08.12.1996 டோறாபீரங்கிப்படகினை மூழ்கடித்த கடற்கரும்புலி ​ கப்டன் மாலிகா ! #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam

கடற்கரும்புலி

கப்டன்  மாலிகா

செல்வராணி ஆறுமுகம்

அல்வாய் வடக்கு, யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 05.11.1974

வீரச்சாவு: 08.12.1996

திருகோணமலை துறைமுகத்தில் காவலில் ஈடுபட்டிருந்த டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவு


நெஞ்சில் பூத்த மலர்கள்.!

கடற்கரும்புலி கப்டன் விக்கியும் கடற்கரும்புலி கப்டன் மாலிகாவும் இணைபியாத தோழிகள். இருவரும் ஒன்றாகவே இயக்கத்தில் இணைந்து ஒன்றாகப் பயிற்சி எடுத்து, எப்போதும் இணைபிரியாமல் பாசறையில் உலா வந்தார்கள்.

இருவரும் தோழிகள் என்றாலும், பயிற்சிப்பாசறையில் இருவருக்கும் போட்டி. நீந்துவது, படகு ஓட்டுவது, ஏனைய பயிற்சிகள் எல்லாவற்றிலும் ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் இல்லை என்ற ரீதியில் வேகம் இருக்கும். கடற்கரும்புலி கப்டன் விக்கி கொழும்புத் துறைமுகத்தினுள் கரும்புலியாய் சென்று அவளைவிட்டுப் பிரிந்ததில், மாலிகாவுக்கு மிகுந்த கவலை. ‘நீ முன்னால் போ. நான் வருகிறேன்’ என்று தனக்குள் உறுதியெடுத்துக் கொண்டாளோ!

அதன்பிறகு அவளிடம் நீண்ட எதிர்பார்ப்பு. தனக்கு இலக்கு விரைவாகக் கிடைக்க வேண்டும் என்று அவளிடம் இருந்த துடிப்பு, அதுவே அவளது கனவும் நினைவுமாக இருந்தது.

மாலிகா, சிறந்த நீச்சற்காரியாக ஆரம்ப நீச்சற் பயிற்சியின்போதே இனங்காணப்பட்டவள். ஆரம்பப் பயிற்சியின் பின் சிறிதுகாலம் தொலைத்தொடர்பு வேலையில் நின்றபோது, தான் ஒரு கரும்புலியாக வேண்டும் என்ற நீண்ட கனவு அவளிடம் இருந்தது. சுலோஜன் நீரடிநீச்சற் பிரிவுக்குச் சென்றவள், அங்கு தனது திறமைகளாலும் பண்புகளாலும் எல்லோரையும் கவர்ந்தாள். வேகமாக நீந்துவாள். அதிகவலுவுள்ள எந்தப் படகையும் ஒட்டக்கூடிய திறமையை அவள் பெற்றிருந்தாள். மைல் கணக்காக நீந்தி, திறமையாகச் சுழியோடி, தன் குழுவிலுள்ள அனைத்துப் போராளிகளுக்கும் நீச்சல் பழக்கி, படகு ஓட்டக் கற்றுக்கொடுத்து அவள் செய்தவைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

உயரக்கிளம்பும் இராட்சத அலைகளுக்குக் கீழால் நீந்துவது கடினம்தான். அந்த அலைகளை ஊடுருவி நீந்துவதற்குச் சிரமப்படும் பிள்ளைகளையும் நீந்திக்கொண்டே இழுத்து நீந்தப் பழக்கி………… அலைகள் அவளிடம் பணிந்துவிடும். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும். அவளது குழு எல்லாவற்றுக்கும் முன் நிற்கும்.

