யுத்த வடுக்களோடு வாழும் கண்பார்வையற்ற பெண்ணின் கண்ணீர்க் கதை !

#Uravuppalam #IBC Tamil #Puthukkudiyiruppu யுத்தத்தின் வலிகளை சுமந்து கொண்டு இன்றும் இலங்கையில் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றன. அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் உண்டு. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் யுத்த வடுக்களுடன் வாழும் குடும்பங்களை வெளியுலகத்திற்கு அறியப்படுத்தும் ஒரு முயற்சி ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறை யுத்தத்தின் வடுக்களை உடம்பில் கொண்டு… Read More யுத்த வடுக்களோடு வாழும் கண்பார்வையற்ற பெண்ணின் கண்ணீர்க் கதை !

பதினொரு வருட சிறை வாழ்க்கையின் பின் மகிழ்ச்சியை தேடும் முன்னாள் போராளி !

#En Iname En Saname #Sri Lanka #Northern Province #Omanthay உள்நாட்டு போர் நிறைவுற்று பத்து வருடங்கள் கடந்திருந்தாலும் அது ஏற்படுத்திய வடு எத்தனை காலம் ஆனாலும் மாறாது. இதற்கு சாட்சியாய் இன்றும் அந்த கொடிய போரில் தங்கள் வாழ்க்கையை தொலைத்த பலர் நம் இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், பல ஆண்டு காலமாய் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு கை மற்றும் கால் செயலிழந்துள்ள நிலையில், தலையில் குண்டு துகள்களுடன் தன் ஒவ்வொரு நாளையும்… Read More பதினொரு வருட சிறை வாழ்க்கையின் பின் மகிழ்ச்சியை தேடும் முன்னாள் போராளி !

வரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை!

   மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு இடது முழங்கையின் கீழ் பகுதி இல்லை. இடது கால் முழுவதுமாக செயற்கைக் கால் பொருத்தியிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 6 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். வேயாத ஓலைகளை சுவராகவும் தகரத்தை கூரையாகவும் கொண்ட குடிலில்தான் வாழ்கிறார்கள். இவர்களுடைய உறவுக்கார பெண்ணொருவரும் கைக்குழந்தையுடன்… Read More வரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை!

அமெரிக்கா கோரிக்கையை தலைவர் நிராகரித்த பின் புலம் இன்று குர்து மண்ணில் நடக்கிறது.!

நந்திக்கடலிலிருந்து நாம் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. ! கீழே உள்ள பதிவு கடந்த வருடம் மகிந்த பிரதமராக நியமிக்கப்பட்டபோது எழுதியது. தற்போதைய ஜனாதிபதி தேர்தலிலும் சிங்களம் தெளிவாகவே சிந்திக்கிறது. இது புவிசார் அரசியலுக்கும்/ சிங்கள இறைமைக்கும் இடையிலான மறைமுகமான – உக்கிரமான யுத்தம். இதில் நாம் தமிழர் இறைமை சார்ந்து தெளிவான செய்தியைப் பதிவு செய்வதும் / புவிசார் நெருக்கடிக்குள் சிங்கள தேசத்தை தொடர்ந்து வைத்திருக்கக் கூடிய ஒரு ஆட்சியாளரை , நாம் ஆதரிக்காமலேயே ( அது… Read More அமெரிக்கா கோரிக்கையை தலைவர் நிராகரித்த பின் புலம் இன்று குர்து மண்ணில் நடக்கிறது.!

70 ஆண்டுகால சிங்கள மனோநிலையை சரியாக புரிந்து கொண்ட ஒரே தலைவர் பிரபாகரன் மட்டுமே!

70 ஆண்டுகால சுதந்திர இலங்கையில் சிங்கள மனோநிலையை சரியாக புரிந்து கொண்ட ஒரே தலைவர் பிரபாகரன் மட்டுமே அவரின் எண்ணங்களில் சொல்லுவது என்றால் சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகிற் புதைந்து போய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள். அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப் போன இந்தப் புராணக்… Read More 70 ஆண்டுகால சிங்கள மனோநிலையை சரியாக புரிந்து கொண்ட ஒரே தலைவர் பிரபாகரன் மட்டுமே!

புலிகளை அழிக்கத் துணை நின்ற இந்தியா சந்திராயன் 2 ஐ ஏவுவதில் தோல்வியுற்று நிற்கிறது !

