ஈழ தேசத்தின் இளவரசியே !

-இளவரசி- பாருக்கு எம்மினத்தை பறைசாற்றிய படைவீரன் வேலுப்பிள்ளை மகனின் குருதிப் பகிர்வே – எம் குலக்கொழுந்தே !!!! யாருக்கும் அஞ்சாமல் கரிகாலன் கைபிடித்து போருக்குள் வாழ்வமைத்த புங்கையின் பேரழகி பெத்துப்போட்ட பொக்கிஷமே !!! அகிலமே வியந்து போற்றிய அப்பனுக்கு பிள்ளையாகினும் அடுத்தவீட்டுக் குழந்தையைப் போல் ஆடி, ஓட முடிந்ததா உன்னால் அமைதித்தூக்கம் கிடைத்ததா உனக்கு ?? குளிரூட்டியின் சுகக்காற்றும் சொகுசான படுக்கைகளும் எம்மில் பலருக்குத் தந்துவிட்டு குண்டுச்சத்தமும்,கொசுக்கடியும் எளிமை வாழ்க்கையும் ஏற்றவளே !!! உங்கப்பன் நினைத்திருந்தால் உலகில்… Read More ஈழ தேசத்தின் இளவரசியே !

மகளீர் தின வாழ்த்துக்கள் !

பாரதியார் கண்ட புதுமைப் பெண்கள் நாங்கள் இல்லை : பிரபாகரன் வளர்த்தெடுத்த வேங்கைகளே நாங்கள் ” அடுக்களை கிடந்தோம் ஆயுதம் ஏந்தியே, விடுதலை தீயைச் சுமந்தே விரைந்திட வைத்தான் ” பூமாலை உதிர்த்து நஞ்சு மாலை சூடி புயலாய் மாறிய எங்கள் புனிதப் பெண்களுக்கு இனிய மகளீர் தின நல் வாழ்த்துக்கள் “” -ஈழவன் தாசன்

தாயிலாப்பிள்ளை யானோம் தலைவனை இழந்த பின்னே…..?

தாயிலாப்பிள்ளை யானோம் விடுதலை தந்த மூச்சே என் வியாபகப்பொருளே உன்னைப் பாடக்கூட முடியவில்லை உனக்காய் பாமாலை சூட்டியவன் உனக்கு பூமாலை சூட முடியாமல் தவிக்கின்றேன்? இறைவன் என்கிறார்/நீ மனிதன் என்கிறார் /இல்லை முற்றும் துறந்த முனிவன் என்கிறார் அதனால் உனக்கு…. வழிபாடு தேவை இல்லை என்கிறார் அய்யன் அய்யனே பூசைக்கு வராதா திருவே உருவம் நீ வீதிக்கு வராத உருவே வதனம் நீ ஆசைக்குக் கூட உன்னை அழகுத் தேரில் அழைத்து, வரமுடியவில்லை என் காவல்தெய்வம் கரிகாலச்… Read More தாயிலாப்பிள்ளை யானோம் தலைவனை இழந்த பின்னே…..?

முகிலைத் துளைத்த புலிகளும் நிலவைத் துடைத்த தமிழரும்

முந்தி ராவணன் ஏற்றிய புஷ்பகம் முகில் துளைத்ததாம் அதன்பிற கின்றுதான் சொந்தமான வானூர்தியில் தமிழனும் சோதிமின்னிடத் தோன்றினான் ஆமிது விந்தைதானடா. போரிடை ஆடும்மண் விடியும் என்பதற்கான குறியுடன் எந்தைநாடினி எதற்கும் அஞ்சாதென இறக்கைகட்டிப் பறந்த பறப்படா. 26.03.2007 திங்கட்கிழமை ஈழத்தமிழருக்கு முகில்கள் தலைவாரியநாள். நள்ளிரவிலும் வெளிச்சம் பிரகாசித்த தினம். நீர்கொழும்புக்கு மேலே நின்றிருந்த நட்சத்திரங்கள் யாரிவர்கள் என்று அதிசயித்தன. அச்சத்தில் மகிழ்ச்சி தொலைத்தவர்கள்கூட கச்சையிறுக்கிக் காலிற் சதங்கை பூட்டினர். நாணற்புற்களும் தலைநிமிர்த்தி மானத்தின் மகுடம் தரித்தன. எம்மாலும்… Read More முகிலைத் துளைத்த புலிகளும் நிலவைத் துடைத்த தமிழரும்

எல்லாளன் வாழ்க! – திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன்

எல்லாளன் இருக்கின்றார் எல்லாரும் அறிக ஈழத்தின் இடர்நீக்க  ஈங்கெழுந்தார் தெளிக! “இல்லையினி எல்லாளன்” என்று சொல்லு மெதிரி இடந்தேடி ஓடும்நாள் இனிவிரைவில் வருமே! வெல்வதற்கே வந்த வேங்கை வீரரவர் வெல்வார்! வினைமுடிக்கும் பேராற்றல் வள்ளுவத்தாற் பெற்றார்! ஒல்லும்வாய் அவரறிவார் ஓர்நாளில் ஈழம் உருவாக்கி ஒண்டமிழால் அரசாண்டு வாழ்வார்!   துன்புற்றுத் துடிதுடித்துத் தொல்லையுறும் தமிழர் துயர்துடைக்க விலங்கொடிக்கத் துடித்தெழுந்து புலிகள் வன்படையைக் கட்டமைத்தே வாகைசூடி வாழ்வார்! மண்ணோடு கடலோடு வான்முழுதும் வெல்வார்! இன்னலையே இன்பமென ஏற்றபுலித் தலைவன்… Read More எல்லாளன் வாழ்க! – திருக்குறள் பாவலர் தமிழ்மகிழ்நன்

பிரபாகரன் விடுதலையின் விலாசம்!