எந்தக் கடுமையான பயிற்சியையும் இலகுவாக்கி சிரித்தபடி செய்து முடிப்பதில் மாலிகா கெட்டிக்காரி. பெரிய பழுவுள்ள இயந்திரங்களையும், வலுவுள்ள பொருட்களையும், தூக்கி தோளில் அடித்து, அவளது உடல் வலுவானதில் வியப்பில்லை. தசைகள் இறுகித் தெரியும். அவளது கம்பீரத் தோற்றத்தால் தோழிகள் அவளைச் செல்லமாகக் ‘கட்ஸ்’ என்று அழைப்பதுண்டு.breaking

அந்தச் சம்பவம் அவளது உறுதியை நினைக்கத் தோன்றும். அவள் பயிற்சி முடித்தவுடன் இருபது கடல்மைல் நீந்துவதற்காக அவளின் குழு கடலில் இறக்கியது. இரவு பன்னிரண்டு மணிக்கு ஆரம்பித்த பயிற்சி காலை எட்டு மணிக்கு மேலாகியும் முடிந்தபாடில்லை. மாலிகாவின் வாயிலிருந்து இரத்தம் வரத்தொடங்கியது. அவளை கரையேறுமாறு பணிக்கப்பட்டது. மாலிகாதான் நீந்தி முடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தாள். முழுவதும் நீந்தி முடித்த பின்னரே அவள் கரை ஏறினாள். எந்த நோய்வந்தாலும், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்துமுடித்த பின்னரே ஓய்வாள்.

அவளது கடற்சண்டைக் களங்களைக் கூறிக்கொண்டே போகலாம். கிளாலியில் மக்கள் பாதுகாப்புப் பணியிலும், இன்னும் பூநகரி மீதான தவளைத் தாக்குதலிலும் அவளது படகு கடலில் இறங்கியது. கரும்புலியாய் இருளில் அவள் இலக்குத்தேடி அலைந்த நாட்கள் மெய்சிலிர்க்க வைப்பாள்.

இறுதியாக அங்கையற்கண்ணி நீராடி நீச்சற் பிரிவிலிருந்துதான் திருமலைத் துறைமுகத்துக்குப் போனாள். அவள் தனது இலக்கை அண்மிப்பதற்கு நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. பாதை முழுவதும் சேறு. காலடிகளை ஒழுங்காக எடுத்து வைக்க முடியாதபடி முழங்காலளவு சேறு இருந்தது. அட்டைக் கடிக்குள்ளால் சிலிண்டரையும் தோளில் சுமந்தபடி செல்வது சாதரணமாக நினைத்துப்பார்க்க முடியாதது. கரும்புலிக்கேயுரிய அசத்திய துணிவும், தன்னம்பிக்கையும்தான் எல்லாவற்றையும் செய்யக்கூடிய வலுவை நிறையவே தந்தன. கூட வழியனுப்பச் சென்ற தோழிகள் அந்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்கள்.

“கடைசியா எங்களுக்கெல்லாம் சாப்பாடு குழைச்சுத் தந்தாள். அடிபட்டுச் சந்தோசமாய்ச் சாப்பிட்டம்.”

இறுதியாக வழியனுப்பிய அந்தத்தோழியின் கன்னத்தில் தட்டி, “நான் போய் வெடிக்கிறபோதுதான் இந்த நோ மாறும்” என்று கூறிவிட்டுச் சென்றாள்.

கூடவே வந்த வேவு எடுத்துக்கொடுத்த கடற்புலித் தோழர்களிடம் இருநூறு மீற்றரிலேயே விடைபெற்றுப் போனாள். இலக்குப் பெரியது. சாதனையும் பெரியதுதான். நகர்ந்து கொண்டிருந்த கடற்படையினரின் டோறா அவளது இலக்கானது.

1996.12.08 அன்று அந்த இலக்கினோடு, துறைமுகத்தினுள் புகுந்து மாலிகாவும் இல்லாமற்போனாள். அவளுக்குப் பணிந்த அந்த அசுர அலைகள் அவளை அள்ளிச் சென்றிருக்கக் கூடும். நாங்கள் இக்கரையில் நின்றிருந்தோம். அலைகள் மட்டும் திரும்பி வந்தன.

நெஞ்சில் பூத்த மலர்கள் (04.06.1997) …

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

முல்லைக் கடலில் காவியமான #கரும்புலிக​ள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam

08.12.1999 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக கடற்புலிகள் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை இடைமறித்து மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் கார்வண்ணன், மேஜர் யாழ்வேந்தன், மேஜர் இசைக்கோன் மற்றும் கப்டன் கானவன் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இக்கரும்புலி வீரர்களின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு கடுமையாக சேதமடைந்ததுடன் அதிலிருந்த கடற்படையினர் நால்வர் கொல்லப்பட்டும் மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.