புலிகளும் அறிவியலும்.. சந்திராயன் 2 குறித்து ஒரு பக்கம் கேலியும், மறுபக்கம் வாழ்த்துக்களுமாகச் சமூக வலைத் தளங்கள் கலவையாகக் காட்சியளிக்கிறது. நாம் அதற்குள் போக வேண்டாம். நாம் அறிவியலுக்கும் புலிகளுக்குமான தொடர்புகளைக் கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போம். திருகோணமலைதான் தமிழீழத்தின் தலைநகரம். திருகோணமலையை நிர்வாகத் தலைநகராகவும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கலாசாரத் தலைநகர்களாகவும், வன்னிப் பிரதேசத்தை கைத்தொழில் துறைத் தலைநகராகவும் கொண்டு தமிழீழத்தைக் கட்டியெழுப்பப் புலிகள் திட்டமிட்டிருந்தனர். அந்த வகையில் தான் வன்னியை மையப்படுத்தி… Read More புலிகளை அழிக்கத் துணை நின்ற இந்தியா சந்திராயன் 2 ஐ ஏவுவதில் தோல்வியுற்று நிற்கிறது !

பெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை !

கருணாநிதியின் மறைவையடுத்து நாம் சில விமர்சனங்களை முன் வைத்த போது பல தமிழக நண்பர்கள் வந்து டிசைன் டிசைனாகச் சண்டை போட்டார்கள்.. அதில் ஒரு நண்பரின் முழக்கம் இது..” இது பார்ப்பானுக்கும் எங்களுக்குமிடையிலான யுத்தம். ஈழத் தமிழர் தலையிட வேண்டாம். திமுகவால்தான் பார்ப்பானை வீழ்த்த முடியும். தமிழகத்திலிருந்து மட்டுமல்ல ஈழத்திலிருந்தும் பார்ப்பனை விரட்ட உங்களுக்கும் சேர்த்து நாம் போராடுகிறோம்” என்றார். எனக்கு பத்து சுனாமி ஒன்றாக அடித்தது போலாகிவிட்டது. திமுக பார்ப்பானோடு யுத்தம் புரிகிறதா? அல்லது விளக்கு… Read More பெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை !

சத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் !

தமிழர்கள்தான் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள்? அதிலும் 2009 மே மாதத்தில்தானே அந்த இறுதி காட்சி வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது? என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. ஆனாலும் அந்த இறுதிக் காட்சி அரங்கேற முன்னர், அடிப்படையான அல்லது மூல காரணமான ஒரு சம்பவம் ஒரு நாளில், அதாவது இதே நாட்களில் பதினாறு வருடங்களுக்கு முன்னர் (9,10/06/2003) நடைபெற்றிருந்தது. தமிழர்களின் அரசியல் சாணக்கியத்தின் ஒரு புரிதல் அந்த சம்பவம். அப்படியென்ன சம்பவம் என்று நிச்சயமாக ஒருசிலரைத் தவிர தமிழர்கள்… Read More சத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் !

தமிழா்களின் வாழ்வை நிலைகுலைய செய்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய இன்றைய நாள் !

எந்தவொரு பயங்கரவாதச் சட்டமும் பிரசைகளுக்கெதிரானதாகும் என்பதோடு,’முற்போக்கானது’ என்று அழைக்கப்படமுடியாததாகும். இலங்கையின்; வரலாற்றை எடுத்துக் கொண்டால் பயங்கரவாதத் தடைச்; சட்டம் எமது பிரசைகள்மீது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட செயல்பாடுகளையே பயங்கரத்தின் பின்னணியாக ; கொண்டதாகும்;. இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இதுபோன்ற சட்டங்கள் பெரும் பாதிப்புக்களை மட்டுமல்ல, சிறுபான்மை சமூகத்தை நசுக்கும் ஒரு ஆயுதமாகவும் பாவிக்கப்படுகிறது. இலங்கையின் பயங்கரவாதச் சட்டம் தொடர்பாக மிக விரிவாக ஆராய்கிறது இக்காணொலி, ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா வாதாடிய வழக்குகள் 1982–2019 குட்டிமணி, தங்கத்துரை,… Read More தமிழா்களின் வாழ்வை நிலைகுலைய செய்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய இன்றைய நாள் !