கரும்புலி மேஜர் காந்தரூபன்

காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்.BT-Maj Kantharupan

1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது, காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால், அதிஸ்ரவசமாக சக தோழர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டான்.

இருந்தபோதும், சயனைட் விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்க்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

1988, 1989ம் ஆண்டு காலம். இப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றான்.

காந்தரூபனிற்கு இப்போதும் நிறை உணவு தேவைப்பட்டது. ஒரு பசுமாடு இருந்தால் காந்தரூபனிற்கும், சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கும் பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர், வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப் பசு ஒன்றை, காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது.

தலைவரின் துணைவியார் (மதிவதனி அண்ணி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார்.

அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிர்ப்பான். தான் ஒரு கதியற்றவன் என்ற கவலையே அற்றுப்போகும்.

ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தான். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர்.

“அண்ணை…. என்னை கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ…” என்றான். அதோடு தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் அவன் தலைவரிடம் சொன்னான். தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. “அவனுக்கருகில் இருந்து அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் தலைவர்.” என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள் … அப்பா, அம்மா இல்லாம, சொந்தக்காரரின் ஆதரவில்லாம அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாம, படிக்க வசதி இல்லாமல், எவ்வளவோ ஏக்கங்களோடையும், துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை, நான் அனுபவித்ததில கண்டனான் அண்ணை….” “நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேணும். அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து, அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து, அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …. ” தலைவரின் இதயத்தை இது தொட்டது. அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ட்சியைக் கொடுத்தது.

அவ்வாறான இல்லமொன்றை ஆரம்பித்து காந்தரூபனின் நினைவாக அதனை “காந்தரூபன் அறிவுச்சோலை” என்ற பெயரிலேயே இன்று செயற்ப்பட அவருடைய கண்கள் கலங்க்கிபோயிருந்தன. தனது சால்வையால் கண்களை ஒற்றிக் கொண்டார். அருகிலேயே நின்ற அம்மா சொன்னார். அன்றைக்கு முழுவதும் இவர் ஒரு மாதிரியா இருந்தார். நான் ஒன்றுமே கேட்கவில்லை. பின்னேரம், கடலில் பொடியள் கரும்புலியாய் போய் கப்பலடிக்கப் போறாங்களாம். எண்டு பாத்திட்டு வாறனெண்டு போனார். காந்தரூபனும் போகப் போறான் எண்டு இவர் சொல்லவில்லலை. இரவானதும் எனக்கு நித்திரை வரமறுக்குது. சத்தத்தையாவது கேப்பமென்று வீட்டு வாசலில் இருந்தன். கொஞ்ச நேரத்தில் கடலதிரச் சத்தங்கேட்டது. நான் வாசலிலேயே இருந்தன். சாமம் ஒரு மணியளவில் இவர் ஒரு மாதிரியாக சோர்ந்துபோய் வந்தார். வீட்டுக்குள்ள வந்தவர், எங்கட காந்தரூபனும் கரும்புலியாய்ப் போனவன் என்று சொல்லிப் போட்டு அழுதார்.

யோகராசா அண்ணரும், மனைவியும் பிற்காலத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றார்கள். அவர்கள் தங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று சொல்கின்றார்கள். தங்களுடைய முதல் மகன் கோணேஸ்வரன் (காந்தர்ரூபன்) என்கிறார்கள். அவர்களுடைய மூத்த மகன் கரும்புலியாகிக் கடலிலே காவியமாகியபின், அவர்களுடைய நான்காவது மகன் பிறந்தான். இப்போது கைக்குழந்தையான அவனைத் தூக்கித் தோளில் சாய்த்தபடி அந்தத் தாய் சொல்கிறாள் ….

காந்தரூபனா நினைத்துத்தான் இவனை நான் வளர்க்கிறன். இந்தத் தாயுடன் கூடவே அவரது தமக்கையாரும் இருந்தார். அதே உணர்வு சின்ன வயது முதல் காந்தரூபன் மீது அன்பு செலுத்திய இந்த பெரியம்மாவும் சேர்ந்து கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். சின்ன வயதில காந்தரூபன் என்ர பிள்ளைகளோட சேர்ந்துதான் விளையாடித்திரிவான். படிக்கிரதென்றால் அவனுக்கு சரியான கள்ளம். என்ர மகள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தி எழுதக் கற்றுக் கொடுப்பாள். ‘அ’ எழுதி ‘ஆ’ எழுதி ‘இ’ எழுதும் போது….., “இதென்ன கனக்க சுழிபோட வேண்டியிருக்கு…. எழுதப்படுதில்லை” என்று சொல்லிக் கொப்பியைத் தூக்கி எறிஞ்சுபோட்டு ஓடிவிடுவான். அப்படிப்பட்டவன் பிறகு இயக்கத்திற்குப் போய் கொஞ்சக் காலத்தில திரும்பி வரேக்க பெரிய அறிவாளியாக இருந்தான். பெரிய அரசியல் மேதைகளைப் போல எங்களுக்கெல்லாம் விளக்கம் தருவான். அந்தளவுக்கு அவனை இயக்கம் தான் வளர்த்து விட்டது. பெரியம்மா தொடர்ந்து சொன்னார்.

கப்பலடிக்கிறதுக்குப் போறத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னர் சரியான வெயிலுக்கை வீட்டுக்கு வந்தான். ‘தலையிடியாக் கிடக்கு பனடோல் தாங்கோ’ என்றான். கொடுத்தேன். வாங்கிக் குடித்தான்.

நான் ஒரு முக்கியமான வேலையாக வேற ஒரு இடத்துக்குப் போறேன் பெரியம்மா என்றான். வருத்தம் என்று சொல்லுறாயேடா தம்பி ….. தலைவரிட்ட சொல்லிப் போட்டு நில்லன். இன்னொருதரம் போகலாம் தானே ?…. என்று ஆலோசனை சொன்னேன். “…. இல்லை பெரியம்மா. அந்த வேலைக்குப் போகப்போறன் என்று நானாத்தான் அவரிட்டைக் கேட்டனான்…. கட்டாயம் நான் தான் அந்த வேலைக்குப் போகோணும்…” என்றான்.

“சரி தம்பி ….. சுகமாய் போய் சுகமாய் திரும்பி வா” என்று நான் சொல்ல, அவன் திரும்பிச் சொன்னான்…..

“சுகமாய் போவேன் பெரியம்மா….. அதில பிரசினையில்ல….. ஆனா….. திரும்பி வாறதென்கிறது தான்….. சரிபார்ப்பம்…. என்றான்.

அதற்க்கு மேல் பெரியம்மாவால் பேசமுடியவில்லை. மறுபக்கம் திரும்பி கண்களை துடைத்துக் கொண்டார்.

– உயிராயுதம் பாகம்

கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்

BT Capt Colins

நாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்

அவன் பிறந்து வளர்ந்தது மன்னார் மாவட்டத்தின் நறுவிலிக்குளம் என்னும் கிராமத்தில். இவனது பெற்றோர் ஏதிலியாய் இருப்பது, இதற்க்கு அப்பாலுள்ள பண்டிவிரிச்சான் கிராமத்தில். ஆனால், இவன் எங்கே…?

இவர்களுக்கே தெரியும், இவன் கரும்புலியாகி வீரம் விளைந்த வடகடலின் நீரிலும், காற்றிலும் இன்று கந்து வாழ்கிறான் என்பது. எனவேதான் இவனது தாய் தன துயரைத் துடைக்க பேரக் குழந்தைக்கு (மூத்த மகளின் மகனுக்கு) “கொலின்ஸ்” என்று பெயரிட்டு அழைக்கிறாள். அந்த அழியாத பெயர் இவர்களுக்கு ஓர் ஆறுதலையும், துணிவின் உறுதிப்பாட்டையும் தந்து நிற்பதை அந்த வீட்டாருடன் உரையாடக்கிடைத்த போது உணர முடிந்தது.

அந்தச் சூழலில் அவனது வயோதிபத் தந்தை கூறினார்….

இவன் தம்பி, வலு கெட்டிக்காரன். நல்லாப் படிப்பான். அவன் படித்துக் கொண்டிருந்த வேளை எங்கள் ஊரிலையும் சிங்கள ஆமிக்காரங்கள் சுத்தி வளைத்து கனபேரை பிடித்துக் கொண்டு போனாங்கள்.

அதனால் நாங்கள் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தம். இது இவனுக்கு சரியான கவலை. அவன் தம்பி, “ஆமியின்ர கையில பிடிபட்டு சாவதைவிட ஒரு ஆமிக்காரனைத் தானும் சுட்டுட்டு சாகலாம்” என்று சொல்லுவான்.

இவன் வெளிநாடு செல்ல விரும்ப இல்லை, சொன்னபடி இயக்கத்தில்தான் சேர்ந்தான். இது அங்கிருந்த தாயாரின் வார்த்தை. இதைத் தொடர்ந்து மீண்டும் அந்தத் தந்தையாய் கூறத்தொடங்கினார்.

தம்பி இவன் விடுமுறை முடிந்து செல்வதற்கு முதல் நாள் தாயப் பார்த்து, அம்மா …. நான் இயக்க வேலையாக ஒரு இடத்திற்கு போக இருக்கிறன். இது முக்கியமான வேளை, இந்த வேலையின் உழைப்பு வீட்டிற்கு வராது, அது நாட்டிற்கு மட்டும்தான். என்று சொன்னான். நாங்கள் அப்போது அதனை பெருதாக கருதவில்லை.

ஆனால் கொலின்ஸ் அம்முறை ஊருக்கு வந்தபோது அவனுக்கு தனது சாவு…. அதன் திகதி கூடத் தெரிந்திருந்தது. வந்தவன் தான் படித்த பாடசாலை, பழகிய இடங்கள் எங்கும் சென்றான். கூடித்திரிந்த நண்பர்களுடன் பாசத்தோடு கதைத்தான்.

அவனோடு படித்த கூடித்திரிந்த நண்பன் இவனைப்பற்றிச் சொல்லும்போது ….

அண்ணை நாங்கள் ஒரு நாள் பொழுதுபடுகிற நேரம் சந்தி மதவடியில் கதைத்துக் கொண்டு நன்றனாங்கள். அப்ப கொலின்ஸ் எங்களைக் கண்டிட்டு வந்து மதவடியில இருந்து எங்களோட கதைத்துக் கொண்டிருந்தான். “நாட்டுக்காகச் சாக ஒருக்காலும் பயப்படக்கூடாது” என்ற கொலின்சின் வார்த்தை இப்பதான் எனக்கு விளங்குது….. என்றான்.