விடுதலைப் போருக்கு வலுச்சேர்க்க கொண்டுவரப்பட்ட பொறுமதி வாய்ந்த போர்க் கருவிகள் மற்றும் வெடிபெருட்கள் இக்கரும்புலி வீரர்களின் உயிர்க்கொடையினால் பத்திரமாகக் கரைசேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழத் தாய் மண்ணின் விடிவிற்காய் தம்மை வெடியாக்கி வித்தாகிப் போன இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம்.

தாயக விடுதலைக்கு ஏற்பட்ட தடையை நீக்கி போராட்டத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்திய கடற்கரும்புலிகள்.

breaking

கடற்கரும்புலி லெப்கேணல் சிவரூபன்

சிவநேசன் சிவபாக்கியநாதன்.

வீரச்சாவு ..08.12.1999

1995ம் ஆண்டு இராணுவத்தால் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பான முன்னேறிப்பாயச்சலும் அதனைத்தொடர்ந்து மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் அதிகமானோர் காயப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும்.இருந்த சூழலில் இச்சம்பவங்களை நேரில் பார்த்த சிவரூபன் வீணாகச் சாவதைவிட  இவ் ஆக்கிரமிப்புக்கெதிராக போராடுவதென முடிவெடுத்து . விடுதலைப் புலிகளில் தன்னை இணைத் கொண்டு தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து கடற்புலிகளின் தரைத்தாக்குதலனியான மண்டைதீவுச் சமரில் மாவீரரான லெப் கேணல் சூட்டி அவர்களின் பெயரைச் சுமந்த சூட்டி படையணியில் இணைந்து முல்லைத்தீவுச் சமரில் பங்குபற்றினான் .அதனைத் தொடர்ந்து காங்கேசன்துறை கடலில் வீரச்சாவடைந்த லெப் கேணல் நரேஸ் அவர்களின் பெயரைச் சுமந்த படையணியான நரேஸ் படையணியில்  கனரக ஆயுதப் பயிற்சி மற்றும தொலைத்தொடர்பு சம்பந்தமான பயிற்சிகள் முடித்து அப்படையணியில்  கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில் சர்வதேசக் கடற்பரப்பில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சம்பவமொன்றை அடுத்து தலைவர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக  சர்வதேசப் பொறுப்பாளர் அவர்களால் சர்வதேசக் கடற்பரப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.அதற்கமைவாக தமிழிீழத்திலிருந்து சில போராளிகள்  சர்வதேசக் கடற்பரப்பிற்க்குச் சென்றனர்.அப்போராளிகளுள் ஒருவனாகச் சென்ற சிவரூபன் அங்கு மாவீரரான கடற்கரும்புலி லெப் கேணல் பெத்தா அவர்களுடன் இணைந்து விநியோகப்பணியில் ஈடுபட்டான்.

விநியோக பணிகளின் ஓய்வு நேரங்களில் கப்பல் சம்பந்தமாகவும் கடல் சம்பந்தமாகவும் நிறையவே கற்றான்.இவனது வளர்ச்சியில் லெப் கேணல் பெத்தாவின் பங்கும் அளப்பரியது.அங்கே ஒரு கப்பலில்  தனக்கு அடுத்த நிலையில் சிவரூபனை வளர்தெடுத்தார் பெத்தா . அதன் பின்னர் தமிழீழம் திரும்பிய சிவரூபன் கடற்சண்டைபிடிக்கவேணும் என்கிற தனது ஆர்வத்தை சிறப்புத்தளபதியிடம் தெரிவித்து அவரின் அனுமதியைப் பெற்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் நடந்த  விநியோகப் பாதுகாப்புச்சமர்  மற்றும் வலிந்த தாக்குதல்களிலும்    கனரக ஆயுத இயக்குனராக தொலைத்தொடர்பாளனாக ஒரு படகின்  இரண்டாம் நிலை அதிகாரியாகவும் பின்னர் ஒரு படகின் கட்டளை அதிகாரியாகவும் பங்குபற்றினான்.அதனைத்தாெடர்ந்து

மன்னார்  கடற்பரப்பில் 08.02.1999 அன்று விநியோகப்பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையில் விநியோகப் படகுகள் மீது சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை அவ் சிறிலங்காக் கடற்படையினர் மீது மேற்கொண்ட தாக்குதலில் இவனது பங்கும் அளப்பரியது.

