகிய தமிழீழத் தாயகம் மீதும், தமிழ் மொழி மீதும், எமது தேசியக் கொடி மீதும் ஆணையிட்டு, பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றோம்: என ஜநா முன்றலில் நடைபெற்ற விடுதலைத் தீ பேரெழுச்சி நிகழ்வில் உலகத் தமிழ் இளையோர் போர்முழக்கம் செய்து உறுதிப்பிரமானம் எடுத்துள்ளனர்.

தாயக விடுதலைக்காய் தம்முயிரை தற்கொடையாக்கித் தந்த முருகதாசன் உள்ளிட்ட இன்னுயிர்த்தியாகிகளின் நினைவுப் பேரெழுச்சி நிகழ்வில் இவ் உறுதிப் பிரமானதை முன்மொழிந்த உலகத் தமிழ் இளையோர் எந்த இடர்வரினும் இலட்சியப்போர் வெல்லும்வரை ஓயமாட்டோம் என உலகுக்கு இடித்துரைத்துள்ளனர்.

  • கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஜநா முன்றலில் ஒன்றுதிரண்ட தமிழினம் ஈழ விடுதலைக்காய் தம்முயிரை ஈகம் செய்தவரை இறுதிவரை மறவோம் என்ற நெஞ்சார்ந்த உணர்வோடு வெளியிட்ட விடுதலைத் தீ தீர்மானம் வருமாறு

தமிழீழத் தனியரசை நோக்கிய எமது பயணத்தில்…..

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தமிழீழத் தனியரசு என்ற இலட்சிய வேட்கையுடன் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் விடுதலைத் தீமூட்டித் தன்னுயிரை ஆகுதியாக்கிய ஈகப்பேரொளி – முருகதாசன் மீதும், தமது உயிரை வேலியாக்கி களமாடி வீர காவியமாகிய மாவீரர்களின் ஈகவரலாறு மீதும், தாய் மண்ணை இறுதிவரை நேசித்து மானச்சாவெய்திய எமது மக்கள் மீதும், மாபெரும் இயங்கு சக்தியாக நின்று இன்றும், நாளையும், என்றும் எம்மையும், எமது தேசிய விடுதலைப் போராட்டத்தையும் வழிநடத்திச் செல்லும் எங்கள் தேசியத்தின் ஆத்மா – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மீதும், எமது தாய்மண்ணாகிய தமிழீழத் தாயகம் மீதும், தமிழ் மொழி மீதும், எமது தேசியக் கொடி மீதும் ஆணையிட்டு, பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றுகின்றோம்: என ஜநா முன்றலில் நடைபெற்ற விடுதலைத் தீ பேரெழுச்சி நிகழ்வில் உலகத் தமிழ் இளையோர் போர்முழக்கம் செய்து உறுதிப்பிரமானம் எடுத்துள்ளனர்.

  • ஈழத்தமிழர்கள் என்ற தேசிய அடையாளத்தைக் கொண்ட தமிழீழக் குடிமக்களாகிய நாம், எமது பாரம்பரிய – வரலாற்றுத் தாயகமாக விளங்கும் தமிழீழ மண்ணில், எமக்கே உரித்தான தன்னாட்சியுரிமையின் அடிப்படையில், சுதந்திரமும் இறையாண்மையும் பொருந்திய தமிழீழத் தனியரசை நிறுவுவதில் அசையாத உறுதியும், தணியாத வேட்டையும் கொண்டுள்ளோம் என்பதை உலக சமூகத்திற்கு இடித்துரைக்கின்றோம்.
  • வரலாற்றுக்கு முந்திய காலம்தொட்டு அரசும், கொடியும், கொற்றமும் கொண்டு ஈழத்தீவில் ஆட்சிசெய்த நாம், எமது தாயக பூமியாகிய தமிழீழ மண்ணில் மீண்டும் சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவி எமது இறையாண்மையை நிலைநாட்டுவதில் உறுதிபூண்டுள்ளோம்.
  • எத்தனை இடர்களை எதிர்கொண்டாலும், எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும், எத்தனை இழப்புக்களுக்கு ஆளானாலும், எமது இலட்சியத்தில் இருந்து விலகமாட்டோம் என்றும் இத்தருணத்தில் நாம் உறுதிகொள்கின்றோம்.

எமது இவ் இலட்சிய உறுதி மொழியினூடாக ஜநா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் உடனடிக் கவனத்துக்கான சில வேண்டுதல்களையும் விடுக்கின்றோம்.