இந்த 21 வயது இளைஞன் கரும்புலி கொலின்ஸ். தன் சாவினால் இனத்திற்குச் சாதித்தது என்ன என்பதை சரியாக உணர வேண்டின் அவன் தன்னைத் தானே தற்கொடையாக்கிய 10.07.1990க்கு சற்று முன்னைய நாட்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அங்கு வடமராட்சியைச் சார்ந்த பகுதியில் தன்கூரிய பார்வையைச் செலுத்தியபடி எதிரியின் பாரிய கப்பல் ஒன்று நிலைகொண்டு நிற்கிறது. அதன் ஆதிக்கக் கண்ணோட்டம் எங்கும் செல்லும். அது கடற்படைப் படகுகளுக்கு வேவு பார்க்கும் தகவல் கொடுக்கும். எமது படகுகளை, படகோட்டிகளை, ஊர்மனைகளை அழிக்கவும் அடக்கவும் அது உதவிகள் செய்யும். இதை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறுதிப்பாட்டுடன் மீண்டும் வடபகுதிக் கடற்கரைக்கு வருவோம்.

அங்கு….

“பொடியல் கரும்புலியாகிக் கப்பலை அடிக்கப் போறாங்களாம்” என கதை பரவுகிறது.

கரையில் வரிப்புலிச் சீருடைகளுக்கு நடுவில் கரியநிற சீருடை தரித்த மூவர். அச்சீருடையுடன் நின்றவர்களில் கொலின்ஸ் ஒருவன். கடலலை இந்த மூன்று கரும்புலிகளின் பாதங்களைத் தொட்டுச் செல்கின்றது.

அக்கரிய இருளில் கையசைத்து கூடியிருந்தவர்களிடமிருந்து விடைபெறுவது தெரிகிறது.

படகு புறப்பட்டு……. பின் மறைகிறது.

கண்கள் கடலை ஊடுருவுகின்றன.

சிறிது நேரத்தில் கடலில் பெரிய ஒளிப்பிளம்பு….

அதோடு வெடியோசை ….

அந்த உப்புக்காற்று அவர்களை அனைத்துக் கொண்டது.

– உயிராயுதம் பாகம்

முதலாவது கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி கப்டன் வினோத்

|| நீங்காத நினைவுகளில் கடற்கரும்புலி கப்டன் வினோத்BT Capt Vinoth

 

1988ம் ஆண்டுக் காலப்பகுதி…. வினோத்தின் வீட்டை இந்தியப் படைகள் அடிக்கடி சுற்றி வளைத்தனர். அவனைத் தேடி இந்திய சிப்பாய்கள் அங்கு பாய்வதும் வழமை யாகிவிட்டது. அந்த ஆபத்தான பொழுதுகளில், வீட்டுக் கூரைக்குள் ஏற்றி பெற்றோரால் அவன் மறைத்துக் காக்கப்படுவான்.

மேலேயிருந்து “சயனைட்” குப்பியைப் பற்களுக்கிடையில் செருகிக்கொண்டு எதனையும் எதிர்பார்த்து நொடிகளை எண்ணிக்கொண்டிருப்பான் வினோத்.

வினோத்தின் அக்கா சொல்கிறாள் ….

“அந்த நேரத்தில் சின்னச் சின்ன ‘கானு’களுக்குள்ள (கொள்கலன்) என்னவோ கொண்டு வந்து, வீட்டு மூலையளுக்குள்ள வைப்பான்.

என்னடா இது என்று கேட்டால், அதுக்குள்ளே தண்ணீர் அக்கா… என்றுவிட்டு போயிடுவான்.

அவன் போனதுக்குப் பிறகு தூக்கிப் பார்த்தா, அது தண்ணீர் இல்லை. இறுக்கமாக, பாரமாகக் கணக்கும்…. எங்களுக்கும் அது என்னென்று தெரியவில்லை.

யாரும் எதிர்பாராத ஓர் அதிகாலைப் பொழுதில் திடீரென வீட்டிற்குள் நூலைந்த இந்தியர்களிடம், வினோத் சர்ந்தப்பவசமாகச் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. வீட்டில் எல்லோரும் பார்த்து நிற்க துவைத்து எடுத்துவிட்டு, அவர்கள் அவனை இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

வினோத்தின் அப்பா சொல்கிறார் ….

“அவனொரு பயங்கரச் சுழியனடா தம்பி…. அவனை இந்தியன் புடிச்சுக் கொண்டுபோய் காம்பில் வைத்திருக்கேக்க ஒரு நாள்…. வீட்டு விராந்தையில் கிடந்த வாங்கில படுத்திருந்தான். தற்செயலா லேனைப்பார்த்தேன், சுவரோட சேர்த்துப் பூட்டியிருக்கிற லைற்றின்ர கோப்பைக்கு மேலால , சாதுவா , கறுப்பா என்னவோ தெரிஞ்சுது. கதிரையைக் கொண்டுபோய் வைத்திட்டு ஏறி எடுத்தனடா மோனை, அது ஒரு கிறனைட். அப்படியே நிண்டு எட்டிப் பாத்தன், பக்கத்த பக்கத்தை இருக்குற நாலு லைற்றுக்கையும் கிறனைட் வைத்திட்டு போயிருக்கிறான்.

இயல்பாகவே மற்றவர்களோடு நெருங்கிப் பழகி, அவர்களை மகிழ்வில் ஆழ்த்தக்கூடிய சுபாவம் கொண்டிருந்த வினோத்தின் அப்பா தன் பிள்ளையைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

Major Valavan

இந்தியனிடம் பிடிபட்டு காங்கேசன்துறை காம்பில இருக்கேக்க, நாங்கள் அவனைப் பார்க்கப் போறனாங்கள். அங்கபோற நேரமெல்லாம், வீட்டில தான் வைத்துவிட்டுப்போன சாமான்களைப் பற்றித்தான் தம்பி சொல்லுவான்…. எங்களைப் பற்றி இல்லை. அதுகளைப் பத்திரமா எடுத்துப் பெடியளிட்டை குடுத்து விடோணும் என்கிறதிலதான் அவன்ர கவனமெல்லாம் இருக்கும்.

இந்தியப்படை இங்கிருந்து வெளியேற்றப்பட்ட போது, ஏனையவர்களுடன் வினோத்தும் விடுவிக்கப்பட்டான்.

‘தம்பி வந்திட்டான்’ என எல்லோரும் மகிழ்ட்சியடைந்திருந்த போது, 22ம் நாள் வினோத் திரும்பவும் காணாமல் போய்விட்டான். அதன் பின் அவன் இடைக்கிடை வீட்டுக்கு வந்து போவான்.

திரும்பவும் சிங்களப் படையினருடன் சண்டை ஆரம்பித்து சில நாட்களே நகர்ந்திருந்தன….

ஒரு நாள் வினோத் வீட்டிற்கு வந்தான்.

வரிப்புலிச் சீருடையில் “மிலிற்றறி” சப்பாத்துப் போட்டு ஒரு கையில் துப்பாக்கியுடன், மறுகையில் புகைப்படக் கருவி ஒன்றையும் கொண்டு வந்தான். வீடில் எல்லோருடனும் சேர்ந்து படம் எடுத்தான். அக்காமாரைக் கட்டிப்பிடித்தபடி…. அக்காமாரின் குழந்தைகளைத் தோளில் வைத்தபடி … ஆச்சியோடு நின்று… எல்லாவிதமாகவும் படமெடுத்தான்.

‘என்னடா புதினமாக இன்றைக்கு எல்லோரையும் படம் எடுக்கிறாய்…?’ அக்கா கேட்டாள்.

“ஒன்றுமில்லை அக்கா …. நானொரு வேலையாகத் தூர இடத்திற்குப் போறான்… திரும்பி வரமாட்டன்…” சிரித்துக்கொண்டு சொன்னான்.

அண்ணனின் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு,

“உன்ர சித்தப்பா இனி வரமாட்டான்…. இறுக்கிக் கொஞ்சிவிடு…. என்று சொல்லிக் கொஞ்சினான்.”

‘… எங்களுக்கு அது அப்போது அவ்வளவு விளங்கேல்லை..’

வல்வெட்டித்துறையில் கடற்கரையோரமாக அவர்களுடைய வீடு இருந்தது. அங்கு பீரங்கிக் கப்பல்களின் தொடர்சியான தாக்குதல்கள் நிகழும். இதன் காரணமாக கொடிகாமம் சென்று அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த அம்மாவையும், அப்பாவையும் வினோத் சென்று பார்த்தான்.
கட்டியணைத்துக் கொண்டு படம் எடுத்த்தான்.

அம்மா கேட்டபோது அக்காவுக்குச் சொன்ன அதே காரணத்தை இங்கேயும் சொன்னான். அவர்களாலும் வித்தியாசமாக எதனையும் உணர முடியவில்லை.

“நேவி அடிக்கிறான்னேன்று அலைந்து திரியாதீங்கள் அம்மா…. ஊரிலே போய் இருங்கோ…. ஒரு நாளைக்கு…. எங்களின் கடல் எங்களிடம் வரும்” என்று சொல்லிவிட்டுப் போனான்.

அதன் பிறகு ஒரு நாள் கூடத் தங்களுடைய செல்வத்தை அவர்கள் காணவில்லை. இனிமேல் காணவுமாட்டார்கள்.

இப்போதும் வினோத்தின் அம்மா அவனைத் துயரத்தோடு நினைவு கூறுகிறார்.

சின்னவனாய் இருக்கேக்க, என்னை வந்து கட்டிப்பிடித்துக் கொண்டு அண்ணை, அக்காமார் எல்லோரும் கலியாணம் செய்து போனதுக்குப் பிறகு, அம்மாவையும் அப்பாவையும் நான்தான் பார்ப்பன்…… என்று சொல்லுவானடா தம்பி.

—————-

அடுத்தநாள் தான் தம்பி தெரிஞ்சது. அதில நான் பெத்த குஞ்சுவும் ஒண்டெண்டு கடற்கரும்புலி கப்டன் வினோத்தின் அப்பா!

அண்டைக்கு ஊரெல்லாம் ஒரே பரபரப்பாய் இருந்தது. அண்ணைமார் கடற்கரைக்கு வாறதும் போறதுமாய் இருந்தினம்.

“இன்றைக்குப் பெடியள் கரும்புலியாய்ப் போய் நேவிக் கப்பலை அடிக்கப்போறாங்களாம்.” என்று, ஜனங்கள் பரவலாய்க் கதைக்கினம்.

