பெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை !

கருணாநிதியின் மறைவையடுத்து நாம் சில விமர்சனங்களை முன் வைத்த போது பல தமிழக நண்பர்கள் வந்து டிசைன் டிசைனாகச் சண்டை போட்டார்கள்.. அதில் ஒரு நண்பரின் முழக்கம் இது..” இது பார்ப்பானுக்கும் எங்களுக்குமிடையிலான யுத்தம். ஈழத் தமிழர் தலையிட வேண்டாம். திமுகவால்தான் பார்ப்பானை வீழ்த்த முடியும். தமிழகத்திலிருந்து மட்டுமல்ல ஈழத்திலிருந்தும் பார்ப்பனை விரட்ட உங்களுக்கும் சேர்த்து நாம் போராடுகிறோம்” என்றார். எனக்கு பத்து சுனாமி ஒன்றாக அடித்தது போலாகிவிட்டது. திமுக பார்ப்பானோடு யுத்தம் புரிகிறதா? அல்லது விளக்கு… Read More பெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை !

போராடி ஓய்தலே வாழ்வா?

‘இனி உங்களால் அவரை தேட முடியுமா?’ ‘எனக்கு ஏலாது. மகளின் பிள்ளையளப் பார்க்கவேணும்’ – முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிக் களைத்து இறந்துபோன தாயொருவரின் சகோதரியின் பதில்தான் மேற்கண்டது. மகன் எப்ப காணாமலாக்கப்பட்டவர்? ‘நினைவில்ல தம்பி. அவாவுக்குத் தான் எல்லா விபரமும் தெரியும். மகனைத் தேடிக்கொண்டிருக்கும்போதே ஹார்ட்அட்டாக்ல இறந்;திற்றா’ ‘அவாவுக்குப் பிறகு தேடுறது யார்?’ யாருமில்ல தம்பி. மகன் வேலைக்குப்போறார். அவரைப் பார்க்கவேணும். வீடு, வளவு, ஆடு, மாடுகள் பார்க்கவேணும். இனி மகனைத் தேட யாருமில்லை… Read More போராடி ஓய்தலே வாழ்வா?

சத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் !

தமிழர்கள்தான் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள்? அதிலும் 2009 மே மாதத்தில்தானே அந்த இறுதி காட்சி வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது? என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. ஆனாலும் அந்த இறுதிக் காட்சி அரங்கேற முன்னர், அடிப்படையான அல்லது மூல காரணமான ஒரு சம்பவம் ஒரு நாளில், அதாவது இதே நாட்களில் பதினாறு வருடங்களுக்கு முன்னர் (9,10/06/2003) நடைபெற்றிருந்தது. தமிழர்களின் அரசியல் சாணக்கியத்தின் ஒரு புரிதல் அந்த சம்பவம். அப்படியென்ன சம்பவம் என்று நிச்சயமாக ஒருசிலரைத் தவிர தமிழர்கள்… Read More சத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் !

போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்!

      “தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி வெயில் வழிய கதைச்சா வித்தியாசமான முறையில கதைப்பனாம்.” “வெயில்ல நிற்க ஏலாது. கண் இருட்டிக்கொண்டுவரும். தலை சுத்தும், விறைக்கும்.” “அந்த இடத்தில குத்த வெளிக்கிட்டா கை அப்படியே இறுகிப் போயிரும்.”… Read More போரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்!

ஒரு முன் மாதிரித் தேசத்தின் கதை !

போராளிகள் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு தமிழீழ போக்குவரவு கழகத்தால் வழங்கப்பட்ட பற்றுச் சீட்டு இது. இதன் பின்னுள்ளது ஒரு நடைமுறை அரசின் கதை மட்டுமல்ல லஞ்சம்/ ஊழல்/ அதிகாரத் துஸ்பிரயோகத்திற்கு இடமளிக்காத உலகிற்கே முன்னுதாரணமாக அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ஒரு முன் மாதிரித் தேசத்தின் கதையும்தான். இதைத்தான் உலக பயங்கரவாத அரசுகள் ஒன்றிணைந்து அழித்தன.. இதைத்தான் நாமும் தொலைத்துவிட்டு நடுத் தெருவில் நிற்கிறோம். (படம்: ஜெகதீஸ்வரன் பிரசாந்த்) ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி

தமிழா்களின் வாழ்வை நிலைகுலைய செய்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய இன்றைய நாள் !

எந்தவொரு பயங்கரவாதச் சட்டமும் பிரசைகளுக்கெதிரானதாகும் என்பதோடு,’முற்போக்கானது’ என்று அழைக்கப்படமுடியாததாகும். இலங்கையின்; வரலாற்றை எடுத்துக் கொண்டால் பயங்கரவாதத் தடைச்; சட்டம் எமது பிரசைகள்மீது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட செயல்பாடுகளையே பயங்கரத்தின் பின்னணியாக ; கொண்டதாகும்;. இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இதுபோன்ற சட்டங்கள் பெரும் பாதிப்புக்களை மட்டுமல்ல, சிறுபான்மை சமூகத்தை நசுக்கும் ஒரு ஆயுதமாகவும் பாவிக்கப்படுகிறது. இலங்கையின் பயங்கரவாதச் சட்டம் தொடர்பாக மிக விரிவாக ஆராய்கிறது இக்காணொலி, ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா வாதாடிய வழக்குகள் 1982–2019 குட்டிமணி, தங்கத்துரை,… Read More தமிழா்களின் வாழ்வை நிலைகுலைய செய்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய இன்றைய நாள் !

விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் திட்டத்தை 94-லேயே வகுத்திருந்த சர்வதேச சக்திகள்!

‘தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் திட்டத்தை 1994ம் ஆண்டிலேயே சர்வதேசம் வகுத்திருந்ததாகவும், ஆனால் அந்த திட்டத்தில் விடுதலைப் புலிகள் வெற்றிபெற்று விட்டதாகவும்’ தெரிவித்திருக்கின்றார் பிரபல ஈழத்து எழுத்தாளரும், முன்னாள் போராளியுமான குணா கவியழகன். ‘சமாதான ஒப்பந்தம் கூட இன்னொரு யுத்தத்திற்கான ஒரு முன்னோடித் திட்டமே’ என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்பட இருக்கின்ற குணா கவியழகனின் படைப்புக்கள் தொடர்பாக IBC- தமிழ் தொலைக்காட்சிக்கு குணா கவியழகன் வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.… Read More விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் திட்டத்தை 94-லேயே வகுத்திருந்த சர்வதேச சக்திகள்!

யூலை மாதத்தின் குறிப்பாக இன்றைய நாளின் செய்தி இதுதான் !

2001 ம் ஆண்டு 24 யூலை அதிகாலை 14 கரும்புலிகள் கட்டுநாயக்கா வான் படைத்தளத்தை ஊடறுத்து புகுந்தார்கள். பிறகு அங்கு அவர்கள் 14 பேரும் எழுதியது ஒரு இனத்தின் அடங்காமையை, துணிச்சலை, வீரத்தை.. ஒரு இனத்தின் ஒட்டு மொத்த சினமாக அங்கிருந்த வான்கலங்கள் மீது மோதி வெடித்தார்கள். முழு உலகமுமே புலிகளை பார்த்து பிரமித்த நாள் அது. படைவலுச்சமநிலை புலிகள் பக்கம் திரும்பக் காரணமாக இருந்ததும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புலிகள் மீது மேற்குலகம் வலுக்கட்டாயமாகத் திணிப்பதற்குக் காரணமாக… Read More யூலை மாதத்தின் குறிப்பாக இன்றைய நாளின் செய்தி இதுதான் !

முள்ளிவாய்க்காலும், சமயசார்பின்மையும், பூகோள அரசியலும் !

இலங்கைதீவில் இன்று நாம் காண்பது இதற்கு முன்னெப்போதும் நடக்காத ஒன்று.இது வெளியிலிருந்து இத்தீவு முழுவதும் திணிக்கப்பட்டிருக்கிறது. பேரழிவுகளை கொண்டுவரும் பூகோள ரீதியாக சொல்லப்படும் – கிறிஸ்தவத்திற்கு எதிரான இஸ்லாம் அல்லது மேற்குலகத்திற்கு எதிரான இஸ்லாம் அல்லது ஏனையோருக்கு எதிரான இஸ்லாம் – என்ற கதையாடலோடு இத்தீவில் நிகழ்ந்தவை மிகவும் அழகாக ஒத்துப்போகிறது. இலங்கை தீவில் ஒற்றையாட்சியை உருவாக்கி வழிநடத்தி ஈழத்தமிழருக்கு எதிராக இதை பாதுகாத்த அதே சக்திகள்தான் இப்பேரழிவு கொண்டுவரும் கதையாடலையும் உருவாக்கியது. முள்ளிவாய்க்கால் அழிவின் பத்தாண்டு… Read More முள்ளிவாய்க்காலும், சமயசார்பின்மையும், பூகோள அரசியலும் !

சரணடைந்தவர்கள் காணாமல் போவது எப்படி?

ஈழத்தின் இறுதிப் போரில், பல ஆயிரக் கணக்கானவர்கள், சிங்கள அரச படைகளிடம் சரணடைந்தார்கள். சிங்கள அரச படைகளிடம் யுத்த களத்தில் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அத்துடன் சிங்கள அரச படைகளிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள் குறித்தும் கை விரிக்கிறது சிங்கள அரசு. இப்படியான அரசுதான் இனப்படுகொலை குறித்து உள்ளக விசாரணை ஒன்றை நடாத்த இருப்பதாகவும் சொல்கிறது. இறுதிப் போரின் சரணடைதல் படலம், என்பது ஈழத்து மக்களின் வாழ்வையும் வரலாற்றையும் இன்றுவரை உலுக்கி வருகின்றது. இந்த விடயம் வெளிச்சத்திற்கு வரும்… Read More சரணடைந்தவர்கள் காணாமல் போவது எப்படி?