அவையாவன:

  • தேசிய இனமாக விளங்கும் எமது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொண்டு, எமக்கேயுரித்தான எமது தாயக பூமியில் நாமே எம்மை ஆட்சிசெய்வதற்கும், தேசிய அரசுகளின் சமூகத்தில் எமது தமிழீழ தேசமும் இணைந்து கொள்வதற்குத் தேவையான அனைத்துலக அங்கீகாரத்தையும், இராசரீக உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு, ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கும், உலக சமூகத்திற்கும் நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.
  • தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான மக்களாணை வாக்கெடுப்புக்களை நாம் நிகழ்த்துவதற்கு தாராண்மை – சனநாயக நல்லாட்சி கொண்ட மேற்குலக தேசங்கள் இடமளித்து ஒத்துழைப்பு வழங்கியமை போன்று, எமது தமிழீழ தாயக பூமியில் எமது உறவுகளும் நிகழ்த்துவதற்கு வழிவகைசெய்து, தமது அரசியல் தலைவிதியை அவர்களே தீர்மானிப்பதற்கான அரசியல் இடைவெளியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மன்றத்திடமும், உலக சமூகத்திடமும் நாம் கோருகின்றோம்.

எமது இந்தக் கோரிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு ஏதுவாக:

  • தமிழீழ தாயக பூமியை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள அந்நிய ஆயுதப் படைகளை உடனடியாகவும், நிரந்தரமாகவும் வெளியேற்றுவதற்கும்;
  • தமது சொந்த நிலங்களில் எமது உறவுகளை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கும்;
  • நவநாகரீக உலகின் மனச்சாட்சிக்குப் பெரும் கேடாக விளங்கும் வதைமுகாம்களை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கும்;
  • எமது தாயக பூமியில் சிங்கள அந்நியக் குடியேற்றங்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும்;
  • எமது மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்புப் பொறிமுறைகளை எமது தாயக பூமியில் ஏற்படுத்துவதற்கும்;
  • எமது மக்களின் மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கும்;
  • எமது மக்களை மனிதநேய உதவிகள் சென்றடைவதற்கும்;
  • மூன்று தசாப்தகால இடைவெளியில் இரண்டரை இலட்சம் ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவித்து இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனவழித்தொழிப்பையும், இனப்படுகொலையையும், இனச்சுத்திகரிப்பையும் அரங்கேற்றிய சிறீலங்கா அரசையும், அதன் ஆட்சியாளர்களையும், ஆயுதப் படைகளையும், நீதியின் முன்னிறுத்துவதற்கும்;
  • சிறீலங்கா அரசு மீதும், அதன் ஆட்சியாளர்கள் மீதும், ஆயுதப் படைகள் மீதும் இனவழித்தொழிப்பு, போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றம் போன்ற சட்டபூர்வத் தளங்களில் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கும்;

விரைவாகவும், காலம் தாழ்த்தாதும், காத்திரமான முறையிலும் நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

  • விடுதலை கிட்டும் வரை எமது விடுதலைத் தீ அணையாது! தனியரசை நிறுவும் வரை எமது சுதந்திரத் தாகம் தணியாது!

”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் கோசம் எம் உயிரிலும் மேலானது என்ற போர் பரணியோடு பிரகடனம் செயல்லுருப்பெற்றது.

CNN Documentary about V-Murugathasan

முதலாம் ஆண்டு வீரவணக்கங்கள்

நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன்


தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் இசையரசன்
தமிழீழப் பாடகர் இசையரசனின் நினைவுகளோடு……….

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் உலகச்சேந்தன்
————
வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்: கப்டன் நெடுஞ்செழியன் வீரச்சாவு
——————–

நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி
ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பு

#featured {display:none;} #main-wrapper { float: left; width: 618px; margin:10px 0 0 8px; padding:10px; display: inline; background:#ffffff; border: 1px solid #d8e1f0; } .post { width:618px; padding: 0px; margin: 0px auto; line-height: 1.4em; overflow:hidden; } .postbox { padding: 0px; border: none; } .post h3 { letter-spacing: -1px; font-size: 1.5em; color: #4169E1; font-weight: normal; } .post-body { height:100%; } sathiyamoorthy

———————


வர்ணகுலசிங்கம் முருகதாசன்

Up ↑