அதனைத் தொடர்ந்து இவனது திறமையான செயற்பாடுகளாலும் ஆளுமைத்திறனாலும் போராளிகளோடு பழகும் தன்மையினாலும் சுண்டிக்குளம் சண்டைப்படகுகளின் தொகுதிக் கட்டளை அதிகாரியாகவும் அம் முகாம் பொறுப்பாளராகவும் சிறப்புத் தளபதி

சூசை அவர்களால் நியமிக்கப்படுகிறான்.அங்கு சிலகாலம் செயற்பட்டு வந்த சிவரூபன்

சூசை அவர்களின் வேண்டுதலுக்கிணங்க சாளையிலிருந்து கப்பலுக்கு சென்று தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கிற பணியில் படகுக் கட்டளை அதிகாரியாக மிகவும் திறம்பட பணியாற்றுகிறான்.அக்காலப் பகுதியில் தான் இவ் விநியோக நடவடிக்கைக்கு ஏற்பட்ட தடைகளை அகற்றவேண்டிய நிலைமை ஏற்பட்டபோது அதற்காக அனுபவம் வாய்ந்த  கடற்கரும்புலிகள் தேர்வு செய்யப்பட்டபோது அந்த நடவடிக்கையின் பொறுப்பாளனாக பல சண்டைகளில் முக்கிய பங்காற்றியவரும் நீண்ட கால கடல் அநுபவமும் கொண்ட  சிவரூபன் சிறப்புத்தளபதியால் தேர்வு செய்யப்பட்டான்.தலைவர் அவர்களின் திட்டத்திற்கேற்ப இந்நடவடிக்கைக்கான ஏனைய கடற்கரும்புலிகள்  தெர்வு செய்யப்பட்டு

பயிற்சிகள் வழங்கப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்டு இந் நடவடிக்கையின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டு  இக்கடற்கரும்புலிகள் சென்றனர்.08.12.1999 அன்று ஆழ்கடலால் கடற்படையின் தொடரணி சென்று கொண்டிருக்கும் போது அதற்க்கு பாதுகாப்பாகச் சென்ற டோறா ஒன்று இவர்களை நோக்கி நெருங்கி வரும்போது இவர்கள் அவ் டோறாமீது தாக்குதல் நடாத்தி   வீரச்சாவடைந்தனர்.சிவரூபன் இறுதிவரை கள நிலவரம் தொடர்பாக தெளிவாகவும் உறுதியாகவும் கட்டளைமையத்திற்க்கு தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தான்.

இவ் வெற்றிகரத் தாக்குதலில்

கடற்கரும்புலி லெப் கேணல் சிவரூபன்

மேஜர் இசைக்கோன்

மேஜர் யாழ்வேந்தன்

கப்டன் கானகன் ஆகியோர் கடலண்ணை  மீது காவியமானார்கள்.

தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற விநியோகத்திற்க்கு ஏற்பட்ட தடையை நீக்கி விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்திய பெருமை இவர்களையே சாரும் எனக் கூறுவதில் மிகையாகாது.

எழுத்துருவாக்கம் – .சு.குணா.

05. 12. 1995 ஆக்கிரமிப்பிற்கு பதிலடி கொடுத்த கரும்புலி மேஜர் ரங்கன் ! #மாவீரர்கள் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam

05. 12. 1995 அன்று தென் தமிழீழத்தில் நடைபெற்ற முதல் கரும்புலித் தாக்குதல் காணொளி.