“அப்படியெண்டா நாளைக்குக் காலமை நேவி அடிப்பான்” என்று கொஞ்சச்சனம் ஊரை விட்டுக் கிளம்பி விட்டினம். நல்லாய் இருண்டதுக்குப் பிறகு ஊர்ச்சனங்கள் கொஞ்சம் கப்பல் அடிக்கிறதைப் பார்ப்பதென்று கடற்கரைக்குப் போனார்கள், நாங்களும் போனம். கடலில் இருந்து கூப்பிடு தூரம்தான் எங்கள் வீடு. முகபாவத்தில் கவலையும் மகிழ்வும் மாறி மாறி வெளிப்பட அந்த அக்கா சொல்லிக்கொண்டிருந்தா.

அம்மாவும் அப்பாவும் கரைக்கு வரேல்லை, அவை வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டிருந்தனர். கரையில் நாங்கள் போய் பார்த்துக் கொண்டு நின்றம். படகுகள் வெளிக்கிட்டுப் போனது. நாங்கள் கொஞ்சம் தூரத்தில் நிண்டனாங்கள், இருள் வேறு. ஆட்களை அடையாளம் தெரியேலை… படகுகள் வெளிக்கிட்டன. கொஞ்ச நேரத்தில் இருளுக்குள் மறைந்து போய்விட்டது. இருளைப் போலவே மெளனமும் நிலவியது.

நாங்கள் இருளுக்கால கடலைப் பார்த்துக் கொண்டு நின்றம்.

தீடிரென பெரிய வெளிட்சமாய் நெருப்புச்சுவாலை கடலுக்குள் எரிய, நிலம் நடுங்கிற மாதிரி ஒரு வெடிச்சத்தம் கடலுக்குள் இருந்து வந்தது. எங்களை அறியாமலேயே கண்ணால கண்ணீர் வந்தது. மெதுவான குரலில் அம்மா… ஐயோ… என்ற சத்தங்கள் எல்லோர் வாயிலிருந்தும் உதிர்த்தன.

யாரார் பொடியள் போச்சுதுகளோ!? என்று நாங்கள் சொல்லி கவலைப்பட்டோம்.

ஒரு கனம் நிறுத்தி அக்கா தொடர்ந்து சொன்னாள்.

அடுத்த நாள் நேவி அடிப்பானென்று சனம் எல்லாம் வெளிக்கிட்டதால் நாங்களும் கொஞ்சம் தூரத்தில இருக்கிற சொந்தக்காரற்ற வீட்டுக்குப் போயிற்று, இரண்டு நாள்ள நிலைமையைப் பார்த்திட்டுத் திரும்புவம் என்று இரவிரவாய்ப் போனம். போறவழியில “காம்ப்” ஒன்றுக்கு முன்னால, எங்கட தம்பி ஓடித் திரிகிற மோட்டார் சைக்கிள் நின்றது.

அம்மா சொன்னா, “உங்க தம்பி நிற்பான் போல கிடக்கு… ஒருக்கா கேட்டுப்பார்” என்று தொடர்ந்து அம்மா கதைக்கத் தொடங்கினாள்….

நாங்கள் கூப்பிடக் கூப்பிட ஆள்மாறி ஆள்மாறி வந்து எட்டிப் பார்த்திட்டுப் போறினமே தவிர வெளியால ஒருத்தருமே வரேல்லை.

“வினோத்தின்ர அம்மாவடா…. வினோத்தின்ர அம்மாவடா….” என்று மாறி மாறிச் சொல்லிக் கேட்கிறது…. இருளுக்குள் ஒன்றும் தெரியவுமில்லை. ஏன் இவர்கள் ஒளியிறார்கள் என்று எனக்குள்ள நினைத்தேன். கொஞ்சநேரத்துக்குப் பிறகு, ஒருத்தர் பதுங்கிப் பதுங்கி வெளியில் வந்தார்.

“வினோத் நிற்கிறானா தம்பி…?”

“இல்லை…. அம்மா…. நீங்கள் எங்க நிற்பீர்கள் என்று சொல்லுங்கோ… நாங்கள் அவரை வரச் சொல்லிவிடுறம்…”

“அந்தா அவரின்ற மோட்டார் சைக்கிள் நிக்கிறது… பொய் சொல்லாதேங்க்கடா எங்க போட்டான்..?”

“அது சரியாச் சொல்லேலாதம்மா… நீங்கள் நிற்கிற இடத்தைச் சொல்லிப் போட்டுப் போங்கோ, காலையில் அனுப்பிவிடுறம்…”

என்னடா இவன், கேட்கிரதுக்கெல்லாம் ஒரு மாதிரியா மறுமொழி சொல்லுறான்…? என்ன கேட்டாலும் நாங்கள் நிக்கிற வீடு எது என்று கேட்கிறான் ? என்று எனக்குள்ள நினைத்துக்கொண்டு, நாங்கள் போற வீட்டுப் பாதையைச் சொல்லிப் போட்டுப் போனோம்.

சற்று நிறுத்தி பெருமூச்சொன்றை எறிந்துவிட்டு அம்மா ஆறுதலாகத் தொடர்ந்தாள்.

“அடுத்த நாள்தான் மோனை தெரிஞ்சிது, எங்கட பொடியும் போட்டானேன்று. நிக்கிற வீடு எதென்று அந்தப் பெடியன் திரும்பத் திரும்பக் கேட்டது ஏன் என்று, அப்பத்தான் விளங்கியது.”

வினோத்தின் அப்பா சொன்னார்….

“குண்டுச்சத்தம் கடலுக்குள் பெரிதாகக் கேட்க்கக் கேட்க்க , வீட்டு வாசலில நான் குந்தியிருந்தனான்…. யாரார் பெற்ற பிள்ளைகளோ என்று எனக்குள்ள நினைத்தேன்; ஆனால் அடுத்த நாள்த்தான் தம்பி தெரிஞ்சது, அதில நான் பெற்ற குஞ்சுவும் ஒன்று என்று.”

– உயிராயுதம் பாகம்  நூலிலிருந்து

முதலாவது கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள்

கப்டன் ஊரான் / கௌதமன்

வித்தியாசமான வீரன் கப்டன் ஊரான் அல்லது கௌதமன் அழியாச்சுடர்.Cap Gowthaman

ஓவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கின்ற போது அந்தக் குழந்தையைப் பெற்ற குடும்பத்தின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் வித்தியாசமானவை. ஒவ்வொரு அம்மாக்களும் உலகின் பெருமைகளையெல்லாம் தன் பிள்ளை பெற்றுச் சிறப்படைய வேண்டுமென்றே கனவுகள் காண்பார்கள். அத்தகைய கனவுகள் ஊரான் அல்லது கௌதமனின் அம்மாவுக்கும் நிச்சயம் இருந்திருக்கும்.

2அக்காக்களுக்குப் பிறகு திரு.திருமதி. அடைக்கலம் தம்பதிகளுக்கு 01.05.1974 அன்று பிறந்தான் இன்பசோதி. அந்தக் குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளையும் அவனே. இன்பசோதியின் பிறப்பு வீட்டாருக்கு மட்டுமல்ல ஒருநாள் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்துப் புலியாவான் என்று யார் அன்று நினைத்திருப்பார்கள் ?

இன்பசோதியென்ற பெயரிலுள்ள சோதியின் ஒளிபோல அவனது சாதனைகளும் அவன் இயல்புகளும் ஒளிபொருந்தியவையே. அதிகம் அலட்டாத அமைதியே உருவானவன். வாய் திறந்து பேசினால் கலகலப்பை மட்டுமே தரும் அவனது பேச்சும் சிரிப்பும் எப்போதுமே எல்லோருக்கும் பிடிக்கும்.

இன்பசோதியென்ற பெயரிலுள்ள சோதியின் ஒளிபோல அவனது சாதனைகளும் அவன் இயல்புகளும் ஒளிபொருந்தியவையே. அதிகம் அலட்டாத அமைதியே உருவானவன். வாய் திறந்து பேசினால் கலகலப்பை மட்டுமே தரும் அவனது பேச்சும் சிரிப்பும் எப்போதுமே எல்லோருக்கும் பிடிக்கும்.

வீட்டிலும் உறவுகளாலும் தம்பியென்றும் இமையாளன் என்றும் அழைக்கப்பட்ட இன்பசோதி நகைச்சுவையோடும் நட்போடும் எல்லோரது அன்பையும் பெற்றிருந்தான்.

குடும்பத்தில் செல்லப்பிள்ளையான அவனுக்கு சின்ன வயதில் இறைச்சி , மரக்கறி உணவுகள் பிடிக்காது. அவனது தந்தையார் அடைக்கலம் ஐயா தமிழ் மீதும் தமிழ் மண்மீதும் மிகுந்த பற்றுக்கொண்ட தமிழ்த்தேசியவாதி.

தனது மகனை மரக்கறி , இறைச்சி வகைகளைச் சாப்பிட வைப்பதற்கு அடிக்கடி சொல்லுவார். இவற்றையெல்லாம் நீ சாப்பிட்டால் தான் பலமுடையவனாவாய். உனது தாயகத்திற்காக போராட உனக்குப் பலம் கிடைக்கும். அப்போதுதான் நீ தமிழீழத் தாயகத்திற்காகப் போராட முடியும். அவன் சாப்பிட மறுத்த இறைச்சி ,மரக்கறி உணவை அவன் சாப்பிடத் தொடங்கியதே பலமுள்ளவனாகி தமிழீழ தேசத்துக்காகப் போராடுவேன் என்ற வைராக்கியத்தோடுதான் வளர்ந்தான்.

அப்பா சொன்னது போலவே அவன் பலமுள்ளவனாக வளர்ந்து ஒரு நாள் தமிழீழ தாயகத்திற்காகவே தனதுயிரையும் தருவானென்று அன்று யாரும் அறிந்திருக்கவேயில்லை.

வீட்டின் செல்லப்பிள்ளையை ஊரின் மதிப்புக்குரிய பிள்ளையை யாருக்குத்தான் பிடிக்காது. அவன் அப்படித்தான் வாழ்ந்தான் வரலாறாகினான். எதிர்காலத்தில் ஒரு சிறந்த கணிதமேதையை அவனது குடும்பம் எதிர்பார்த்திருந்தது. அதே கனவோடுதான் யாழ் சென் பற்றிக்ஸ்சின் மாணவனாகினான்.

படிப்பில் திறமையான மாணவனான இன்பசோதி சென் பற்றிக்ஸ் கிறிக்கெற் விளையாட்டு அணியின் சிறப்பு வீரனாகவும் திகழ்ந்தான் என்பதை அந்தப்பாடசாலை தனது வெற்றிக் கிண்ணங்களில் நிச்சயம் நினைவு கொள்ளும்.

இடது கைப்பந்து வீச்சாளனான இன்பசோதியின் வேகப்பந்து வீச்சில் வெற்றியைத் தீர்மானிக்கும் வேகத்தை நடுவர்களே அசந்து போகும் வண்ணம் அவனது பந்துவீச்சும் வேகமும் ஆச்சரியப்படவைக்கும். இன்பசோதி களமிறங்கினால் வெற்றியை அவனது அணியே வென்று செல்லும். அவ்வளவு திறமையான கிறிக்கெட் விளையாட்டுக்காரன்.