நகர மறுக்கிற நதியென உறங்குகிற கடற்கரை – வல்வெட்டித்துறை. பேசும் அலைகளின்றி பேராரவாரமின்றி அமைதி காக்கிற அதன் மூச்சுபேச்செல்லாம் விடுதலைப் பெருமூச்சு.   அந்தக் கரையில்தான் உயிரெழுத்தின் நீட்சியென அவதரித்தான் அவன்! அந்த ஆயுத எழுத்தின் உக்கிரத்தால் தான் அடங்கிக் கிடந்தது வக்கிர இலங்கை!   பிரபாகரன் – என்பது ஒரு மனிதனின் பெயரல்ல.. அது விடுதலையின் விலாசம்!   எமது இனத்தின் அறுபதாண்டுக் கால அவல வரலாற்றில் பிரபாகரனும் பிரபாகரனின் தோழர்களும் எழுதியது மட்டும்தான் பவள… Read More பிரபாகரன் விடுதலையின் விலாசம்!

விடுதலைக்கு புதிய வரைவிலக்கணத்தை வரைந்த..தேசியத் தலைவர் பிரபாகரன்!

மாவோ சேதுங்…லெனின்.. மார்க்ஸ்.. என்றெல்லாம்…எண் நிறைந்தோர் .. ஆயிரம் ஆயிரம் வரைவிலக்கணங்களை.. விடுதலைக்கு வரைந்தார்கள்… எங்கள் தலைவன்…. என்ன சொன்னான்? ஒன்றே ஒன்றை மட்டும்தான்… சொன்னான்.. எங்கள் கைகளில் எதிரிதான் ஆயுதத்தை திணித்தான்..அதனால்தான் நாம் போராடுகிறோம் என்றுதான் சொன்னான்.. அதுவே..இன்று தமிழர்களின் உள்ளங்களில் விடுதலைக்கான வரைவிலக்கணம் ஆகிவிட்டது.. ஆம்..நாங்கள்.. ஆயுதப் பிரியர்கள் அல்ல.. இரத்த ஆற்றில் குளித்து..ஓர்.. இலட்சியச் சீனாவை.. அல்லது..உறஷ்யாவை. உருவாக்க வேண்டும்..என்று விரும்பியவர்களும் அல்ல.. நாங்கள் விரும்பியது.. எங்கள் மண்ணில் மாற்றானிடம் கைகட்டி..நின்று கனவிலும்..… Read More விடுதலைக்கு புதிய வரைவிலக்கணத்தை வரைந்த..தேசியத் தலைவர் பிரபாகரன்!

தலைவர் பிறந்த நாள் வாழ்த்துப்பா!

முன்னைத்தமிழ் மண்ணை மீட்க- அன்னைத் தமிழை- அத்தமிழின் பெண்ணைக் காக்க- தன்னைக் கொடையாய்த் தந்திடும் படையைப் படைத்தான்- பகை உடைத்தான்- பைந்தமிழினத்திற்கு கிடைத்தான் இக்கரிகாலன்! ஆண்டாண்டு காலமாய் அடிபட்ட அடிமைப்பட்ட இனத்தின் வலி பொறுக்காது பகை ஒறுக்காது இனம் இருக்காது என்றுணர்ந்து குகைவிட்டு வெளிவந்த புலியாய் வலி கொடுத்தான்- பகையைப் பலி கொடுத்தான்- பாருக்கே கிலி கொடுத்தான் இப்புலித்தலைவன்! தரைப்படை தண்ணீர்ப்படை தாவும் வான்படை என முப்படை படைத்து மூடக்காடையர் முகம் உடைத்து எம் மண்ணை எம்மிடம்… Read More தலைவர் பிறந்த நாள் வாழ்த்துப்பா!

சத்தியப்புதல்வா!…. சரித்திரம் திரும்பும்!….

தலைவா!…தவப்புதல்வா!… இடையிடையே குமுறிஎழுந்த எரிமலை உண்டுதான் இன உணர்வால் குமுறிஎழுந்த எரிமலை நீங்கள் தான் வரும்பகையை முடித்து நீங்கள் வழிகள் காட்டிநீர் தமிழன் வளமாக வாழ்வதற்காய் தனிஈழம் நோக்கிநீர்!… ஈழம் நோக்கும் உங்கள் முடிவில் இன்னல் உண்டுதான் இனிமையான தமிழ்ஈழம்கண்டால் இன்பம் உண்டுதான் மாலை நேரச் சூரியனும் சிவந்தே போகின்றான் பின் காலை வந்தே புதுக்கதிர்களாய் அள்ளித்தருகின்றான்!… அள்ளித்தரும் சூரியனும் நீங்களும் ஒன்றுதான் என அன்னைத்தமிழ் எங்களுக்கு சொல்லித்தருகிறாள் சிவந்துபோன ஈழமண்ணில் நாளை விடியல்தான்-உங்கள் தெளிந்த கண்ணில்… Read More சத்தியப்புதல்வா!…. சரித்திரம் திரும்பும்!….