புத்தூர், நவக்கிரி பகுதியிலிருந்து சூரியக்கதிர் என்ற மிகப் பெரும் எடுப்பிலான படையெடுப்பை வலிகாமத்தில் மேற்கொண்ட சிங்கள படையினர் 50 நாட்கள் நடத்திய உக்கிர சமரின் முடிவில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது சிங்கள பேரினவாத அரசு .

ஏறக்குறைய 5 . 5 லட்சம் பேரைக் கொண்ட வலிகாமத்தில் ஒட்டுமொத்தமான சனத்தொகையும் முற்றுமுழுதாக வெளியேறிய நிலையில் பெரும் கட்டிடங்களுக்கு மத்தியில் 5. 12. 1995 அன்று சிங்களப்படை அமைச்சர் அனுருத்த  ரத்வத்த  சிங்கக் கொடியை ஏற்றிய ஒரு சில மணி நேரத்தில்  தென்  தமிழீழம் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் சிங்களச் சிறப்பு அதிரடிப் படையின் முகாம் மீது கரும்புலி மேஜர் ரங்கன் கரும்புலித் தாக்குதலை நிகழ்த்தி சிங்களத்தின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடி கொடுத்தார்.

breaking

மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் 05.12.1995 அன்று சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ரங்கன் / தினேஸ்குமார் ஆகிய கரும்புலி மாவீரரின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

06.12.2001


03.12.2007 –லெப்.கேணல் வரதன்

03.12.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் வரதன்(றொனி/சாமி) அவர்களின் வீரவணக்க நாள்

 

கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட #மாவீரர்கள் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam

November 23th





சரித்திர முதன்மை வாய்ந்த பூநகரிச்சமர் (ஒப்பரேசன் தவளை) தொடங்கிய நாள் ! #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #புலிகள் #மாவீரர்கள் #Maaveerar #ltte #Tamil #Eelam


10.11.1993 ம் வருடம் அன்று நள்ளிரவில் சரித்திர முதன்மை வாய்ந்த பூநகரிச்சமர் (ஒப்பரேசன் தவளை) தொடங்கியது
பூநகரிப் பெரும் போர் முனையில் வரலாற்றுச் சாதனை படைத்து அந்தச் சமர்க்களத்தில் 456 வீரவேங்கைகள்
நினைவு சுமந்து…

கடற்கரும்புலிகள் உட்பட #மாவீரர்கள் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam

October 25th

October 26th

திருகோணமலைத் துறைமுகத்தில் வீரகாவியமான #கடற் #கரும்புலிகள் உட்பட #மாவீரர்கள் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam

October 23rd

October 24th

#எல்லாளன் நடவடிக்கையி​ல் காவியமான #கரும்புலிக​ள் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam

விடுதலைப் போராட்ட வரலாற்றின் திருப்பு முனை எல்லாளன் நடவடிக்கை

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டி 5 ஆண்டு நினைவுநாள் 22- ஒக்டோபர் -2012 இன்றாகும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்திய நாளாக 2007 ஆம் ஆண்டு காணப்படுகின்றது.

தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மாவீரர்களின் 5ம் ஆண்டு 22- ஒக்டோபர்-2012 ல்நினைவுகூரப்படுகிறது.

தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி படம்எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை.

அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்படுகின்றது.

அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படைத் தளம் மீது “எல்லாளன்” என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின்போது சிறிலங்கா வான்படையின் பல வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன் மேலும் பல வானூர்திகள் சேதமாக்கப்பட்டன.

இந்த எல்லாளன் சிறப்பு நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

பலநூறு கோடி பெறுமதி வாய்ந்த சிறிலங்கா வான்படையின் வான்கலங்கள் அழிக்கப்பட்ட இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 21 கரும்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு:

லெப்.கேணல் வீமன் (கோபாலபிள்ளை பிரதீபன் – திருகோணமலை)

லெப். கேணல் இளங்கோ (இராசதுரை பகீரதன் – யாழ்ப்பாணம்)

லெப். கேணல் மதிவதனன் (பாலசுப்பிரமணியம் தயாசீலன் – யாழ்ப்பாணம்)

மேஜர் சுபன் (கதிரவன் ஜீவகாந்தன் – யாழ்ப்பாணம்)