வெடியோசைகளும் மரணங்களும் யாழ்மண்ணின் அமைதியைக் கலை(ரை)த்துச் சாவோலம் நிரம்பிய காலமது. சாதரணதரத்தில் சிறந்த புள்ளிகளைப் பெற்று உயர்தரத்தில் கணிதத்துறையைத் தேர்வு செய்து கல்வியைத் தொடர்ந்த இன்பசோதியை அவனது அமைதியைக் கொன்றது யுத்தம்.

வாழ்வதற்கான சுதந்திர தேசம் இல்லாத வரை உயர்கல்வி கற்றும் தன்னால் நிம்மதியைப் பெற முடியாதென்ற உண்மையை உணர்ந்தான். துடினமும் அதே நேரம் கண்டிப்பும் மிக்கவனைக் காலம் அழைத்தது களம் நோக்கி.

சென்பற்றிக்ஸ் கல்லூரியிலிருந்து தாயகப்போரில் தங்களை இணைத்து தாயகம் மீட்கவெனப் புறப்பட்ட 30மாணவர்களில் இன்பசோதியும் ஒருவனாக 1991இல் விடுதலைப்புலியாக இணைந்தான். எதிர்காலம் பெறவிருந்த 30 கல்விமான்களை அடக்குமுறையாளர்கள் ஆயுதம் தரிக்கக் காரணமாகினார்கள். ஒவ்வொரு போராளியின் உருவாக்கத்தின் பின்னும் ஓராயிரம் கதைகளும் துயர்களும் இருக்கும். அந்தத் துயர்களும் கதைகளுமே அவர்களை விடுதலைப்போரில் வீச்சோடும் வீரியத்தோடும் வீழும் வரையும் வாழ வைத்தது வரலாறு.

இம்ரான் பாண்டியன் படையணியின் பயிற்சி முகாமான சரத்பாபு 3 இன்பசோதியையும் உள்வாங்கியது. இன்பசோதி ஊரான் அல்லது கௌதமன் என்ற பெயரோடு பயிற்சியை நிறைவேற்றி வரிச்சீருடை தரித்த புலியாகினான்.

தோற்றத்தில் கடுமையும் , பார்வையில் கடமையும் அந்தக் கண்ணில் இருந்த கர்வமும் ஒரு சிறந்த இராணுவ வீரனை எங்களுக்குத் தந்தது. ஊரான் என்ற இளம்புலிவீரனை சிறந்த ஆற்றலாளனை கடமையை மட்டுமே கவனத்தில் நிறைத்து ஈழக்கனவை இதயத்தில் சுமந்து திரிந்த எரிமலையை விடுதலைப்புலிகள் அமைப்பின் வேர்களில் ஒருவனாக ஊரானும் இருந்தான் என்றால் அது பெருமையே.

பயிற்சி முடித்து வெளியில் வந்த ஊரான் சண்டைக்களத்திற்கே செல்லும் கனவோடு வந்தான். ஆயினும் அவனது ஆற்றல் மேலும் பல திறமையாளர்களை உருவாக்கும் வல்லமை பொருந்தியது என்பதனை உணர்ந்தவர்களால் 1992இல் தோற்றம் பெற்ற வெளியக பாதுகாப்பணியின் முதலாவது அணியின் சிறப்புப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்ட முதல் 30பேரில் ஊரானும் இணைக்கப்பட்டான்.

களத்தில் சென்று நேரடிச்சமராடும் போருக்கு நிகராக சவாலாக இருந்த பாதுகாப்பணியின் தேவையும் விரிவாக்கமும் உணரப்பட்ட பொது ஊரான் மிகவும் சாதுரியம் மிக்க போராளியாக பாதுகாப்பணியின் பயிற்சியினை நிறைவு செய்து கொண்டான்.

1993 – 1994 காலப்பகுதி விடுதலைப் போராட்ட காலத்தில் சவால்களையும் சதியையும் சந்தித்த காலப்பகுதிகளில் மறக்கப்படாத வடுக்களால் நிறைந்த காலம். அக்காலத்தில் ஊரானின் பங்கும் திறமையும் வெளிப்பட்ட விதம் தலைவராலேயே கௌரவம் பெற்றது.

அக்காலப்பகுதியில் தளபதிகளான சொர்ணம் , பொட்டு அம்மான் போன்றவர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் ஊரான் என்பது அவனது ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் கிடைத்த வெற்றிதான். மிகவும் சிக்கல் மிகுந்த அந்தக்காலத்தில் ஊரானின் புத்திசாலித்தனமான செயற்பாடு வெற்றிகளை அவதானித்த தலைவர் 1995இல் வெளியகப் பாதுகாப்பணியின் பொறுப்பாளராக ஊரானை நியமித்தார்.

ஓவ்வொரு விடுதலைப்புலி வீரனுக்கும் உரிய வித்தியாசமான ஆற்றல்களில் ஊரானின் ஆற்றல் புலனாய்வுத்துறையில் மிகவும் காத்திரமானதாகவும் அவசியமானதாகவும் அமைந்திருந்தது. இயல்பிலே அமைதியான போராளி. அது வீட்டிலிருந்து வரும் போதே கூட வந்த இயல்பு. தோற்றத்தில் கம்பீரமும் பார்வையில் கூட அவனொரு புரியாத புதிர். ஆனால் அவனை நெருங்கி அவனோடு பழகியவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ஈரநெஞ்சுக்காரன்.

‘கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுமுண்டு கரும்புலிகள் விழிகளில் நீர் வழிவதுமுண்டு’‘ என்பது பாடல் வரியொன்று. ஆனால் ஊரான் என்ற கடுமையான மனிதனுக்குள்ளும் ஈரமும் வீரமும் அந்தக் கண்களில் சுரந்த கருணையும் அவனோடு வாழ்ந்தவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய வித்தியாசமான போராளி.

இவனின் நடையை,மோட்டார் சைக்கிள் ஓடும் திறனை ,உடை அழகைப் பார்த்து அவனைப் போல இருக்க ஆசைபட்டவர்கள் பலர். எல்லோரையும் தனது பார்வையால் கட்டிப் போடுகிற ஆளுமையால் வெல்லுகிற வல்லமையைப் பெற்றிருந்த ஒரு இரும்பு அவனென்றால் அது மிகையில்லை.

சிறந்த கிறிக்கெட் வீரனான அவன் மீளவும் கிறிக்கெட் விளையாட விரும்பினான். அவனது ஆசைக்குத் தடையின்றி அவனை இயக்கம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கிறிக்கெட் போட்டிக்கு அனுப்பியது. இடது கைப்பந்து வீச்சாளன் இன்பசோதி ஊரானாகி கிறிக்கெட் போட்டியில் பங்கெடுத்து பள்ளிக்காலத்து மாணவனாகி அந்தப்போட்டியில் மீண்டும் வெற்றியைத் தனதாக்கினான்.

அவன் பங்கேற்று விளையாடிய அணியே அந்தப் போட்டியில் வென்றது. வெற்றி பெற்ற நாயகனாக வந்தான். அப்போது யாழ் மண்ணில் வெளியாகிய பத்திரிகைகளை ஊரான் நிறைத்திருந்தான். அவனது வெற்றிச் செய்தியைப் பிரசுரித்த பத்திரிகைகள் பெருமையடைந்தன. அந்தப் புலியின் விளையாட்டு வீரத்தை யாழ் மண்ணெங்கும் கொண்டு போய்ச் சேர்த்தன பத்திரிகைகள்.
கிறிக்கெட் மட்டுமன்றி சதுரங்க விளையாட்டிலும் சாதனை படைத்தவன். போராளிகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிகளின் வெற்றி நாயகனாகவும் வலம் வந்தான்.

தான் பொறுப்பு வகித்த துறையில் பணியாற்றிய போராளிகள் விடுமுறையில் வீடுகளுக்குச் செல்லும் போது அவர்களைத் தானே வீடுகளுக்குக் கொண்டு போய் விடுவது வளமை. ஒவ்வொரு போராளியுடனும் சென்று அவனது வீட்டு நிலமைகளை அவதானித்து வந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்து வைப்பதிலும் தனது கவனத்தைச் செலுத்தி சக போராளிகளிடத்தில் நீங்கா அன்பையும் மதிப்பையும் பெற்றுக் கொண்ட போராளி.

எத்தனையோ சிறந்த போர்வீரர்களை உருவாக்கி சிறந்த புலனாய்வாளர்களை உருவாக்கி படையணிகளுக்குப் பணிக்கு அனுப்பிய ஊரானின் மனவுறுதியை அந்த இரும்பு நெஞ்சை உறைய வைத்து உருக வைத்த சம்பவம் அவனைக் களம் போகத் தூண்டுகோலானது.

சென்பற்றிக்ஸ்சிலிருந்து போராளிகளாக வந்த அவனது நண்பர்களில் அவனது ஆத்ம நண்பனான உதயச்சந்திரன் அல்லது கண்ணாடியின் வீரச்சாவு அவனையும் களம் சென்று எதிரியை வீழ்த்த வேண்டுமென்ற ஓர்மத்தை விதைத்தது.

1995ல் திருகோணமலை பன்குளம் இராணுவ மினிமுகாம் மீதான தாக்குதலில் களமாடி தனது இன்னுயிரை ஈகம் தந்து வீரச்சாவடைந்த மேஜர் உதயச்சந்திரனின் மரணம் ஊரானை உறங்க விடாமல் அலைத்தது. தன்னிடம் வழங்கப்பட்டிருந்த வெளியகப்பாதுகாப்பணியின் பொறுப்பை விட்டு சண்டைக்குச் செல்லப் போவதாக மேலிடத்திற்கு தொல்லைகொடுத்துக் கொண்டிருந்து ஒருநாள் தனது ஆசையை நிறைவேற்றும் அனுமதியையும் பெற்றுக் கொண்டான்.

பாதுகாப்பணியின் பொறுப்பு ரட்ணம் மாஸ்ரரிடம் வழங்கப்பட்டு ஊரான் முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் அணியில் இணைக்கப்பட்டான்.
யாழ்மண் புலிகளிடமிருந்து அரசபடைகளிடம் போனதோடு புலிகளின் பலமெல்லாம் போய்விட்டதென சந்திரிகா அரசும் ராணுவத் தளபதி ரத்வத்தையும் புலம்பித் திரிந்த காலமது.

முல்லைத்தீவில் முகாமிட்டு கடல் பாதைக்கும் பெரும் சவாலாக இருந்த முல்லைத்தீவு முகாமின் அழிவில் புலிகளின் வீரம் மீண்டுமொருமுறை உணர்த்தப்பட வேண்டிய காலத்தை சந்திரிகா அரசு எதிர்பார்த்திருக்கவில்லை.தமிழர்களும் போராட்டம் மீது சற்று அவநம்பிக்கையில் யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என மனச்சோர்வடைந்த காலமது.

முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கான பயிற்சிகள் பூனகரி படைத்தளத்தையண்டிய பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பயிற்சிகளில் இணைந்திருந்த போராளிகளால் கூட அந்தப் பயிற்சியானது எந்த முகாமுக்கான தாக்குதலாக அமையப்போகிறதென்பது தெரியாமல் கடும் பயிற்சி ஆரம்பித்திருந்தது. அந்தப் பயிற்சிகளில் ஊரானும் இணைந்து முல்லைத்தீவு மீட்புச் சமருக்கு தயாராகினான்.

தொடர் பயிற்சி உறக்கம் மறந்து உண்ண மறந்து மண்ணை மீட்கும் போருக்கான பயிற்சியில் கலகலப்பும் காலத்தின் கட்டளையை ஒவ்வொரு போராளியும் நெஞ்சில் தாங்கியபடி பொறுமையோடும் கவனத்தோடும் பயிற்சியில் நின்றார்கள். கடுமையான பயிற்சி இலகுவான சண்டைக்கான சிறப்பு. ஒவ்வொரு போராளியின் கடுமையான பயிற்சியும் பெருமைமிகு வெற்றியைப் படைக்கும் பேராயுதமாகியிருந்தது.
ஓயாத அலைகள் 1 முல்லைத்தீவை மீட்கும் முனைப்போடு அதிகாலை இருளோடு அணிகள் நகர்த்தப்பட்டது. வெற்றி பெற்ற மிதப்பில் கனவோடிருந்த சந்திரிகா அரசு திகைத்துப் போனது. புலிகளால் முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.
முல்லைத்தீவு முகாம் மீதான புலிகளின் மூர்க்கமான தாக்குதலில் முல்லைத்தீவு படைமுகாமிலிருந்த படைகள் வழங்கல் , விநியோகம் , தொடர்புகள் யாவும் அறுபட்டு செய்வதறியாது திகைத்துப் போனார்கள்.

தாக்குதல் ஆரம்பித்த அரைமணிநேரத்தில் எதிர்பார்க்கப்பட்டது போல திருகோணமலையிலிருந்து டோறா விசைப்படகுகள் முல்லைத்தீவு நோக்கி விரைந்தன. கடலில் வந்த பகைவனைக் கடற்புலிகள் மறித்துச் சமரில் ஈடுபட்டனர். கடற்சமருக்கு நிகராக தரையிலும் புலிகளணி தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

கடலில் விநியோகத்திற்கென வந்த ரணவிரு என்ற போர்க்கப்பல் கடற்கரும்புலிகளால் அழித்தொழிக்கப்பட்டது. வான்வழியாய் படையினரை தரையிறக்க முயன்று வான் தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்த உலங்குவானூர்திகளில் ஒன்று புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. கந்தக வாசனையால் முல்லைமண் நிரம்பியது.

முல்லைத்தீவில் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளான படைகளைக் காக்கவும் படைத்தளத்தைக் காப்பாற்றவும் அரசபடைகளால் அவசரமாகத் தரையிறக்கமொன்று மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல் தளத்திற்குத் தெற்கே 3மைல் தொலைவில் உள்ள அளம்பில் கடல் வழியால் பெருமெடுப்பிலான தரையிறக்கத்தை மேற்கொண்டது இலங்கை அரசபடைகள்.
அரசின் முப்படைகளும் இணைந்து நடத்திய இத் தரையிறக்கத்திற்கு திரிவிட பகர எனப்பெயர் சூட்டப்பட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வெட்டைவெளியும் எவ்வித காப்பு வசதிகளும் இல்லாத அளம்பில் பகுதியில் சண்டையணிகளை இறக்கி சமரை நடாத்தினர் புலிகள்.

இப்பகுதியில் சமரிட்ட புலிகளின் படையணிகளுடன் தளபதி கேணல்.ராஜேஸ் தலைமையில் இம்ரான் பாண்டியன் படையணியும் பங்கு கொண்டது. தளபதி.கேணல்.ராஜேஸ் 2009ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆனந்தபுரம் சமரில் வீரகாவியமானார்.

தளபதி கேணல் ராஜேஸ் அவர்களது பொறுப்பிலான ஒரு பிளாட்டுனுக்கான அணிப்பொறுப்பாளனாக ஊரானும் ஊரானின் அணியும் தாக்குதலில் இறங்கியது. அளம்பில் பகுதியில் முழுமையான வலுவையும் பிரயோகித்தது அரசு. அளம்பிலில் மறிப்புச்சமரை மேற்கொண்ட புலிவீரர்களின் சமரையும் வெல்ல முடியாது தோற்றது படைகள்.

புலிகளின் அகோர தாக்குதலில் இலங்கையரச படைகள் அடைய நினைத்த வெற்றியும் அவர்களது கனவும் சிதைந்து போக இறுதியில் புலிகள் வென்றார்கள். முல்லைத்தீவை அச்சுறுத்திக் கொண்டிருந்த இராணுவ முகாமும் இராணுவப்படைகளும் அழிக்கப்பட்டு 3நாட்களில் முல்லைத்தீவு முகாம் முற்று முழுதாக புலிகளிடம் வீழ்ந்து முல்லைத்தீவு மண் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டது.

புலிகளின் வரலாற்றில் முதல் முதலாக இருபெரும் ஆட்லறிகளையும் பெருமளவிலான ஆயுதங்களையும் கைப்பற்றி முல்லைச்சமர் முடிந்தது. அந்த வெற்றிக்கு வித்தாக 400வரையிலான போராளிகள் தங்கள் இன்னுயிர்களை விதைத்து விழிமூடிப்போயினர்.

அந்த 400 வரையானவர்களில் ஒரு வீரனாக கப்டன் எனும் பதவிநிலையோடு ஊரான் அல்லது கௌதமனும் விழிமூடி மாவீரனாய் சந்தனப்பேழையில் நீட்டி நிமிர்ந்து உறங்கிப் போனான்.

சமருக்குச் செல்கின்ற வீரர்கள் யாவரும் சாகப்போவதில்லை. அவர்கள் சாதிக்கவே களம் போகிறார்கள். அதுபோலவே எங்கள் கௌதமனும் சாதனை புரிந்து வருவானென்றுதான் தளபதிகள் போராளிகள் காத்திருந்தனர். ஆனால் அவனோ யாரும் எதிர்பார்க்காத வகையில் சாதனையை முடித்த திருப்தியில் முல்லைத்தீவு மண்ணின் மூச்சோடு நிறைந்து போனான்.

தான் வீரச்சாவடைகிற போது தனது வித்துடல் தன் ஆத்ம நண்பன் மேஜர் உதயச்சந்திரன் அல்லது கண்ணாடி விதைக்கப்பட்ட கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட வேண்டுமென்று விரும்பியது போலவே கனகபுரம் துயிலிடத்தில் நிரந்தரமாய் துயின்றான்.

ஊரானை இழந்த போது புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஒரு சிறந்த புலனாய்வாளனை சாதனையாளனை இழந்து போனோமெனத் துயர் கலந்த அவனது இழப்பின் கனதியை நினைவு கூர்ந்தார். அது போல தளபதி சொர்ணம் அவர்களும் ஊரானின் இழப்பை மிகுந்த துயரோடுதான் ஏற்றுக் கொண்டார்.

இன்னொரு காலம் பெற்றிருக்க வேண்டிய பெறுமதி மிக்க போர்த்தளபதியை இழந்து போனது போலவே போராளிகளும் தளபதிகளும் ஊரானின் இழப்பை நினைவு கொண்டார்கள். அதிகம் அலட்டாத ஆனால் ஊரான் இருந்தால் கலகலப்பிற்கு குறைவில்லாத சிரிப்பும் மகிழ்ச்சியுமே நிறையும் நாட்களை நண்பர்கள் துயரத்தோடு கடந்து உறுதியோடு நிமிர்ந்தார்கள்.

கனகபுரம் துயிலுமில்லம் வருடாவருடம் ஊரானுக்காகவும் விளக்கெரித்து தன்மடியில் அவனைத் துயிலவைத்துத் தாலாட்டிக் கொண்டிருந்தது.

கல்லறைகளில் விளக்கேற்றி அவர்கள் கனவுகளை நனவாக்கும் உறுதியோடு வருடம் தோறும் போராளிகள் உறுதியெடுத்துக் கொண்டார்கள். அவன் சென்ற வழி வெல்லும் வழி என்றோ ஒருநாள் விடியுமென்ற நம்பிக்கையோடு அவனது நினைவுகளைச் சுமந்தபடி அவனது தோழர்கள் அவனோடு களமாடியவர்கள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

இறைச்சி வேண்டாம் மரக்கறி வேண்டாமென்று அடம்பிடித்த குழந்தை ஒருநாள் உறுதியோடு தனது தாயகத்திற்கான பணி முடித்துப் பாதியில் போய்விடுவானென்று அறியாத அவனது அம்மா , அப்பா, அக்காக்கள் , உறவினர்கள் ,நண்பர்கள் நினைவுகளில் இன்பசோதி கப்டன் ஊரானாக , கௌதமனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தேசம் மீட்கப் போனவர்களின் நினைவோடு எங்கள் ஊரானும் என்றென்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டேயிருப்பான் வரலாறாக….!

நினைவழியாத் தடங்கள் – 08 :லெப் கேணல் சூட்டி நினைவுகளில்

எனது நண்பர் ஒருவருடன் லெப் கேணல் மகேந்தியண்ணையைப் பற்றிய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். மகேந்தி அண்ணையின் தனிச்சண்டைகள் பற்றியும் அவருடைய துணிச்சலான சம்பவங்களைப் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்த போது, மகேந்தி அண்ணையைப் போலத்தான் சூட்டியும் என்று சொன்ன நண்பர், அவர்களிருவரும் ஒன்றாக இருந்தபோது நடந்த சில சுவாருசியமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

Lt-Col-Sooddi

‘‘அது 1989 ம் ஆண்டு காலப்பகுதி, இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் காலகட்டம், வன்னிக் காடுகளில் போராளிகள் அணி அணியாகப் பிரிந்து தங்கியிருந்தனர். இந்திய இராணுவம் காட்டுக்குள் இராணுவ நடவடிக்கைகளுக்காக இறங்கினாலன்றி போராளிகள் வழமையான பம்பலும் பகிடியுமாகத்தான் இருப்பார்கள். பல யாழ்மாவட்டப் போராளிகளுக்குக் காடு புதிது, காட்டு மிருகங்களைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் அதைப்பற்றிய அனுபவமின்மையிருந்தது. வன்னிக் காடுபற்றித் தெரிந்த சிலர், யாழ்ப்பாணப் போராளிகளுக்கு காடு, மிருகங்கள் தொடர்பில் சில போலியான கதைகளைக்கூட பகிடிக்காக கட்டிவிடுவார்கள். இதனால் இவை தொடர்பாக ஏதாவது உண்மைக் கதைகள் சொன்னால் பகிடிக்குச் சொல்வதாக நினைத்து நம்பமாட்டார்கள்.”