மேஜர் கனிக்கீதன் (இராசன் கந்தசாமி – மட்டக்களப்பு)

மேஜர் இளம்புலி (துரைரட்ணம் கலைராஜ் – யாழ்ப்பாணம்)

மேஜர் காவலன் (சண்முகம் சத்தியன் – கிளிநொச்சி)

மேஜர் எழிலின்பன் (விமலநாதன் பிரபாகரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் தர்மினி (கணேஸ் நிர்மலா – கிளிநொச்சி)

கப்டன் புரட்சி (செல்வராசா தனுசன் – யாழ்ப்பாணம்)

கப்டன் கருவேந்தன் (மயில்வாகனம் சதீஸ்குமார் – கிளிநொச்சி)

கப்டன் புகழ்மணி (தர்மலிங்கம் புவனேஸ்வரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் புலிமன்னன (கணபதி நந்தகுமார் – யாழ்ப்பாணம்)

கப்டன் அன்புக்கதிர் (வில்சன் திலீப்குமார் – முல்லைத்தீவு)

கப்டன் சுபேசன் (நாகராசா மகாராஜ் – மன்னார்)

கப்டன் செந்தூரன் (கணேசநாதன் தினேஸ் – யாழ்ப்பாணம்)

கப்டன் பஞ்சீலன் (சிவானந்தம் கஜேந்திரன – மட்டக்களப்பு)

கப்டன் ஈழப்பிரியா (கந்தையா கீதாஞ்சலி – யாழ்ப்பாணம்)

கப்டன் அருள்மலர் (சேவியர் உதயா – யாழ்ப்பாணம்)

கப்டன் ஈழத்தேவன் (தங்கராசா மோசிகரன் – யாழ்ப்பாணம்)

லெப். அருண் (பத்மநாதன் திவாகரன் – யாழ்ப்பாணம்)

‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும்.உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்.”
கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது.

  • எல்லாளன் சிறப்பு தாக்குதல்.

எல்லாளன் முழு நீளத் திரைப்படம் – காணொளி

கடந்த 22.10.2007 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்கா வான்படைத்தளத்தை தாக்கி அழித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட எல்லாளன் திரைப்படம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.


 

சாகரவர்த்தன போர்க்கலம் மூழ்கடிப்பில் காவியமான #கடற்கரும்புலிகள் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam

19.09.1994 அன்று மன்னார் கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “சாகரவர்த்தன” போர்க் கலத்தினை மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நளாயினி, மேஜர் மங்கை, கப்டன் வாமன், கப்டன் லக்ஸ்மன் ஆகியோரின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

கடற்புலிகளின் மகளீர் படையணி சிறப்புத் தளபதி
கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி
(ஆறுமுகசாமி பத்மாவதி – ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)கடற்கரும்புலி மேஜர் மங்கை
(கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி – முள்ளியான், யாழ்ப்பாணம்)கடற்கரும்புலி கப்டன் வாமன் (தூயமணி)
(கந்தசாமி ரவிநாயகம் – கோயில்போரதீவு, மட்டக்களப்பு)

கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் (இசைவாணன்)
(குகதாசன் பிரணவன் – நல்லூர், யாழ்ப்பாணம்)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இம்மாவீரர்களினதும் இதே நாள் யாழ்ப்பாணத்தில் சுகவீனம் காரணமாகச் சாவடைந்த

கப்டன் மயூரன்
(சிறிஜெயச்சந்திரன் ஜெயரூபன் – மந்துவில், கொடிகாமம் யாழ்ப்பாணம்)

என்ற மாவீரரினதும் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.




Facebook Comments

வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் தாக்குதல் ! #கரும்புலிகள் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #புலிகள் #Maaveerar #ltte #Tamil #Eelam

புரட்டாசி  மாதம் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

ltte veeravanakam 2

 

September 1st

September 2nd

September 3rd

September 7th

September 8th

September 9th

September 10th

September 11th

September 15th

September 16th

September 18th

September 19th

September 22nd

September 23rd

September 24th

September 25th

September 26th

Up ↑