‘‘ஒரு தடவை பாலமோட்டைக் காட்டுப்பகுதியில் ஒரு அணி தங்கியிருந்தது. அப்போது அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் யானைகள் வந்து நிற்பதாக போராளி ஒருவர் சொன்னார். அப்ப சூட்டி உட்பட எங்களுக்கும் யானை பார்க்கும் ஆசை வந்தது. எனவே நாங்கள் யானை நிற்கும் இடத்திற்குச் செல்ல முற்பட்டோம். வன்னியைச் சேர்ந்த போராளிகள் கவனம், யானை தூரத்தில் நிக்கிறமாதிரி இருக்கும் ஆனால் வேகமாக பக்கத்தில வந்திடும் என்று எச்சரித்தனர். ‘சும்மா கதைவிடாதைங்கோ’ என சொல்லிவிட்டுச் சென்றோம்.”

‘‘முகாமிற்குப் பக்கத்தில் இருந்த வெட்டையிற்தான் யானை நின்றது என்பதால் சூட்டி சாரத்துடனே வந்தார். யானைக்கூட்டத்தின் பார்வை எல்லைக்குள் சென்றபின், சூட்டி எங்களில் இருந்து முன்னுக்குச் சென்று, பம்பலாக சாரத்தைப் பிடித்து முன்னுக்கும் பின்னுக்குமாக ஆட்டி,யானையைப் பார்த்து, ‘வா வா‘ என சொல்லிக்கொண்டிருந்தார். சூட்டி எப்பவும் ஏதாவது வம்பு பண்ணிக்கொண்டிருப்பார். அப்படிச் செய்து கொண்டிருக்கும் போது யானைக்கு என்ன நடந்ததோ என்னவோ தெரியவில்லை. திடீரென ஒரு யானை எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. சூட்டி திரும்பி ஓடத் தொடங்க, நாங்களும் வேகமாக பின்னுக்கு ஓடத்தொடங்கினோம். ஓடிவந்த பாதையில் முகாமிற்கு தடிவெட்டிய மரங்களின் அடிக்கம்புகள் ஆங்காங்கு நின்றன. கட்டைகளில் தட்டுப்படாமல் ‘‘தலைதப்பினால் தம்பிரான புண்ணியம்” என்று நினைத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தோம்.

சூட்டி எங்களிற்கு பின்னால கடைசியாத்தான் வந்துகொண்டிருந்தவர். ஓடிவரும் போது திரும்பிப் பார்க்கேக்கில ஓடிக்கொண்டு வந்த அவரின் சாரம் மரத்தின் அடிக்கம்பில் தடக்குப்பட, அப்படியே நிலைகுப்பற விழுந்து விட்டார். அவர் சுதாகரித்து எழும்பி ஓடுவதற்கு முன் யானை அவருக்குக் கிட்ட வந்துவிட்டது. வந்த யானை கால் ஒன்றைத் தூக்கி இவரின் மேல் மிதித்தது. நாங்கள் திகைத்துப் போய்ப்பார்த்தோம். ஆனால் யானையின் கால் இவரது கால் இடைவெளிக்குள்தான் மிதித்து நின்றது. சாரத்தில் மிதித்ததால் சூட்டி எழும்ப முடியாமல் திகைத்துப்போய் யானையின் காலுக்குள் கிடந்தார். பின்னர் யானை சூட்டியை தும்பிக்கையால் தூக்கி, தும்பிக்கைக்குள் வைத்து உறுட்டித் தேய்க்கத் தொடங்கியது.சிலவேளை தூக்கி எறிவதற்காகத்தான் அப்படிச் செய்ததோ தெரியவில்லை.”
‘‘சூட்டி ஒன்றும் செய்ய முடியாமல் தும்பிக்கைக்குள் இருந்து உறுட்டுப்பட்டு, தேய்பட்டுக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் ஒருபோராளி முகாமிற்கு ஒடிச் சென்று துப்பாக்கியை எடுத்துவந்து வானத்தை நோக்கிச் சுட, யானை சூட்டியைத் தூக்கி வீசாமல் அப்படியே போட்டு விட்டு ஓடிவிட்டது.

நாங்கள் ஒடி சூட்டிக்குக்கிட்டச் செல்ல, சுதாகரித்து எழும்பி நின்றார். முகம் வீங்கியிருந்தது. யானை நிலத்தில் தேய்த்ததால் முகத்தில் இரத்தக்காயங்களும், உடம்பில் தேய்த்த அடையாளங்களும் இருந்தன. ஆனால் சூட்டி சிரித்துக் கொண்டிருந்தார். இதுதான் சூட்டியின் குணவியல்வு, எந்த கடினமான சந்தர்ப்பங்களிலும் பதட்டத்தைக் காணமுடியாது. நிதானமாகவும் துணிவாகவும் செயற்படுவது அவரது இயல்பு.”

‘‘பிறிதொரு சமயம் மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்திய இராணுவம் ‘செக்மெய்ற்’ எனப் பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கையை, தலைவரை இலக்கு வைத்து மேற்கொண்டது. இதனால் தலைவரை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. அப்போது கேணல் சங்கர் அண்ணையுடன் ஒரு அணி, தலைவரை மாற்றுவதற்காகத் தீர்மானித்த இடத்திற்கான உணவுகளைக் களஞ்சியப்படுத்துவதற்காகச் சென்றது. அந்த அணியில் சூட்டியும் நானும் இடம்பெற்றிருந்தோம். சூட்டி காட்டிற்குள்ளால் பாதையை முறித்துக் கொண்டு முன்னுக்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது இடையில் இருந்த கருங்குளவிக்கூடு தட்டுப்பட்டு குளவி கலையத்தொடங்கியது. சூட்டியையும் ஓடச்சொல்லிவிட்டு, நாங்கள் எல்லாரும் கலைஞ்சு ஒடிவிட்டோம். பின்னர் எல்லோரும் ஒன்றாகிய பின் பார்த்தால் சூட்டியைக் காணவில்லை. அவரைத் தேடி குளவிக்கூட்டடிக்குச் சென்றோம். அந்த இடத்திலேயே சூட்டி குப்பறக்கிடந்தார். சூட்டிக்கு கருங்குளவி குத்தத் தொடங்க, வேதனையில் அப்படியே விழுந்து கிடந்துவிட்டார்.

கருங்குளவிகள் தலையிலிருந்து கால் வரை உடலில் இருபத்துமூன்று இடங்களில் குத்திவிட்டு கலைந்து சென்று விட்டன. வேதனையில் துடித்தார். ஒரு கருங்குளவி முறையாக் குத்தினாலே தப்புவது கடினம் என்பார்கள். மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல முடியாது. முகாமிற்கு கொண்டு வந்து பழப்புளியைக்கரைத்து உடம்பு முழுவதும் ஊற்றிக்கொண்டிருந்தாம். ஒரு கிழமைவரை, சாகிறாக்கள் சேடம் இழுக்கிறதைப்போல இழுத்துக் கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தார். பிறகு குளவி குத்திய இருபத்துமூன்று இடங்களிலும் பொட்டளவிற்குக் காயமாகியது.அதன்பின்னரே குளவி குத்தின இடங்களில் இருந்து குளவியின் ஆணிகளை எடுக்கக்கூடியவாறு இருந்தது. அதுக்குப்பிறகுதான் முழுமையாகக் குணமடைந்தார். இந்தத்தடவை இரண்டாவது முறையாக சாவின்விளிம்புவரை சென்று திரும்பினார்.

பின்னர் ஒருதடவை மன்னாரில் அமைந்திருந்த எமது முகாம் ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்தோம். முகாமிலிருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு முன் இந்திய இராணுவம் காடு முறித்துச் சென்ற தடையம் இருந்தது. பொறுப்பாளர் தடையத்தை பின்தொடர்ந்து எங்கு செல்கின்றது எனப் பார்க்குமாறு ஒரு போராளியிடம் கூறினார். ஆனால் சூட்டி நான் போறன் எனக்கூறி, தன்னுடன் ஐந்து பேரைக்கூட்டிக் கொண்டு தடையத்தைப் பின்தொடர்ந்து சென்றார். இராணுவம் தடையத்தை ஏற்படுத்திவிட்டு, தடையத்தின் இடையில், தடையம் சென்ற திசையை பார்த்து நிலையெடுத்திருந்தான். இவர்கள் தடையத்தைப் பின்தொடர்ந்து செல்ல, பதுங்கியிருந்த இராணுவம் தங்களைத் தாண்டிச் செல்லவிட்டு விட்டு இவர்கள் மீது பின்பக்கமாகத் தாக்குதலைத் தொடுத்தது.

திரும்பி இராணுவத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தவாறு காட்டுக்குள் பிரிந்து ஓடிவிட்டனர். பிறகு காடுமாறி, அப்பகுதியில் இருந்த சனத்திட்ட வழிகேட்டு இரண்டு நாட்களின் பின் முகாமிற்கு வந்து சேர்ந்தார் சூட்டி. பின்னர் குளிப்பதற்காக உடுப்பு எடுக்க பாக்கைத் (Bag) திறந்து பார்த்தால் முதுகில் போட்டிருந்த உடுப்புபாக்கில் மூன்று ரவைகள் பட்டு உடுப்பு கந்தலாகக் கிழிந்திருந்தது. இந்த சம்பவத்திலும் மயிரிழையில் மூன்றாவது தடவையாக உயிர்தப்பியிருந்தார்.”

மேலும் அவர் சூட்டி அண்ணையின் தனிப்பட்ட குணாதிசயங்களைப்பற்றிக் கூறும்போது ‘‘சூட்டி மூத்த உறுப்பினர் ஒருவருடைய நம்பிக்கைக்குரிய போராளியாகச் செயற்பட்டவர். சிறந்த நிர்வாகி, நேரம் பாராது கடுமையாக உழைக்கக்கூடிய ஒருவர். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளர்” என்றார்.

சூட்டியண்ணையின் இந்தக் குணாதியங்களை நான் புரிந்து கொண்டது ஆ.க.வே சண்ணடையின்போது. ‘‘1991 ம் ஆண்டு, ஆ.க.வே சண்டைக்காக அணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. கனரக அணியினரான எங்களுக்கு வெற்றிலைக்கேணிக் கடற்கரைப்குதியில் கடற்படையின் தரையிறக்கத்தைத் தடுப்பதற்கான பணி தரப்பட்டது. அந்தப்பகுதிக்குச் சூட்டியண்ணைதான் பொறுப்பாளர். வெற்றிலைக்கேணி கடற்கரைமணலில் நிலையமைத்துக் கொண்டருந்தபோது அருகில் நின்ற போராளி சூட்டியண்ணை வருகின்றார் எனச் சொன்னார். தலையை நிமிர்த்தி பார்த்தபோது சராசரி உயரம், சிரித்தமுகம், தலையில் பின்பக்கமாக திருப்பி விடப்பட்ட தொப்பியுடன் வந்தார் சூட்டியண்ணை. அவரைப்பார்த்தவுடன் உடனே நினைவிற்கு வந்தது லெப்கேணல் மகேந்தி அண்ணை தான். கிட்டத்தட்ட ஒத்த முகவமைப்பைக் கொண்டவர்கள். நாங்கள் கனரக ஆயுதங்களிற்கான பயிற்சி எடுத்த முகாமில் தான் 23.MM கனரகப்பீரங்கிக்கான பயிற்சியை மகேந்தியண்ணை எடுத்தார். அப்போது அவருடன் எனக்குச் சிநேகிதம் ஏற்பட்டது. எனவே சூட்டியண்ணையுடன் முதல் சந்திப்பிலேயே இலகுவாகவே அணுகக்கூடியவாறு இருந்தது.

ஆனையிறவுத்தளத்தை முற்றுகையிட்டுத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதும் தரையிறக்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தன அணிகள். சூலை 14 ம் திகதி நீண்டு விரிந்த கடற்பரப்பில் அணிவகுந்து நின்றன கடற்படைக்கலங்கள். சூட்டி அண்ணையும் தனது பகுதியில் உள்ள அணிகளை தயார்ப்படுத்திக் காத்திருந்தார்.

விமானத்திலிருந்து வந்த குண்டுகள் கடற்கரைப்பகுதியில் கடற்படைத்தரையிறக்கத்திற்கான முன்னேற்பாட்டைச் செய்து கொண்டிருந்தன.பின்னேரம் கடற்படைக்கலங்கள் தரையை நோக்கி நகரத்தொடங்கின. கனரக அணிகளும் முடிந்தளவிற்குத் தாக்குதலைத் தொடுத்து இழப்புக்களை ஏற்படுத்தினாலும் இராணுவம் தரையிறங்கி விட்டது, றோட்டுக் கரையால் இராணுவம் தரையிறங்கிய அந்தப்பகுதியை நோக்கி சூட்டி அண்ணை ஓடிச் செல்வது தெரிந்தது. நாங்கள் கடற்கலன்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து கொண்டிருந்தோம்.

இராணுவம் தரையிறங்கிய பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருந்தது. வோக்கியில் சூட்டியணையைத் தொடர்புகொள்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் எங்களை அவ்விடத்திலிருந்து பின்வாங்குமாறு கட்டளை கிடைக்க பின்வாங்குகின்றோம்.

மறுநாள் ரவி அண்ணை அழுது கொண்டிருந்தார். சூட்டியண்ணை வீரச்சாவடைந்துவிட்டார் என்பது புலப்பட்டது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் எல்லாம் உயிர் தப்பிய சூட்டியண்ணை ஆ.க.வெ சமரில் வெற்றிலைக்கேணி கடற்கரையில் தரையிறங்கிய இராணுவத்திற்கெதிரான சண்டையில் வீரச்சாவடைந்தார்.

அவரது குடும்பத்தில் மூன்று பேர் போராளிகளாக இருந்தனர். லெப்கேணல் சூட்டி, அவரது தம்பி லெப் கேணல் மகேந்தி. இருவரும் வீரச்சாவடைந்து விட்டனர். அவரது இன்னுமொரு சகோதரன் ரவி அண்ணைக்கு முள்ளிவாய்க்காலின் என்ன நடந்தது என்று இன்றுவரை தெரியாது.

வாணன்

கடற்கரும்புலி மேஜர் அன்பு/அன்பழகன் வீரவணக்க நாள்

31.07.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் அன்பு/அன்பழகன் என்ற கடற்கரும்புலி மாவீரரின் வீரவணக்க நாள் இன்றாகும்.
BT-Maj-Anpalagan

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள் (2)
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும் (2)
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்
பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்
போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள் – சாவை
எதிர் பாரர்த்து பார்த்துக் காத்திருந்தீர்கள்
பாயும் கரும்புலிகளாகிப் பகை முடித்தீர்கள்
பாதகரின் நெஞ்சினிலே போய் வெடித்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள

கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுண்டு
கரும்புலிகளின் விழிகளில் நீர் வழிவதுமுண்டு
அல்லும் பகலும் அண்ணன் பெயரை உச்சரித்தீர்கள்
அந்தப் பெயர் சொல்லி மேனி பிச்செறிந்தீர்கள்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும்

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்

prabakaran with black tigers

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

ஓமந்தை ஊடறுப்புத் தாக்குதலில் காவியமான மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்.

ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக ஒமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் வீரகாவியமான தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.Maj Siddu Singer

வன்னி மண்ணை ஊடறுத்து யாழில் நிலை கொண்டிருந்த படையினருடன் இணைப்பை ஏற்படுத்த ஜெயசிக்குறு என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை மூலம் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது 01.08.1997 அன்று வவுனியா மாவட்டம் ஒமந்தைப் பகுதியில் விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது.

ஏற்கனவே தாண்டிக்குளம், மற்றும் பெரியமடுப் பகுதியில்களில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து உச்சவழிப்பு நிலையில் படையினர் மீது நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலின்போது படைத் தரப்பிற்கு பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

வானூர்தி எதிர்ப்பு சுடுகலன்கள், கிரனைட் செலுத்திகள் உட்பட பெருமளவு படைக்கலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

இந்த ஊடறுப்புத் தாக்குதல் நடவடிக்கையின்போது பகை என்னும் தடையரண் மோதி தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 வரையான போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையில் உறங்குகின்றனர்.

மேஜர் கிளியன் (கந்தசாமி விஸ்வநாதன் – கிளிநொச்சி)
மேஜர் மதியன் ( மதி) (சிதம்பரம் நடராஜா – மன்னார்)
மேஜர் முருகையன் ( நியூமன்) (இராஜு சௌந்தரராஜன் – முல்லைத்தீவு)
மேஜர் சிட்டு ( தங்கத்துரை) (சிற்றம்பலம் அன்னலிங்கம் – யாழ்ப்பாணம்)
மேஜர் சஞ்சீவி (சின்னையா முத்துக்கிருஸ்ணன் – கிளிநொச்சி)
மேஜர் அன்பு ( கதிர்ச்செல்வன்) (கனகு தவராசா – யாழ்ப்பாணம்)
மேஜர் இளங்குமரன் ( பாபு) (பேரானந்தம் ஜெயராஜ் – மட்டக்களப்பு)
கப்டன் சேரலையான் ( பிரதீப்) (சிதம்பரப்பிள்ளை கருணாகரன் – மட்டக்களப்பு)
கப்டன் துகிலன் (கந்தசாமி சிவகுமார் – மட்டக்களப்பு)
கப்டன் தமிழரசன் (செல்வராசா சந்திரதாசன் – யாழ்ப்பாணம்)
கப்டன் சோழன் ( தமிழன்) (சிவபாலசிங்கம் தயாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் பாலகிருஸ்ணன் (சிவசம்பு சேகரன் – மட்டக்களப்பு)
கப்டன் தூதுவன் (பெரியசாமி முத்துவேல் – மாத்தளை)
கப்டன் கரிகாலன் ( நெல்சன்) (பெஞ்சமின் சகாயநாதன் – மன்னார்)
கப்டன் ஈழப்பிரியா (ஆறுமுகம் ஜெனற்கிருஸ்ரினா பிரியதர்சினி – யாழ்ப்பாணம்)
கப்டன் சாந்தீபன் ( முத்தமிழ்வேந்தன்) (கிருஸ்ணசாமி விநாயகமூர்த்தி – யாழ்ப்பாணம்)
கப்டன் தணிகைநம்பி (சின்னையா கந்தராசா – திருகோணமலை)
கப்டன் பிறைமாறன் (இராசதுரை கருணாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் எழுச்சிமாறன் (கிறிஸ்ரியாம்பிள்ளை ஜெயப்பிரகாஸ் – மன்னார்)
கப்டன் நிர்மலன் (தர்மராஜசிங்கம் பிரசன்னா – யாழ்ப்பாணம்)
கப்டன் பாலகிருஸ்ணன் (இரத்தினகோபால் அகிலன் – யாழ்ப்பாணம்)
கப்டன் உருத்திரன் (சிவபாதம் சிவாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் செந்தூரன் ( செல்லப்பா) (அருளானந்தர் ஜெயக்குமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் வன்னியன் (அன்ரன் றேமன் – மட்டக்களப்பு)
கப்டன் ஜெயஜோதி (கனகலிங்கம் விஜிதா – யாழ்ப்பாணம்)
கப்டன் கல்யாணி (குணரட்ணம் மதிவதனி – திருகோணமலை)
கப்டன் எழிலரசன் ( விந்தரன்) (பஞ்சலிங்கம் பாலமுரளி – யாழ்ப்பாணம்)
கப்டன் வேணுகா (கணபதிப்பிள்ளை திருச்செல்வி – யாழ்ப்பாணம்)
கப்டன் சிவானந்தன் (இராசேந்திரன் அன்ரன்ஜேசுராஜா – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் கவியரசு ( கவியரசன்) (சோமசேகரம் சிறிகண்ணதாசன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் ஈழச்செல்வன் (தர்மலிங்கம் கோகுலநாதன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் வெண்சாகரன் (சதாசிவம் சுந்தரலிங்கம் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் கதிரவன் (சின்னத்தம்பி சச்சுதானந்தன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் விஜயமுரளி (இராமலிங்கம் கந்தசாமி – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் சேரமான் (சோதி சிவனேசன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வீரத்தேவன் (குமாரசிங்கம் சண்முகநாதன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் பேரின்பன் (கனகசபை தவராசா – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் சின்னத்துரை ( நாதன்) (வேலாயுதம் புஸ்பராஜ் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் கண்ணன் (சதாசிவம் தேவகுமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கீர்த்தி (திருஞானசம்பந்தன் நவநீதன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் துலாஞ்சினி ( லதா) (முத்தையா பிரிஸ்சிலா அருள்மணி – வவுனியா)
லெப்டினன்ட் வித்தகா (சிவகுரு சிவநந்தி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் விதுபாலா (நவரத்தினம் சசிகலா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அழகியநம்பி (கருணதாஸ் அஜித்விஜயதாஸ் – திருகோணமலை)
லெப்டினன்ட் வேலன் (சண்முகராசா சபேசன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் கற்பகன் (கந்தசாமி பராக்கிரமராசா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வண்ணன் ( ஜீவன்) (சந்தனம் முத்துக்குமார் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் தொண்டமான் (பெரியதம்பி சோதரராசன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அறிவொளி ( அற்புதன்) (கதிரேசன் மகேந்திரன் – வவுனியா)
லெப்டினன்ட் காவியன் (மரியநாயகம் ரொறன்ஸ் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கல்யாணி ( வண்ணநிலா) (தியாகராஜா ஜெயராணி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பொற்சிலை (சின்னத்துரை பாலகௌரி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தீந்தமிழ்ச்செல்வன் (கனகரட்ணம் ராஜன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நாகமணி (அப்பையா கலையழகன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சின்னக்குட்டி (செல்வராசு மகேந்திரன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் சொரூபி (தங்கவேல் ஜெனிற்சுஜாதா – மன்னார்)
லெப்டினன்ட் வினோதராஜ் (தெய்வநாதன் மோகநாதன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் யாழிசை (வல்லிபுரம் கிரிஜா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அப்பன் (தேவதாஸ் கிருசாந்தன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இனியவன் (கனகரத்தினம் செல்வக்குமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நாயகன் (தெய்வேந்திரன் சீலன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கனியவன் (கந்தையா பாஸ்கரன் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் எத்திராஜ் (வடிவேல் கோகுலராஜ் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இசைரூபன் (தர்மன் நிசாந்தன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கவியழகு ( கவிவாணன்) (சுபந்திரராஜா கண்ணன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பிறேமிலன் ( வரதன்) (கணபதிப்பிள்ளை இராசரத்தினம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் ரதிசீலன் (குருநாதபிள்ளை கோணேஸ்வரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் வைத்தி (கனகசூரியம் உதயசூரியம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பேரரசன் (குழந்தைவேல் பாவேந்திரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கிருபராஜன் (இளையதம்பி மனோகரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அன்புவரதன் (சுந்தரம் மோகேந்திரன் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் கபில்குமார் (சீவராஜா மனோரூபன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பிரியமஞ்சன் ( பிரகலாதன்) (நாகராசா ஜெயக்கணேஸ் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் தமிழன் (அழகையா வேலாயுதம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் செல்வசுந்தரம் (சின்னத்தம்பி சந்திரகுமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் திவ்வியநாதன் (பெரியதம்பி நகுலேந்திரம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தரணியாளன் (வேல்முருகு ஜெயநேசன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் மிருநாளன் (பிள்ளையான்தம்பி இளங்கோ – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் ஈகையன் ( ஈழமாறன்) (கனகசிங்கம விநாயகலிங்கம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சித்திராஜன் (சிறிராமன் திவாகரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பழனிராஜ் (கனகசூரியம் சிறிதரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கலைக்கோயில் (முனியாண்டி பெரியதம்பி – கண்டி)
2ம் லெப்டினன்ட் பாடினி (தர்மு அமுதா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அருண் (மாயழகு பரமானந்தம் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் மலர் ( உசா) (இராஜேந்திரம் தவராணி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் குட்டிமோகன் (பெரியசாமி சண்முகராஜா – மன்னார்)
2ம் லெப்டினன்ட் மோகனராசா (கிருஸ்ணசாமி கிருஸ்ணராஜா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் மது ( கயல்க்கொடி) (மாதகராசா சுசிகலா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அமரன் (முத்துக்குமார் சிவகுமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சிலம்பரசன் (நாகலிங்கம் கோணேஸ்வரன் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் முத்தமிழன் (நவரத்தினம் வசந்தன் – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் செங்கதிர்ச்செல்வி ( மகேந்திரா) (பழனிமுத்து நவலட்சுமி – மன்னார்)
2ம் லெப்டினன்ட் ரமா ( கலைக்குயில்) (இராசு சிவனேஸ்வரி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் திருமகன் (வேலுப்பிள்ளை கலாநிதி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தமிழேந்தன் ( ரவிவர்மன்) (சிவராசா சிவகுமார் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் ஈழவாசன் (விஸ்வலிங்கம் சுரேஸ் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பிரபா (செல்லத்துரை மாலதி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மதி (சிவகணகநாதன் விமலரத்தினேஸ்வரி – மன்னார்)
2ம் லெப்டினன்ட் அருள்நிதி (மகேந்திரன் கௌசலா – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் இளவதனி (பொன்னுக்குமார் சுதாஜினி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (பூராசா கமலேஸ்வரன் – கிளிநொச்சி)
வீரவேங்கை காந்தராஜ் (சுந்தரலிங்கம் விக்னேஸ்வரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை அமிர்தன் ( குலராஜ்) (முருகேசப்பிள்ளை சண்முகராசா – அம்பாறை)
வீரவேங்கை நூதகன் (அப்பாத்துரை ரஜனிக்குமார் – மட்டக்களப்பு)
வீரவேங்கை மதனமாவீ ( சுருளிராயன்) (தம்பிராசா பரமேஸ்வரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை பாவாணன் ( பாரதி) (மயில்வாகனம் சங்கரதாஸ் – மட்டக்களப்பு)
வீரவேங்கை நவச்செல்லம் (தேவராசா விக்னேஸ்வரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை பொதிகன் (சிவராஜா சிவாநந்தராஜா – மட்டக்களப்பு)
வீரவேங்கை நிர்மலன் (சிவராசா சுவிக்காந்தன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை மதுர்சனன் (கார்த்திகேசு நாகராஜா – அம்பாறை)
வீரவேங்கை நவானந்தன் (கோபாலபிள்ளை சசிக்குமார் – அம்பாறை)
வீரவேங்கை பவாதரன் (முத்துலிங்கம் விஸ்வலிங்கம் – மட்டக்களப்பு)
வீரவேங்கை கயல்விழியன் (தேவராஜா றதிகரன் – அம்பாறை)
வீரவேங்கை அமுதராசன் (ஸ்ரனிஸ்லாஸ் அன்ரன்கனியூட் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கோணமலை (சிவராசா புண்ணியராசா – மட்டக்களப்பு)
வீரவேங்கை வேணுஜன் (அரசரட்ணம் சுதர்சன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை ஆனந்தி (திரவியம் சறோ – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சுபாநந்தினி (தங்கராசா ராதிகா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அமலி (அரியரட்ணம் மேலின்கிருசாந்தி – மன்னார்)
வீரவேங்கை தமிழவள் (வெலிச்சோர்மியஸ் சுதர்சினி – மன்னார்)
வீரவேங்கை மலர்விழி (கனகலிங்கம் சுதாயினி – கிளிநொச்சி)
வீரவேங்கை கோமதி (சின்னத்துரை சர்மிலா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கடலரசி (திருப்பதி திலகராணி – கிளிநொச்சி)
வீரவேங்கை நவானி (ஆண்டிசுந்தரம் காந்திமதி – முல்லைத்தீவு)
வீரவேங்கை கலைவாணி (ரங்கசாமி கமலினி – கிளிநொச்சி)
வீரவேங்கை கமலேந்தினி (சுந்தரமூர்த்தி சுதாமதி – திருகோணமலை)
வீரவேங்கை விமலகாந் (கதிர்காமப்போடி கிருபராஜா – மட்டக்களப்பு)
வீரவேங்கை ஈழத்தமிழன் (பத்மநாதன் மதியழகன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வெண்ணிலவன் (கணபதிப்பிள்ளை பத்மநாதன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சோழன் (பாலசுப்பிரமணிம் ருசிகாந்தன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மணி ( தமிழ்க்கவி) (ஏகாம்பரம் சிவகுமாரி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வெண்மலர் ( அல்லி) (யோகராசா கமலாதேவி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சோபா (நாராயணசாமி லதா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பேரமுதன் (சிவம் சிவரூபன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கோன் (சண்முகம் பாலமுருகன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தேமாங்கனி (மாணிக்கம் சரஸ்வதி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பிருந்தா (விஜயகாந்தன் ரேவதி – யாழ்ப்பாணம்)

போர்குயில் மேஜர் சிட்டு நினைவில்….மேஜர் சிட்டு வீரவணக்கம்

தாயக விடுதலைப்போரில் தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

ltte veeravanakam 2

லெப். மாமா (பாலையா)

Lt Palaiya

லெப்டினன்ட் மாமா (பாலையா) வின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள் இன்றாகும்.

21.07.1988 அன்று யாழ்மாவட்டம் காரைநகர்ப் பகுதியில் இந்திய இராணுவத்தின் சுற்றிவளைப்பில் எதிரியிடம் பிடிபடாமல் விடுதலைப் புலிகளின் கோட்பாட்டுக்கு அமைவாக சயனைற் விலையை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிய லெப்டினன்ட் மாமா (பாலையா) அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வீரவணக்க நாள்.

தமிழீழத்தின் தங்கமண் அன்னியநெருபில் அழிந்துகொண்டிருக்கிறது. பேரினவாதிகளுக்கு எதிராக நாங்கள் நடத்திய தர்மயுத்தம் வெற்றியின் எல்லைகளை தொட்ட போதுதான் புதிதொரு அன்னியப்புயல் நம்மை ஆக்கிரமித்து அழிக்க வந்தது.

எங்கள் தாயகத்தின் பிறப்பிற்காகவே புலிகளின் இறப்புக்கள் தொடர்கின்றன.

தர்மம் எத்தனை நிர்ப்பந்தங்கள் ஏற்ப்பட்டாலும் சரணாகதி அடையமாட்டாது.

தமிழீழ மண்ணில் இந்திய இராணுவம் விதைத்த அவலத்தின் தொடராக இந்த மாவீரனின் வீரமரணத்தையும் தமிழீழ மக்களின் மனதில் மீளாத் துயராக விதைத்துச் சென்றது.

தமிழீழ வேள்விவேதத்தில் இலட்சிய உறுதியுடன் இலங்கை – இந்திய இராணுவத்துடன் போரிட்டு வீரமரணம் அடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம்.

கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி

03.07.2000ம் அன்று தமிழீழக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையினர் மீதான தாக்குதல் முயற்சி ஒன்றில் வீரச்சவைத் தழுவிய கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலியின்  ஆண்டு நினைவு நாள்

Bt Cap Jeyansali

Up ↑